Tuesday, 17 October 2017

LEPASHI ,THE ANDHRA WONDER

LEPASHI ,THE ANDHRA WONDER
லேபாக்ஷியின் வீரபத்ரஸ்வாமி கோவில்

விஜய நகர சாம்ராஜ்யத்தின் எழுச்சியால் இந்து மதமும் கலைகளும் புத்துயிர் பெற்றன. முகமதியப் படைஎடுப்புகளைப் பற்றிய அச்சமின்றி தென்னக மெங்கும் புதிய புதிய ஆலயங்கள் தோன்றின. அவற்றுள் ஒன்று ஆந்திராவிலுள்ள லேபாக்ஷி ஆலயம்

ஆமை வடிவில் அமைந்த குன்றின் மேல் கட்டப்பட்டுள்ளது . `குர்மாசைலா’ (`ஆமைக் குன்று’) என்ற குன்றின் மீது விஜயநகரக் கட்டிடக் கலை பாணியில் இக்கோவில் கட்டபட்டுள்ளது. இந்த மாபெரும் கோவிலில் நெடிதுயர்ந்த கோபுரங்கள், விமானங்கள் அமைந்துள்ளன.

இந்த ஆலயம் இந்த இடத்தில் தான் சீதையைத் தூக்கிச் செல்லும் இராவணனோடு ஜடாயு போரிட்டுப் படுகாயமடைந்து வீழ்ந்து கிடந்தார்.
இராம இலட்சுமணர்கள் வந்து சீதையை பற்றிய செய்தியை அறிந்து கொண்டு
ஜடாயுவுக்கு மோட்சம் அளித்த இடம் இது . ” லே பக்ஷி ” [பட்சியே எழுந்திரு]  என சொன்னதால் இந்த இடம் லேபாக்ஷி என்று பெயர் பெற்றது





இந்த கோயில் கி பி 1538ல் பெனுகொண்டா விரூபண்ண செட்டியாரால் கட்டப்பட்டது. நாட்டிய மண்டபம்தான் லேபாக்ஷி ஆலயத்தின் கலை மையம்
ஒரே கோயிலில் அற்புதச் சிற்பங்களையும் அப்படியே அற்புதமான சுவரோவியங்களையும் ஒருங்கே காண்பது மிக மிக அரிது.
விஜயநகர பேரரசு ஆட்சியில் அரசர் அச்சுதராயரின் கஜானா பொறுப்பாளராக இருந்த விருபணா, லேபாக்ஷியில் ஒரு மாபெரும் சிவன் கோவிலைக் கட்டினார். கோவில் கட்டும் ஆர்வத்தில் அவர் அச்சுதராயரின் அனுமதி யின்றி கஜானா முழுவதையும் காலி செய்துவிட்டார். விஷயத்தை அறிந்து கடுங்கோபம் கொண்ட அச்சுதராயரர், விருபணாவின் கண்களைக் குருடாக்கும்படி உத்தர விட்டார். அதனால் வேதனை அடைந்த விருபணா, தானே தனது கண்களைத் தோண்டி பாறை மீது வீசியெறிந்துவிட்டார். அதன் அடையாளமாக அக்கோவிலில் இரண்டு கரும்புள்ளிகள் இடம்பெற்றன. இன்றும் அந்தச் சிவன் கோவிலானது இந் தியக் கட்டிடக் கலையின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.



கர்நாடக ஆந்திர எல்லையில் பெங்களூரிலிருந்து புட்டபர்த்தி செல்லும் பாதையில் கோடிக்கொண்டாவிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது லேபாக்ஷி. கோவில் சிற்பம் ஓவியம் இவற்றில் ஈடுபாடு உடையவர்கள் அவசியம் சென்று பார்க்கவேண்டிய இடம்


சீமாந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் லேபாக்ஷி எனும் அழகிய குக்கிராமம் அதன் மதச் சிறப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த கிராமத்தில் உள்ள சிவன் கோயில், விஷ்ணு கோயில், வீரபத்ரா கோயில் ஆகிய மூன்று ஆலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இவைதவிர ஆமையின் முதுகு போல காட்சியளிக்கும் சிறிய குன்று ஒன்று சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் கவர்ந்து வருகிறது. 

கூர்ம சிலா என்று அழைக்கப்படும் இந்தக் குன்றில் ஸ்ரீராமர் கோயில், ரகுநாதர் ஆலயம், வீரபத்ரர் ஆலயம், பாபனாதேஷ்வரா ஆலயம், துர்கா கோயில் போன்ற கோயில்கள் அமைந்திருக்கின்றன. லேபாக்ஷி கிராமத்தில் அமைந்திருக்கக்கூடிய ஒவ்வொரு கோயிலும் விஸ்வகர்மா பிராமணர்களின் கலை நுணுக்கத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன. 



இந்தக் கோயில்களில் காணப்படும் அழகிய சிற்பங்கள் புகழ்பெற்ற விஸ்வகர்மா சிற்பியான அமரஷில்பி ஜனாக்ஷரி என்பரின் மேற்பார்வையில் படைக்கப்பட்டவையாக கருதப்படுகின்றன. ஆனால் உண்மையில் இந்த சிற்பங்களை உருவாக்கியதில் மிகச் சிறந்த  சிற்பிகளான ககோஜு, மோரோஜு ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது. மேலும் இந்தக் கோயில்களின் சுவர்களில் இராமாயணம் மற்றும் மகாபாரத காவியங்களின் காட்சிகளை நீங்கள் கண்டு ரசிக்கலாம். 

இதன் முன்று பிரதான பகுதிகளாக `நிருத்ய மண்டபம்’, `கரப்பக்கிரகம்’, `கல்யாண மண்டபம்’ ஆகியவை அமைந்துள்ளன. இவை முழுவதும், நுணுக்கமும், அழகும் கொஞ்சும் ஆளுயரச் சிற்பங்கள், ஓவியங்களால் அலங்கரிக்கபட்டுள்ளன. இவற்றில், கடவுள்கள், பெண் தெய்வங்கள், ஓவிய, சிற்பக் கலைஞர்கள், இக்கோவிலைக் கட்டிய வர்களின் உருவங்கள், புராணங்கள், ராமாயண, மகாபாரதக் காட்சிகள், சிவபெரு மானின் பல்வேறு வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கோவிலின் உட் கருவறை யின் மேற்கூரையில் `வீரபத்திரரின்’ பெரிய ஓவியம் ஒன்று காணப்படுகிறது. இது ஆசியாவிலேயே பெரியது என்றும் கருதபடுகிறது.



அதோடு இயற்கை வண்ணங்களை கொண்டு கோயில் மேற்கூரையில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவைதவிர தொங்கும் தூண், பாறைச் சங்கிலி, துர்கா பாதம், வாஸ்து புருஷ், பந்தயப் பெண் ஆகிய சிறப்பம்ச ங்களுக்காக இந்தக் கோயில்கள் தனித்துவமாக அறியப்படுகின்றன. லேபாக்ஷி கிராமத்தின் வெப்பம் மிகுந்த கோடை காலத்தை தவிர மற்ற காலங்களில் வானிலை இதமானதாகவே இருக்கும். இந்த கிராமத்தில் விமான நிலையமோ, ரயில் நிலையமோ இல்லாத காரணத்தால் சாலை வழியாக லேபாக்ஷி கிராமத்தை அடைவதுதான் சிறந்த போக்குவரத்து மார்க்கமாக இருக்கும்.

நாட்டிலேயே பெரிய, ஒரே கல்லாலான நந்தி சிலையைம் (8.25 மீட்டர் நீளம்- 4.60 மீ. உயரம்), ஒரு பெரிய `ஏழு தலை’ நாகத்தின் சிலையையும் கொண்டுள்ளது.

இங்குள்ள கல்யாண மண்டபத்தில் சிவன்- பார்வதியின் திருமணம் நடைபெற்றது என்று செவிவழிக் கதைகளில் கூறப்படுகிறது. நிறைவு பெறாமல் உள்ள இந்த மண்டபத்தில், ஒரே கல்லால் ஆன 38 மாபெரும் தூண்கள் அமைந்துள்ளன. முன்பு இக்கோவிலில் ஒரு தொங்கும் தூணும் இருந்தது. அதன் அடிபுறத்தில் ஒரு துணியை நுழைத்து எடுக்க முடிந்தது




















No comments:

Post a Comment