HILLARY CLINTON ,AMERICAN POLITICIAN
BORN 1947 OCTOBER 26
ஹிலாரி கிளிண்டன் BORN 1947 OCTOBER 26
இலரி டயான் ரோட்டம் கிளின்டன் (ஹிலாரி கிளின்டன்; ஹிலாரி கிளிண்டன்)(Hillary Diane Rodham Clinton) ஐக்கிய அமெரிக்காவின் முன்னால் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்துள்ளார். அதற்கு முன்னால் அமெரிக்க மேலவையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2008இல் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராக ஆவதற்குப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தில் வந்தார்.[1] இவர் ஐக்கிய அமெரிக்காவின் 42ஆவது குடியரசுத் தலைவரான பில் கிளின்டனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1993 முதல் 2001 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் "முதல் சீமாட்டி" என்னும் பட்டத்துடன் இருந்தார்.[2]
இலினொய் மாநிலத்தவரான இலரி[3] 1973 ஆம் ஆண்டு யேல் பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். 1975 ஆம் ஆண்டு பில் கிளின்டனை மணந்து ஆர்க்கன்சஸ் மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தார். அங்கே காங்கிரஸ் சட்ட அலோசகராக பணியாற்றினார். இதன் பின் 1979 ஆம் ஆண்டில் றொசு சட்ட நிறுவனத்தில் முதல் பெண் பங்காளராக அறிவிக்கப்பட்டார். 1983, 1992 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்காவின் 100 பலமிக்க வழக்கறிஞர்களுள் ஒருவராக அறிவிக்கப்பட்டார். 1979 முதல் 1981 வரையும் 1983 முதல் 1992 வரையும் ஆர்கன்சஸ் மாநிலத்தின் முதன் பெண்ணாக குழந்தைகளின் பராமரிப்புத் தொடர்பான பல நிறுவனங்களிலும் பணியாற்றினார். மேலும் வோல் மார்ட் உட்பட சில வியாபார நிறுவனங்களின் இயக்குனர் அவையிலும் பங்காற்றினார்.
ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண்ணாக கொள்கை விடயங்களில் முன்னணியில் இருந்து செயற்பட்டார். 1994 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் மேலவை அங்கீகாரம் மறுத்த கிளின்டன் சுகாதாரத் திட்டம் (Clinton health care plan) இவரது முக்கிய பங்களிப்பாகும். ஆனால் 1997 ஆம் ஆண்டு அரச குழந்தைகள் காப்புறுதித் திட்டம் (State Children's Health Insurance Program), தத்தெடுத்தல் மற்றும் பாதுகாப்பான குடும்பத்திட்டம் (Adoption and Safe Families Act) என்பவற்றை நிறுவினார்.[4][5] 1996 ஆம் ஆண்டு வைட்வாட்டர் சர்ச்சையின் காரணமாக நீதிமன்றில் தோன்றும் படி நீதிமன்றம் ஆணை பிறபித்திருந்தது. இவ்வாறு கோரப்பட்ட ஒரே அமெரிக்க முதன் பெண் இவராவார். கணவரான பில் கிளின்டனின் அதிபர் பதவிக்காலத்தில் நடந்ததாகக் கூறப்பட்ட சில சீர்கேடுகள் தொடர்பாக இவர் விசாரிக்கப்பட்டாலும் ஒன்றிலும் குற்றஞ்சாட்டப்படவில்லை. 1998 ஆம் ஆண்டு லெவீன்ஸ்கி சர்ச்சையின் போது இவரது மணவாழ்க்கை கேள்விக்குறியாக காணப்பட்டது.
2000 ஆம் நியூ யார்க்க்குக்கு இடம் பெயர்ந்து 2000 ஆம் அம்மாநிலம் சார்பான முதல் பெண் மேலவை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அமெரிக்க முதல் பெண்ணொருவர் பெரிய கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டதும் இதுவே முதல் முறையாகும். மேலவை உறுப்பினராக இச்யார்ச் புச்சின் ஆட்சியில் சில வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்தார். ஈராக் போர்த் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த இலரி பின்னர் அதனை எதிர்த்தார். மேலும் இச்யார்ச் புச்சின் உள்நாட்டுக் கொள்கைகளை இவர் பலமாக எதிர்த்தார். 2006 ஆம் ஆண்டு மீண்டும் மேலவைக்கு தெரிவுச் செய்யப்பட்டார். 2008 அதிபர் தேர்தலின் போது மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளாராக வரும் வாய்ப்பு இலரிக்கு காணப்படுவதாக நாடு தழுவிய கருத்துக் கணிப்புகள் காட்டினாலும் பராக் ஒபாமாவால் தோற்கடிக்கப்பட்டார்.[1] 2009 ஆண்டு ஒபாமா அமைச்சரவையில் அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
No comments:
Post a Comment