HILLARY CLINTON ,AMERICAN POLITICIAN BORN 1947 OCTOBER 26
HILLARY CLINTON ,AMERICAN POLITICIAN BORN 1947 OCTOBER 26 ஹிலாரி கிளிண்டன் BORN 1947 OCTOBER 26 இலரி டயான் ரோட்டம் கிளின்டன் (ஹிலாரி கிளின்டன்; ஹிலாரி கிளிண்டன்)(Hillary Diane Rodham Clinton) ஐக்கிய அமெரிக்காவின் முன்னால் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்துள்ளார். அதற்கு முன்னால் அமெரிக்க மேலவையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2008இல் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராக ஆவதற்குப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தில் வந்தார்.[1] இவர் ஐக்கிய அமெரிக்காவின் 42ஆவது குடியரசுத் தலைவரான பில் கிளின்டனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1993 முதல் 2001 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் "முதல் சீமாட்டி" என்னும் பட்டத்துடன் இருந்தார்.[2] இலினொய் மாநிலத்தவரான இலரி[3] 1973 ஆம் ஆண்டு யேல் பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். 1975 ஆம் ஆண்டு பில் கிளின்டனை மணந்து ஆர்க்கன்சஸ் மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தார். அங்கே காங்கிரஸ் சட்ட அலோசகராக பணியாற்றினார். இதன் பின் 1979 ஆம் ஆண்டில் றொசு சட்ட நிறுவனத்தில்...