Posts

Showing posts with the label UGANDA

IDI AMEEN , A REIGN OF TERROR

Image
IDI AMEEN , A REIGN OF TERROR  DIED 2003 AUGUST 16 கிறுக்குத்தனமான கொடுங்கோலர்கள் அரிதாகத்தான் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறார்கள் என்று மக்கள் தப்புக்கணக்கு போட்டால், திடீர் திடிரென்று 'கலிக்யுலா அனுபவங்கள்' நிகழ்ந்து, நாட்டில் வாழும் அத்தனை மக்களும் அதில் சிக்கித் தவிக்க நேரிடும். உகாண்டா நாட்டு மக்கள் அப்படித்தான் அலட்சியமாக இருந்துவிட்டு, பரிதாபமான முறையில் பாடம் கற்றுக்கொண்டார்கள். அந்த பாடத்தின் பெயர் 'இடி அமீன் தாதா'. இந்தியாவை போல ஆப்பிரிக்க நாடான உகாண்டாவும் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. அந்நாட்டை வெள்ளைக்காரர்கள் 'ஆப்பிரிக்காவின் முத்து (Pearl of Africa)' என்று குறிப்பிட்டனர். அருமையான பருவநிலையோடு கூடிய வளமான நாடு அது! உகாண்டா தனிநாடாக ஆனா கையோடு, வக்கீலாக இருந்து அரசியல் தலைவராக ஆன மில்டன் ஒபோடே, 1962 ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார். எடுத்த எடுப்பிலேயே புதிய பிரதமருக்கு பெரிய தலைவலி காத்திருந்தது. ஒன்றரை கொடி உகாண்டா மக்களும் நாற்பதுக்கும் மேற்பட்ட இனங்களாக, பழங்குடிகளாக (Tribes) பிரிந்து நின்றன...