Posts

Showing posts with the label CONSTRUCTION

VICTORIA HALL HELPED IN CONSTRUCTION OF THEATRES

Image
  VICTORIA HALL HELPED IN  CONSTRUCTION OF THEATRES . சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் ....... டவுன் ஹால் என்று அழைக்கப்பட்டது மதராஸின் விக்டோரியா ஹால். சங்கரதாஸ் சுவாமிகளும் பம்மல் சம்பந்த முதலியாரும் நாடகம் நடத்திய ஹால் அது. ஜட்கா வண்டிகள், ரயிலில் வந்திறங்கி சிலுசிலு கடற்கரைக் காற்றை அனுபவித்தபடி அந்த ஹாலில் விடிய விடிய நாடகம் பார்ப்பது அன்றைய மதாராஸ்வாசிகளுக்கு ஆனந்த அனுபவமாக இருந்திருக்கிறது. ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்கள் ‘ஷேக்ஸ்பியர் வீக்’ என்ற நாடகத் திருவிழாவாக இங்கே நிகழ்த்தப்பட்ட வரலாறும் உண்டு. அரங்கம் நிரம்பி வழிய பாரதியும் விவேகானந்தரும் கோபால கிருஷ்ண கோகலேவும், வல்லபாய் படேலும் பேசிய பெருமைக்குரிய இடம் இது. இன்று பயன்பாடற்றுச் சிதைந்துகொண்டிருக்கும் வரலாறாக, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை எதிரே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நிற்கிறது. விக்டோரியா ஹாலின் பேசும் சித்திரம் வெள்ளைக்காரர்களின் பால் ரூம் நடனத்துக்காக இந்தப் பொது அரங்கின் முதல் தளம் ஒதுக்கப்பட்டிருந்தது. இத்தனை பெருமைக்குரிய இந்த டவுன் ஹால், மதராஸின் முதல் திரையரங்கு என நாம் கொண்டாடும் ‘எலெக்ட்ரிக் திய...

MANIMUTHTHAARU DAM , HISTORY - KAMARAJ AND K.T KOSALRAM ARE HELPED TO CONSTRUCTION

Image
MANIMUTHTHAARU DAM , HISTORY - KAMARAJ AND K.T KOSALRAM ARE HELPED TO CONSTRUCTION யாரும் இது போல் பார்த்திடாத பிரமாண்டம்..! வற்றாத ஜீவன் விருதுபட்டி வீரன் கொடை.. மணிமுத்தாறு அணை என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டத்தில் மணி முத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளுள் ஒன்று.  இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு பகுதியில் செங்கல்தேரி அருகே பச்சையாற்றின் பிறப்பிடத்திலிருந்து தனியாகப் பிரிந்து மணிமுத்தாறு அருவியாக மணிமுத்தாறு அணைக்கட்டில் வந்து விழுகிறது. இந்த ஆறு கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.  மழைக்காலத்தில் பெருவெள்ளமாக இது பாய்கிறது.  இந்த நீர் மழைக்காலத்தில் தாமிர பரணியில் கலந்து வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க அப்போதைய தமிழக முதல்வர் காமராசரால் கொண்டு வரப்பட்ட அணைத் திட்டம் இது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு மணிமுத்தாறின் குறுக்கே 1958-ம் ஆண்டு சிங்கம்பட்டி கிராமத்தில் 5511 மீ. க. அடி கொள்ளளவு கொண்ட அணை கட்டப்பட்டுள்ளது.  இந்த அணையில் நான்குநேரி, சாத்தான்குளம் போன்ற வறண்ட பகுதியில்...