CULTURAL REVOLUTION ...STOP THAT NON-SENSE
CULTURAL REVOLUTION ...STOP THAT NON-SENSE பெய்ஜிங்தான் தங்கள் தலைநகர் என்று முடிவெடுத் தார் மா சே துங். கட்சியின் தலைவர் அவர். அரசின் தலைவராக சூ என் லாய். விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த அரசு விளங்கியது. கம்யூ னிஸ்ட் கட்சியில் 90 சதவிகிதத் துக்கும் அதிகமானோர் விவசாயி கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சீன மக்கள் குடியரசு உருவான அடுத்த தினமே சோவியத் யூனியன் அதற்கு அங்கீகாரம் அளித்தது. இனி ஜப்பான் வாலாட்டினால் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்ற தைரியத்தையும் அளித்தது. மா சே துங், நாட்டில் பல மாறுதல் களைக் கொண்டு வந்தார். கல்வி அறிவு பெற்றவர்களை அதிக மாக்கினார். விலைகளை கட்டுப் படுத்தினார். கரடுமுரடாக இருந்த சீன எழுத்துக்களை எளிமையாக் கினார். அவர் ஆட்சியில் கிட்டத் தட்ட ஒவ்வொரு வருடமும் தேசிய வருமானம் அதிகரித்தது உண்மை. ஆனால் மாற்றுக் கருத்துக்களை மனம் திறந்து ஏற்றுக் கொள்பவர் என்று பெயர் எடுத்த மா சே துங் மெல்ல மெல்ல மனம் மாறினார். தன் மீதான விமர்சனங்களை அவர் மிகவும் வெறுக்கத் தொடங்கினார். சீனாவுக்குப் புதிய பிரச்னைகள் தோன்றின. சோவியத் யூனியனில் ஸ்டாலின் இறந்தார். குருஷ்ஷேவ் அவர்...