MUMTAJ BIOGRAPHY
MUMTAJ BIOGRAPHY தாஜ் மஹால்: ஷாஜஹானால் 3 முறை அடக்கம் செய்யப்பட்ட மும்தாஜ் - ஒரு முகலாய காதல் வரலாறு ரெஹான் ஃபஸல் பிபிசி செய்தியாளர் 9 ஜனவரி 2022 ஷாஜகான் பட மூலாதாரம்,WALKER AND CO (உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், 24வது கட்டுரை இது) ஷாஜகானின் உயரம் சற்று குறைவாக இருந்தாலும், அவர் பருமனான உடல் மற்றும் பரந்த தோள்கள் பெற்றவர். இளவரசராக இருந்த வரை, தந்தை ஜஹாங்கீர், தாத்தா அக்பர் போன்று மீசையை மட்டுமே வைத்திருந்தார். அரசரான பிறகு தாடி வளர்க்கத் தொடங்கினார். ஷாஜகானின் ஆட்சிக் காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தின் பெருமை அதிகம் வெளிப்பட்டது. அவர் தனது தந்தையைப் போல அடிக்கடி மனநிலை மாறும் தன்மை கொண்டவரில்லை. அவர் மென்மையாகவும், கண்ணியமாகவும் பேசுபவர், எப்போதும் முறையான மொழியில் பேசினார். முகலாயர்களைப் பற்றிய புத்தகமான 'எம்பரர்ஸ் ஆஃப் த பீகாக் த்ரோன்- த சாகா ஆஃப் தி கிரேட் முகல்ஸ்' என்ற புத்தகத்தை...