Showing posts with label இசை மேதை. Show all posts
Showing posts with label இசை மேதை. Show all posts

Friday, 14 October 2016

டி. ஆர். பாப்பா இசை மேதை காலத்தை வென்ற கலைஞன் மறைவு 2004 அக்டோபர் 15

டி. ஆர். பாப்பா இசை மேதை 
காலத்தை வென்ற கலைஞன் 
மறைவு 2004 அக்டோபர் 15



டி. ஆர். பாப்பா (T. R. Papa, 1923–2004) என அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி இராதாகிருஷ்ணன் பாப்பா தமிழ், தெலுங்கு மற்றும் சிங்கள மொழிகளில் இசையமைத்துள்ளார். இவர் பிறந்தது திருவாரூருக்கு அருகில் உள்ள திருத்துறைப்பூண்டி


இசை அமைப்பாளர்களில் அதிகமானோர் ஹார்மோனியக் கலைஞர்கள். இதற்கு விதிவிலக்கானவர் டி.ஆர்.பாப்பா, மிகப் பிரபல்யமான வயலின்கலைஞர்களில் டி.ஆர்.பாப்பாவும் ஒருவர்.டி.ஆர்.சிவசங்கரன் என்ற இயற்பெயர்கொண்டவர் டி. ஆர்.பாப்பா. அவரின் தகப்பன் ராதாகிருஷ்ணபிள்ளை ஒரு வயலின் கலைஞர். வருமானம்குறைவான காரணத்தினால் பள்ளிக்கூடத்திற்கு நான்கு ரூபாய் கட்ட முடியாததால் டி.ஆர்.பாப்பாவின்படிப்பு தடைப்பட்டது.

சிறு வயதிலேயே தஞ்சைதிருவையாறு உற்சவத்திற்கு டி.ஆர். பாப்பா சென்றபோது அவரது தகப்பனின் நண்பரான வயலின்வித்துவானான கும்பகோணம் சிவனடிபிள்ளைடி.ஆர்.பாப்பாவைத் தன்னுடன் விடும்படி அவரின் தகப்பனாரிடம் கேட்டார். அவரின் வேண்டு கோளின்படி டி.ஆர். பாப்பாவை வயலின் மேதைகும்பகோணம் சிவனடி வேலுப்பிள்ளையிடம் ஒப்படைத்தார் தகப்பன்.

சிவனடி வேலு சீமந்தினி 1936 பார்வதி கல்யாணம் 1936 ஆகிய படங்களுக்கு பிடில் வாசித்தார்  டி.ஆர். பாப்பாவும் அவருடன் செல்வார். 1938 ஆம் ஆண்டு குருகுல வாசத்தை முடித்துக்கொண்டு தனிக்கச்சேரி செய்ய  ஆரம்பித்தார்டி.ஆர்.பாப்பா. 

நடிகர் செருகளத்தூர் சாமா ,ஷைலக் ,சுபத்ரா, போன்ற படங்களை தயாரித்தார் .இசை காசி அய்யர் .இவர் எஸ் ஜி கிட்டப்பாவின் அண்ணன்.
பாடலின் இணைப்பு இசை, பின்னணி இசை, இவற்றை சொல்ல சொல்ல அதற்குரிய ஸ்வரங்களை எழுதி மற்ற வாத்தியக்காரர்களுக்கு கொடுக்கும் வேலையை செய்தார்  


சேலம் மார்டன் ஆட்ஸ் மனோன்மணி படத்தைத்தயாரித்த போது அப்படத்தின் இசையமைப்பில் வயலின் கலைஞராகப் பணியாற்றினார்டி.ஆர்.பாப்பா,

1941 ஜப்பான் குண்டு போடுமோ என்ற அச்சத்தில் சென்னையை விட்டு வெளியேறி கொண்டிருந்த காலம் அது .அப்போது ஜூ பிடரில் கண்ணகி , குபேர குசலா போன்ற படங்களுக்கு இசை எஸ் வி வெங்கடராமன் .

அப்போது   அலுவலகப்பையனாக எம்.எஸ். விஸ்வநாதன் வேலை செய் தார். பிரதம இசையமைப்பாளர் இல்லாதபோதுசில பாடல்களுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பார். அவரின் இசையை அங்குள்ள சிலர்பெரிதாக எடுக்கவில்லை. அப்பொழுதே எம்.எஸ். விஸ்வநாதன் சிறந்த இசை அமைப்பாளராகவருவார் என டி.ஆர்.பாப்பா கணித்தார். அதனைஎம்.எஸ்.விஸ்வநாதன் தொலைக்காட்சிப் பேட்டிஒன்றில் தெரிவித்தார்.

டி.ஆர்.பாப்பாவின் வயலின் இசையை விமர்சகர்கள் அங்கீகரித்தார்கள். கல்கியின் மகள் ஆனந்தி, சதாசிவத்தின் மகள் ராதா ஆகியோரின்நாட்டியங்களின்போது டி.ஆர்.பாப்பா வயலின்வாசித்தார். 
அதற்கு எம் எஸ் சுப்புலக்ஷ்மி பின் பாட்டு பாடினார் 

சிட்டால் பிலிம்ஸ் அதிபர் ஜோஸப் தனியத்டி.ஆர்.பாப்பாவுக்கு சினிமாவில் இசையமைக்கசந்தர்ப்பம் கொடுத்தார். ஆத்ம காந்தி என்ற மலையாளப்படத்தின் மூலம் சினிமா இசை அமைப்பாளரான டி.ஆர்.பாப்பா ஜோஸப் தனியத்தின் பலபடங்களுக்கு டி.ஆர்.பாப்பா இசையமைத்தார்.

அவரின் ஆஸ்தான இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா என்றால் அது மிகையாகாது.உங்கள் படத்தின் இசையமைப்பாளர் கதாநாயகன் யாரென்று ஜோஸப் தனியத்திடம் கேட்டால்கொஞ்சமும் தாமதிக்காது டி.ஆர். பாப்பா என்பார்புதிய கதாநாயகர் பலரை அறிமுகப்படுத்தியவர்களில்ஜோஸப் தனியத்தும் ஒருவர்.

அவர் அறிமுகப்படுத்தியவர்களில் அதி உச்சத்தில் இருந்தவர்களில் தென்னக ஜேம்ஸ் பொண்ட் என அழைக்கப்படும் ஜெய்சங்கரும் ஒருவர்.அறிமுக கதாநாயகனுக்கு 1000 அல்லது 2000ஆயிரம் ரூபõ கொடுக்கும் ஜோஸப் தனியத் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பாவுக்கு 15 ஆயிரம் ரூபா கொடுப்பார். அன்பு படத்தில் ஏ.எம்.ராஜா ஜிக்கி பாடியஎன்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும்என்ற பாடல் ஒலிப்பதிவு நடைபெற்ற போது கதாநாயகனான நடிகர் திலகம் அங்கே வந்தார்.

நான்பியானோ வாசிக்கும் போது பாடல் ஆரம்பித்தால்நன்றாக இருக்கும் என்றார். அவரின் ஆலோசனைப்படி பியானோ இசையுடன் பாடல் ஆரம்பமாகியது.


கருணாநிதி பற்றி கூறும்போது பாடலை கொடுத்தவுடன் பாடி காட்ட வேண்டும் என்று விரும்பும் கருணாநிதி வார்த்தைகளையும் மெட்டுக்கு தகுந்தாற்போல் மாற்றியும் கொடுப்பார் . நாமும் வார்த்தைகளை சிதைக்கக்கூடாது என்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார் 

இவருடைய பல பாடல்கள் பி சுசீலாவின் குரலில் அமரத்துவம் பெற்றுள்ளன அதே சமயத்தில் அன்பு திரைப்படத்தில் பி சுசீலாவின் குரல் தெலுங்கு போல் உச்சரிப்பு இருக்கிறது என்று அவரை நிராகரித்ததும் உண்டு 



குறிப்பிடத்தக்க சில பாடல்கள்[மூலத்தைத் தொகு]
சின்னஞ்சிறு பெண் போல சிற்றாடை
ஆசை பொங்கும் அழகு ரூபம் -அன்பு - எ .எம் .ராஜா-ஜமுனாராணி
வருவேன் நான் உனது வாசலுக்கே -மல்லிகா
ஒண்ணுமே புரியல உலகத்திலே -குமாரராஜா
இரவும் வரும் பகலும் வரும் - இரவும் பகலும்
உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இரவும் பகலும்
கத்தியை தீட்டாதே - விளக்கேற்றியவள்
குத்தால அருவியிலே -நல்லவன் வாழ்வான்
சிரிக்கின்றான் இன்று சிரிக்கின்றான் - நல்லவன் வாழ்வான்
ஆண்டவன் ஒருவன் -நல்லவன் வாழ்வான்
இருமாங்கனிபோல் இதழ் ஓரம் -வைரம்
முத்தை தரு பத்தி -அருணகிரி நாதர்
ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வையோ -மறுபிறவி
அம்மா என்பது முதல் வார்த்தை - டீச்சரம்மா

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்[மூலத்தைத் தொகு]
மாப்பிள்ளை (1952)
ஆத்மசாந்தி மலையாளம்
அன்பு (1953)
அம்மையப்பன் (1954)
குடும்பவிளக்கு (1956)
ரம்பையின் காதல் (1956)
ராஜா ராணி (1956)
ஆசை (1956)
ரங்கோன் ராதா (1956)
மல்லிகா (1957)
தாய் மகளுக்கு கட்டிய தாலி ( 1959 )
குறவஞ்சி (1960)
விஜயபுரி வீரன் (1960)
நல்லவன் வாழ்வான் (1961)
குமார ராஜா (1961)
எதையும் தாங்கும் இதயம் (1962)
சீமான் பெற்ற செல்வங்கள் (1962)
அருணகிரிநாதர் (1964)
இரவும் பகலும் (1965)
காதல் படுத்தும் பாடு ( 1966)
பந்தயம் ( 1967 )
டீச்சரம்மா ( 1968 )
அவரே என் தெய்வம் (1969)
ஏன் (1970)
அருட்பெருஞ்ஜோதி (1971)
மறுபிறவி ( 1972)
அவசர கல்யாணம் (1972)
வைரம் (1974)
வாயில்லாப்பூச்சி (1976)
விருதுகள்[மூலத்தைத் தொகு]

இசைப்பேரறிஞர் விருது, 1996[1]


இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]






Saturday, 24 September 2016

இசை மேதை எஸ் ஜி கிட்டப்பா


இசை மேதை எஸ் ஜி கிட்டப்பா 






செங்கோட்டையை சேர்ந்த அந்த சிறுவன், தமிழ் நாடக மேடையை தனது பிரத்யேக சங்கீத பிரயோகத்தினால் தனது சொந்த சாம்ராஜ்யமாகவே மாற்றியிருந்தான். எட்டுக்கட்டை சுருதியில் இளைப்பில்லாத சங்கீத மழை பொழியும்  ஆற்றல் அவனுக்கு இயல்பாகவே வாய்த்திருந்தது. 


10 வயது கூட நிரம்பாத அந்த பாலகனின் சங்கீத கச்சேரியை கேட்க, பிரபல சங்கீத வித்வான்கள் அவன் நிகழ்ச்சி நடக்கும் சபாக்களை நோக்கி வண்டுபோல் மொய்த்தனர். 

எஸ்.ஜி.கிட்டப்பா

'தாய்மொழித் தமிழில் சுவையுடன் பாடினால் பாமரனும் ரசித்துக்கேட்பான்' என்ற சூத்திரத்தை புரிந்துகொண்ட முதல் கலைஞன் அவன்தான். அதுதான் பின்னாளில் இசை உலகில் அந்த சிறுவன் வெற்றிபெறவும், நாடக உலகம் அவரை கொண்டாடவும் காரணமானது. நாடக மேடையில் கொடிகட்டிப் பறந்த எஸ்.ஜி கிட்டப்பாதான் அந்த சிறுவன். 


செங்கோட்டையில் பிறந்த கிட்டப்பாவின் இயற்பெயர் ராமகிருஷ்ணன். அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த செங்கோட்டையில் 1906-ம் ஆண்டு பிறந்தார். தந்தை கங்காதர அய்யர். தாயார் மீனாட்சி. இவருடன் பிறந்தோர் சுப்புலட்சுமி, சிவகாமி, அப்பாத்துரை, சுப்பையா, செல்லப்பா, சங்கரன், காசி, பிச்சம்மாள், நாராயணன் ஆகியோர். வீட்டில் ராமகிருஷ்ணனின் செல்லப்பெயர் கிட்டன். அதுவே பின்னாளில் கிட்டப்பா என்றானது. நெருங்கிய நண்பர்கள் அவரை 'பொங்கப்பா' என அழைப்பர்.

5 வயதில் நாடக பிரவேசம்

1911 -ம் ஆண்டு கொட்டம்பட்டியில் நல்லதங்காள் நாடகம் நடைபெற்றது. அதில் கிட்டப்பாவின் சகோரரான செல்லப்பா பெண்வேடமிட்டு நல்லதங்காளாக நடித்தார். கிட்டப்பா, நல்லதங்காளின் குழந்தைகளில் ஒருவராக நடித்தார். அதுதான் நாடக உலகில் கிட்டப்பாவின் முதல் பிரவேசம். அடுத்தவருடம் மதுரை டவுன்ஹாலில் இருந்த ஸ்ரீமீனாட்சிசுந்தரா சென்டரில்  நடந்த ஒரு நாடகத்தில்,  5 வயது சிறுவனான கிட்டப்பா வெறும் நடிப்பின்றி, பாடல்களையும் பாடி நடித்தார். 


அதே டவுன் ஹாலில், மற்றொரு நாடகத்தில் பாதுஷாவின் மகனாக நடித்தார். அந்த நாடகத்திற்கு வந்திருந்த நாடக உலகின் தந்தை எனப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள், சிறுவன் கிட்டப்பாவின் அபார இசைஞானத்தை கண்டு அதிசயித்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் நட்பு, சிறுவன் கிட்டப்பா தன்னை மேலும் மெருகேற்றிக்கொள்ள உதவியது.

ஏழை, எளிய மக்களின் இசை ரசனையை புரிந்துகொண்டு, அதற்கேற்ப மேடைகளில் பாடி புகழ்பெற்ற கிட்டப்பா, வறுமையினால் முறையான கல்வி பயிலாதவர் என்பது ஆச்சர்யம். ஆனால் சங்கரதாஸ் சுவாமிகள் ஆதரவால் இசையிலும், நாடகக்கலையிலும் நல்ல தேர்ச்சி பெறமுடிந்தது. 5 வயதில் மேடைப்பிரவேசம் செய்த கிட்டப்பா, தனது 6-வது வயதில் சிங்கப்பூர் சென்று சில நாடகங்களில் நடித்தார். 

மிக சிறுவயதிலேயே கடல் கடந்து சென்று அரிதாரம் பூசி நடிக்கும் வாய்ப்பு பெற்ற கிட்டப்பாவின் சிலோன் பயணத்தின்போது,  அங்கிருந்த இந்திய வர்த்தக அமைப்பு அவரது கலைஞானத்தை பாராட்டி, தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கிப் பெருமைப்படுத்தியது. 

தனது 12-வது வயதில்,  சென்னையில் முகாமிட்டு நாடகங்களை நடத்திக்கொண்டிருந்த பிரபல கன்னையா நாடக கம்பெனியில் சேர்ந்தார் கிட்டப்பா. கம்பெனி நாடகங்களில் கிட்டப்பாவுக்கு நாரதர் வேடம். ஒருமுறை அவரது நாடகத்தை பார்க்க வந்த நீதியரசர் அப்துல் ரஹீம், கிட்டப்பாவை பாராட்டி மகிழ்ந்தார். 

திருமணம்

1924 ல் கிட்டப்பா, சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த கிட்டம்மாளை திருமணம் செய்துகொண்டார். தண்டையார்பேட்டை பரமானந்ததாஸ்- சோட்டாதாஸ் பங்களாவில் நடந்த இவர்களது திருமணத்திற்கு பிரபல சங்கீத வித்வான்கள் செம்மங்குடி சீனிவாச அய்யர், மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் உள்ளிட்ட பிரபலங்கள் வந்தனர்.


கிட்டதட்ட 7 வருடங்கள் கன்னையா நாடக கம்பெனியில் பணியாற்றிய பின், 1926 -ல் விலகி ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். அப்போது இலங்கையில் கிட்டப்பா நாடகங்கள் தொடர்ந்து நடந்தன. அவருடன் அவரின் ஹார்மோனிய கலைஞரான சகோதரர் காசியும் சென்றார். நாடகத்தில் நடிப்பதற்காக, சிங்கம் அய்யர் என்பவரின் அழைப்பின்பேரில் இலங்கை சென்ற கிட்டப்பாவின் வாழ்க்கையில் அந்த பயணம் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திவிட்டது.

KITTAPPA SECOND MARRIAGE
WITH SUNDARAMBAL 1926





















அப்போது தமிழ் நாடகமேடையில், தன் இனிய சாரீரத்தாலும் நடிப்பாலும், நாடக உலகில் தனி சாம்ராஜ்யம் நடத்திவந்த பெண்மணி ஒருவரும் அப்போது இலங்கையில் நாடகம் நடத்திக்கொண்டிருந்தார். கிட்டப்பா விற்கு ஈடான புகழ்கொண்ட அவர், நாடகமேடை ராணி என நாடக ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டார்.

இலங்கையில் நிகழ்ந்த அதிசயம்

2 வருட காண்டராக்டில் இலங்கை வந்திருந்தார் அவர். தமிழகத்தில் நாடக ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு அரங்கேற்றிய சாரங்கதாரா, ஆண்டாள், நந்தனார், பவளக்கொடி போன்ற நாடகங்களால் கிடைத்த புகழ்தான்  அந்த நாடகமேடை ராணியை இலங்கை வரை விஜயம் செய்ய வைத்தது. அப்போது அவருக்கு வயது 18.


இலங்கையில் இந்த பெண்மணி நாடகங்களை நடத்தி வருவது அறிந்து கிட்டப்பாவின் நண்பர்கள், “ இது சரியான நேரம் இல்லை. அவரது நாடகங்கள் முன் உன் நாடகங்கள் நிற்குமா. வீணே சிக்கிக்கொள்ள வேண்டாம். பயணத்தை தள்ளிப்போடு” என்றெல்லாம் எச்சரித்தனர்.

அதே சமயம்  அந்த பிரபல பெண்மணியிடமும் அவரது நலம் விரும்பிகள், “ கிட்டப்பா வருகிறாராம். அவரது குரலுக்கு முன் நீ பாடல் பாடி வெற்றி பெறமுடியாது. காண்ட்ராக்டை முடித்துக் கொண்டு கிளம்பிவிடுவது உத்தமம்” என்று எச்சரித்தனர். 

கிட்டப்பா தனது நண்பர்களின் அச்சத்தை ஒதுக்கிவிட்டு இலங்கை புறப்பட்டார்.