Showing posts with label 2004. Show all posts
Showing posts with label 2004. Show all posts

Tuesday, 17 August 2021

JIKKI ,SINGER BORN 1935 NOVEMBER 3 - 2004 AUGUST 16

 

JIKKI ,SINGER BORN 

1935 NOVEMBER 3 - 2004 AUGUST 16



ஜிக்கி (Jikki, நவம்பர் 3, 1935 - ஆகத்து 16, 2004) என்று பரவலாக அறியப்பட்ட பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி. இவர் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் பாடியுள்ளார். 1943 இல் பந்துலம்மா திரைப்படத்தில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமாகி 2002 வரை, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையுலகில் பாடியிருக்கிறார். எழுபது வயது நெருங்கும் சமயத்திலும் இவருக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவர் பின்னணிப் பாடகர் ஏ. எம். ராஜாவின் மனைவி.


கலையுலக வாழ்வு[தொகு]

ஜிக்கி தனது 6 ஆவது வயதிலேயே இசையார்வம் கொண்டிருந்தார். இவர் தனது 11 ஆவது வயதிலேயே இவரது தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமனின் இசையில், ஞானசௌந்தரி 1948 திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான பல்லவி அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து பந்துலம்மாதியாகையாகொல்லபாமாமனதேசம் ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக் கேட்ட இசையமைப்பாளர் ஜி. ராமநாதன், ஜிக்கியின் 13வது வயதில், 1950 இல் மொடேர்ன் தியேட்டர்சின் மந்திரி குமாரி திரைப்படத்தில் வாராய் நீ வாராய்உலவும் தென்றல் காற்றினிலே முதலிய டூயட் பாடல்களைத் திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். இப்படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது 1950 - 1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது. 1952 இல் கே. வி. மகாதேவன் இசையமைத்த குமாரி படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ. எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். ராஜாவுடன் இணைந்து ஜிக்கி நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் பாடியுள்ளார். வட இந்திய நடிகரான ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான ஆஹ இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு அவன் என்பதில் ஜிக்கி ராஜாவுடன் சேர்ந்து பல இனிய பாடல்களைப் பாடினார். மேலும் பல்வேறு பின்னணிப் பாடகர், பாடகிகளுடனும் ஜிக்கி பாடினார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

ஜிக்கி ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர். 1955 இல் மகேஸ்வரி படத்தின் அழகு நிலாவின் பவனியிலே பாடலின் ஒத்திகை இடைவேளையின் போது, ஏ. எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார்.[சான்று தேவை] 1958 இல் பெற்றோர் ஆசியுடன் ஜிக்கி ஏ. எம். ராஜாவைத் திருமணம் செய்து கொண்டார்.

ஜிக்கியின் திரையிசைப் பாடல்களில் சில[தொகு]

  • அருள்தாரும் தேவமாதாவே
  • ஆசைநிலா சென்றதே
  • காதல் வாழ்வில் நானே
  • கண் கான்பதற்குள் மனம் கனிந்து விடும்
  • மானைத் தேடி மச்சான் வரப் போறான் (நாடோடி மன்னன்)
  • என் இன்பம் எங்கே (நாடோடி மன்னன்)
  • மயக்கும் மாலைப்பொழுதே (குலேபகாவலி)
  • ஜீவிதமே சபலமோ
  • கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம்
  • கள்ளங்கபடம் தெரியாதவனே
  • காதல் வியாதி பொல்லாதது
  • ஊரெங்கும் தேடினேன்
  • துள்ளாத மனமும் துள்ளும்
  • நான் வாழ்ந்ததும் உன்னாலே
  • பச்சைக்கிளி பாடுது
  • அழகோடையில் நீந்தும் அன்னம்
  • நாடகமெல்லாம் கண்டேன்
  • பூவாமரமும் பூத்ததே
  • உள்ளம் ரெண்டும் ஒன்று*
  • இன்று நமதுள்ளமே*
  • கொக்கரக் கொக்கரக்கோச் சேவலே
  • சின்னப்பெண்ணான போதில
  • கண்களால் காதல்காவியம்
  • யாரடி நீ மோகினி
  • பேசும்யாழே பெண்மானே
  • அன்பே என்றன் முன்னாலே
  • மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
  • காதலெனும் கோயில் (வட்டத்துக்குள் சதுரம் 1978)
  • ராத்திரி பூத்தது காட்டுரோஜா (தாயம் ஒண்ணு 1988)
  • நினைத்தது யாரோ (பாட்டுக்கொரு தலைவன்)
  • வண்ண வண்ண சொல்லெடுத்து (செந்தமிழ்ப் பாட்டு 1994)

Monday, 12 April 2021

S.V.RAMDASS ,VILLAIN ACTOR BORN 1934 AUGUST 23

 


S.V.RAMDASS ,VILLAIN ACTOR 

BORN 1934 AUGUST 23



S.V.ராமதாஸ்-வயது-83. பழம்பெரும் நடிகர்.தமிழ், தெலுங்குப் படங்களில் வில்லனகவும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கியவர். கொஞ்சும் சலங்கை, ஆசைமுகம், படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன், தங்கை, திருடன், வசந்த மாளிகை, கழுகு, இராணுவ வீரன், மூவேந்தர், உயிர் மேல் ஆசை, இதோ எந்தன் தெய்வம், இதயக்கனி, சங்கிலி, கொஞ்சும் குமரி, அறிவாளி, தேடி வந்த லட்சுமி, புன்னகை உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். திரையுலகில் பீடி, சிகரெட், மதுப்பழக்கம், பெண் சகவாசம் என்று எந்த கெட்டப் பழக்கத்திற்கும் அடிமையாகாத ஒரு நடிகர் இவர்.


சூப்பர்வைசராகயிருந்து நடிகரானவர் எஸ்.வி.ராமதாஸ். தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வில்லன்கள் பட்டியலில் எஸ்.வி.ராமதாசுக்கும் ஓர் இடமுண்டு.


அந்த கணீர் குரல், வில்லன்களுக்கே உரிய கம்பீர உடல்வாகு இதெல்லாம் இவரை நிரந்தர வில்லனாக்கியது. இவரது தாய் மொழி தெலுங்கு. 23.8.1934 அன்று ஆந்திராவிலுள்ள சின்ன கிராமம் ஒன்றில் பிறந்தார். சென்னையில் பி.ஏ., வரை தமிழில் பட்டப்படிப்புப் பயின்றவர். நடிப்பாசை காரணமாக 20 வயதிலேயே சென்னைக்கு வந்தார். ஹார்பரில் சூப்பர் வைசர் வேலை பார்த்துக் கொண்டே பட வாய்ப்புக்களைத் தேடினார். ஹார்பரில் நடக்கும் நாடகங்களில் இவர் நடித்தார். இதே ஹார்பரில் நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் ‘இலங்கேஸ்வரன்’ நாடகம் நடத்தினார். அதில் இவருக்கு ராமர் வேடம். மனோகர் இராவணன். இந்நாடகத்தை அந்நேரத்தில் ஏவி.எம்மில் சீப் எடிட்டராகயிருந்த பிற்கால இயக்குநர் எம்.வி.ராமன் பார்த்தார். இவரது நடிப்பு அவருக்குப் பிடித்துப்போக ஏவி.எம் தயாரித்த பிரமாண்ட வண்ணப்படமான ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் இவருக்காக சிபாரிசு செய்து வாய்ப்பு வழங்கினார். அப்படத்தில் ஜெமினிகணேசனின் அப்பாவாக வயதான கெட்டப்பில் நடித்தார். இப்படத்தை இயக்கியவர் எம்.வி.ராமன். இந்தப் படம் வெளிவந்த பிறகு அடுத்த படமுடனே கிடைத்தது. ஜோசப் தளியத் எடுத்த படமான விஜயபுரி வீரன் படமே அது.இப்படம் ரசிகர்களிடையே இவரை அடையாளம் காணச் செய்தது. அடுத்து ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கிய வீரத்திருமகன்’ படத்தில் ராஜா தர்பாரில் சர்வாதிகாரியாக-வில்லனாக நடிக்க வைத்தார். ஏவ்.எம்மில் நிறைய செலவு செய்து எடுத்தப்படமான இப்படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. ஆனாலும் வீரத்திருமகன் வெளிவந்த நேரத்தில் ஒரு பத்திரிகை இப்படி விமர்சனம் செய்தது. “படத்தில் நடித்தவர்கள் பலர்.நடித்திருப்பவர் ஆந்திர வில்லன் எஸ்.வி.ராமதாஸ்”.இது இவரது நடிப்புக்குக் கிடைத்த பெரிய வெகுமதி.





இவர் நடிகர் எஸ்.ஏ.அசோகனின் உதவியுடன் எம்.ஜி.ஆருடன் அறிமுகமானார். எம்.ஜி.ஆருடன் இவரது முதல் படம் ‘ஆசை முகம்’.அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன் கன்னித்தீவின் சர்வாதியாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் நடித்த போது இவருக்குக் கிடைத்த சம்பளம் 3000/- ரூபாய்.  சிவாஜிகணேசனுடன் ‘கர்ணன்’ படத்தில் தேவேந்திரன் வேடம் ஏற்றார். இப்படத்தில் கர்ணனை ஏமாற்றி கவச குண்டலங்களை வாங்கும் வசனங்களைக் கேட்ட விமர்சகர் ஒருவர் “இனி இவர் ராமதாஸ் இல்லை, குரல் தாஸ்” என்று புகழ்ந்தார். இதுவும் இவரது குரலுக்குக் கிடைத்த வெகுமதியாகும்.


எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி, அன்பே வா, ரிக்‌ஷாக்காரன், குடியிருந்த கோயில், நம்நாடு, நாளை நமதே போன்ற எண்பது படங்களில் நடித்திருக்கிறார். சிவாஜிகணேசனுடன் 20 படங்களில் நடித்துள்ளார். இவர் எத்தனையோ படத்தில் நடித்திருந்தாலும் சில மனநிறைவான படங்கள் உண்டு. அதிலொன்றுதான் டி.ராமாநாயுடு தயாரித்து பி.மாதவன் இயக்கிய “குழந்தை உள்ளம்”.கல்லுக்குள்ளும் ஈரமுண்டு என்பதுதான் கதையின் மூலக்கரு. பேபி ராணி அனாதை குழந்தையாக நடிக்க மனோகர், மேஜர் சுந்தர்ராஜன், ராமதாஸ் மூவரும் கொள்ளைக்காரர்களாக நடித்தனர். கொடூர குணங்கொண்ட 3 கொள்ளைக்காரர்களும் அந்த குழந்தையின் அன்புக்கு எப்படி கட்டுப்படுகிறார்கள் என்கிற அந்தக் கதையில் இவர் ரொம்பவே அனுபவித்து நடித்திருந்தார். படம் பெரிய வெற்றிபெற்றது.


இவர் சொந்தமாக நாடக்குழுவும் வைத்திருந்தார். இவர் நடித்த கடைசி படம் சரத்குமாருடன் மூவேந்தர். இதில் சரத்குமாரின் தந்தையாகவும் நம்பியாரின் மகனாகவும் லெட்சுமியின் கணவராகவும் நடித்திருந்தார். இப்படத்தில் எம்.என்.நம்பியாரும் பூச்சி என்ற பெயருடன் இவரும் வரும் காட்சிகளெல்லாம் திரையரங்குகளில் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. நகைச்சுவை ததும்ப நடித்திருந்தார். இராணுவ வீரன் படத்தில் மில் முதலாளியாக நடித்திருந்தார்.


இவர் ”சேவல் கூவுகிறது ஞாயம் பிறக்கிறது” என்ற ஒரு சொந்த படத்தைக் கருப்பு-வெள்ளையில் தயாரித்தார். அப்படம் தயாரிப்புப் பணிகள் முடிவடைந்த தருவாயில் கருப்பு-வெள்ளையிலிருந்து வண்ணத்திற்குப் படங்கள் முற்றிலும் மாறியிருந்த காலம். அதனால் விநியோகஸ்தர்கள் எவரும் திரைப்படத்தை வாங்காததால் திரைக்கு வராமலேயே டப்பாவுக்குள் முடங்கியது. இதனால் பல இலட்சங்களை இழந்து பரிதவித்தார்.


இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டார். அக்காலத்தில் நாகேஷ், ஆர்.எஸ்.மனோகர், பார்த்திபன் போன்றோர் சென்று பார்த்து வந்தனர். பார்த்திபன் திரைப்படத்தில் நடிக்க வரும் முன் ராமதாஸின் நாடகக்குழுவில் இருந்தார். பார்த்திபன் ரூ-10000/- கொடுத்து உதவியதோடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் ராமதாசின் உடல் நிலை குறித்து கடிதமெழுதினார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா அதிமுக-வின் சார்பில் ரூ-1,04,000/- உதவியளித்தார். இருந்தும் சிகிட்சை பலனின்றி 08.08.2004 அன்று தனது 83-ஆவது வயதில் காலமானார்.


இராமதாஸிற்கு சந்திரா என்ற மனைவியும் லெட்சுமணசாமி, இராதாகிருஷ்ணன், வேணுகோபால் என்ற 3 மகன்கள். மனைவி சந்திரா 2003-இல் மரணமடைந்துவிட்டார்.


நன்றி: தினத்தந்தி 10.12.2000, 9.08.2004 நாளிட்ட கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டு தொகுக்கப்பெற்றது.


இராணுவ வீரன் படத்தில் ராமதாஸ் தனித்தும் ரஜனிகாந்துடனும்

Thursday, 28 January 2021

SANDAL WOOD VEERAPPAN CAPTURED AND KILLED 2004 OCTOBER 18

 


SANDAL WOOD VEERAPPAN 

CAPTURED AND KILLED 2004 OCTOBER 18

*குண்டு வெடித்தது!*


 சேலத்தின் புறநகர் பகுதி மாமாங்கம். இங்கே மத்திய அரசுக்குச் சொந்தமான “பர்ன் அன்ட் ஸ்டேண்டர்டு நிறுவனத்தின் சுரங்கம் உள்ளது. இந்நிறுவனத்தின் ஆய்வு மாளிகை பொதுமக்கள் போக முடியாத பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருக்கிறது. எப்போதும் அமைதியானச் சூழலில் இருக்கும் இந்த ஆய்வு மாளிகை 12.10.2004 மதியம் பரபரப்புடன் காணப்பட்டது. மதியம் இரண்டு மணிக்குத் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையின் தொழில் நுட்ப அணியினர் அங்கு வந்தனர். கூட்ட அறையில் ஒட்டுக் கேட்புக் கருவிகளைப் பொருத்தினர். பக்கத்து அறையில் பதுங்கி, கூட்ட அறையில் நடக்கும் உரையாடலைப் பதிவு செய்யக் காத்திருந்தனர். 

மூன்று மணிக்கு இன்னொரு படைப்பிரிவு வந்தது. கூடுதல் டி.ஜி.பி.யும் STF இன் தலைவருமான விஜயகுமார் IPS அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது. கூட்டம் நடக்கும் அறையில் விஜயகுமாருக்குப் பிடித்த லெமன் கிராஸ் ரூம் ஸ்பிரே அடிக்கப்பட்டது. 

பர்ன் அன்ட் ஸ்டேண்டர்டு ஓய்வு மாளிகை. மாலை நான்கு மணி. 

விஜயகுமார், அதிரடிப்படை எஸ்.பி-1  

செந்தாமரைக்கண்ணன், எஸ்.பி-2 

சண்முகவேல் 

மூவரும் தனித்தனி வண்டிகளில் வந்திறங்கினர். 

செந்தாமரைக்கண்ணனுடன் மிஸ்டர் எக்ஸ் என்று சொல்லப்படும் ஒருவரும் இருந்தார். 

எல்லோரும் கூட்ட அறைக்குள் சென்றனர். அடுத்த சில மணித் துளிகளில் ஹெல்மெட் அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். தலையிலிருந்த ஹெல்மெட்டைக் கழட்டாமலே கூட்ட அறைக்குள் சென்றனர். 

விஜயகுமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் எழுந்து நின்று அந்த இருவரையும் கை குலுக்கி வரவேற்றனர். ஒருவர் கொளத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் துரைப்பாண்டியன். இன்னொருவர் வீரப்பனுக்கு உறவினர். துரைப் பாண்டியன் மீது பற்றும், மரியாதையும் கொண்டவர். அந்த நட்புக்காக வீரப்பனைக் காட்டிக் கொடுத்த M-1 என்ற குறியீட்டைக் கொண்ட போலீஸ் உளவாளி. M-1 பேசத் தொடங்கினார். 

“காட்டு ராஜா நாளைக்குத் தோழரைக் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்கிறார். தவறினால், நாளா நாளைக்கு நாங்க சந்திப்போம்”. 

“வெரிகுட். உன்னுடைய திட்டம் என்ன...?” என்ற விஜயகுமார், துரைப்பாண்டியன்  பக்கம் திரும்பினார். தனது திட்டத்தை நான்கே வரியில் சொல்லி முடிக்கிறார் துரைப்பாண்டியன். “வேண்டாம் நீயும், பாண்டிக் கண்ணனும் பல முறை கேங்கைப் பக்கத்திலிருந்து பார்த்திருக்கீங்க. ரொம்ப நாளா குளோசா வாட்ச் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. கேங் உங்களைப் பார்க்காமல் இருக்கலாம். ஆனால், நீங்க சந்திக்கும் வீட்டுக்காரர், அந்தப் பக்கம் ஆடு, மாடு மேய்க்கப் போறவங்க. வேட்டைக்குப் போறவங்க யாராவது ஒருத்தர் உங்களைப் பார்த்திருக்கலாம். நீங்க போர நேரத்தில், “அந்த ஒருத்தர்” கேங்குடன் இருக்கலாம். அப்படி இருந்துட்டா நம்ம திட்டம் எல்லாமே அவுட் ஆயிடும். வெள்ளைத் துரை இந்தப் பகுதிக்குப் புது ஆள். அவனை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவன் மேல யாருக்கும் சந்தேகம் வராது. அவன் தான் சரியான ஆள். அவனைச் சேர்த்தால் மட்டுமே இந்த ஆப்ரேஷன் சக்சஸ் ஆகும்” என்கிறார். 

“சாரி சார்... துரைப்பாண்டியன், பாண்டிக்கண்ணன் இந்த ரெண்டு பேரில் ஒருத்தரைத் தான் காட்டுராஜாவிடம் கூட்டிட்டுப் போவேன். வேறு யார் வந்தாலும் நான் இந்த வேலைக்குப் போக மாட்டேன்” என்றார் M-1. 

விஜயகுமார்-துரைப்பாண்டியன் இருவருக்குமிடையே காரசாரமான விவாதம் தொடங்கியது. அது முடிய அரை மணி நேரமானது. வேறு எந்த இடமாக இருந்தாலும், ஏ.டி.ஜி.பி. என்ற உயரிய பொறுப்பில் இருப்பவருடன் ஒரு எஸ்.ஐ. இப்படி வாதம் செய்திருக்க முடியாது. செந்தாமரைக் கண்ணன், சண்முகவேல் இருவருமே துரைப்பாண்டியன் திட்டமே சரியானது. அதைச் செயல் படுத்தினால் மட்டுமே A1(வீரப்பன்) கதை முடிவுக்கு வரும் என்றனர். வேண்டா வெறுப்பாக விஜயகுமாரும் அதை ஏற்கிறார். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் எஸ்.பி.அசோக்குமார் தொடங்கிய ஆப்ரேஷன் ரூட்ஸ் (வேர்கள்) நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுக்கிறார். “14 ஆம் தேதி மாலை சந்திக்கலாம்” வீரப்பனிடமிருந்து அழைப்பு வந்தது. M-1 மற்றும் மிஸ்டர் எக்ஸ் என்பவரும் வீரப்பனைச் சந்தித்தனர். “17 ஆம் தேதி ஒரு தோழர் வருவார். அவர் உங்களுக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பார். என்னை கியூ பிராஞ்சு போலீஸ் தேடிக்கிட்டு இருக்காங்க.  நாளை பெரியகுளம் பகுதிக்குப் போகிறேன். அங்குள்ள தோழர்களை கூட்டிக்கிட்டு 20 ஆம் தேதி இங்கே வந்திருவேன். பிறகு, நாம எல்லோரும் கேரளா காட்டுப்பக்கம் போயிடலாம்.” என்று மிஸ்டர் எக்ஸ் அடுத்தடுத்த திட்டங்கள் பற்றி வீரப்பனிடம் விவரிக்கிறார். வீரப்பன் தனக்குத் தேவையான புதிய ஆட்களும், ஆயுதங்களும் வருகிறது என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். 

17ஆம் தேதி மாலை ஆறு மணி, M-1 பெண்ணாகரம் பி.டி.ஓ அலுவலகப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார். அவருடன் பாண்டிக்கண்ணன் என்ற அதிரடிப்படை உளவுப் பிரிவு காவலரும் இருக்கிறார். அவர் கையில் ஒட்டுப் போட்டுத் தைக்கப்பட்ட ஒரு துணிப்பை. அதில், தனித் தனியாகப் பிரிக்கப்பட்ட ஐந்து கையெறி குண்டுகள் (Grenade) இருந்தன. இருவரும் தாசம்பட்டி போகும் சாலையில் நடந்தனர். சின்ன தும்கல் ஊரைக் கடந்தனர். அடுத்துள்ள துரிஞ்சி மரத்துப் பிரிவுக்கு சென்றனர். அங்கிருந்து மேற்கே திரும்பி கொடமாங்குளத்துப் பள்ளத்துக்குச் செல்லும் ஒத்தையடிப் பாதையில் நடந்தனர்.  இரவு எட்டு மணிக்கு சின்னாற்று காட்டை ஒட்டியிருந்த தங்கான் வீட்டை அடைந்தனர். 

M-1 ஐப் பார்த்த அந்த வீட்டுப் பெண் கும்பிட்டார். “அரை மணி நேரத்துக்கு முன்னமே வந்துட்டாங்க. அந்தப் பள்ளத்தாண்ட இருக்காங்க. உங்களை வரச் சொன்னாங்க...” என்றார். வீட்டின் முன் எரிந்து கொண்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கை எடுத்து வீட்டினுள் வைத்தார். வீட்டுக்கு மேற்கிலிருந்த சின்னாற்று காட்டுக்குள் சென்ற M-1, “அண்ணா அண்ணா...” என்கிறார். சத்தம் கேட்டு சந்திரகவுடா முதலில் வருகிறார். அடுத்து, சேதுமணி, கோவிந்தன், வீரப்பன் என நால்வரும் வந்தனர். தங்கான் வீட்டு அடுப்பில் வீரப்பனுக்குப் பிடித்த நாட்டுக் கோழி இறைச்சி வெந்து கொண்டிருந்தது. வீரப்பன் உள்ளிட்ட ஐந்து பேரும் வீட்டுக்கு வருகின்றனர். கட்டிலில் உட்கார்ந்திருந்த பாண்டிக் கண்ணனை “இவர் தான் அண்ணன் அனுப்பிய தோழர்..” என M-1 அறிமுகம் செய்கிறார். வீரப்பனும், பாண்டிக் கண்ணனும் கை குலுக்கினர். பிறகு கோவிந்தன் வரவேற்றார். M-1 வாங்கிப் போயிருந்த அல்சர் மாத்திரையைச் சந்திரகவுடாவிடம் கொடுக்கிறார். பீடிக்கட்டை சேதுமணியிடம் கொடுக்கிறார். வீட்டுக்குப் பின்பக்கம் புகைக்கப் போன சேதுமணி, அங்கிருந்தபடியே யாராவது வருகிறார்களா...? என்ற கண்காணிப்பை மேற்கொள்கிறார். பாண்டிக்கண்ணன், தான் வந்துள்ள நோக்கத்தைச் சொல்கிறார். “சாப்பிட்ட பின்னால காட்டுக்குள்ளார போயிறலாம்...” என்றார் சேத்துக்குழி. “பத்து நிமிஷ வேலை தான் தோழர், இங்கேயே சொல்லிக் குடுத்திட்டு நான் ராத்திரியே கிளம்பணும். அப்பத்தான் வெள்ளனா மதுரைக்குப் போகமுடியும்...” என்கிறார் பாண்டிக்கண்ணன். 

பாலில்லாத தேநீர் வந்தது. எல்லோரும் குடித்தனர்.  “சரி, இங்கேயே பார்த்திருவோம் வாங்க...” என்ற வீரப்பன் அந்தக் கூரை வீட்டினுள் செல்கிறார். பாண்டிக்கண்ணன், கோவிந்தன் இருவரும் அவரைப் பின் தொடர்ந்தனர். வீட்டின் நடுவே மண்ணெண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பாண்டிக்கண்ணன் அதை எடுத்து ஓரமாக வைக்கிறார். இடுப்பில் மாட்டியிருந்த டார்ச் லைட்டை எடுத்த கோவிந்தன் அதை எரிய விட்டார். கீழே உட்கார்ந்த பாண்டிக்கண்ணன் பையில் இருந்து பிரித்துப் போட்ட கையெறி குண்டுகளின் உதிரிப் பாகங்களை எடுக்கிறார். பாடி, டைனமெட், ஜெலட்டின், லாக், லிவர், சேப்டி பின், பியூஸ், சேப்டி ரிங், ஸ்ட்ரிக்கர், ஸ்ட்ரிக்கர் ஸ்பிரிங் என ஒவ்வொரு பாகமாக அதன் பெயரைச் சொல்லி இணைக்கிறார். வீரப்பன், கோவிந்தன் இருவரும் அதை வியப்புடன் பார்த்தனர். இரண்டு நிமிடத்தில் குண்டு தயாரானது. அவர் சொன்னபடியே செய்கிறார் வீரப்பன். இரண்டாவது குண்டும் தயாரானது. அடுத்து கோவிந்தனிடம் “நீங்க ஒன்றை போட்டுப் பாருங்க... தோழர்” என்கிறார் பாண்டிக்கண்ணன். கோவிந்தன் வெளியிலிருந்த சந்திரகவுடாவைக் கூப்பிட்டார். டார்ச் லைட்டை அவரிடம் கொடுத்தார். புன்சிரிப்புடன் ஒவ்வொரு பாகமாக இணைக்கிறார். மூன்றாம் குண்டு தயார். வீரப்பன் இதையெல்லாம் கூர்ந்து கவனிக்கிறார். “சேதுவையும் கூப்பிடு அவனும் ஒன்னை செய்யட்டும்...” என்கிறார் வீரப்பன். சேதுமணியும் வருகிறார். அடுத்து சந்திரகவுடா. இப்போது ஆளுக்கு ஒரு கையெறி குண்டைத் தயாரித்து முடித்திருந்தனர். பாண்டிக் கண்ணனைச் சுற்றியிருந்த நால்வருமே அவர் செய்வதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். “இப்போ நீங்களே இதைத் தனித்தனியா கழட்டிக்கலாம். அதுக்கு இந்த லிவரைக் கீழே தள்ளணும். இனி தூக்கிப் போட்டாலும் குண்டு வெடிக்காது. நீங்க பாதுகாப்பா எவ்வளவு தூரம் வேணுன்னாலும் எடுத்துக்கிட்டுப் போகலாம்”. என்றவர், அடுத்தக் குண்டை வீரப்பன் கையில் வைக்கிறார். குண்டின் லிவரைக் கீழே தள்ளச் சொல்கிறார். வீரப்பன் லிவரைத் தொட்ட நேரத்தில் 180 டெசிபில் சத்தத்தில் அந்த குண்டு வெடித்தது. 

அங்கிருந்த ஐந்து பேரின் மூக்கு, வாய், கண், காது என அத்தனை துவாரங்களிலும் நைட்ரேட் புகை ஏறியது. தும்மல் வந்தது. கண் கிறுகிறுத்தது.  பார்வை போனது. காதுகளில் கிர்... என்ற சத்தம் மட்டுமே கேட்டது. வட்டம் போட்டு உட்கார்ந்திருந்த வீரப்பன், சேதுமணி, கோவிந்தன், பாண்டிக்கண்ணன் உள்ளிட்ட நால்வரும் நினைவிழந்து விழுந்தனர். நின்ற நிலையில் டார்ச் லைட்டைக் கையில் வைத்திருந்த சந்திரகவுடா வீட்டை விட்டு வெளியே போக முயற்சிக்கிறார். முடியவில்லை, இரண்டு நொடியில் அவரும் மயங்கி விழுகிறார். கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. வீடு முழுவதும் புகையால் மூடியிருந்தது. 

வீட்டு உரிமையாளர் தங்கான், அவருடைய மனைவி, மகன் முருகேசன் மூவரும் உண்மையிலயே பதட்டமடைந்தனர். M-1 மட்டும் பதட்டமடைந்தது போல நடித்தார். என்ன நடந்தது...?, என்ன செய்வது...? ஒருவருக்குமே வழி தெரியவில்லை. வீட்டுக்குப் பக்கத்து வயலின் பொலி மீது ஏறி நின்றனர். வடக்குப் பக்கமிருந்த பாப்பான் மெட்டு கரட்டில் ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் எட்டு அதிரடிப்படை வீரர்கள் காத்திருந்தனர். குண்டு வெடித்த சத்தம் கேட்டதும் அந்த வீட்டை நோக்கி ஓடி வந்தனர். நின்று கொண்டிருந்த நால்வரையும் வளைத்துப் பிடித்தனர். “இங்கே நடந்த எதுவும் வெளியே தெரியக் கூடாது. உங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. விஷயம் வெளியே தெரிஞ்சா அட்ரஸ் இல்லாம போயிருவீங்க...” என எச்சரித்தனர். நால்வரையும், தனித்தனியே சிறை வைத்தனர். பத்து நிமிடங்கள் போனது. வீட்டைச் சூழ்ந்திருந்த புகை மூட்டம் கலைந்தது. மாஸ்க் அணிந்த நால்வர் உள்ளே சென்றனர். மயங்கிக் கிடந்த ஐந்து பேரையும் வெளியே கொண்டு வந்து போட்டனர். வீரப்பன் உள்ளிட்ட நால்வரின் கைகளைப் பின்புறமாகக் கட்டினர். ஒருவர் மட்டும் மீண்டும் பாப்பான் மெட்டு கரட்டுக்குச் செல்கிறார். அணைத்திருந்த வாக்கிக்கு உயிர் கொடுக்கிறார். 

“ஆப்ரேஷன் சக்சஸ்” என்கிறார். கோடுபட்டி பக்கமிருந்து வேன் வந்தது. பெரிய தும்கல் ஏரிக்கரை பஸ் ஸ்டாப்பில் நின்றது. செந்தாமரைக் கண்ணன், விஜயகுமார் இருவரும் இறங்கினர். சீருடை இல்லாத இரு வீரர்கள் வரவேற்றனர்.  ஊஞ்ச மரங்கள் நிறைந்த வழியில் நால்வரும் கால் மணிநேரம் நடந்தனர். மயங்கிக் கிடந்த வீரப்பனைப் பார்த்தனர். 17 ஆண்டுகளாகத் தேடப்பட்ட வீரப்பன் பிடிபட்டு விட்டார். விஜயகுமார் இரண்டாம் முறை அதிரடிப்படைக்கு வந்த நோக்கம் நிறைவேறியது. 

54 ஆண்டுகள் பத்து மாதம் வாழ்ந்த வீரப்பன் கதை இன்றுடன் முடியப் போகிறது. மயங்கிக் கிடந்த வீரப்பனின் ஆழ் மனதில் சிறுவயது நினைவுகள் அணி வகுத்து வந்தது. கிழிந்த கோவணத்துடன் வீரப்பன் விளையாடிய செங்கப்பாடி கிராமம் கண் முன் வருகிறது. அங்கே சிறுவயது வீரப்பன் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்.

பெ. சிவசுப்பிரமணியம்.




*வீரப்பனின் வரலாறு தொடங்குகிறது.*

*1. வீரப்பன் ஊரும், குடும்பமும்!*

1920 ஆம் ஆண்டு, அன்றைய சென்னை மாநிலம் சாம்பள்ளி என்ற ஊருக்கருகில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட ஆங்கில அரசு முடிவு செய்தது. காவேரிபுரம், நாயம்பாடி, கோட்டையூர் என 66 ஊர்கள் அணைக்குள் மூழ்கியது. அப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. அந்த ஊர்களில் வாழ்ந்த மக்களை வெளியேறச் சொல்லி அரசு உத்தரவிட்டது. காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் சொந்த நிலம், வீடு, வாசல் என வாழ்ந்த மக்கள் எல்லோரும் அகதிகளாயினர். கையில் எடுக்க முடிந்ததை எடுத்துக் கொண்டு வாழ்விடங்களை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறினர். காட்டுப் பகுதியிலிருந்த சமமான நிலப் பரப்பில் குடியேறினர். அணைக்குள் மூழ்கிய ஊர்களின் பெயரையே புதிய ஊருக்கும் சூட்டினர். 

கருங்கல்லூர் பகுதியிலிருந்து புறப்பட்ட ஒரு பிரிவினர் ஒகேனக்கல் செல்லும் காட்டு வழியில் நடந்தனர். கோட்டையூருக்கு வடக்கிலிருந்த சமமான நிலப்பரப்பில் வீடுகளை அமைத்தனர். அவ்வூருக்கு ஆத்தூர் என்று பெயரிட்டனர். 

இன்னொரு குழுவினர், எறக்கியம் பள்ளத்தின் கரையோரத்தில் குடிசைகளை அமைத்தனர். அந்த ஊருக்கு செங்கப்பாடி என்று பெயரிட்டனர். 

1930 ஆம் ஆண்டுகளில் நிலத்தைச் சமன் செய்து விவசாயம் செய்யப் போதிய கருவிகள் இல்லை. அதனால், கல்லும், பாறைகளும் மிகுந்த அந்த நிலத்தில் கொத்துக் காட்டு விவசாயம் செய்தனர். விவசாயத்துடன், வேட்டையாடுதல், மீன் பிடித்தல், மரம் வெட்டுதல் போன்ற பகுதி நேர வேலைகளிலும் ஈடுபட்டனர். 

தமிழகம்-கர்நாடகம் எனப் பிரிக்கப்படாத சென்னை மாநிலத்தில் வாழ்ந்த அம்மக்கள் கோவை மாவட்டம், கொள்ளேகால் வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 

1956 நவம்பர் முதல் மொழிவாரி மாநிலங்கள் உருவானது. காவிரி மற்றும் பாலாற்றின் அக்கரையிலிருந்த நிலப்பகுதி கர்நாடக மாநிலமானது. இக்கரையில் இருந்த நிலம் தமிழகத்தில் சேர்ந்தது. செங்கப்பாடி கிராமம் 

“எங்க ஊர் புளியம்பட்டி. மேட்டூர் அணை கட்டுனப்போ ஊரெல்லாம் தண்ணிக்குள்ளே போயிட்டுது. அதனால, எங்க தாத்தா, அப்பாவெல்லாம் இந்த ஊருக்கு குடி வந்தாங்க. எங்க அப்பா பேரு முனியக்கவுண்டர். அம்மா பேரு பொன்னுத்தாயி. நாங்க ரெண்டு பேர் அண்ணன் தம்பிகள். அப்பா குடுத்த சொத்து ஆளுக்கு நாலு ஏக்கர் பூமி. அதுவும் தண்ணி வசதியில்லை. மேட்டுக் காடு தான். சோளம், கம்பு, ராகின்னு மானாவாரி விவசாயம் செய்வோம்.” என்கிறார் வீரப்பனின் சித்தப்பா பொன்னுசாமி. 

முனியக் கவுண்டருக்கு கூசன் என்கிற முனுசாமி, கீரியான் என்கிற பொன்னுசாமி என இரு மகன்கள். முதல் மகன் முனுசாமியின் மனைவி பெயரும் பொன்னுத்தாயி, இத்தம்பதிக்கு மாதையன், வீரப்பன், முனியம்மாள், அர்ஜுனன், மாரியம்மாள் என ஐந்து குழந்தைகள். 

இத் தொடரின் நாயகனாக வரும் வீரப்பன் 1950 ஆம் ஆண்டு, ஜனவரி 18 இல் பிறந்தவர். முனுசாமியின் நான்கு ஏக்கர் நிலத்தில் விளைந்த தானியங்கள் ஏழு பேர் கொண்ட குடும்பத்தின் உணவுத் தேவைக்குப் போதவில்லை. அதனால், காட்டில் வேட்டைக்குச் சென்று தான் கஞ்சி குடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் முனுசாமி. ​ இந்தப் பகுதியில் உள்ள அனைவருக்குமே பட்டப்பெயர் உள்ளது. 

பூர்வீகமாக வாழ்ந்த ஊரின் பெயர், குடியிருக்கும் காடு, வீடு உள்ள இடங்களின் பெயர் அல்லது அவருடைய உருவ அமைப்பைக் கொண்டே அடையாளம் சொல்லப் படுகிறார்கள். முனுசாமி யாரிடமும் கூச்சமில்லாமல் பழகக் கூடியவர். அதனால், கூசன் என்று அழைத்துள்ளனர். 

அவருடைய தம்பி பொன்னுசாமியின் மூக்கும், கண்களும் கீரியைப் போல இருக்கும். அதனால், அவரை கீரியான் என்று அடையாளப் படுத்தினர். 

வீரப்பனுக்கு பத்து வயது இருக்கும் போது தலையில் வண்டு கடி ஏற்பட்டது. இதனால், முடி முழுவதும் கொட்டி தலை மொழுமொழுவென இருந்தது. அதிலிருந்து வீரப்பனுக்கு “மொழுக்கன்” என்ற பட்டப் பெயர் வந்தது. 

வீரப்பனின் அண்ணன் பெயர் மாதையன். இந்த ஊரில் பல மாதையன் இருந்ததால், கூசனின் மகன் மாதையன் என்பதை கூச மாதையன் என்றனர். 

வீரப்பன் குடும்பத்திலிருந்த யாருக்கும் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. 

வீரப்பனின் தம்பி அர்ஜுனன் மட்டும் ஆறாம் வகுப்பு வரை படித்துள்ளார். வறுமையின் காரணமாகப் பள்ளிக்குப் போக வேண்டிய வயதில் வீரப்பன் மாடு மேய்க்கப் போனார். சிறுவனாக இருந்த நேரத்தில் அவருக்குப் போட்டுக் கொள்ளச் சட்டை, ட்ரவுசர் கூட இல்லை. தன்னுடைய சம்பாத்தியத்தில் துணி எடுத்துப் போடும் வரை கோவணமே கட்டிக் கொண்டிருந்தார். 

“அந்தக் காலத்தில் தின்பண்டம் வாங்க எங்களுக்கு வசதியில்லை. எங்கம்மா சாமை குத்திச் சோறு ஆக்குவாங்க. மிச்சமிருக்கும் தவுட்டைத் துணியில் மூட்டை கட்டி எடுத்துட்டுப் போவோம். மாடு மேய்க்கும் காட்டில் நானும், வீரப்பனும் அதைத் தின்னு தான் வாழ்ந்தோம். அப்பவே வீரப்பனுக்குப் பெரிய வேட்டைக்காரனுக்கு உள்ள குணம் இருந்தது. தனக்குச் சோறு இல்லாமப் போனாலும், பசியோடு வந்தவர்களுக்குத் தூக்குப் போசியை எடுத்துக் குடுப்பான். அந்த அளவுக்கு அடுத்தவங்களுக்கு உதவும் குணம் அவங்கிட்டே இருந்தது” என்கிறார் வீரப்பனின் வயதை ஒத்த ஐயந்துரை. 

மாவட்டத் தலைநகர் மைசூரிலிருந்து 175 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது செங்கப்பாடி. அடர்ந்த காடுகளுக்கு நடுவில் வாழ்ந்த இப்பகுதி மக்களுக்கு மருத்துவம், கல்வி என அரசின் எந்த உதவியும் கிடைக்கவில்லை. கிடைப்பதற்கு ஏற்ற சூழலும் இல்லை. அரசு என ஒன்று உள்ளதே பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. பரந்த காடுகளின் உள்ளே வாழ்ந்த அம் மக்களுக்குச் சட்டங்களும், சட்ட மீறல்களும் தெரியாது. செங்கப்பாடிக்குப் பேருந்து வசதியில்லாத காலம். வெளியூர் போகவேண்டுமெனில் காவிரி ஆற்றங்கரை ஓரமாகவே தெற்கே 16 கிலோமீட்டர் நடந்து பாலாறு வரவேண்டும். 

இன்னொரு வழி, அதே காவிரி ஆற்றின் கரை ஓரத்தில் வடக்குப் பக்கமாக 12 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மாறுகொட்டாய் வரை போகலாம். அங்கிருந்து காவிரி ஆற்றைக் கடந்தால் ஒகேனக்கல். 

மூன்றாவது வழி. செங்கப்பாடியில் இருந்து நேர் மேற்கே அடர்ந்த காடுகளுக்குள் 14 கிலோமீட்டர் நடந்தால் ஒடக்காப்பள்ளம் என்ற ஊர் வரும். இந்த மூன்று இடத்திலும் இருந்தே பேருந்து மூலம் வெளியூருக்குப் போகமுடியும். 

இதில், முதல் இரண்டு வழிகளைத் தான் இன்றளவும் மக்கள் பயன் படுத்தி வருகின்றனர். செங்கப்பாடியில் இருந்து எந்தப் பக்கம் போனாலும் மூன்று மணிநேரம் காட்டுக்குள் நடந்தே ஆகவேண்டும். இந்தக் காட்டில் யானை, புலி, சிறுத்தை எனப் பல விலங்குகளும் இருந்தன.  இந்த விலங்குகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மக்களுக்குத் துப்பாக்கி தேவைப் பட்டது. இதற்காக அவர்கள் நாட்டுத் துப்பாக்கியைத் தங்களின் உடைமையாகவே பயன் படுத்தினர். 

பன்றி, மான், போன்ற விலங்குகளை வேட்டையாட துப்பாக்கிகள் பயன்பட்டது. பெண் மானைக் கொல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஆண் மான்களை வேட்டையாட ஆங்கில அரசு அனுமதித்தது. 

1972 வரை இச்சட்டம் நடைமுறையிலும் இருந்தது. மனித இனத்தின் முதல் தொழிலே வேட்டை. நீண்ட காலத்துக்குப் பிறகே வேளாண்மையை கற்றனர். விவசாயத்தை மட்டுமே நம்பி இந்த ஊரில் வாழ முடியாது என்பதால் கூசன் (எ) முனுசாமி முழுநேர “சிகாரி” வேட்டைக்காரனாக இருந்தார். பெரும்பாலான நாளில் காலை நேரம் மயிலமலைக் காட்டுக்குள் போவார். மதியம் ஒரு முசுக்கொந்தியை (கருங்குரங்கு) சுட்டு எடுத்து வந்து, மனைவி பொன்னுத்தாயிடம் கொடுப்பார். அதைக் கூடையில் போட்டு எடுத்துக் கொண்டு காவிரியின் அக்கரையில் (தருமபுரி மாவட்டம்) உள்ள சிகரல்பட்டி என்ற ஊருக்குப் போவார். அங்கே முசுக்கொந்தியை விற்பார். அந்தக் காசில் ராகி மாவும், சர்க்கரையும் வாங்கிக் கொண்டு வருவார். அதை வைத்துத் தான் வீரப்பன் குடும்பம் அடுத்த சில நாட்களுக்கான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வந்தது. இதை வீரப்பனே என்னிடம் சொல்லியுள்ளார். 

நன்றி:- வை.கதிரவன், செய்தியாளர். சேலம் 

இடுப்பில் கோவணத்துடன், சாமை அரிசித் தவிடு தின்று வாழ்ந்த மொழுக்கன் என்கிற வீரப்பன். இந்தியாவில் யாருடைய தலைக்கும் இல்லாத விலையாக ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவிக்கும் அளவுக்கு மிகப் பெரிய குற்றவாளியாக உயர்ந்தார். ஏன்...? எப்படி...? எதனால்...? என்பதை அடுத்தடுத்தப் பகுதிகளில் காண்போம்.

பெ. சிவசுப்பிரமணியம்.



Sunday, 18 October 2020

VEERAPPAN ,SANDAL WOOD CRIMINAL BORN 1952 JANUARY 18 - 2004 OCTOBER 18

 


VEERAPPAN ,SANDAL WOOD CRIMINAL BORN 

1952 JANUARY 18 - 2004 OCTOBER 18



வீரப்பன் (Veerappan) [2][3] ( சனவரி 18, 1952 - அக்டோபர் 18, 2004) சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். பல வருடங்களாக வீரப்பன் தமிழக, கருநாடக, கேரளா அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். ஒரு கட்டத்தில் சிலநூறு பேர் கொண்ட படையே தனக்கென வைத்திருந்தார்.

மேலும் வீரப்பன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் பின்வருவன.

இவர் 184 பேரை கொன்றதற்காகவும் (அதில் பாதிக்கு மேற்பட்டோர் போலீஸ்காரர்கள், வனத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆவர்), தந்தத்திற்காக சட்ட விரோதமாக 200க்கும் அதிகமான யானைகளை கொன்றதற்காகவும் தேடப்பட்டு வந்தார்.

$2,600,000 (இந்திய மதிப்பு சுமார் 5 கோடி) மதிப்பிலான தந்தங்கள் கடத்தல்களில் ஈடுபட்டதற்காகவும், US $22,000,000 (இந்திய மதிப்பு சுமார் 130 கோடி) மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதர்காகவும் தேடப்பட்டுவந்தார். 2004 இல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.[4][5]ஆரம்ப வாழ்கை

வீரப்பன் 18 சனவரி, 1952 ஆம் ஆண்டு தமிழ் வன்னியர் சமுதாயத்தில்,[6][7] கருநாடக மாநில எல்லைப்பகுதியான கோபிநத்தம் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருக்கு ஆஸ்த்மா பாதிப்பு இருந்தது. வீரப்பன் மலையூர் மம்மட்டியான் என்ற கைதேர்ந்த கொள்ளையனின் செயல்களால் ஈர்க்கப்பட்டார்.[சான்று தேவை] மம்மட்டியான் இரு கொள்ளை குழுக்களுக்கு நடுவே நடந்த சண்டையில் கொல்லப்பட்டார்.[சான்று தேவை] மம்மட்டியானை கொன்றவரின் சகோதரனை கொன்றதே வீரப்பன் செய்த முதல் கொலையாகும்.[8][9][10]


குடும்பம்

வீரப்பனுக்கு முத்துலெட்சுமி என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.[11]


குற்றவாளி வாழ்க்கை


தன் கூட்டாளிகளோடு வீரப்பன்

சந்தனமர கடத்தல் செய்த தனது உறவினர் செவி கவுண்டரிடம் உதவியாளராக சேர்ந்து தனது குற்றவாளி வாழ்க்கையை தொடங்கினார் வீரப்பன்.[12] 1972 ஆம் ஆன்று முதன்முறையாக வீரப்பன் கைது செய்யப்பட்டார்.[1]


சந்தனமரம் கடத்தல் மற்றும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தல் போன்ற சம்பவங்களை ஆரம்ப நாட்களில் வீரப்பன் செய்து வந்தார். பிறகு, தன் குற்றங்களில் குறுக்கிடுபவர்களையும் கொல்ல ஆரம்பித்தார். பதினேழு வயதில் தனது முதல் கொலையை செய்தார் வீரப்பன். காவலர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் துப்பு கொடுப்பவர்களே வீரப்பனால் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் அடங்குவர்.[13]


1987 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்த சிதம்பரம் எனும் வனத்துறை அதிகாரியை கடத்தி கொன்றார். இந்த கொலை சம்பவம் மூலம் இந்திய அரசின் கவனம் அவர் பக்கம் முதன்முதலாக திரும்பியது.[14] 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண்டில்லாப்பல்லி ஸ்ரீநிவாஸ் எனும் வனத்துறை அதிகாரியை கொன்றார். அதற்கு அடுத்த வருடம் ஆகத்து மாதம் உயர் காவல்துறை அதிகாரி ஹரிகிரிஷ்ணா உட்பட பல காவல்துறையினர் சென்ற வழியில் இடைமறித்து தாக்கி கொன்றார்.




நக்கீரன் ஆசிரியர் கோபால், பல நேரங்களில் வீரப்பனை நேரடியாக சந்தித்து மக்களுக்கு வீரப்பன் பற்றிய செய்திகளை உண்மையாக எழுதினார். இவருடைய வரலாறு சந்தனக்காடு என்ற தொடராக இயக்குனர் வ. கவுதமன் அவர்களால் இயக்கப்பட்டு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.

காவல்துறையின் சிறப்பு அதிரடி படையின் முன்னாள் தலைவர் கி. விஜயகுமார் சனவரி, 2017 ஆம் ஆண்டு வீரப்பன்: சேஷிங் தி பிரிகண்ட் எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.[15]


கடந்த 2004-ஆம் ஆண்டில் தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தனக்கடத்தல் வீரப்பனின் 66-ஆவது பிறந்தநாளான இன்று (வியாழக்கிழமை) , அவர் தேடப்பட்டு வந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் பற்றிய கட்டுரை இது.2004 அக்டோபர் 18ஆம் தேதியன்று தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார் சந்தனக்கடத்தல் வீரப்பன். வீரப்பன் பிரபலமாவதற்கு முன்பு தமிழ்நாட்டில் வனத்துறை ரோந்து குழுவின் தலைவராக இருந்தார் கோபாலகிருஷ்ணன்.


வலுவான தோள்களையும், திடமான புஜங்களையும் கொண்ட அவரை 'ராம்போ' என்று அவருடைய நண்பர்கள் அழைத்தனர். சந்தன கடத்தல் வீரப்பனின் வன்னியர் சாதியை சேர்ந்தவர் `ராம்போ' கோபால கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.


1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி காலை கோலாத்பூர் கிராமத்தில் ஒரு பெரிய சுவரொட்டி காணப்பட்டது. அதில் கேவலமான வார்த்தைகளில் ராம்போ மீது வசைமாரி பொழியப்பட்டிருந்தது. ராம்போவுக்கு தைரியம் இருந்தால் வீரப்பனை நேராக வந்து பிடிக்கட்டும் என்ற சவாலும் விடுக்கப்பட்டிருந்தது.வீரப்பனை பிடிக்க நேரடியாக செல்ல முடிவெடுத்தார் ராம்போ கோபாலகிருஷ்ணன். அவருடைய ஜீப் பாலாறு பாலத்தை அடைந்ததும் பழுதடைந்துவிட்டது. ஜீப்பை அங்கேயே விட்டுவிட்டு, காவல்துறையிடமிருந்து இரண்டு பேருந்துகளை பெற்றுக்கொண்டார் ராம்போ. முதல் பேருந்தில் ராம்போவுடன் 15 உளவாளிகள், 4 போலிசார், 2 வனத்துறை காவலர்கள் ஏறிக்கொண்டனர்.


தமிழ்நாடு காவல்துறை இன்ஸ்பெக்டர் அசோக் குமார், ஆறு போலிசாருடன் இரண்டாவது பேருந்தில் பயணித்தார். விரைந்து வரும் பேருந்துகளின் ஓசை வீரப்பனின் குழுவினருக்கும் கேட்டது. ராம்போ ஜீப்பில் வருவார் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.ஆனால் தொலைவில் இருந்தே போலிசாரின் வருகையை மோப்பம் பிடித்து விசிலடித்த வீரப்பன், முதலில் வந்த பேருந்தின் முன்புற இருக்கையில் ராம்போ இருப்பதையும் பார்த்துவிட்டார்.


அவர்கள் இலக்கு வைத்திருந்த குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு பேருந்து வந்ததும், வீரப்பனின் சகா சைமன், நிலக்கண்ணி வெடிகளுடன் 12 வோல்ட் மின்சாரத் திறன்கொண்ட கார் பேட்டரியின் கம்பிகளை இணைத்துவிட்டார்.


மிகப்பெரிய வெடிப்பு நிகழ்ந்தது. 3000 டிகிரி செல்சியஸ் வெப்பம் உருவானது. பேருந்துக்கு கீழே இருந்த நிலப்பகுதி சற்று உள்வாங்கியது. பேருந்து காற்றில் பஞ்சாய் பறந்தபோது, கற்களும், உலோகத் துண்டுகளும், பேருந்தின் பாகங்களுடன் உள்ளேயிருந்த மனிதர்களின் உடல் பாகங்களும் உருக்குலைந்து எல்லா திக்குகளிலும் வீசியெறியப்பட்டன. இவை ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் கிலோமீட்டர் என்ற வேகத்தில் பறந்ததாக கூறப்படுகிறது.வீரப்பனை சுட்டுக்கொன்ற தமிழக சிறப்பு அதிரடிப்படைக்கு தலைமை தாங்கியவரும், உள்துறை அமைச்சக மூத்த பாதுகாப்பு ஆலோசகருமான கே.விஜயகுமார், வீரப்பனுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட தனது அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார்.


'வீரப்பன்: சேசிங் தி பிரிகண்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தில் இந்த சம்பவம் பற்றி விஜயகுமார் கூறுகிறார், "அந்தக் காட்சி மிகவும் கொடூரமானது. தொலைவில் ஒரு குன்றின் உச்சியில் நின்றிருந்த வீரப்பனும் வெடிப்பின் அதிர்வை உணர்ந்தார். வெப்பத்தால் அவரது முழு உடலும் வியர்வையில் நனைந்துபோனது. சிறிது நேரத்தில் இரண்டாவது பேருந்தில் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் அசோக் குமார், முதல் பேருந்தில் வந்த அனைவரும் உருக்குலைந்திருப்பதை கண்டார்".


"அங்கிருந்த சடலங்களையும், காயமடைந்தவர்களையும் இரண்டாவது பேருந்தில் ஏற்றிக்கொண்டு கிளம்பினோம். ஆனால் வெடிப்பில் சிக்கி தொலைவில் தூக்கி எறியப்பட்ட சுகுமாரை நாங்கள் கவனிக்கவில்லை சுகுமார் இல்லை என்பது பேருந்து கிளம்பிய பிறகுதான் தெரியவந்தது. படுகாயமடைந்த சுகுமார் சற்று நேரத்தில் அங்கேயே இறந்துபோனார்" என்று அந்த கருப்பு தினத்தை பற்றி அசோக்குமார் விஜயகுமாரிடம் தெரிவித்தார்.இதுதான் வீரப்பனின் முதல் பெரிய வெற்றி. இந்த சம்பவமே வீரப்பனை பற்றி இந்தியா முழுவதும் அறியச்செய்தது.


1952 ஆம் ஆண்டு ஜனவரி 18 அன்று பிறந்த வீரப்பன், தனது 17 வயதில் முதல்முறையாக யானை வேட்டையாடினார் என்று கூறப்படுகிறது. யானைகளின் நெற்றியில் சுட்டு அவற்றை கொல்வது வீரப்பனுக்கு பிடித்தமான உத்தி என்று கூறப்படுகிறது.


வீரப்பன் பிடிபட்டபோது…



கே.விஜயகுமார் கூறுகிறார், "காவல்துறை அதிகாரி ஸ்ரீநிவாஸ் வீரப்பனை ஒருமுறை கைது செய்தார். அப்போது தனக்கு கடுமையான தலைவலி இருப்பதாக கூறிய வீரப்பன், தலைக்கு எண்ணெய் வைத்தால் தலைவலி குறையும் என்று பாதுகாவலர்களிடம் கேட்டுக்கொண்டார். கொடுக்கப்பட்ட எண்ணெயை தலையில் தடவுவதற்கு பதில் கையில் தடவினார் வீரப்பன். சில நிமிடங்களில் அவரது கைகளில் போடப்பட்டிருந்த கைவிலங்கு மணிக்கட்டில் இருந்து கழன்றது".


"வீரப்பன் போலிஸ் காவலில் சில தினங்கள் இருந்தபோதிலும், அவரது விரல் ரேகைகள் எடுக்கப்படவில்லை."பி.ஸ்ரீநிவாஸ் என்ற வனத்துறை அதிகாரியின் தலையை துண்டித்த வீரப்பன், அவரது தலையை கால்பந்தாக்கி தன் சகாக்களுடன் விளையாடினார் என்று சொல்லப்படுகிறது. இந்த ஸ்ரீநிவாஸ்தான் வீரப்பனை முதன்முறையாக கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


"வீரப்பனின் இளைய சகோதரர் அர்ஜுனனிடம் ஸ்ரீனிவாஸ் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். வீரப்பன் ஆயுதங்களை கைவிட தயாராக இருக்கிறார், நீங்கள் வாருங்கள், அவர் உங்களை வழியில் சந்திப்பார் என்றும் அர்ஜுனன் கூறினார்".


"சிலரை அழைத்துக்கொண்டு வீரப்பனை சந்திக்க ஸ்ரீனிவாஸ் சென்றார். தன்னுடன் வருபவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக தன்னைவிட்டு விலகிவிடுவார்கள் என்று ஸ்ரீனிவாஸ் நினைத்துக்கூட பார்க்கவில்லை."ஒரு சமயத்தில் வீரப்பனின் சகோதரர் அர்ஜுனன் மட்டுமே ஸ்ரீநிவாசுடன் இருந்தார். ஒரு குளத்தை அவர்கள் நெருங்கி வந்தபோது ஒரு புதரிலிருந்து சிலர் வெளிவருவதை அவர்கள் கண்டார்கள்".


அவர்களில் உயரமாக இருந்த ஒருவரின் மீசையும் மிகப்பெரியதாக இருந்தது. வீரப்பன் ஆயுதங்களை கைவிடுவதாக சொன்னது உண்மை என்று முதலில் நம்பிய ஸ்ரீநிவாஸ், தன்னுடைய நம்பிக்கை தவறு என்று புரிந்துக்கொண்டபோது காலம் கடந்துவிட்டது."


"கையில் துப்பாக்கி வைத்திருந்த வீரப்பன் அவர்களை உற்றுப்பார்த்து எக்காளச் சிரிப்பு சிரித்தான். ஸ்ரீநிவாஸ் திரும்பிப் பார்த்தபோது அர்ஜுனன் மட்டுமே அவர் பின்னால் நின்றான்"."ஸ்ரீநிவாஸை பார்த்து கடகடவென்று சிரித்த வீரப்பன், அவர் பேசுவதற்கு முன்னரே துப்பாக்கியால் சுட்டுவிட்டான். அவரை சுட்டதில் திருப்தியடையாத வீரப்பன், ஸ்ரீநிவாசின் தலையை வெட்டியெடுத்து, தன்னுடைய சகாக்களுடன் சேர்ந்து, தலையை கால்பந்துபோல் உதைத்து விளையாடினார்".


வீரப்பனின் கொடூரம்


குற்றம் புரிபவர்கள் செய்த பலவிதமான கொடுமைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு கொள்ளையன் தன்னைக் தற்காத்துக் கொள்வதற்காக பச்சிளம் மகளை கொன்ற கதையை கேள்விபட்டதுண்டா?


"1993இல் வீரப்பனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த சமயத்தில் வீரப்பனின் குழுவில் நூறு பேர் இருந்தார்கள். பிறந்த குழந்தையின் அழுகைக்குரல் சுமார் 110 டெசிபல்களைக் கொண்டதாக இருக்கும்.. காட்டில் இரவு நேரத்தில் குழந்தையின் அழுகுரல் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்கும்" என்கிறார் விஜய்குமார். "குழந்தையின் அழுகுரலால் ஒருமுறை வீரப்பன் சிக்க நேர்ந்தது. எனவே தனக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடிய குழந்தையின் அழுகுரலை நிரந்தரமாக நிறுத்திவிட்டான் வீரப்பன்".


"1993ஆம் ஆண்டு கர்நாடக சிறப்பு அதிரடிப் படை தேடுதல் நடத்தியபோது, சமதளமாக இருந்த இடத்தின் ஒரு பகுதியில் மட்டும் சற்றே மேடாக இருந்தது. நிலத்தை தோண்டிப் பார்த்தால் அங்கு பச்சிளம் குழந்தையின் சடலம் கிடைத்தது."


காட்டில் நூறு நாட்கள்


2000ஆவது ஆண்டில் கன்னட திரையுலகைச் சேர்ந்த பிரபல திரைப்பட நடிகர் ராஜ்குமாரை கடத்திச் சென்று 100 நாட்களுக்கு மேல் பிணைக்கைதியாக வைத்திருந்த வீரப்பன், தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவானார்.



2001 ஜூன் 11ஆம் தேதியன்று ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமாரின் தொலைபேசி ஒலித்தது. அழைத்தது, அம்மா என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ஜெயலலிதா.சுற்றிவளைக்காமல் நேரடியாக பேசிய ஜெயலலிதா, "சந்தன கடத்தல் வீரப்பனின் அட்டகாசம் தலைக்கு மேல் போய்விட்டது. அவனை பிடிக்க உருவாக்கப்படும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை தலைவராக உங்களை நியமிக்கிறேன். உத்தரவு நாளை உங்களுக்கு கிடைத்துவிடும்" என்று கூறினார்.


சிறப்பு அதிரடிப்படை தலைவராக பொறுபேற்றுக் கொண்ட விஜயகுமார், சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய தகவல்களை திரட்டத் தொடங்கினார். வீரப்பனின் கண்களில் பிரச்சனை ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. பிரபலமான தனது மீசைக்கு சாயம் போடும்போது, சாயத்தின் சில துளிகள் கண்களில் தெறித்ததால் வீரப்பனின் கண்கள் பழுதுபட்டன.விஜயகுமார் சொல்கிறார், "ஆடியோ மற்றும் வீடியோ கேசட்டுகளை வெளியுலகத்திற்கு அனுப்புவதில் விருப்பம் கொண்டவன் வீரப்பன். அப்படி ஒருமுறை அனுப்பியிருந்த வீடியோவில், ஒரு காகிதத்தில் எழுதியிருந்ததை படிக்க வீரப்பன் சிரமப்பட்டதை பார்த்து, அவன் கண்களின் பிரச்சனை இருக்கலாம் என்று யூகித்தோம். வியூகம் வகுக்கும்போது, எங்கள் படையில் இருந்தவர்களை குறைத்துவிட்டேன். குழு பெரிய அளவில் இருந்தால், உணவுக்கான பொருட்களை வாங்கும்போது, பலரின் கவனம் எங்கள் மீது விழும் என்பதே அதற்கு காரணம்."


வீரப்பனை பிடிக்க வலை விரித்தோம். கண் சிகிச்சைக்காக காட்டில் இருந்து மருத்துவமனைக்கு வரவேண்டிய கட்டாயம் வீரப்பனுக்கு இருந்தது. அதற்காக நாங்கள் அனுப்பிய சிறப்பு ஆம்புலன்சில் 'எஸ்.கே.எஸ் மருத்துவமனை, சேலம்' என்று எழுதியிருந்தது.


விஜயகுமார்

அந்த ஆம்புலன்சில் எங்கள் அதிரடிப்படையின் வெள்ளைதுரையும், வண்டியோட்டியாக சரவணனும் இருந்தார்கள். வீரப்பன் தனது முக்கிய அடையாளமான மீசையை நறுக்கி சிறிதாக்கியிருந்தார். வெண்ணிற ஆடை அணிந்து சாதாரண நபரைப்போன்ற தோற்றத்தில் இருந்தார்.


"முன்னரே நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு வந்ததும், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் திடீர் பிரேக் போட்டார். உள்ளே அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் தங்கள் இடத்தில் இருந்து கீழே விழுந்தார்கள். பிரேக் போட்ட வேகத்தில் டயரில் இருந்து புகை கிளம்பியது. அருகில் மறைந்திருந்த எங்களால் டயர் எரியும் வாசத்தை நுகரமுடிந்தது. வண்டியில் இருந்து இறங்கிய சரவணன் என்னருகே ஓடிவந்தார்".விஜய்குமாரின் வெற்றி அனுபவம்


"வீரப்பன் ஆம்புலன்சின் உள்ளே இருக்கிறார் என்று சரவணன் சொன்னதைக் கேட்டதும், 'உங்களை சுற்றி வளைத்துவிட்டோம். ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுங்கள்' என்று மெகாபோனில் உரக்கச் சொன்னேன். அதற்கு துப்பாக்கிச் சூடு பதிலாக வந்தது. பிறகு நாங்கள் நான்குபுறங்களிலும் இருந்து தாக்குதல் நடத்தினோம். ஆம்புலன்சில் இருந்து துப்பாக்கிச் சூடு நிற்கும்வரை சரமாரியாக சுட்டோம்.""நாங்கள் மொத்தம் 338 ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினோம். புகைமூட்டம் சூழ்ந்த அந்த இடத்தில் எல்லாம் முடிவடைந்தது என்ற குரல் உயர்ந்து ஒலித்தது. 10 மணி 50 நிமிடத்தில் தொடங்கிய நடவடிக்கை 20 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. சிம்மசொப்பனமாக விளங்கிய வீரப்பன் மற்றும் ஆம்புலன்சில் இருந்த அவனது மூன்று கூட்டாளிகளின் கடைசி அத்தியாயம் முடிவுக்கு வந்தது."


எங்களின் சரமாரியான துப்பாக்கிச்சூட்டில் வீரப்பன் மீது இரண்டு குண்டுகள் மட்டுமே தாக்கியது என்பது அதிசயமாக இருந்தது. 1960களில் பிரான்சு அதிபர் சார்லஸ் டி காலேவின் காரை நோக்கி 140 குண்டுகள் சுடப்பட்டாலும், அவற்றில் ஏழு குண்டுகள் மட்டுமே காரை துளைத்தன என்று படித்தது நினைவுக்கு வந்தது.


விஜயகுமார் ஆம்புலன்சிற்கு சென்று பார்த்தபோது வீரப்பன் உயிருடன் இருந்தாரா?


"வீரப்பனின் உடலில் உயிர் ஒட்டிக்கொண்டிருந்தது. மூச்சு லேசாக வந்துகொண்டிருந்தாலும், முடிவு நெருங்கிவிட்டதாகவே உணர்ந்தேன். வீரப்பனின் இடது கண்ணை ஒரு குண்டு துளைத்திருந்தது. அவர்கள் அனைவரையும் மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்தேன்".வீரப்பன் இறந்துவிட்டதை அதிரடிப்படை வீரர்களால் நம்பவே முடியவில்லை. ஏனெனில் வீரப்பனை சுற்றிவளைக்கும் நடவடிக்கை இது என்பது ஒருசிலரைத் தவிர வேறுயாருக்குமே தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.



இறந்தது வீரப்பன் என்பது உறுதியானதும், அதிரடிப் படையினர் கரைபுரண்ட மகிழ்ச்சியில் விஜயகுமாரை தோளில் தூக்கி கொண்டாடினார்கள்.


ஈரடியை ஓரடியாக எடுத்து வைத்து விரைந்த விஜய்குமார், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை தொலைபேசியில் அழைத்தார். தொலைபேசியை எடுத்த முதலமைச்சரின் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், "மேடம் படுக்கைக்கு சென்றுவிட்டார்கள்" என்று சொன்னார்.


"நான் கூறும் தகவலைக் கேட்டால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள், முதலமைச்சரிடம் நேரடியாக பேசவேண்டும்" என்று விஜயகுமார் பதிலளித்தார்.



"அடுத்த நிமிடம் தொலைபேசியில் பேசிய ஜெயலலிதா, வீரப்பனின் கதை முடிந்த தகவலை கேட்டதும் மிகவும் உற்சாகமடைந்தார். எனக்கும், குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்த ஜெயலலிதா, முதலமைச்சராக பதவியேற்ற பிறகு கேட்கும் முதல் நற்செய்தி இதுதான் என்று கூறினார்".


பிறகு ஆம்புலன்சுக்கு சென்று மீண்டும் ஒருமுறை அதைப் பார்வையிட்டபோது, ஆம்புலன்சின் மேற்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த நீல விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நீலவிளக்கை அணைக்குமாறு ஆணையிட்டார் விஜயகுமார். அணைக்கப்பட்டது விளக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே சிம்மசொப்பனமாக திகழ்ந்த வீரப்பனின் சரித்திரமும்தான்.


.

Thursday, 15 October 2020

T.R.PAAPPAA ,MUSIC DIRECTOR BORN 1923 JULY 3 -2004 OCTOBER 15

 T.R.PAAPPAA ,MUSIC DIRECTOR BORN 

1923 JULY 3 -2004 OCTOBER 15




டி. ஆர். பாப்பா என அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி இராதாகிருஷ்ணன் பாப்பா (3 சூலை 1923 – 15 அக்டோபர் 2004) தமிழக வயலின் இசைக் கலைஞரும், திரைப்பட இசையமைப் பாளரும், ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்

சங்கீத பால பாடம் தந்தையிடமே தொடங்கியது .பள்ளியில் சென்று படிக்க கட்டணம் கட்ட இயலாத காரணத்தால் படிப்பு நின்றது .வயது 12 நிரம்பிய நிலையில் ,அப்போதைய முன்னணி வயலின் கலைஞர் குடந்தை சிவவடிவேலு பிள்ளையிடம் மாணவராய் சேர்ந்தார் .அப்போது வயலின்

கலைஞர் ராஜமாணிக்கம் பிள்ளை போட்டிக்கு வர தொழில் நசிந்தது .எனவே மெட்ராஸுக்கு 1936 இல் குடிபெயர்ந்து சீமந்தகனி ,பார்வதிக்கல்யாணம் போன்ற சில படங்களில் வயலின் வாசித்தார் .அந்த வயலின் பெட்டியை தூக்கி சென்ற பாப்பா வின் குருகுல வாசம் 1938 இல் முடிவுற்றது .


சிறு சிறு கச்சேரிகளில் வாசிக்க தொடங்கினார் பாப்பா .அப்போது செருகளத்தூர் சாமா சில படங்கள் தயாரித்தார் .மர்மயோகியில் மர்மயோகியாய் நடித்தவர் தான் செருகளத்தூர் சாமா . அவருடைய

படங்களில் எஸ் ஜி கிட்டப்பாவின் அண்ணன் எஸ் ஜி காசி அய்யரிடம் உதவியாளராக சேர்ந்தார் .தத்தகாரத்திற்கு ஸ்வரங்கள் எழுதினார்

பாப்பா .பின்னர் சேலத்தில் மனோன்மணி க்கு பணியாற்றிய பின் மெட்ராஸ் ஜுபிடர் பிக்சர்ஸ் வயலின் கலைஞராய் பணியாற்றினார்





அப்போது எடுக்கப்பட்ட படங்களில் இசை அமைப்பாளர் எஸ் வி வெங்கட்ராமன்

அவர் ஒரு பாடலுக்கு மெட்டுப்போட்டா ,சாப்பிட்டு வருவதற்குள் ஜுபிடர் ஆபீஸ் பையன் ஒருவன் வாத்திய இசையை போட்டு விடுவான் .அவர் எம் .எஸ் .விசுவநாதன் .பாப்பா விஸ்வநாதனுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டுன்னு அன்றே கணித்தவர் - இதை விஸ்வநாதனும் உறுதிப்படுத்தியுள்ளார்


சென்னையிலிருந்து ஜுபிடர் கோவைக்கு சென்ரல் ஸ்டுடியோவை லீசுக்கு எடுத்து இடம் பெயர்ந்தது . ஆனால் பாப்பா சென்னையிலே வேலை தேடிக்கொண்டார் .அதாவது கல்கி மகள் ஆனந்தியும் ,சதாசிவத்தின் மூத்த தாரத்தின் மகள் ராதாவும் மேடையில் ஆட எம் எஸ் சுப்புலக்ஷ்மி பாட

அதற்கு பாப்பா இசை அமைத்தார் .தனது மீரா படத்திற்கு சுப்புலக்ஷ்மி பாப்பாவுக்கு சான்ஸ் வாங்கி தந்தார் .காற்றினிலே வரும் கீதம் பாடல் இன்றளவும் கேட்கக்கூடிய பாடல் தான் ,வயலின் பாப்பா தான் .




டி கே ராமமூர்த்தியும் ,பாப்பாவும் இணைந்து அநேக படங்களுக்கும் கச்சேரிகளுக்கு வாசித்திருக் கிறார்கள்.அப்புறம் சென்னை வானொலி

பிரபல்யம் ஆகத்தொடங்கியதும் 1946 இல் அங்கு வேலைக்கு சேர்ந்தார் பாப்பா .இதனால் ஜி என் பாலசுப்ரமணியம் ,டி கே பட்டம்மாள் ,எம் எல் வசந்தகுமாரி பாடல்களுக்கு வயலின் வாசித்திருக்கிறார் .1951 இல் ஆத்ம சாந்தி மலையாள படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் .அப்போது விசுவநாதன் ,ராமமூர்த்தி ,

சி ஆர் சுப்பாராமன் இடம் பணியாற்றிக் கொண்டிருந்தனர் .1952 இல் சுப்பாராமன் மறைவை ஒட்டி அணைத்து படங்களும் விசுவநாதன் கைக்கு வந்தன .ராமமூர்த்தியும் விஸ்வநாதனுடன் இணைந்தார் .பாப்பாவுக்கு ஒரே ஒரு படம் அன்பு மட்டுமே கிடைத்தது


இந்த அன்பு திரைப்படம் சிவாஜியின் இரண்டாவது படம் .என்ன என்ன இன்பமே

வாழ்வில் எந்நாளும் பாடல் ராஜா -ஜிக்கி குரலில் திஸ்ர நடையில் இசை அமைப்பின் போது சிவாஜி ,தான் பியானோ வாசிக்கையில் பத்மினி பாடுவதுபோல் இசை அமையுங்கள் என்ற ஆலோசனை ஏற்கப்பட்டு புதிதாக பியானோ இசை சேர்க்கப்பட்டது .தன் பாட்டுக்கு முக்கியத்துவம் பற்றி சிவாஜி சிந்திக்க அப்போதே ஆரம்பித்துவிட்டார் என்றே தெரிகிறது .அப்போது ஒரு புதிய பாடகி இப்பாடலை பாட முன்வந்தார் .ஆனால் பாப்பா உச்சரிப்பு சரியில்லை .தெலுங்கு உச்சரிப்பு வருகிறது என்று திருப்பி அனுப்பினார் .அவர் தென்னிந்திய இசைக்குயில் பி .சுசிலா.இவ்வாறு நிராகரிக்கப்பட்ட பி .சுசிலா தான் பின்னாளில் பாப்பாவின்

அபிமான பாடகி ஆனார் .


.பாப்பாவின் இசைமழையில்


ஆசை பொங்கும் அழகு ரூபம் பாகேஸ்வரி ராகத்தில் என்றுமே இனிக்கும் .தரமான இந்தி இறக்குமதி .படம் ஆசை வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே -மல்லிகா உள்ளத்தின் கதவுகள் கண்களடா -இரவும் பகலும் முத்தை திரு -அருணகிரிநாதர் ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் -இப்படி பல தென் சுவை பாடல்கள்


குறிப்பிடத்தக்க சில பாடல்கள்

சின்னஞ்சிறு பெண் போல சிற்றாடை

ஆசை பொங்கும் அழகு ரூபம் -அன்பு - எ .எம் .ராஜா-ஜமுனாராணி

வருவேன் நான் உனது வாசலுக்கே -மல்லிகா

ஒண்ணுமே புரியல உலகத்திலே -குமாரராஜா

இரவும் வரும் பகலும் வரும் - இரவும் பகலும்

உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இரவும் பகலும்

கத்தியை தீட்டாதே - விளக்கேற்றியவள்

குத்தால அருவியிலே -நல்லவன் வாழ்வான்

சிரிக்கின்றான் இன்று சிரிக்கின்றான் - நல்லவன் வாழ்வான்

ஆண்டவன் ஒருவன் -நல்லவன் வாழ்வான்

இருமாங்கனிபோல் இதழ் ஓரம் -வைரம்

முத்தை தரு பத்தி -அருணகிரி நாதர்

ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வையோ -மறுபிறவி

அம்மா என்பது முதல் வார்த்தை - டீச்சரம்மா

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்

மாப்பிள்ளை (1952)

ஆத்மசாந்தி மலையாளம்

அன்பு (1953)

அம்மையப்பன் (1954)

குடும்பவிளக்கு (1956)

ரம்பையின் காதல் (1956)

ராஜா ராணி (1956)

ஆசை (1956)

ரங்கோன் ராதா (1956)

மல்லிகா (1957)

தாய் மகளுக்கு கட்டிய தாலி ( 1959 )

குறவஞ்சி (1960)

விஜயபுரி வீரன் (1960)

நல்லவன் வாழ்வான் (1961)

குமார ராஜா (1961)

எதையும் தாங்கும் இதயம் (1962)

சீமான் பெற்ற செல்வங்கள் (1962)

அருணகிரிநாதர் (1964)

இரவும் பகலும் (1965)

காதல் படுத்தும் பாடு ( 1966)

பந்தயம் ( 1967 )

டீச்சரம்மா ( 1968 )

அவரே என் தெய்வம் (1969)

ஏன் (1970)

அருட்பெருஞ்ஜோதி (1971)

மறுபிறவி ( 1972)

அவசர கல்யாணம் (1972)

வைரம் (1974)

வாயில்லாப்பூச்சி (1976)

விருதுகள்

இசைப்பேரறிஞர் விருது, 1996. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[5]

Tuesday, 29 September 2020

MEHMOOD ALI ACTOR BORN 1932 SEPTEMBER 29 - 2004 JULY 23

 


MEHMOOD ALI  ACTOR BORN

 1932 SEPTEMBER 29 - 2004 JULY 23




மெகுமுது அலி (Mehmood Ali, 29 செப்டம்பர் 1932 – 23 சூலை 2004), என்று அறியப்படும் மெஹ்மூத் பாலிவுட் உலகின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர், பாடகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 300 க்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார் .


பிறப்பும், ஆரம்ப வாழ்க்கையும்

மும்பை, பட உலகில் 40 மற்றும் 50 களில் ஹிந்தி சினிமா திரைப்படங்களில் நடிகராக இருந்த முக்தாஸ் அலி - லதி- உன் - நிஷா தம்பதியரின் எட்டு குழந்தைகளில் இரண்டாவதாக மெஹ்மூத் பிறந்தார். மெஹ்மூட்டில் மூத்த சகோதரி மற்றும் ஆறு இளைய சகோதரர்கள், சகோதரிகள் இருந்தனர். அவரது சகோதரி மினூ மும்தாஜ், பாலிவுட் திரைப்படங்களில் வெற்றிகரமான நடனக் கலைஞரும், நடிகையுமாக இருந்தார். அவரது இளைய சகோதரர் அன்வர் அலி யம் ஒரு நடிகர் மற்றும் குட்-தார் மற்றும் காஷ் போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர் ஆவார்.[1]



மெஹ்மூதின் மூதாதையர் தென்னிந்தியாவின் ஆற்காட்டு நவாப் ஆக இருந்தனர் , ஆங்கிலேயர்கள் நாடுபிடிக்கும் கொள்கைப்படி திப்புசுல்தானுக்கு உடந்தையாக இருந்தார் என்ற போலி குற்றச்சாட்டின் கீழ் உம் தாத் -உல் -உமாரா நவாப் பதவியில் இருந்து 1795 - 1801 இல்தூக்கி எறியப்பட்டார்.பின்னர் இவர் குடும்பம் பல்வேறு வகையில் சிதைந்தது .இந்த வழியில் வந்தவரே மெஹ்மூத்


சிறுவனாய் இருந்த போது பம்பாய் பிலிம்ஸ் நிறுவனத்தில் எடுபிடி வேலை செய்தார் .அப்போது கிசுமத் படத்தில் நடித்தார் . பின்னர் எந்த வேலையிலும் நிலை கொள்ளாமல் பல வேலைகளில் வயிற்றுப் பாட்டுக்காக வேலை செய்தார். சில சமயங்களில்மீனாகுமாரிக்கு டேபிள் டென்னிஸ் ஆசிரியராக பணிபுரிந்தார், மீனாகுமாரியின் தந்தை அவர் காதலுக்கு தடை போடவே ,மீனா தன் தங்கை மதூ - மெஹ்மூத் தம்பதியரின் வீட்டில் சில காலம் தங்கியிருந்தார் இயக்குனர் பி. எல். சந்தோஷி மற்றும் அவரது மகன் ராஜ்குமார் சந்தோஷி,க்கும் கார் ஓட்டுநராக பணி புரிந்தார் . ராஜ்குமார் அந்தாஸ் அப்னே அப்னே படத்தில் நடிக்க சந்தர்ப்பம் அளித்தார்



திரைப்பட வாழ்க்கை

1959 ஆண்டு முதல் சிரிப்பு நடிகராக நடிக்க ஆரம்பித்து ,பின் ஜொலிக்க ஆரம்பித்தார் . ஒரு கால கட்டத்தில் கதாநாயகனுக்கு நிகராகவும் , அதற்கு மேலும் சம்பளம் வாங்கினார் .கும்நாம் படத்தில் இவர் நடிகை ஹெலன் உடன் ஆடிப்பாடியது இவரது மதிப்புக்கு ஒரு உரைகல்.இந்த கால கட்டத்தில் தன் குதிரைகளை வளர்க்க ஒரு பெரிய பண்ணையையே விலைக்கு வாங்கினார் .மேலும் எல்லா மாடல் கார்கள் சுமார் 24 வைத்திருந்தார் சம்பளத்திற்கு 150 பேர் வேலை பார்த்தனர்.இப்படி பெரிய ராஜா போல் கொஞ்ச காலம் வாழ்ந்தார் .இந்த காலகட்டத்தில் அமிதாப் பச்சன் சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்டு மும்பையில் அலைந்து திரிந்தார் . அவருக்கு தங்குவதற்கு தன்வீட்டிலேயே தங்க இடம் அளித்தார். முதன் முதலாக பாம்பே டூ கோவா படத்தில் கதாநாயகன் வேடம் வாங்கித்தந்தார் . இந்த படம் மதராஸ் டு பாண்டிசேரி படத்தின் தழுவலாகும் . பின்னர் ஒரு பேட்டியில் அமிதாப் பச்சன் மெஹ்மூத் என் தெய்வ தந்தை ( GOD FATHER) என்று புகழாரம் சூட்டினார்


திரைப்படத் தயாரிப்பும் ,பின்னடைவும்


1970 களில் சிரிப்பு நடிகர்கள் ஜெகதீப் ,அஸ்ராணி,பைந்தால்,தேவன் வர்மா ,காதர் கான் என்று பாலிவுட்டை முற்றுகையிட மெஹ்மூத் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன .எனவே சொந்த பட தயாரிப்பில் ஈடுபட்டார் .ஆரம்பத்தில் கைகொடுத்த பாலிவுட் பின்னர் இவரை கை கழுவியது . 1960 களில் க்ரிஹஸ்தி ,பரோசா ,ஜிட்டி,மற்றும் லவ் இன் டோக்கியோ இவருக்கு ஜோடியாய் நடித்தவர் ஸுபா க்ஹோடே . . 1970 களில் இவருடன் ஜோடி சேர்ந்தவர் அருணா இராணி . பாம்பே டு கோவா ,கரம் மசாலா , தோபோல்,முதலியன .அருணா இராணி - இவருக்கு பல படங்களில் சான்ஸ் வாங்கி தந்துள்ளார் . பிரதி பலனாக அவர் வாங்கிய சம்பளத்தில் கமிஷன் பெற்றுள்ளார் .பின்னர் இந்த பந்தத்தில் முற்றிலும் விடுபட்டு ,நேரடியாக டான்ஸ் ,மற்றும் வில்லி ரோல்களை பெற்றார் அருணா .பின்னர் மெஹ்மூத் நடித்த பல படங்கள் தோல்வியை தழுவின . சில படங்கள் பாதியிலே கைவிடப்பட்டன .


இறப்பு

ஒரு இயக்குனராக, 1996 ஆம் ஆண்டில் மெஹ்மூத்தின் கடைசி படம் துஷ்மன் துனியா கா. அவருடைய மகன் மன்சூர் அலி அறிமுகமான இந்த படம், ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகியோரின் சிறப்பு நடிப்புகளை கொண்டிருந்தது. எட்டு குழந்தைகளின் இரண்டாவது மகன், மக்பூத் அலி (பிரபலமாக லக்கி அலி என்று அழைக்கப்படுகிறார்) இன்று பிரபல ஹிந்தி பாப் பாடகர் ஆவார்.


அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் அவர் நுரையீரல் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, சிகிச்சை பலன் அளிக்காமல் 2004 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி 72 வயதில் மெஹ்மூத் தனது தூக்கத்திலேயே மரணமடைந்தார்.[1] சூலை மாதம் 28 ஆம் தேதி அவருடைய உடல் இந்தியா கொண்டுவரப்பட்டது. மறுநாள் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.[2]

இந்த கட்டுரை 2018  செப்டம்பர் 29இல் என்னால் எழுதப்பட்டது 




MEHMOOD THE LEGEND IN

HINDI CINEMA COMEDIAN

BORN 1932 SEPTEMBER 29


Mehmood Ali (29 September 1932 – 23 July 2004), popularly known simply as Mehmood, was an Indian actor, singer, director and producer best known for playing comic roles in Hindi films. During his career of more than four decades, he worked in over 300 Hindi films.


Early life[edit]


Mehmood was one of eight children born to Latifunnisa and film and stage actor-cum-dancer Mumtaz Ali, who was a huge star of the 40's and 50's cinema, in Mumbai, India.[1] Mehmood had an elder sister and six younger siblings.


His sister, Minoo Mumtaz, was also a successful dancer and character actress in Bollywood movies. His youngest brother, Anwar Ali too is an actor and a producer of movies like Khud-daar and Kaash.


Career[edit]

Early career[edit]


As a child, he worked in Bombay films like Kismet. He later had a number of odd jobs, working as a table tennis teacher to Meena Kumari and as a driver for director P. L. Santoshi. Santoshi's son, Rajkumar Santoshi, would later cast him in the film Andaz Apna Apna.[citation needed]


After getting married and becoming a father, he decided to act to earn a better living starting with a small break as a killer in the film CID. He started off by doing small, unnoticed roles in films like the peanut seller in Do Bigha Zameen and Pyaasa. He later went on to act in lead roles, but he was appreciated for his comedy, some of which was in the Hyderabad region's Urdu accent.


Later career[edit]


Towards the end of the 70s, Mehmood's popularity began to decline as other comedy actors like Jagdeep, Asrani, Paintal, Deven Verma and Kader Khan shot to prominence. Between 1989 and 1999,


he made a handful of movies, but most of them were either shelved or made no impression. He acted as Johnny in Rajkumar Santoshi's Andaz Apna Apna – his last hit film as an actor.


Death[edit]


On 23 July 2004, Mehmood died in his sleep in Pennsylvania, US, where he had gone for treatment of heart disease after suffering poor health for several years.[1] His fans were able to pay homage to him at Mehboob Studio in Bandra, Mumbai, India.[2]


Legacy[edit]


One of his sons, Lucky Ali (Maqsood Ali) is a singer and composer who has acted in films.


Partial filmography[edit]

Sanyasi (1945)[3]

Nastik (1954)

Qaidi No. 911 (1959)

Kagaz ke phool (1959)

Miya Bibi Razi (1960)

Manzil (1960)

Chote Nawab (1961) with Ameeta

Dil Tera Diwana (1962)

Ghar Basake Dekho (1963) with Savitri

Kahi Pyar na ho jaye (1963)

Zindagi (1964)

Ziddi (1964)

Shabnam (1964)

Chitralekha (1964)

Gumnaam (1965) with Helen

Johar-Mehmood in Goa (1965) with I.S. Johar

Namasteji (1965) with Ameeta

Kahin Pyar Na Ho Jaye (1965)

Bhoot Bangla (1965)

Pyar Kiye Ja (1966) with Mumtaz

Love in Tokyo (1966) with Shobha Khote

Pati Patni (1966)

Gunahon Ka Devta (1967)

Patthar ke Sanam (1967)

Sangharsh (1968)

Padosan (1968) with Sunil Dutt, Saira Banu and Kishore Kumar

Aankhen (1968)

Neel Kamal (1968)

Do Phool (1968)

Do Kaliyan (1968)

Izzat(Hindi Film)

Sadhu aur Shaitan (1968)

Humjoli (1970)

Main Sunder Hoon (1971) with Leena Chandavarkar

Mere Apne (1971)

Johar Mehmood in Hong Kong (1971) with I. S. Johar

Bombay to Goa (1972)

Kunwaara Baap (1974)

Do Phool (1974)

Pocketmaar (1974)... Sunder

Salaakhen (1975) ... Abdul Rehman

Ginny Aur Johnny (1976)

Jai Bajrang Bali (1976) ... Shakun

Sabse Bada Rupaiya (1976)

Thief of Baghdad (1977)

Aafat (1977) with Navin Nischol, Leena Chandavarkar ... Mahesh

Des Pardes (1978) ... Anwar

Ek Baap Chhe Bete (1978) ... Mahesh

Khanjar (1980) ... Jagat

Andaz Apna Apna (1994)

Guddu (1995)

Dushman Duniya Ka (1996)

Awards[edit]

Filmfare Best Supporting Actor Award – Won

1963 Dil Tera Diwana – Anokhe

Filmfare Best Comedian Award – Won

1967 Pyar Kiye Jaa – Atma

1970 Waris – Ram Kumar #3/Mother (double role)

1972 Paras – Munna Sarkar

1975 Vardaan

Filmfare Best Comedian Award – Nominated

1967 Love in Tokyo – Mahesh

1968 Mehrban

1969 Neel Kamal – Girdhar Gopal Agarwal

1969 Sadhu Aur Shaitaan – Bajrang/Ram

1970 Meri Bhabhi – Shambu

1971 Humjoli – Shivram

1972 Main Sunder Hoon – Sunder

1973 Bombay to Goa – Khanna, Bus Conductor

1974 Do Phool – Pavitra Kumar Rai 'Puttan'/Mani

1975 Duniya Ka Mela

1975 Kunwara Baap – Mahesh/Rickshaw Walla

1976 Qaid – Bajrangi

1977 Sabse Bada Rupaiya – Neki Ram

1980 Nauker – Dayal

1983 Khud-Daar – Jaggan


Family[edit]

His family included many other entertainers.


His father Mumtaz Ali was a dancer and character-artist in films from the 40's era. His dance troupe "Mumtaz Ali Nites" performed all over India. His career slumped due to his alcoholism, leading Mehmood to work as a child artist and daughter Meenu Mumtaz to work as a dancer in his stage shows and later movies. He was last seen in the 1974 Hindi movie Kunwara Baap directed by Mehmood in the song "Saj Rahi Gali Meri Maa".


His sister Malikunnisa Ali aka Minoo Mumtaz[1] was re-christened as Minoo by Meena Kumari, Mehmood's sister-in-law. She started off as a stage dancer and later danced in many films of the 50s and 60s. Her first film was Sakhi Hateem. She played the lead role opposite Balraj Sahni in Black Cat (1959). She can be seen in the song "Boojh Mera Kya Naam Re" from the movie C.I.D.


Brother Anwar Ali debuted in the movie Sadhu Aur Shaitaan in 1968. His first major role was in the K. A. Abbas’s film Saat Hindustani. He worked in movies such as Wafaa, Albela, Caravan, Parwana, Bansi Birju, Manzil, Sabse Bada Rupaiya. He played Driver "Rajesh" in Bombay to Goa where Mehmood played conductor "Khanna".[2] He co-produced the Kunwaara Baap, Khud-daar and Kaash.


Mehmood's eldest son Masood Ali aka Pucky Ali played a role in the movie Ek Baap Chhe Bete and Hamare Tumhare.

Second son Maqsood Mehmood Ali aka Lucky Ali started his movie career as an adult in Yehi Hai Zindagi. He later became a singer songwriter and composer.

Third son Maqdoom Ali aka Macky Ali[3] played a disabled child in Mehmood's 1974 movie Kunwara Baap as he was in real life affected by polio. He acted in the movie Ek Baap Chhe Bete. He later made a music album and appeared in the music video Yaaron sab dua karo and later in Tirchi topiwale, sung by Altaf Raja.

Fourth son Masoom Ali produced the movie Dushman Duniya Ka. He too acted in Ek Baap Chhe Bete.


Second wife Tracy Ali played the role of the American wife in the movie Ek Baap Chhe Bete.


Fifth son Mansoor Ali (by Tracy Ali)[4] acted in Ek Baap Chhe Bete. Returning from USA after 14 years he released a video song album Sabrina dedicated to his daughter & late father in February 2012.