T.R.PAAPPAA ,MUSIC DIRECTOR BORN
1923 JULY 3 -2004 OCTOBER 15
டி. ஆர். பாப்பா என அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி இராதாகிருஷ்ணன் பாப்பா (3 சூலை 1923 – 15 அக்டோபர் 2004) தமிழக வயலின் இசைக் கலைஞரும், திரைப்பட இசையமைப் பாளரும், ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்
சங்கீத பால பாடம் தந்தையிடமே தொடங்கியது .பள்ளியில் சென்று படிக்க கட்டணம் கட்ட இயலாத காரணத்தால் படிப்பு நின்றது .வயது 12 நிரம்பிய நிலையில் ,அப்போதைய முன்னணி வயலின் கலைஞர் குடந்தை சிவவடிவேலு பிள்ளையிடம் மாணவராய் சேர்ந்தார் .அப்போது வயலின்
கலைஞர் ராஜமாணிக்கம் பிள்ளை போட்டிக்கு வர தொழில் நசிந்தது .எனவே மெட்ராஸுக்கு 1936 இல் குடிபெயர்ந்து சீமந்தகனி ,பார்வதிக்கல்யாணம் போன்ற சில படங்களில் வயலின் வாசித்தார் .அந்த வயலின் பெட்டியை தூக்கி சென்ற பாப்பா வின் குருகுல வாசம் 1938 இல் முடிவுற்றது .
சிறு சிறு கச்சேரிகளில் வாசிக்க தொடங்கினார் பாப்பா .அப்போது செருகளத்தூர் சாமா சில படங்கள் தயாரித்தார் .மர்மயோகியில் மர்மயோகியாய் நடித்தவர் தான் செருகளத்தூர் சாமா . அவருடைய
படங்களில் எஸ் ஜி கிட்டப்பாவின் அண்ணன் எஸ் ஜி காசி அய்யரிடம் உதவியாளராக சேர்ந்தார் .தத்தகாரத்திற்கு ஸ்வரங்கள் எழுதினார்
பாப்பா .பின்னர் சேலத்தில் மனோன்மணி க்கு பணியாற்றிய பின் மெட்ராஸ் ஜுபிடர் பிக்சர்ஸ் வயலின் கலைஞராய் பணியாற்றினார்
அப்போது எடுக்கப்பட்ட படங்களில் இசை அமைப்பாளர் எஸ் வி வெங்கட்ராமன்
அவர் ஒரு பாடலுக்கு மெட்டுப்போட்டா ,சாப்பிட்டு வருவதற்குள் ஜுபிடர் ஆபீஸ் பையன் ஒருவன் வாத்திய இசையை போட்டு விடுவான் .அவர் எம் .எஸ் .விசுவநாதன் .பாப்பா விஸ்வநாதனுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டுன்னு அன்றே கணித்தவர் - இதை விஸ்வநாதனும் உறுதிப்படுத்தியுள்ளார்
சென்னையிலிருந்து ஜுபிடர் கோவைக்கு சென்ரல் ஸ்டுடியோவை லீசுக்கு எடுத்து இடம் பெயர்ந்தது . ஆனால் பாப்பா சென்னையிலே வேலை தேடிக்கொண்டார் .அதாவது கல்கி மகள் ஆனந்தியும் ,சதாசிவத்தின் மூத்த தாரத்தின் மகள் ராதாவும் மேடையில் ஆட எம் எஸ் சுப்புலக்ஷ்மி பாட
அதற்கு பாப்பா இசை அமைத்தார் .தனது மீரா படத்திற்கு சுப்புலக்ஷ்மி பாப்பாவுக்கு சான்ஸ் வாங்கி தந்தார் .காற்றினிலே வரும் கீதம் பாடல் இன்றளவும் கேட்கக்கூடிய பாடல் தான் ,வயலின் பாப்பா தான் .
டி கே ராமமூர்த்தியும் ,பாப்பாவும் இணைந்து அநேக படங்களுக்கும் கச்சேரிகளுக்கு வாசித்திருக் கிறார்கள்.அப்புறம் சென்னை வானொலி
பிரபல்யம் ஆகத்தொடங்கியதும் 1946 இல் அங்கு வேலைக்கு சேர்ந்தார் பாப்பா .இதனால் ஜி என் பாலசுப்ரமணியம் ,டி கே பட்டம்மாள் ,எம் எல் வசந்தகுமாரி பாடல்களுக்கு வயலின் வாசித்திருக்கிறார் .1951 இல் ஆத்ம சாந்தி மலையாள படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் .அப்போது விசுவநாதன் ,ராமமூர்த்தி ,
சி ஆர் சுப்பாராமன் இடம் பணியாற்றிக் கொண்டிருந்தனர் .1952 இல் சுப்பாராமன் மறைவை ஒட்டி அணைத்து படங்களும் விசுவநாதன் கைக்கு வந்தன .ராமமூர்த்தியும் விஸ்வநாதனுடன் இணைந்தார் .பாப்பாவுக்கு ஒரே ஒரு படம் அன்பு மட்டுமே கிடைத்தது
இந்த அன்பு திரைப்படம் சிவாஜியின் இரண்டாவது படம் .என்ன என்ன இன்பமே
வாழ்வில் எந்நாளும் பாடல் ராஜா -ஜிக்கி குரலில் திஸ்ர நடையில் இசை அமைப்பின் போது சிவாஜி ,தான் பியானோ வாசிக்கையில் பத்மினி பாடுவதுபோல் இசை அமையுங்கள் என்ற ஆலோசனை ஏற்கப்பட்டு புதிதாக பியானோ இசை சேர்க்கப்பட்டது .தன் பாட்டுக்கு முக்கியத்துவம் பற்றி சிவாஜி சிந்திக்க அப்போதே ஆரம்பித்துவிட்டார் என்றே தெரிகிறது .அப்போது ஒரு புதிய பாடகி இப்பாடலை பாட முன்வந்தார் .ஆனால் பாப்பா உச்சரிப்பு சரியில்லை .தெலுங்கு உச்சரிப்பு வருகிறது என்று திருப்பி அனுப்பினார் .அவர் தென்னிந்திய இசைக்குயில் பி .சுசிலா.இவ்வாறு நிராகரிக்கப்பட்ட பி .சுசிலா தான் பின்னாளில் பாப்பாவின்
அபிமான பாடகி ஆனார் .
.பாப்பாவின் இசைமழையில்
ஆசை பொங்கும் அழகு ரூபம் பாகேஸ்வரி ராகத்தில் என்றுமே இனிக்கும் .தரமான இந்தி இறக்குமதி .படம் ஆசை வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே -மல்லிகா உள்ளத்தின் கதவுகள் கண்களடா -இரவும் பகலும் முத்தை திரு -அருணகிரிநாதர் ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் -இப்படி பல தென் சுவை பாடல்கள்
குறிப்பிடத்தக்க சில பாடல்கள்
சின்னஞ்சிறு பெண் போல சிற்றாடை
ஆசை பொங்கும் அழகு ரூபம் -அன்பு - எ .எம் .ராஜா-ஜமுனாராணி
வருவேன் நான் உனது வாசலுக்கே -மல்லிகா
ஒண்ணுமே புரியல உலகத்திலே -குமாரராஜா
இரவும் வரும் பகலும் வரும் - இரவும் பகலும்
உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இரவும் பகலும்
கத்தியை தீட்டாதே - விளக்கேற்றியவள்
குத்தால அருவியிலே -நல்லவன் வாழ்வான்
சிரிக்கின்றான் இன்று சிரிக்கின்றான் - நல்லவன் வாழ்வான்
ஆண்டவன் ஒருவன் -நல்லவன் வாழ்வான்
இருமாங்கனிபோல் இதழ் ஓரம் -வைரம்
முத்தை தரு பத்தி -அருணகிரி நாதர்
ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வையோ -மறுபிறவி
அம்மா என்பது முதல் வார்த்தை - டீச்சரம்மா
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
மாப்பிள்ளை (1952)
ஆத்மசாந்தி மலையாளம்
அன்பு (1953)
அம்மையப்பன் (1954)
குடும்பவிளக்கு (1956)
ரம்பையின் காதல் (1956)
ராஜா ராணி (1956)
ஆசை (1956)
ரங்கோன் ராதா (1956)
மல்லிகா (1957)
தாய் மகளுக்கு கட்டிய தாலி ( 1959 )
குறவஞ்சி (1960)
விஜயபுரி வீரன் (1960)
நல்லவன் வாழ்வான் (1961)
குமார ராஜா (1961)
எதையும் தாங்கும் இதயம் (1962)
சீமான் பெற்ற செல்வங்கள் (1962)
அருணகிரிநாதர் (1964)
இரவும் பகலும் (1965)
காதல் படுத்தும் பாடு ( 1966)
பந்தயம் ( 1967 )
டீச்சரம்மா ( 1968 )
அவரே என் தெய்வம் (1969)
ஏன் (1970)
அருட்பெருஞ்ஜோதி (1971)
மறுபிறவி ( 1972)
அவசர கல்யாணம் (1972)
வைரம் (1974)
வாயில்லாப்பூச்சி (1976)
விருதுகள்
இசைப்பேரறிஞர் விருது, 1996. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[5]
No comments:
Post a Comment