PULIYOOR KESIGAN , TRANSLATOR ,WRITER BORN 1923 OCTOBER 16 -1992 APRIL 17
புலியூர்க் கேசிகன் தனித்தமிழ் எழுத்தாளர், உரையாசிரியர், மெய்ப்பு திருத்துநர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், சோதிடர், எண்கணித வல்லுநர், செய்யுளாசிரியர், ஆவியியல் ஆய்வாளர், சொற்பொழிவாளர் என்னும் பன்முகம் கொண்டவர்.
பிறப்பு[மூலத்தைத் தொகு]
நெல்லை மாவட்டத்தில் உள்ள புலியூர்க் குறிச்சி என்னும் சிற்றூரில் கந்தசாமி பிள்ளை, மகாலட்சுமி அம்மையார் ஆகியோருக்கு அக்டோபர் 16, 1923 ஆம் நாள் புலியூர்க் கேசிகன் பிறந்தார். இவருக்கு சொக்கலிங்கம் எனப் பெற்றோர் பெயரிட்டனர். அவர் தந்தைக்கு வேளாண்மை முதன்மைத் தொழில் ; மளிகைக்கடை வணிகம் துணைத்தொழில்.[1]
கல்வி[மூலத்தைத் தொகு]
சொக்கலிங்கம் என்னும் இயற்பெயருடைய புலியூர்க் கேசிகன் [2] தனது ஊருக்கு அருகிலுள்ள டோணாவூரில் தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப்பள்ளி கல்வியையும் பெற்றார். பின்னர் திருநெல்வேலியில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இடைநிலை வகுப்புக் கல்வி (Intermediate) பெற்றார். அப்பொழுது நடைபெற்ற இரண்டாவது இந்திப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
கல்லூரிக்கல்விக்குப் பின்னர் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள், தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார், பேராசிரியர் முனைவர் மு. வரதராசன் ஆகியோரிடம் தொடர்புகொண்டு தன்னுடைய தமிழறிவை
வளர்த்துக்கொண்டார்.
பணி[மூலத்தைத் தொகு]
கல்லூரிக் கல்வியை நிறைவு செய்த புலியூர்க் கேசிகன், நெல்லை மாவட்டத்தில் உள்ள வடுகச்சி மலைப்பள்ளியில் மூன்று ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்பொழுது டோணாவூர் மருத்துவமனையில் மறைமலையடிகள் மகளும் தனித்தமிழ் இயக்கத்தின் நிறுவுநர்களில் ஒருவருமான தமிழ்ப் பேராசிரியர் நீலாம்பிகை அம்மையார் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கேசிகனும் அவர் குடும்பத்தினரும் பேருதவியாக இருந்தனர். இதனால் மகிழ்ந்த் நீலாம்பிகை அம்மையார், தன் கணவரும் திருநெல்வேலி தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் அமைச்சருமான திருவரங்கனாரிடம் புலியூர்க் கேசிகனைப் பற்றி எடுத்துரைத்தார். இதன் விளைவாக கேசிகன் அந்த நூற்கழகத்தின் திருநெல்வேலிக் கிளையில் மேலாளராகப் பணியில் அமர்த்தப்பட்டார். புலியூர்க் கேசிகன் பத்தாண்டுகள் அப்பணியை மேற்கொண்டார்.[1]
பின்னர் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். அருணா வெளியீடு என்னும் பதிப்பகத்தில் இரண்டு ஆண்டுகள் மேலாளராகப் பணியாற்றினார். பின்னர் பாரி நிலையம், மாருதி பதிப்பகம் ஆகியவற்றில் நீண்ட நாள்கள் பணியாற்றினார்.[2]
குடும்பம்[மூலத்தைத் தொகு]
திருவரங்கனார் – நீலாம்பிகை அம்மையார் இணையர் மகள் சுந்தரத்தம்மையாரை புலியூர்க் கேசிகன் மணந்துகொண்டார். அவ்விணையர்களுக்கு கந்தவேலன் என்னும் ஒரு மகனும் நீலச்செல்வி என்ற மகாலட்சுமி, சொ. கலைச்செல்வி. மலர்ச்செல்வி என்னும் மூன்று மகள்களும் பிறந்தனர்.[2]
எழுத்துப் பணிகள்[மூலத்தைத் தொகு]
அருணா வெளியீடு, பாரி நிலையம், வானதி பதிப்பகம் ஆகிய பதிப்பகங்களின் வழியாக 50 இலக்கிய நூல்களுக்கு உரைகள்; 10 சோதிட நூல்கள்; 5 உளவியல் நூல்கள்; 3 யோக நூல்கள்; 5 ஆன்மிக நூல்கள்; 2 வரலாற்று நூல்கள்; 7 குறள் தொடர்பான நூல்கள்; தொகுப்பு, ஆராய்ச்சி, கவிதை ஆகியன உள்ளடக்கிய துறைகளில் 8 நூல்கள் என 90 நூல்களை புலியூர்க் கேசிகன் படைத்திருக்கிறார்.[1] அவற்றுள் சில:
உரைநூல்கள்[மூலத்தைத் தொகு]
சங்க இலக்கியம்[மூலத்தைத் தொகு]
நற்றிணை – முதற் பகுதி
நற்றிணை – இரண்டாம் பகுதி (1980, பாரி நிலையம், சென்னை)
குறுந்தொகை
ஐங்குறு நூறு – மருதமும் நெய்தலும் (அக்டோபர் 1982, பாரி நிலையம், சென்னை)
ஐங்குறு நூறு – குறிஞ்சியும் பாலையும்
ஐங்குறு நூறு – முல்லை
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை (மார்ச் 1958, அருணா பப்ளிகேஷன்ஸ். சென்னை)
அகநானூறு – களிற்றியானை நிரை
அகநானூறு – மணிமிடை பவளம்
அகநானூறு – நித்திலக்கோவை (1962, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை)
புறநானூறு
பத்துப்பாட்டு
பதினென் கீழ்க்கணக்கு[மூலத்தைத் தொகு]
பழமொழி நானூறு
திருக்குறள் (சூன் 1976, பூம்புகார் பதிப்பகம், சென்னை)
காப்பியங்கள்[மூலத்தைத் தொகு]
சிலப்பதிகாரம்
மணிமேகலை
பக்தி இலக்கியம்[மூலத்தைத் தொகு]
திருவாசகம் (திசம்பர் 1964, ஶ்ரீமகள் நிலையம், சென்னை) [3]
ஆண்டாள் திருப்பாவை (திசம்பர் 1959, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை) [4]
இலக்கணம்[மூலத்தைத் தொகு]
தொல்காப்பியம் - தெளிவுரையுடன் (1961 அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை)
புறப்பொருள் வெண்பாமாலை
நன்னூல் காண்டிகை
சிற்றிலக்கியம்[மூலத்தைத் தொகு]
கலிங்கத்துப்பரணி
நளவெண்பா
திருக்குற்றாலக் குறவஞ்சி
முக்கூடற்பள்ளு
தகடூர் யாத்திரை
தனிப்பாடல்கள்[மூலத்தைத் தொகு]
காளமேகம் தனிப்பாடல்கள்
ஒளவையார் தனிப்பாடல்கள்
கம்பன் தனிப்பாடல்கள்
பாலியல் இலக்கியம்[மூலத்தைத் தொகு]
அதிவீரராமனின் இல்லற ரகசியம்
அதிவீரராமனின் கொக்கோகம்
ஆய்வு நூல்கள்[மூலத்தைத் தொகு]
முத்தமிழ் மதுரை (30.1.1981)
ஐந்திணை வளம்
புகழ் பெற்ற பேரூர்கள்
புறநானூறும் தமிழர் சமுதாயமும் (திசம்பர் 1964, பசவேசுவரா பிரசுரம், கிருஷ்ணகிரி) [5]
புறநானூறும் தமிழர் நீதியும் (சனவரி 1965, பசவேசுவரா பிரசுரம், கிருஷ்ணகிரி) [6]
பூலித்தேவனா? புலித்தேவனா? (சனவரி 1959, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை) [7]
சோதிட நூல்கள்[மூலத்தைத் தொகு]
எண்களின் இரகசியம்
எண்களும் எதிர்காலமும்
ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும்
திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தங்கள் (1980 மாருதி பதிப்பகம், சென்னை) [8]
உளவியல் நூல்கள்[மூலத்தைத் தொகு]
மனோசக்தி
யோக நூல்கள்[மூலத்தைத் தொகு]
தியானம்
ஆன்மிக நூல்கள்[மூலத்தைத் தொகு]
ஶ்ரீ சந்தோஷி மாதா
குறள் தொடர்பான நூல்கள்[மூலத்தைத் தொகு]
குறள் தந்த காதல் இன்பம் (அக். 1959, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை) [9]
வரலாற்று நூல்கள்[மூலத்தைத் தொகு]
அறநெறிச் செல்வர்
புலவரும் புரவலரும்
பிற[மூலத்தைத் தொகு]
சிங்கார நாயகிகள்
பெண்மையின் ரகசியம்
தொகுப்பு[மூலத்தைத் தொகு]
திருவருட்பா பாராயணத் திரட்டு, (திசம்பர் 1964, ஶ்ரீமகள் நிலையம், சென்னை) [10]
பிற பணிகள்[மூலத்தைத் தொகு]
பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், இலக்கிய அமைப்புகள் ஆகியவை நடத்தும் விழாகளிலும் வானொலியிலும் தமிழ்மொழி, இலக்கியம் தொடர்பாக உரையாற்றினார்.
விகடன், அமுதசுரபி, குமுதம், கல்கண்டு, குங்குமம், தாய், இதயம் பேசுகிறது, ஞானபூமி உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் பல்வேறு பொருள்களில் எழுதினார்.
நந்திவாக்கு, சோதிட நண்பன் உள்ளிட்ட சில இதழ்களின் ஆசிரியராக இருந்திருக்கிறார்.
பெற்ற சிறப்புகள்[மூலத்தைத் தொகு]
புலியூர்க் கேசிகனின் தமிழ்த்தொண்டைப் பாராட்டி பின்வரும் அமைப்புகள் அவருக்குச் சிறப்புச் செய்திருக்கின்றன:
தென்னிந்திய இருப்புப்பாதை நிறுவனம்
முத்தமிழ் மன்றம்
சிறீராம் நிறுவனம்
கம்பன் கழகம்
திருவள்ளுவர் இலக்கிய மன்றம்
பன்னாட்டு தமிழுறவு மன்றம்
நாட்டுடைமையாக்கம்[மூலத்தைத் தொகு]
புலியூர்க் தேசிகனின் படைப்புகளை 2009 ஆம் ஆண்டு தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது.
மறைவு[மூலத்தைத் தொகு]
புலியூர்க் கேசிகன் தனது 69ஆம் அகவையில் சென்னையில் ஏப்ரல் 17, 1992ஆம் நாள் மரணமடைந்தார்.[
இதுவும் சேதுராமனின் guest post. இந்த முறை அவர் புலியூர் கேசிகனின் மகள் செல்வி கலைசெல்வியை நேரடியாக தொடர்பு கொண்டு இந்த விவரங்களை சேகரித்திருக்கிறார். சாதாரணமாக இந்த எழுத்தாளர்களைப் பற்றி விவரங்கள் கிடைத்தால் நன்றாயிருக்கும் என்று சொன்ன ஒரு வார்த்தையை அவர் இவ்வளவு தூரம் ஊக்கத்துடன் நிறைவேற்றி வருவது பெரும் பாராட்டுக்கு உரியது.
நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரிஜினல் பதிவை இங்கே காணலாம்.
தமிழறிஞர் புலியூர்க் கேசிகனார், நெல்லையைச்சேர்ந்த புலியூர்க் குறிச்சி என்ற சிற்றூரில் 16-10-1923ல் பிறந்தவர். தந்தையார் கந்தசாமியா பிள்ளை, தாயார் மகாலட்சுமி அம்மையார். பெற்றோர் விவசாயத்தை முதன்மையாகவும், மளிகைக் கடை வைத்தும் வாழ்ந்தனர்.
தன் இளவயதுக் கல்வியை அருகிலுள்ள டோணாவூர் பள்ளியிலும், உயர் நிலைக் கல்வியையும் கல்லூரிக் கல்வியையும் திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியிலும் பயின்றவர். கல்லூரி நாட்களில் இந்தி எதிர்ப்பு மாணவராய்த் திகழ்ந்தவர், பின்னர் தமிழ் மீது ஆர்வம் கொண்டு வேங்கடசாமி நாட்டார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, திரு வி.க. போன்ற பல்வேறு தமிழறிஞர்களுடன் பழகித் தன் தமிழ்ப் புலமையை வளப்படுத்திக் கொண்டார்.
மறைமலையடிகளின் மகளும், திருவரங்கனார் துணைவியாருமான நீலாம்பிகை அம்மையார், உடல் நலமின்றி டோணாவூர் மருத்துவ மனையிலிருந்த போது, கேசிகனாரும் அவரது குடும்பத்தினரும் அளவிலா வகையில் உதவினர். நீலாம்பிகை அம்மையார் குணம் பெற்றுச் சென்னை திரும்பிய பிறகு திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் கேசிகனார்க்கு மேலாளர் பதவி கொடுக்கப் பட்டது. திருவரங்கனார் மறைவுக்குப் பிறகு அவர்கள் மகள் சுந்தரத்தம்மையாரை கேசிகன் மணம் புரிந்து கொண்டார்.
கேசிகனார் தம்பதிகளுக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உண்டு. தந்தையின் அடிச்சுவடுகளிலே சென்ற மகள்தான் கவிஞர் செல்வி கலைச்செல்வி.
கேசிகன் வடுகச்சி மலைப்பள்ளியில் ஆசிரியராக மூன்று ஆண்டுகளும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் மேலாளராக பத்து ஆண்டுகளும் பணி புரிந்த பின்னர், சென்னைக்குக் குடியேறியவர் அருணா பப்ளிகேஷன்சில் நிர்வாகியாகப் பணியிலமர்ந்தார். அருணாவில் இருக்கும்போது அதிவீரராமன் இல்லற ரகசியம், கொக்கோகம், சிங்கார நாயகிகள், பெண்மையின் ரகசியம் போன்ற பல நூல்களுக்கு உரை எழுதினார். இன்னூல்கள் அக்காலத்திலேயே ஆயிரக்கணக்கில் விற்று அவருக்குப் பெரும்புகழ் சேர்த்தது. பாரி நிலையத்திலும், மாருதி பதிப்பகத்திலும் பல ஆண்டுகள் கேசிகன் பணி புரிந்துள்ளார்.
பாரி நிலையத்தின் மூலம் சங்க இலக்கியங்களுக்கு எளிய உரை எழுதி மக்கள் மத்தியில் பெருஞ்செல்வாக்கைப் பெற்றார். சிலப்பதிகாரம், மணிமேகலை, புற நானூறு, அக நானூறு மூன்று பகுதிகள், நற்றிணை இரு தொகுதிகள், பதிற்றுப்பத்து, பரிபாடல், குறுந்தொகை கலித்தொகை, புறப்பொருள் வெண்பாமாலை, கலிங்கத்துப் பரணி, முக்கூடற்பள்ளு, ஐங்குறுனூறு ஐந்து தொகுதிகள், தொல்காப்பியம், திருக்குறள், நளவெண்பா, பழமொழி நானூறு, திருக் குற்றாலக் குறவஞ்சி, கம்பன் தனிப் பாடல்கள், காளமேகம் தனிப்பாடல்கள், ஔவையார் தனிப்பாடல்கள் என அனைத்து நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார்.
சங்க இலக்கியங்கள் அனைத்துக்கும் எளிய உரை எழுதி, மலிவுப் பதிப்பில் விற்று, இலக்கியங்களை அனைவர் மத்தியிலும் எளிமைப் படுத்திப் புரிய வைத்தது கேசிகனாரின் தமிழ்த் தொண்டும் சாதனையாகும். மற்றும் மனோசக்தி, எண்களின் இரகசியம், எண்களும் எதிர்காலமும் போன்ற, இவர் எழுதிய பல நூல்கள் இவருக்குப் புகழ் தேடித் தந்தன.
சிறந்த கவிஞர், படிதிருத்துனர், பதிப்பாசிரியர், எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், சோதிடர், எண் கணித வல்லுனர் மற்றும் ஆவியுலக ஆராய்ச்சியாளர்.
இவரது படைப்புகள் – உரை நூல்கள் 50, ஜோதிட நூல்கள் 10, மனோதத்துவ நூல்கள் 5, யோகம் பற்றியது 3, ஆன்மிக நூல்கள் 5, வரலாற்று நூல்கள் 2, குறள் சார்ந்த நூல்கள் 7, தொகுப்பு நூல், ஆராய்ச்சி நூல், கவிதை நூல் – மற்றும் பிற நூல்கள் 8.
புலியூர்க் கேசிகன் ஏப்ரல் 17, 1992ல் சென்னையில் காலமானார்.
(தகவல் நன்றி – கவிஞர் சொ.கலைச்செல்வி எழுதிய “உரையாசிரியர் புலியூர்க் கேசிகன் முதலாண்டு நினைவு மலர்-1993 — ஸ்பெஷல் நன்றி ஹிக்கின்போதம்ஸ் சந்திரசேகர், சண்முகா பதிப்பகம், பாரி நிலையம் உரிமையாளர்கள் – இவர்களுடைய உதவியால்தான் கலைச்செல்வியுடன் தொடர்பு கொள்ள முடிந்தது)
No comments:
Post a Comment