TERRORIST INVADED INDIA ,SUPPORT OF LIAQAT ALIKHAN FIRST PRIMEMINISTER OF PAKISTAN SHOT DEAD 1951 OCTOBER 16
.தீவிரவாதத்தை தோற்றுவித்த பாகிஸ்தான்
பிரதமர் லியாகத் அலிகான் 1951 அக்டோபர் 16 இல் சுட்டு கொலை
கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மயூர ஆட்சியின் கீழும், கி.பி.16 – 18ம் நூற்றாண்டு காலப்பகுதியில் முகலாய ஆட்சியின் கீழும், பின்னர் 19ம், 20ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆளுகையின் கீழும் காஷ்மீர் இருந்துள்ளது.
1846ல் சீக்கிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் காஷ்மீர் இருந்தது. சீக்கியர்களை ஆங்கிலேயர்கள் தோற்கடித்த போது, காஷ்மீரை அம்றிஸ்ரார் ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜம்முவின் மஹாராஜாவான குலாப் சிங்கிற்கு 7.5 மில்லியன் ரூபாய்களுக்கு ஆங்கிலேயர் விற்று விட்டனர். குலாப் சிங் ஜம்முவின் சுதந்திர மன்னர் மஹாராஜாவாக (Princely Ruler) மாறினார்.
குலாப் சிங் 1857ல் இறந்தார். றம்பீர் சிங் மற்றும் பிரதாப் சிங் ஆகிய இரு மஹா ராஜாக்கள் அவரையடுத்து ஆட்சிக்கு வந்தனர். இறுதியாக வந்த ஆட்சியாளரே ஹரிசிங் (1925-1947) ஆவார். இவர்கள் அனைவரும் 80% ஆன, மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான முஸ்லிம்களை ஆயுத முனையில் ஆட்சி செய்தனர் என்றே கூற வேண்டும். முஸ்லிம்களோ ஹரிசிங்கிற்கு எதிராக தொடர்ந்து கிளர்ச்சி செய்து வந்தனர். 1931ல் ‘டொக்ரா படுகொலைகள்’ மூலம் முஸ்லிம்களை இவர் அடக்கினார்.
பல்வேறு தேசங்களாக இருந்து வந்த இந்தியா என்னும் உபகண்டம், சுதந்திரம் பெற்ற போது, காஷ்மீரும் ஒரு தேசமாக ஒரு மன்னரின் ஆதிக்கத்திலேயே தான் இருந்தது. இந்து மன்னரான மஹாராஜா ஹரிசிங் (தற்போது காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருக்கும் கரண் சிங்கின் தந்தையார்) கஷ்மீரை அப்போது ஆட்சி செய்து வந்தார். காஷ்மீரின் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள். இதனால் காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தானுடன் இணைவதா என்ற குழப்ப நிலை நீடித்தது.
ஜின்னாவுக்கு ஏற்பட்ட அவமானமும் பாக்கிஸ்தான் சதியும்
சுதந்திரம் பெற்று சரியாக 10 நாள் கூட முடியாத நிலையில் ஜின்னா காஸ்மீரில் ஓய்வெடுக்க விரும்பினார் .எனவே உதவியாளரிடம் அதற்கான ஏற்பாடு செய்யும் படி ஆணையிட்டார் . பெர்னியும் காஸ்மீர் சென்றார். அங்கே விதி விளையாடியது
என்னது ஜின்னா வருகிறாரா அவருக்கு டூரிஸ்ட்டாக கூட இங்கே வர அனுமதி இல்லை என்றார் காஷ்மீர் அரசர் ஹரிசிங்
எனவே மூன்று கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன
1.காஸ்மீர் அரசருடன் போர் - இது நிராகரிக்கப்பட்டது
2. காஸ்மீர் மக்களுக்கு ஆயுதம் கொடுத்து போராட சொல்வது இதற்கு கொஞ்சம் நாளாகும்
3.ஆப்கானிய கொலை கொள்ளை கூட்டத்திற்கு ஆசை காட்டி பின் புறத்திலிருந்து அவர்களை இயக்குவது - இவர்களுக்கு பாகிஸ்தான் ஆயுத சப் ளை செய்யும் காஷ்மீர் பாகிஸ்தானுக்கு மக்களிடம் கொள்ளை அடிக்கும் பணம் இவர்களுக்கே இதான் ஒப்பந்தம்
எனவே முட்டாள்களும் முரடர்களும் கொண்ட கட்டுப்பாடற்ற கொள்ளை கூட்டம் ஸ்ரீநகருக்கு புறப்பட்டது . இவர்களை பாகிஸ்தானிய பிரதமர் லியாகத் அலிகான் ஆசி கூறி அனுப்பி வைத்தார் . இதற்கான நிதி உதவி ,சாப்பாடு ,ஆயுதங்கள் பிரதமர் நிதியில் இருந்தே தரப்பட்டது
பாகிஸ்தான் ராணுவத்தில் கையாடல் குற்றத்திற்கு நீக்கப்பட்ட மேஜர் குர்ஷித் வழிகாட்ட கூலிப்படை கிடைத்த வாகனங்களில் புறப்பட்டன
காஸ்மீரை பாகிஸ்தானுடன் இணையுங்கள் ஸ்ரீநகரை நீங்கள் கொள்ளையடித்துக்கொள்ளுங்கள் என்ற மந்திர சொல் ஓதப்பட்டது
காசுமீருக்கு புனித போர் ஜிகாத் என்று வர்ணிக்கப்பட்டது . இவ்வாறாக முட்டாள்கள் கூட்டம் 1947 அக்டோபர்22 தேதி எல்லையில் வந்து சேர்ந்தது.
ஸ்ரீநகருக்கு இடையே 35 மைல் தூரம் இருந்தது
தகவல் தொடர்பு ஆங்கிலேய அதிகாரிகள் ஜெனரல் டக்ளஸ் கிரேஸியும் ,ராப் லாக்கர்ட்டும் நண்பர்கள் .பிரிவினையின் போது லகார்ட்டு டில்லிக்கு டக்ளஸ் பாகிஸ்தானிலும் இருந்தனர் .பாகிஸ்தான் படை டக்ளசுக்கு கிடைத்ததும் உடனே டில்லிக்கு செய்தி பறந்தது .மவுண்ட் பேட்டன் உஷாரானார் .நேருவிடம் சொல்லி 329குதிரை வீரர்களை உடனே ஸ்ரீநகர் நோக்கி அனுப்பினார்
சரியாக அக்டோபர் 26 இல் காஸ்மீர் இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியது .பாகிஸ்தான் தலை விதி மாறியது .
கொலைகார கும்பல் ஸ்ரீநகர் நோக்கி வருகையில் பாராமுல்லா தென்பட்டது .உடனே கூலிப்படை அந்த ஊரை கொள்ளையடிக்க மற்றும் கற்பழிப்புக்கு காலம் கடத்த இந்திய வீரர்கள் ஸ்ரீநகர் போய் சேர்ந்தனர்
தினை விதைத்தவன் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
தீவிரவாதத்தை தோற்றுவித்த முதல் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் அதே ஆப்கானிஸ்தான் தீவிர வாதியால் 1951 அக்டோபர் 16 இல் சுட்டு கொலை செய்யப்பட்டார்
.
.
படுகொலை
அக்டோபர் 16, 1951 அன்று, ராவல்பிண்டியின் கம்பெனி பாக் (கம்பெனி கார்டன்ஸ்) இல் 100,000 பேரை உரையாற்றும் போது கான் இரண்டு முறை மார்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். [50] [51] காவல்துறை உடனடியாக கொலைகாரனை சுட்டுக் கொன்றது, பின்னர் அவர் தொழில்முறை கொலையாளி சைட் அக்பர் என அடையாளம் காணப்பட்டார். [51] கான் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ரத்தம் ஏற்றப்பட்டாலும் அவர் படுகாயமடைந்தார். அக்பர் பாப்ராக் பஷ்டூன் சத்ரான் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆப்கானிய நாட்டவர் என்று கூறினார். [52] லியாகத் அலிகான் படுகொலைக்கு முன்னர் அவர் போலீசாருக்கு தெரிந்தவர். படுகொலைக்கு பின்னால் உள்ள சரியான நோக்கம் ஒருபோதும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை, மேலும் இது குறித்து ஏராளமான ஊகங்கள் உள்ளன. [53] இந்தியாவின் போபாலில் வெளியிடப்பட்ட ஒரு உருது நாளிதழ், படுகொலைக்கு பின்னால் அமெரிக்காவின் கையைப் பார்த்தது. [54]
அவரது மரணத்தின் பின்னர், கானுக்கு 'ஷாஹீத்-இ-மில்லத்' அல்லது 'தேசத்தின் தியாகி' என்ற மரியாதைக்குரிய தலைப்பு வழங்கப்பட்டது. அவர் கராச்சியில் ஜின்னாவிற்காக கட்டப்பட்ட கல்லறை மசார்-இ-காயிதில் அடக்கம் செய்யப்பட்டார். [55] அவர் படுகொலை செய்யப்பட்ட நகராட்சி பூங்கா, அவரது நினைவாக லியாகத் பாக் (பாக் என்றால் தோட்டம்) என்று பெயர் மாற்றப்பட்டது. முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 2007 இல் படுகொலை செய்யப்பட்ட அதே இடம் இதுதான். [56]
.
No comments:
Post a Comment