Showing posts with label TERRORIST. Show all posts
Showing posts with label TERRORIST. Show all posts

Saturday, 1 May 2021

OSAMA BIN LADEN ,TERRORIST BORN 1957 MARCH 10 - MAY 1 ,2011

 

OSAMA BIN LADEN ,TERRORIST

BORN 1957 MARCH 10 - MAY 1 ,2011




உசாமா பின் முகம்மது பின் ஆவாட் பின் லாதின் (அரபு மொழி: أسامة بن محمد بن عوض بن لادن, (பிறப்பு மார்ச் 10, 1957 - இறப்பு மே 1 2011)[1][2][3][4]) பொதுவாக ஒசாமா பின் லாடன் அல்லது ஒசாமா பின் லேடன் என அறியப்படும் இவர் அல் கைதாவைத் தோற்றுவித்தவர்.[5] செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் உட்பட பல தாக்குதல்களின் காரணகர்த்தாவாகக் கருதப்படுகிறார்.


இவர் சவூதி அரேபியாவின் செல்வந்தர் குடும்பமான பின் லேடன் குடுப்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இசுரேலுக்கான தமது ஆதரவை விலக்கி இசுலாமிய நாடுகளில் இருந்து தமது படையணிகளைத் திரும்பப் பெறுமளவும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குடிகளையும் அதன் படைத்துறையினரையும் கொலை செய்யுமாறு முசுலிம்களை வேண்டி இரண்டு படாவா எனப்படும் அறிக்கைகளை விடுத்தார்.[6] [7]





ஒசாமாவின் தந்தை முகம்மது பின் லேடனுக்கு மொத்தம் எத்தனைப் பிள்ளைகள் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எனினும் சில தகவல்களின் படி அவர் மொத்தம் 55 குழந்தைகளுக்கு தந்தை என கூறப்படுகிறது. அவர் மொத்தம் 22 பெண்களை மணந்துள்ளார் ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இசுலாமிய சட்டப்படி 4 மனைவிகளை மட்டுமே கொண்டிருந்தார். ஒசாமா தன் 10 வது மனைவி அமிதியா அல் அட்டாசு என்பவருக்கு ஒரே மகனாக பிறந்தார். சில கணிப்பீடுகளின் படி ஓசாமா அவரது தந்தைக்கு 7 வது மகனாவார்.[8][9]


மே 1, 2011 அன்று ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத்தலைவர் பராக் ஒபாமா அமெரிக்க தொலைக்காட்சியில் பாக்கிஸ்த்தானில் உள்ள ஆப்டாபாத்தில் பில் லாதின் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டதாக அறிவித்தார்[3][10] மரபணு சோதனைக்குப் பின் அவரது உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டது.[4]





இளமையும் கல்வியும்

உசாமா பின் முமது பி்ன் அவத் பின் லாதின்[11] சவுதி அரேபியாவின் ஜித்தாவில்[12] சவுதி அரசுக் குடும்பத்துக்கு நெருக்கமானவரும் பெருஞ்செல்வரும் கட்டிட வணிகருமான முகமது பின் அவத் பின் லாதினுக்கும்[13] அவரது பத்தாவது மனைவி அமீதா அல்-அட்டாசுக்கும் மகனாகப் பிறந்தார்.[14] 1998 நேர்காணல் ஒன்றில், பின் லாதின் தமது பிறந்த நாள் மார்ச்சு 10, 1957 எனக் கூறியுள்ளார்.[15]


உசாமா பின் லாதின் பிறந்த பின்னர் முமது பின் லாதின் தமது மனைவி அமீதாவிடமிருந்து மணமுறிவு பெற்றார். தமது கூட்டாளியான முகமது அல்-அட்டாசுக்குப் அமீதாவை திருமணம் செய்யுமாறு பரிந்துரைக்க 1950களின் பிற்பகுதியிலோ 1960களின் முற்பகுதியிலோ இருவரும் மணம் புரிந்து இன்றுவரை இணைந்துள்ளனர்.[16] பின் லாதின் குடும்பம் கட்டமைப்புத் தொழிலில் இருந்து $5 பில்லியன் பணம் ஈட்டியது; இதிலிருந்து உசாமாவிற்கு தன்பங்காக $25–30 மில்லியன் கிட்டியது.[17]


பின் லாதின் ஓர் நம்பிக்கையுள்ள வகாபி முசுலிமாக வளர்க்கப்பட்டார்.[18] 1968 முதல் 1976 வரை, சமயசார்பற்ற உயர்மட்ட அல்-தாகெர் மாடல் பள்ளியில் படித்தார்.[14][19] கிங் அப்துலாசிசு பல்கலைக்கழகத்தில் பொருளியலும் வணிக மேலாண்மையும் படித்தார்[20]. சில கூற்றுக்களின்படி 1979இல் குடிசார் பொறியியல் [21] அல்லது 1981இல் பொது நிர்வாகம் படித்ததாகவும் அறியப்படுகிறது.[22] ஒரு ஆதாரத்தின்படி அவர் "கடும் உழைப்பாளி" என்றும் அறியப்படுகிறது;[23] ஆனால் இன்னொன்று அவர் மூன்றாமாண்டிலேயே கல்லூரிப் படிப்பை முடிக்காமல் பல்கலைக்கழகத்திலிருது வெளியேறினார் என்றும் கூறுகிறது.[24] பல்கலைக்கழகத்தில் உசாமாவின் முதன்மை ஆர்வமாக சமயத்துறை இருந்தது. "திருக்குர்ஆனையும் ஜிகாத்தையும் புரிந்துகொள்ளவும்" சமயத்தொண்டு குறித்தும் அறிய மிகுந்த ஆவலாயிருந்தார்.[25] மற்ற பொழுதுபோக்குகளாக கவிதை எழுதுவது,[26] பீல்டு மார்ஷல் பெர்னார்டு மொன்கொமரி, சார்லஸ் டி கோல் போன்றோரின் ஆக்கங்களைப் படிப்பது என்பனவாக இருந்தது; மேலும் கருப்பு ஆண் குதிரைகள், காற்பந்தாட்டம் ஆகியவற்றிலும் ஆர்வமுள்ளவராக இருந்தார்; காற்பந்தாட்டத்தில் நடு முன்னோக்கிய வீரர் இடத்தில் ஆடிய உசாமா இங்கிலாந்து காற்பந்தாட்ட அணியான ஆர்சனல் கழகத்தின் இரசிகராக இருந்தார்.[27]


தனி வாழ்க்கை

1974இல் தமது 17வது அகவையில் சிரியாவின் லடாக்கியாவில் நஜ்வா பின் லாதினை கரம் பற்றினார்;[28] ஆனால் செப்டம்பர் 11, 2001க்கு முன்னரே இந்தத் திருமணம் முறிவடைந்தது. இவரது மற்ற மனைவிகளாக கதீஜா சரீஃப் (திருமணம் 1983, மணமுறிவு 1990s); கயிரியா சபர் (திருமணம் 1985); சிகாம் சபர் (திருமணம் 1987); அமல் அல்-சதா (திருமணம் 2000) ஆகியோர் அறியப்படுகின்றனர். சிலர் ஆறாவதாக ஒருவரைத் திருமணம் செய்து மணவிழா முடிந்த உடனேயே மணமுறிவு பெற்றதாகவும் கூறுகின்றனர்.[29] இந்த மனைவிகள் மூலமாக பின் லாதினுக்கு 20 முதல் 26 வரை மக்கள் பிறந்தனர்.[30][31] செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு இவர்களில் பெரும்பாலோர் ஈரானுக்கு ஓடினர். ஈரானிய அரசு 2010 வரை இவர்களது இடமாற்றங்களை கட்டுப்படுத்தியதாக கூறப்படுகிறது.[32]


பின் லாதினின் தந்தை 1967இல் சவுதி அரேபியாவில் நிகழ்ந்த வானூர்தி விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.[33] பின் லாதினின் மாற்றாந்தாய் அண்ணன் சலேம் பின் லாதின் 1988இல் ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்தில் சான் அன்டோனியோ அருகில் தனது வானூர்தி மின்கம்பிகளில் சிக்கிக்கொள்ள உயிரிழந்தார்.[34]


பின் லாதின் ஒல்லியான, உயரமான மனிதராக, 6 அடி 4 அங் - 6 அடி 6 அங் (193–198 செமீ) உயரமுள்ளவராக, 160 pounds (73 kg) எடையுள்ளவராக அமெரிக்கப் புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது. இடது கை பழக்கமுள்ளவராகவும் ஒரு கைத்தடியின் உதவிநுடன் நடப்பவராகவும் விவரிக்கிறது. வெள்ளை வண்ண தலையணி அணிந்தவராகவும் அறியப்படுகிறார். சவுதி அரேபியாவின் வழமையான ஆண்களுக்கான தலையணியை இவர் அணியவில்லை.[35] மென்மையாகப் பேசும் பின் லாதின் மிகுந்த பண்புள்ளவராக விளங்கினார்.[36]


ஒசாமாவின் வளர்ச்சியில் அமெரிக்காவின் பங்கு

ஆரம்பத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராக ஒசாமா பின் லேடன் நடத்திய தாக்குதல்களுக்கு அமெரிக்கா சவுதிகளின் நிதியுதவியைக் கோரிப் பெற்றுத் தந்தது. அமெரிக்காவின் ரீகன், மற்றும் புஷ் தலைமையிலான அரசுகள் ஒசாமா பின் லேடனுக்கு ஆதரவாக நிதியுதவி அளிக்கும்படி சவுதிகளை ஊக்குவித்தும் மற்ற நாடுகளை ஒசாமாவுக்கு உதவும்படி அழுத்தம் கொடுத்தும் வந்தன.[37]


Tuesday, 2 March 2021

VEERAPPAN ,TERRORISTS BIOGRAPHY

 

VEERAPPAN ,TERRORISTS BIOGRAPHY

#வீரப்பன் #வீழ்ந்ததும் #வாழ்ந்ததும்


*9.முதல் வழக்கு!*

 இதற்கு முன் வீரப்பனுக்கும் மனிதர்களைச் சுட்ட அனுபவமில்லை. இப்போது கூட கருப்பணன் தான் பரமசிவத்தை சுடப் போகிறான் என வீரப்பன் முடிவு செய்து வைத்திருந்தார். எதிர்பாராத நேரத்தில் வீரப்பனே சுட வேண்டியதானது. அதனால், பரமசிவத்துக்கு சரியாக அடி பிடிக்கவில்லை. உயிர் தப்பிய பரமசிவம் தப்பியோடினார். வீரப்பன் விடாமல் துரத்திக் கொண்டே போனார்.  முருகண்டி மலையின் பாதி உயரத்திற்குப் போன பரமசிவம் கால் இடறிக் கீழே விழுகிறார். பக்கத்தில் போன வீரப்பனைப் பார்த்து பரமசிவம் பயப் படவில்லை. “இடு, இன்னொரு ஈடு இட்டு என்னைக் கொன்னு போட்டுரு...” என்று சொல்கிறார். அந்த இடத்தில் வைத்தே மீண்டும் ஒரு ஈடு கொடுத்து பரமசிவனின் கதையை முடிக்கிறார் வீரப்பன். 

“பரமசிவம் உயிருக்குப் பயந்தவன் இல்லை. அவன் தலையிலும், தோள் பட்டையிலும் இரட்டைச் சுழி இருக்கும். அது போலவே இரட்டை குண்டியும், இரண்டு உயிரும் பெற்றவன். அதனால தான் வீரப்பன் கூட ரெண்டு முறை சுட்டுத் தான் அவனைக் கொல்ல முடிஞ்சுது....” என்கிறார் இந்தக் கொலை நடந்த நேரத்தில் அங்கிருந்த ஆண்டி கிருஷ்ணா. இந்த நிகழ்வு குறித்து என்னோடு பேசிய வீரப்பன், “யானையை அடிச்சா மூச்சு அடங்க கொறஞ்சது பத்து நிமிஷமாவது ஆகும். கடத்தியை அடிச்சாக் கூட அது ஓடற போக்கிலயே கொஞ்ச தூரம் போயித்தான் கீழே விழுந்து சாகும். ஒரு சமயத்தில நான் கிட்டத்தில் போய் பார்க்கும் போது, குண்டடிபட்டுக் கிடக்கும் கடத்தி, (கடமான்) யானை எல்லாம் கண்ணீர் விட்டு அழுதிருக்கு. சில யானையிலிருந்து நான் தந்தத்தை வெட்டிக்கிட்டு கிளம்பற வரைக்கும் சுடு இரத்தம் வந்துகிட்டே இருக்கும். எனக்கும் கூட சில நேரத்தில் இதையெல்லாம் பார்க்கவே பாவமா இருக்கும். ஆனா என்ன செய்யறது. ஒன்னு செத்தாத்தான் நாலு ஜீவன் வயிறு கழுவ முடியுமுன்னு எனக்கு வேண்டியதை எடுத்துக்குவேன். மீதியை மற்ற பறவை, பட்சிகளுக்கு இரையா விட்டுட்டு வந்திருவேன். 

நான் முதன் முதலா பரமசிவத்தை இட்டப்ப ஒரே நொடியில் பேச்சு மூச்சில்லாமே போயிட்டான். எம் பாட்டுக்கு இருந்த என்னைக் கொலைகாரன் ஆக்கீட்டயேன்னு வருத்தப் பட்டேன். அப்புறம் வேற என்ன பண்ணறது.  நானும், கருப்பணனும் சேர்ந்து சுத்தியிலும் காஞ்சு கெடந்த கட்டையும், செத்தையும் பொறுக்கிப் போட்டு, நெருப்பு வச்சுட்டு வந்துட்டோம்...” என்றார். பரமசிவம் கொலை செய்யப்பட்ட இரண்டாவது நாள் இந்தச் செய்தி ஊருக்குத் தெரிந்தது. நான்கு நாளுக்குப் பிறகு செங்கப்பாடிக்கு வந்த இராமாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பரமசிவத்தை அவனுடைய அண்ணன் கருப்பணன் தான் சுட்டுக் கொன்றான் என்று தெரிகிறது. போலீசார் அப்படியே வழக்குப் பதிவு செய்தனர். கண்டியார் வீட்டு ராஜூ வாயைத் திறந்த பின்னரே, பரமசிவத்தை வீரப்பன் சுட்டுக் கொன்றார் என்பது மக்களுக்குத் தெரிந்தது. அப்போது வீரப்பன் குடும்பத்துக்குப் பெரிய அளவில் அரசியல் செல்வாக்கும்,  எந்த நேரமும் கையில் துப்பாக்கியுடன் இருந்ததால் அவர் மீது மக்களுக்கு அச்சமும் இருந்தது. இதன் பயனாகப் பரமசிவத்தை வீரப்பன் கொன்றது குறித்து யாரும் புகார் கொடுக்கவில்லை. 

பரமசிவத்தின் இரண்டாவது மனைவி மாதுவும், முதல் மனைவியின் மகன் மணிவண்ணனும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப் பட்டனர். வீரப்பனுக்கு மனசாட்சி உறுத்தியது. இந்த நிகழ்வு நடந்த சில நாளுக்குப் பின்னர் பரமசிவத்தின் மனைவி மற்றும் அவரது மகனையும் தன்னுடைய வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வருகிறார். தன்னுடைய அம்மாவிடம் விட்டு, “நீ உயிரோடு இருக்கும் வரைக்கும் இவங்களை நல்லபடியா பாத்துக்கம்மா...” என்கிறார். பரமசிவத்தின் மகன் மணிவண்ணன் 12 வயது வரை வீரப்பனின் வீட்டில் வளர்கிறார். இப்போது நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நகரச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். 



இந்த நூலை எழுதுவதற்காக அவரைச் சந்தித்தேன். “உங்கள் அப்பாவைச் சுட்டுக் கொன்ற வீரப்பன் மீது உங்களுக்குக் கோபமில்லையா...”? என்றேன். 

 “அந்தக் காலத்துல என்ன நடந்ததுன்னு யாருக்குமே சரியாத் தெரியிலைங்க. எங்க அப்பன், பெரியப்பன் எல்லோருமே குடிகாரனா இருந்திருக்காங்க. பொண்டாட்டி, புள்ளைங்க, குழந்தை, குட்டியைப் பத்தியெல்லாம் கவலைப் படாம காட்டையே சுத்திக்கிட்டே இருந்திட்டு, எங்க யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாம ரெண்டு பேரும் செத்துப் போயிட்டாங்க. என்னை வளர்க்க முடியாம எங்க சின்னம்மா தற்கொலை செஞ்சுக்க முயற்சி பண்ணியிருக்காங்க. அப்போ வீரப்பன் மாமா எங்களைக் கூட்டிட்டு வந்து அவங்க வீட்டிலயே இருக்கச் சொன்னார். எனக்கு நினைவு தெரியற காலம் வரைக்கும் நான் வீரப்பன் மாமா வீட்டில தான் வளர்ந்தேன். வீரப்ப மாமனின் அம்மா (பொன்னுத்தாய்) தான் எனக்குச் சோறு போட்டு வளத்துனாங்க. என்னை அவங்க பெற்ற பிள்ளை மாதிரி தான் பாத்துக்கிட்டாங்க. நான் கொஞ்சம் பெரியவன் ஆனதும், சிகரல்பட்டியில் இருக்கும் எங்க சின்னம்மா வீட்டுக்குப் போயிட்டேன்...” என்று சொன்னவரின் கண்களில் தாரை தாரையாய் நீர் வழிந்தது. மணிவண்ணன் விட்ட கண்ணீர் தன்னைப் பெற்ற அப்பா பரமசிவத்துக்காகவா...? இல்லை, வளர்த்த வீரப்பனுக்காகவா...? என்று தெரியவில்லை. அப்போது இராமாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக இருந்தவர் வெங்கிடுசாமி. ADSP யாக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவர். பரமசிவம் கொலை குறித்துப் பேசும் போது, “கொலை நடந்த அடுத்த நாள் கொளந்தைன்னு ஒருத்தன் ஸ்டேசனுக்கு வந்தான். கருப்பணனுக்கும், அவன் தம்பி பரமசிவனுக்கும் முன்பகை இருந்துச்சு. அந்த மோட்டிவில் பரமசிவத்தை எறக்கியம் காட்டில வச்சு கருப்பணன் சுட்டுக் கொன்னுட்டான்னு புகார் கொடுத்தான். (Ramapuram P.S Cr No-14/1978). அப்போ நான் வேலைக்கு வந்து ஒரு வருஷம் ஆகியிருக்கும். அதுக்கு முன்னே கொலை வழக்குப் பதிவு செய்த அனுபவம் இல்லை. அதனால, மர்டர் கேஸ் எப்படி எப்.ஐ.ஆர் போடறதுன்னு தெரிஞ்சுக்க கொள்ளேகால் போனேன். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் லக்கையாவை பார்த்தேன். பரமசிவம் கொலையானது பற்றிச் சொன்னேன். எப்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டும், என்னென்ன மெட்டிரியல் எடுக்க வேண்டும். எப்படி மகஜர் ரிப்போர்ட் போட வேண்டும் என்ற விபரமெல்லாம் சொன்னார். “ஒன்பது பேரைக் கொன்னவன் மம்பட்டியான். அவனையே கொன்றவன் கருப்பணன். பெரிய ஆளா இருப்பான். நானே வயசானவன். நான் எங்கே வந்து கருப்பணனை புடிக்கப் போறேன். நீயே போய் ஏதாவது செஞ்சிட்டு வா...”ன்னு சொல்லிட்டார். அப்போ செங்கப்பாடிக்கு பஸ் இல்லை. அடுத்த நாள் பாலாற்றுக்குப் போனேன். அங்கிருந்து கருங்கல் குவாரிக்குப் போன ஒரு லாரியைப் பிடித்து செங்கப்பாடிக்குப் போனேன். ஊர் பெரியவங்க திம்மராய செட்டியார், நடராஜ முதலியாரை கூப்பிட்டுப் பேசினேன். எப்படியாவது பரமசிவம் பாடியைக் கண்டு பிடிக்கனுமுன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அடுத்த நாள் ஒரு டீமோட செங்கப்பாடிக்குப் போனோம். உள்ளூர் பெரியவங்க ஏற்பாட்டின் பேரில், கொஞ்சம் ஆளுங்களைக் கூட்டிட்டு கொலை நடந்த இடத்துக்குப் போனோம். பரமசிவம் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து ஆயிரம் அடி தொலைவில் ஒரு பள்ளத்தில உடலை எரிச்சுட்டுப் போயிருந்தான். அதை வச்சுத்தான் எப்.ஐ.ஆர் போட்டு கேஸ் பைல் பண்ணினேன். நான் செங்கப்பாடிக்கு போயிட்டு வந்தது தெரிஞ்சதும் கருப்பணன் தமிழ்நாட்டுக்குப் போயிட்டான். உள்ளூர் ஆளுங்ககிட்டே பேசி, அவனை வந்து சரணடையச் சொன்னேன். அதுக்குப் பிறகு, வக்கீல் மல்லிகார்ஜுனையா மூலம் கருப்பணன் கோர்ட்டில் சரணடைந்து பின்னர் பெயிலில் போயிட்டான். ​ 


1990-வாக்கில் எஸ்.டி.எப் அமைக்கப்பட்ட பின்னர், நாங்க பழைய கேஸ்களை பற்றியெல்லாம் விசாரிச்சோம். அப்போத்தான் பரமசிவத்தைக் கொலை செய்ததும் வீரப்பனேன்னு தெரிஞ்சுது. ஆரம்ப காலத்தில் வீரப்பன் கொலை செஞ்சான்னா பாடியைக் கண்டு பிடிக்க முடியாம செஞ்சிருவான். அதைப் போலவே, பரமசிவம் கொலையிலும் உடலை அடையாளம் கண்டு பிடிக்க முடியாதபடி நெருப்பு போட்டு எரிச்சிட்டுப் போயிருந்தான். இதையெல்லாம் கணக்கில் எடுத்துத் தான் இந்தக் கொலையும் வீரப்பனே செய்துள்ளான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டோம்.” என்கிறார். 

செங்கப்பாடியில் சாராயக்கடை நடத்திய பாலவாடி பண்ணாடி என்கிற பொன்னுசாமியிடம் பேசும் போது, “போலீஸ்காரங்க பொணத்தை பார்த்தே ஆகனுமுன்னு சொன்னதால நான் தான் உள்ளூர் ஆளுங்களை புடிச்சு அவங்களை எல்லாம் பாங்காட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போனேன். எறக்கியம் பள்ளத்தில் கட்டையைப் போட்டு பரமசிவம் பொணத்தை எறிய விட்டுருந்தது. பரமசிவம்  காலின் ஒரு பகுதியும், அஞ்சு வெரலோட கையின் ஒரு பகுதி மட்டுந்தான் கெடச்சுது. அதைப் போலீசார் பக்கெட்டில் போட்டு எடுத்துக்கிட்டுப் போனாங்க...” என்றார். பண்ணாடி (எ) பொன்னுசாமி வீரப்பனின் நெருங்கிய நண்பரான டி.பி.பெருமாள்:- “முதலில் கருப்பணன் தான் பரமசிவனை சுடப் போயிருக்கான். ஆளைப் பார்த்ததும் கை நடுங்கிட்டுது. அப்பறமாத்தான் வீரப்பன் சுட்டிருக்கான். ஒரு மாசம் போன பிறகு, வீரப்பந்தான் செலவுக்கு மூவாயிரம் ரூபாய் குடுத்தான். “கருப்பணனை கூட்டிக்கிட்டு போயி கொள்ளேகால் கோர்ட்டில் சரண்டர் பண்ணிட்டு வந்திடு”ன்னு சொன்னான். நானும், கருப்பணனும் பெங்களூர் வழியா கொள்ளேகால் போனோம். வக்கீல் மல்லிகார்ஜுனையாகிட்டே 1,500 ரூபாய் குடுத்தேன். இன்ஸ்பெக்டர் லக்கையாகிட்டே 900 ரூபாய் குடுத்து கருப்பணனை சரண்டர் பண்ணிட்டு வந்தேன்” என்கிறார். 

இந்த வழக்கில் கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை. கொலை செய்யப்பட்டவரின் உடலும் கிடைக்காததால், வழக்கு விரைவாக நடந்து முடிந்தது. கருப்பணன் விடுதலையாகிறார். பொது மக்களுக்குத் தொல்லையாக இருந்த பரமசிவம் கொலை செய்யப்பட்ட பின் வீரப்பனைச் சந்தித்த ஊர் மக்களெல்லாம் “நீ பரமசிவனைக் கொன்னது சரிதான்” என்ற போக்கிலேயே பேசியுள்ளனர். குறிப்பாகக் காட்டுக்கு விறகு பொறுக்கவும், ஆடு, மாடு  மேய்க்கச் செல்லும் பெண்கள் எல்லோருமே வீரப்பனைப் பார்த்ததும், கையெடுத்துக் கும்பிட்டுள்ளனர். வீரப்பனுக்கு இது ஒரு வகையான போதையைக் கொடுத்துள்ளது. அதன் பின்னர், செங்கப் பாடியிலுள்ள மக்களுக்கு பிரச்சனை என்று வந்தால், அதற்காகக் கொலை செய்யவும் வீரப்பன் தயங்க மாட்டார் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த பெயரைத் தக்க வைத்துக் கொள்ளவே வீரப்பன் மீண்டும் மீண்டும் கொலை செய்வதைத் தொடர்ந்துள்ளார். அப்படி நடந்த இரண்டாவது கொலையைப் பற்றிச் சற்றுப் பார்ப்போம். 

பெ. சிவசுப்பிரமணியம்.


Friday, 16 October 2020

TERRORIST INVADED INDIA ,SUPPORT OF LIAQAT ALIKHAN FIRST PRIMEMINISTER OF PAKISTAN SHOT DEAD 1951 OCTOBER 16

 


TERRORIST INVADED INDIA ,SUPPORT OF LIAQAT ALIKHAN  FIRST PRIMEMINISTER OF PAKISTAN SHOT DEAD 1951 OCTOBER 16

.தீவிரவாதத்தை தோற்றுவித்த பாகிஸ்தான் 

பிரதமர் லியாகத் அலிகான் 1951 அக்டோபர் 16 இல் சுட்டு கொலை



கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மயூர ஆட்சியின் கீழும், கி.பி.16 – 18ம் நூற்றாண்டு காலப்பகுதியில் முகலாய ஆட்சியின் கீழும், பின்னர் 19ம், 20ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆளுகையின் கீழும் காஷ்மீர் இருந்துள்ளது.


1846ல் சீக்கிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் காஷ்மீர் இருந்தது. சீக்கியர்களை ஆங்கிலேயர்கள் தோற்கடித்த போது, காஷ்மீரை அம்றிஸ்ரார் ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜம்முவின் மஹாராஜாவான குலாப் சிங்கிற்கு 7.5 மில்லியன் ரூபாய்களுக்கு ஆங்கிலேயர் விற்று விட்டனர். குலாப் சிங் ஜம்முவின் சுதந்திர மன்னர் மஹாராஜாவாக (Princely Ruler) மாறினார்.


குலாப் சிங் 1857ல் இறந்தார். றம்பீர் சிங் மற்றும் பிரதாப் சிங் ஆகிய இரு மஹா ராஜாக்கள் அவரையடுத்து ஆட்சிக்கு வந்தனர். இறுதியாக வந்த ஆட்சியாளரே ஹரிசிங் (1925-1947) ஆவார். இவர்கள் அனைவரும் 80% ஆன, மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான முஸ்லிம்களை ஆயுத முனையில் ஆட்சி செய்தனர் என்றே கூற வேண்டும். முஸ்லிம்களோ ஹரிசிங்கிற்கு எதிராக தொடர்ந்து கிளர்ச்சி செய்து வந்தனர். 1931ல் ‘டொக்ரா படுகொலைகள்’ மூலம் முஸ்லிம்களை இவர் அடக்கினார்.



பல்வேறு தேசங்களாக இருந்து வந்த இந்தியா என்னும் உபகண்டம், சுதந்திரம் பெற்ற போது, காஷ்மீரும் ஒரு தேசமாக ஒரு மன்னரின் ஆதிக்கத்திலேயே தான் இருந்தது. இந்து மன்னரான மஹாராஜா ஹரிசிங் (தற்போது காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருக்கும் கரண் சிங்கின் தந்தையார்) கஷ்மீரை அப்போது ஆட்சி செய்து வந்தார். காஷ்மீரின் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள். இதனால் காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தானுடன் இணைவதா என்ற குழப்ப நிலை நீடித்தது.


ஜின்னாவுக்கு ஏற்பட்ட அவமானமும் பாக்கிஸ்தான் சதியும்



சுதந்திரம் பெற்று சரியாக 10 நாள் கூட முடியாத நிலையில் ஜின்னா காஸ்மீரில் ஓய்வெடுக்க விரும்பினார் .எனவே உதவியாளரிடம் அதற்கான ஏற்பாடு செய்யும் படி ஆணையிட்டார் . பெர்னியும் காஸ்மீர் சென்றார். அங்கே விதி விளையாடியது


என்னது ஜின்னா வருகிறாரா அவருக்கு டூரிஸ்ட்டாக கூட இங்கே வர அனுமதி இல்லை என்றார் காஷ்மீர் அரசர் ஹரிசிங்


எனவே மூன்று கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன

1.காஸ்மீர் அரசருடன் போர் - இது நிராகரிக்கப்பட்டது

2. காஸ்மீர் மக்களுக்கு ஆயுதம் கொடுத்து போராட சொல்வது இதற்கு கொஞ்சம் நாளாகும்

3.ஆப்கானிய கொலை கொள்ளை கூட்டத்திற்கு ஆசை காட்டி பின் புறத்திலிருந்து அவர்களை இயக்குவது - இவர்களுக்கு பாகிஸ்தான் ஆயுத சப் ளை செய்யும் காஷ்மீர் பாகிஸ்தானுக்கு மக்களிடம் கொள்ளை அடிக்கும் பணம் இவர்களுக்கே இதான் ஒப்பந்தம்



எனவே முட்டாள்களும் முரடர்களும் கொண்ட கட்டுப்பாடற்ற கொள்ளை கூட்டம் ஸ்ரீநகருக்கு புறப்பட்டது . இவர்களை பாகிஸ்தானிய பிரதமர் லியாகத் அலிகான் ஆசி கூறி அனுப்பி வைத்தார் . இதற்கான நிதி உதவி ,சாப்பாடு ,ஆயுதங்கள் பிரதமர் நிதியில் இருந்தே தரப்பட்டது


பாகிஸ்தான் ராணுவத்தில் கையாடல் குற்றத்திற்கு நீக்கப்பட்ட மேஜர் குர்ஷித் வழிகாட்ட கூலிப்படை கிடைத்த வாகனங்களில் புறப்பட்டன


காஸ்மீரை பாகிஸ்தானுடன் இணையுங்கள் ஸ்ரீநகரை நீங்கள் கொள்ளையடித்துக்கொள்ளுங்கள் என்ற மந்திர சொல் ஓதப்பட்டது

காசுமீருக்கு புனித போர் ஜிகாத் என்று வர்ணிக்கப்பட்டது . இவ்வாறாக முட்டாள்கள் கூட்டம் 1947 அக்டோபர்22 தேதி எல்லையில் வந்து சேர்ந்தது.



ஸ்ரீநகருக்கு இடையே 35 மைல் தூரம் இருந்தது


தகவல் தொடர்பு ஆங்கிலேய அதிகாரிகள் ஜெனரல் டக்ளஸ் கிரேஸியும் ,ராப் லாக்கர்ட்டும் நண்பர்கள் .பிரிவினையின் போது லகார்ட்டு டில்லிக்கு டக்ளஸ் பாகிஸ்தானிலும் இருந்தனர் .பாகிஸ்தான் படை டக்ளசுக்கு கிடைத்ததும் உடனே டில்லிக்கு செய்தி பறந்தது .மவுண்ட் பேட்டன் உஷாரானார் .நேருவிடம் சொல்லி 329குதிரை வீரர்களை உடனே ஸ்ரீநகர் நோக்கி அனுப்பினார்


சரியாக அக்டோபர் 26 இல் காஸ்மீர் இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியது .பாகிஸ்தான் தலை விதி மாறியது .


கொலைகார கும்பல் ஸ்ரீநகர் நோக்கி வருகையில் பாராமுல்லா தென்பட்டது .உடனே கூலிப்படை அந்த ஊரை கொள்ளையடிக்க மற்றும் கற்பழிப்புக்கு காலம் கடத்த இந்திய வீரர்கள் ஸ்ரீநகர் போய் சேர்ந்தனர்


தினை விதைத்தவன் தினை அறுப்பான்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

தீவிரவாதத்தை தோற்றுவித்த முதல் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் அதே ஆப்கானிஸ்தான் தீவிர வாதியால் 1951 அக்டோபர் 16 இல் சுட்டு கொலை செய்யப்பட்டார்


.

.

படுகொலை

அக்டோபர் 16, 1951 அன்று, ராவல்பிண்டியின் கம்பெனி பாக் (கம்பெனி கார்டன்ஸ்) இல் 100,000 பேரை உரையாற்றும் போது கான் இரண்டு முறை மார்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். [50] [51] காவல்துறை உடனடியாக கொலைகாரனை சுட்டுக் கொன்றது, பின்னர் அவர் தொழில்முறை கொலையாளி சைட் அக்பர் என அடையாளம் காணப்பட்டார். [51] கான் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ரத்தம் ஏற்றப்பட்டாலும் அவர் படுகாயமடைந்தார். அக்பர் பாப்ராக் பஷ்டூன் சத்ரான் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆப்கானிய நாட்டவர் என்று கூறினார். [52] லியாகத் அலிகான் படுகொலைக்கு முன்னர் அவர் போலீசாருக்கு தெரிந்தவர். படுகொலைக்கு பின்னால் உள்ள சரியான நோக்கம் ஒருபோதும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை, மேலும் இது குறித்து ஏராளமான ஊகங்கள் உள்ளன. [53] இந்தியாவின் போபாலில் வெளியிடப்பட்ட ஒரு உருது நாளிதழ், படுகொலைக்கு பின்னால் அமெரிக்காவின் கையைப் பார்த்தது. [54]


அவரது மரணத்தின் பின்னர், கானுக்கு 'ஷாஹீத்-இ-மில்லத்' அல்லது 'தேசத்தின் தியாகி' என்ற மரியாதைக்குரிய தலைப்பு வழங்கப்பட்டது. அவர் கராச்சியில் ஜின்னாவிற்காக கட்டப்பட்ட கல்லறை மசார்-இ-காயிதில் அடக்கம் செய்யப்பட்டார். [55] அவர் படுகொலை செய்யப்பட்ட நகராட்சி பூங்கா, அவரது நினைவாக லியாகத் பாக் (பாக் என்றால் தோட்டம்) என்று பெயர் மாற்றப்பட்டது. முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 2007 இல் படுகொலை செய்யப்பட்ட அதே இடம் இதுதான். [56]

.

Monday, 10 August 2020

BHOOLANDEVI - TERRORIST TURNED POLITICIAN BORN 1963 AUGUST 10 - 2001 JULY 26



BHOOLANDEVI - 
TERRORIST TURNED POLITICIAN 
BORN 1963 AUGUST 10 - 2001 JULY 26




பொள்ளாச்சி கொடூரம், காசியின் காமவேட்டை, சிறுமி ஹாசினி துயரம், டெல்லி நிர்பயா கொலை உள்ளிட்ட எந்தச் செய்தியைக் கேட்டாலும் ஒரு பொதுஜன மனநிலை எப்படி இருக்கும்? குழந்தைகளின், பெண்களின் ரத்தம் குடித்த அந்த ஓநாய்களை நடுரோட்டில் நிற்கவைத்துச் சுடவேண்டும் எனக் கொந்தளிக்கும். அது சட்டத்திற்குப் புறம்பானது எனினும் அதுதான் சரியான நீதி என பொதுஜனம் புலம்பித் தவிக்கும். அதைத்தான் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் செய்தார். தன் உடலைத் தின்ற 22 பேரை நடுரோட்டில் வரிசையாக நிற்கவைத்துச் சுட்டார். அவரை பொதுஜனங்கள் ‘துர்கை’யாக வழிபட்டனர். அவர்தான், தலைக்கு விலை வைத்து தேடப்பட்ட கொள்ளை ராணி - பெண் அரசியல்வாதி- வெற்றிகரமான இந்திய எம்.பி…. ‘பூலான் தேவி’.

யார் அந்தப் பூலான் தேவி?

இந்திய நாட்டில் பெண்ணாகப் பிறந்தாலே பல சவால்களைச் சந்திக்க வேண்டும். அதிலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பெண்ணாகப் பிறந்தால் சொல்லவா வேண்டும்... இன்னும் குறிப்பாக, உத்திரப்பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலத்தில் வசதியற்ற படகோட்டியின் மகளாக பிறந்தால் எப்படி இருக்கும்? மேற்சொன்ன சிந்தனைகளின் உயிர் உருவமே பூலான் தேவி.1963-இல் உத்திரப்பிரதேசத்தின் கங்கை நதிக்கு உணவாகாமல் தப்பிப் பிறந்த பெண் சிசுக்களில் அவரும் ஒருவர். பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்தால், தந்தையால் வெறுக்கப்பட்டவர். 11 வயதில் திருமணத்திற்குத் தயார் செய்யப்பட்ட பூலான், தன்னை விட 20 வயது மூத்தவரைத் திருமணம் செய்துகொள்ள அப்பாவோடு காலமும் கட்டளையிட்டது. அப்போது திருமணமான குழந்தைகள் வயது வரும் வரை தந்தை வீட்டில்தான் இருப்பர். ஆனால், அவர் கணவன் புட்டிலாலோ திருமணம் ஆனதும் வீட்டுக்கு அழைத்துச் சென்று சிறுமி என்றும் பாராமல் பாலியல் துன்புறுத்தல் தருகிறார். மிச்ச நேரங்களில் வீட்டு வேலைகளைச் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார் பூலான். இதனால் மனமுடைந்த பூலான் கணவனுக்குத் தெரியாமல் தன் தந்தை வீட்டுக்கு வந்துவிடுகிறார்.

சுரண்டிய சொந்தங்கள்:

கணவனுக்குத் தெரியாமல் வீட்டுக்கு வந்த பூலானை தந்தை ஏற்க மறுக்கிறார். இருப்பினும், ஊர் பெரியவர்களின் அறிவுறுத்தல் படி சிலகாலம் பெரியப்பா கருதயாளின் வீட்டில் தங்கவைக்கப் படுகிறார் பூலான். ஆனால், எல்லாவற்றையும் கேள்வி கேட்டுப் பழகிய பூலான் தனது தந்தையின் நிலத்தை அபகரித்துள்ள பெரியப்பாவிடம் நிலத்தைக் கேட்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பெரியப்பா கருதயாள், பூலானை வீட்டை விட்டுத் துரத்துகிறார். மீண்டும் வீட்டிற்குச் சென்றால் பெற்றோர் மனம் வருந்துவர் என்பதால் மறுபடியும் கணவன் புட்டிலால் வீட்டிற்குச் செல்கிறார். ஆனால், கணவன் இன்னொரு மனைவியோடு குடும்பம் நடத்துவதைப் பார்த்ததும் கையறு நிலையில், மீண்டும் தன் கூட்டிற்கு வந்தடைகிறது அந்தப் பெண் புறா.
வீட்டிற்கு வந்த பிறகும் தந்தை நிலத்தை அபகரித்த பெரியப்பாவை எதிர்த்து அவ்வப்போது பேசியும், போராடியும் வந்தார் பூலான். எப்படியாவது தங்கள் நிலத்தை மீட்க வேண்டும் என நினைத்த பூலானின் செயல்பாடுகள் பெரியப்பாவையும் அவர் மகனையும் தூங்க விடாமல் செய்தது. இந்நிலையில், மாமா என்ற உறவு முறையில் வீட்டிற்குள் நுழைந்தது வேறொரு பிரச்சனை. பூலானின் மாமா அடிக்கடி பூலானை பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தினார். பூலானின் வயதான தந்தையால் இதெல்லாம் தட்டிக் கேட்க முடியவில்லை. உடன் பிறந்த நான்கு சகோதரிகளுக்கும் ஒரு சின்ன தம்பிக்கும் இந்தக் கொடுமைகளை எதிர்க்கும் வலு போதுமானதாக இல்லை.

மறுமணமும் திருட்டுப் பழியும் :

நிலப் பிரச்சனையைக் மீண்டும் மீண்டும் கிளரும் பூலான் மீது பெரியப்பா குடும்பத்தினர் கடும் கோபத்தில் இருந்தனர். அவரைப் பழி தீர்க்க சமயம் பார்த்தனர். இந்நிலையில் கைலாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட பூலான், பூலான் கைலாஷாக மாறினார். திருமணம் முடிந்ததும் இனி கைலாஷ்தான் எல்லாம் என நினைத்தார். சந்தோஷமான எதிர்கால வாழ்க்கையை அடிமனதில் அசைபோடத் தொடங்கினார் பூலான். ஆனால், கையைக் கசக்கிக்கொண்டு நம்பியாரைப் போல கொடூரத்திட்டம் தீட்டியது, விதி. பூலானின் நெருக்கடிக்கு முடிவுகட்ட நினைத்த பெரியப்பா கருதயாளின் மகன், தன் தங்கக் கடிகாரத்தைத் திருடி விட்டதாக போலீசில் பொய்ப் புகார் கொடுத்தார். ஏன் என்று கேட்க நாதியில்லாத பூலானை போலீஸ் கைது செய்கிறது. ஆம் நீங்கள் யோசித்தது சரிதான், போலீஸும் அவரை பாலியல் தொல்லைக்கு உட்படுத்துகிறது. பிறகு நீதிபதியின் கருணையால் அவர் விடுதலை செய்யப்படுகிறார். விடுதலை செய்யப்பட்டு வீட்டிற்கு வரும் பூலானை, ஊர் மக்கள் அனுமதிக்க மறுக்கின்றனர். வேறுவழி தெரியாத கைலாஷ் தன் கொள்ளைக்கார நண்பர்களுடன் மனைவி பூலானை சில காலம் அனுப்ப முடிவு எடுக்கிறார். நம்பி வந்த கணவனின் கைவிரிப்பு பூலானுக்கு அதிர்ச்சியைத் தருகிறது. கொள்ளையர்களுடன் செல்லும் முடிவில் பூலானுக்குச் சற்றும் உடன்பாடில்லை. ஆனால் அவரின் உடன்பாடுகள் எல்லாம் ஒருபோதும் கேட்கப்பட்டதே இல்லை. 

கொள்ளைக் காதல் :


கைலாஷோடு இருந்த போதே பூலானின் மீது ஆசை கொண்டிருந்தான் கொள்ளை நண்பன் பாபு குஜ்ஜர். இந்நிலையில் கைலாஷ், பூலானை அவனோடு அனுப்பி வைக்க, பாபுவின் கொரூர மனம் விழித்துக்கொண்டது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த அந்தக் கொள்ளைக் கும்பலின் தலைவன்தான், பாபு குஜ்ஜர். பாபு குஜ்ஜருக்கு அடுத்த இடத்தில் இருந்தவன் விக்ரம் மல்லா. பூலானை பாலியல் வன்புணர்வு செய்து கொன்று வீசிவிட திட்டமிட்டு, காய் நகர்த்தினான் பாபு. ஆனால் இந்தத் திட்டம் அறிந்து பாபு குஜ்ஜரோடு சண்டையிட்டான் விக்ரம் மல்லா. சண்டையில் பாபு கொல்லப்பட்டான். விளைவு, விக்ரம் மல்லா கொள்ளைக் கும்பலின் தலைவன் ஆனான். சாதி பார்க்காமல் கொள்ளையடித்தனர். ஆனால், கொள்ளையர்களுக்குள் சாதி பார்த்தனர். கொல்லப்பட்ட பாபு குஜ்ஜர் உயர்சாதியாகக் கருதப்பட்ட தாக்கூர் இனத்தைச் சேர்ந்தவர். கொலை செய்த விக்ரம் தாழ்த்தப்பட்ட மல்லா இனத்தைச் சேர்ந்தவர். அவ்வளவு தான், கூட்டத்தின் ஒரு பகுதி விக்ரமைக் கொலை செய்யும் சந்தர்ப்பத்திற்குச் சமயம் பார்த்தது. இந்நிலையில், விக்ரம் மல்லா- பூலான் தேவியைத் திருமணம் செய்து கொள்கிறான். அதுவரை தனக்கு யாரும் வழங்காத சுயமரியாதையை விக்ரம் அளித்தது பூலானுக்குப் பிடித்திருந்தது. குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல் என சகல வித்தைகளையும் கற்று தேர்ந்த கொள்ளை ராணியாக உருவெடுத்தார், பூலான்.  

புயலில் சிக்கிய பூச்செடி:

பூலான் இந்தக் கொள்ளை வாழ்க்கையை விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால், அவருக்கு இப்போது இதுதான் ஒரே பாதுகாப்பு. கொள்ளைக் கூட்டத் தலைவன் விக்ரம் மல்லாவின் மனைவியாகக் கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்தார், பூலான் தேவி. அவரைக் கண்டு அனைவரும் மரியாதை தந்தனர். ஆண்கள் அவரை மதித்தனர். சில காலம் நீடித்தது இந்தச் சுயமரியாதை வாழ்க்கை. ஆனால், மீண்டும் கையைக் கசிக்கிக்கொண்டு புதுத் திட்டத்தோடு வந்து நின்றது விதி. 1980 ஆகஸ்ட் 13-இல் கொள்ளைக் கூட்டத் தலைவன் விக்ரம் மல்லா கொல்லப்பட்டான். பூலானை, உயர்சாதி கூட்டத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் ‘பேமாய்’ என்னும் கிராமத்திற்குக் கடத்திச் சென்றனர். மீண்டும் பாலியல் துன்புறுத்தல்கள், அடி, உதை, அவமானம். கிட்டத்தட்ட 3 வாரங்கள் தொடர் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார் பூலான். ‘பேமாய்’ கிராமத்தில் உள்ள வேறு சில உயர்சாதி கழுகுகளும் அவரின் உடலைச் சுற்றி வட்டமிட்டன. தனக்கு இழைக்கப்பட்ட அத்தனை அநீதிகளையும் தாங்கிக்கொண்ட பூலான், தனக்கான நீதியைத் தானே எழுதத் துணிந்தார். இப்போது, அவர்களைப் பழி தீர்ப்பது மட்டும்தான் பூலானின் ஒற்றை நோக்கம். வாய்ப்பு வசப்பட்டது, தாழ்த்தப்பட்ட மக்கள் சிலர் உதவ அங்கிருந்து தப்பினார் பூலான்.

பதவி விலகிய வி.பி.சிங்:



உடலும் மனமும் வலுவிழந்த நிலையில், வெந்ததைத் தின்று விதிவந்தால் சாகலாம் என நினைக்கும் சராசரிப் பெண் அல்ல பூலான் தேவி. தப்பித்த சில நாட்களிலேயே விக்ரம் மல்லாவின் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கிறார். 14 ஃபிப்ரவரி 1981,  தன் உடலைக் கொத்திய கழுகுகளையும், கடித்துக் குதறிய ஓநாய்களையும் பழி தீர்க்கும் வெறியோடு ‘பேமாய்’ கிராமத்தில் தடம் பதித்தார். அவ்வளவாக அந்த உருவங்கள் அவருக்கு நியாபகம் இல்லை, விசாரித்ததில் அகப்பட்ட 22 ஆண்களை வரிசையாக நிற்கவைத்தார். தோட்டாக்கள் சீறித் தெறித்தது. இந்தியாவே கொந்தளித்தது. காரணம் கொலை செய்யப்பட்ட 22 பேரும் பெரும்பான்மை சாதியைச் சேர்ந்த ஆண்கள். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாய் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. விளைவு, அன்றைய உத்திரப்பிரதேச முதல்வர் வி.பி.சிங் பதவி விலகினார்.



பூலானின் தலைக்கு 2 லட்சம் விலை வைத்துத் தேடியது அரசு. சில காலம் மத்திய பிரதேச மற்றும் உத்திரப்பிரதேச அரசுகளுக்குப் போக்கு காட்டிக் கொண்டிருந்த பூலானுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும் ஆதரவாகத் துணை நின்றனர். தங்களைக் காக்கவந்த “துர்கா தேவி” என பூலானை வணங்கினர். வட மாநிலங்கள் முழுதும் அரசுக்குப் பெரும் தலைவலியாக இருக்கும் பூலானை சரணடையவைக்க அரசுத்தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர் போராட்டங்களால் சற்று உடல் நலிவுற்று இருந்தார் பூலான். இந்நிலையில், போலீஸ் தேடுதலால் அங்கும் இங்கும் ஓட முடியாத நிலையில் இருந்த பூலான் அரசின் சமரச போக்கைப் பயன்படுத்தி சரண் அடைந்து நிம்மதியான வாழ்க்கைக்குத் திரும்ப நினைத்தார். “யானை படுத்தாலும் குதிரை மட்டம்” என்பதுபோல சரணடைவதற்குச் சில நிபந்தனைகளை விதித்தார் பூலான்.



வெளிவந்த பெண் சிங்கம்:



‘கை விலங்கு போடக் கூடாது’, ‘தனக்கோ தன் கூட்டத்தினருக்கோ தூக்குத் தண்டனை வழங்கக்கூடாது’, ‘தனி நீதிமன்ற விசாரணை அமைக்க வேண்டும்’, ‘8 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை கொடுக்க வேண்டும்’, ‘எனக்கு உத்திரப்பிரதேச போலீசாரின் மீது நம்பிக்கை இல்லை, அதனால் நான் மத்தியப் பிரதேசத்தில் சரணடைய அனுமதியளிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட அவரின் பல்வேறு நிபந்தனைகள் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.



Phoolan Devi - UttarPradesh - VP SIngh - PMK - Ramadoss - Bandit Queen - History


1983-இல் மத்தியப்பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங் முன்னிலையில் பூலான் தேவி சரணடைய மேடை அமைக்கப்பட்டது. மேடையில் தேசப்பிதா காந்தியின் புகைப்படமும், கடவுள் துர்க்கா தேவியின் புகைப்படமும் இருக்கிறது. பூலான் சரணடையும் நிகழ்ச்சியைக் காண அனைத்துப் பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் முண்டியடித்துக் கொண்டிருந்தனர். காரணம், பூலானின் பெயர் அறிமுகமான அளவுக்கு அவரின் உருவம் அறிமுகம் இல்லாமல் இருந்தது.



தலையைச் சுற்றி சிவப்புத் துணி, காக்கி உடை, இடுப்பில் பெல்ட், முதுகில் பெரிய துப்பாக்கி எனக் காட்சியளித்தார் பூலான். வட மாநிலங்களையே தன் செய்கையால் கொலை நடுங்கச் செய்த 26 வயதே ஆன பூலானின் உயரம் 4 அடி 11 அங்குலம் மட்டுமே. பூலானும் அவரின் படையும் துப்பாக்கியைக் கைவிட்டு முதல்வர் அர்ஜுன் சிங் முன்னிலையில் சரணடைந்தனர்.   



பாலம் போட்ட பா.ம.க.:



எத்தனை முறை விதியின் வசத்தால் வீழ்ந்தாலும், பூலான் ஒருபோதும் விதிக்கு அஞ்சியதில்லை. ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பிறகும் புதிய அத்தியாயத்தைத் தேடியே அவரின் சிறகுகள் விரியும். இந்த முறையும் அப்படித்தான் பூலானின் விடுதலை தாமதிக்கப்பட மத்திய, மாநில அரசுகளின் ஆட்சி மாற்றம் போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டது. இந்நிலையில், வேறொரு விஷயமாக அடிக்கடி சிறைக்கு வந்து போன உமத் சிங் என்பவர் பூலானைச் சந்திக்கிறார். பூலானின் வலி நிறைந்த வாழ்வில் பங்கேற்கிறார் உமத் சிங். அவரின் ஆறுதல் வார்த்தைகள் பூலானின் கடந்த கால காயங்களுக்கு களிம்பு தடவியது.



கொள்ளை ராணியாகச் சிறை சென்ற பூலானை அம்பேத்கரின் புத்தகங்கள் கொள்கைவாதியாக வெளியேற்றியது. ஆம், 11 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு 37 ஆவது வயதில் (1994 ஃபிப்ரவரி 19) விடுதலை செய்யப்பட்டார் பூலான் தேவி. அப்போது உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த முதல்வர் முலாயம்சிங், பூலானின் மீது இருந்த 40-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்தார். இதனால் சுதந்திரப் பறவையாக வெளியில் வந்தார் பூலான் தேவி. கலவரங்கள் அற்ற சாதாரண வாழ்கையை அமைத்துத் தர விரும்புவதாகச் சொன்ன உமத் சிங்கோடு பூலானின் திருமணம் எளிய முறையில் நடந்துமுடிந்தது.



Phoolan Devi - UttarPradesh - VP SIngh - PMK - Ramadoss - Bandit Queen - History


விடுதலைக்குப் பிறகு அவரின் முதல் அரசியல் நிகழ்ச்சிக்கு மேடை அமைத்தது தமிழகம். 1994  ஆம் ஆண்டு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற “மது ஒழிப்பு, ஆபாசப் படம் தடை மற்றும் மகளிர் இயக்கம்” குறித்த மாநாட்டில் பங்கேற்றார், பூலான் தேவி. துப்பாக்கிகளுக்கும் துரோகங்களுக்கும் நடுவே வாழ்ந்தவரை அரசியல் மேடைக்கு அழைத்து வர பாலமாய் இருந்தது பா.ம.க. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அதிரடிகள் அவர் வாழ்வில் அரங்கேறியது. முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவான அரசியலில் தீவிரமாகக் களம் இறங்குகிறார் பூலான். 

பூலான்தேவி., எம்.பி!

சமாஜ்வாதி கட்சி சார்பில் இரண்டு முறை உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் தொகுதி சார்பாக போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. 1996 –இல் மக்களவை சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பூலான்தேவி. காடுகளிலும் மேடுகளிலும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஓடித்திரிந்த பூலானின் கால்கள் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தது. காலமெல்லாம் நசுக்கப்பட்ட பூலான் நாடாளுமன்றத்தில் பெருங்குரலெடுத்து பேசினார். தன் தொகுதி மக்ககளின் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார். விளைவு அடுத்து நடைபெற்ற 1999 நாடாளுமன்றத் தேர்தலில் 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வலுவான ஆளுமையாக உருவெடுத்தார். 

வாழ்வின் அத்தனை அசவுகரியங்களையும் சகித்துக் கொண்டு வாழத் தயாரானவரை இந்த உலகம் இறுதி வரை வாழவிடாமலேயே செய்தது. அதேசமயம் தனக்கு இழைக்கப்பட்ட அத்தனை அநியாயங்களுக்கு எதிராகவும் சோர்ந்துவிடாமல் போராடிக் கொண்டிருந்த பெண்
சிங்கத்தை 5 தோட்டாக்கள் சரித்தது. 2001 ஜூலை 25 அன்று வீட்டு வாசலில் கார் ஏற வந்த பூலானை முகமூடியிட்ட மூன்று மர்ம நபர்கள் சுட்டு வீழ்த்தினர். சம்பவ இடத்திலேயே பூலான் பலியானார். விரைவில் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். விசாரணையில், பேமாய் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட 22 பேரின் மரணத்திற்காக பழி தீர்த்தாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர் கொலையாளிகள். பாட்சாவாக இருக்கும்வரை பூலானை நெருங்க பயந்த கூட்டம், மாணிக்கமானதும் மண்ணில் வீழ்த்தி பகைமுடித்தது.



இன்று பூலான் நினைவு நாள்!





.

Sunday, 1 December 2019

RANVIR SENA OF BIHAR TERRORIST OF HIGHER CASTE ORGANISATION KILLED 63 ON DECEMBER 1,1997



RANVIR SENA OF BIHAR TERRORIST OF 
HIGHER CASTE ORGANISATION
KILLED 63 ON DECEMBER 1,1997




ரன்வீர் சேனா (Ranvir Sena இந்:रणवीर सेना) எனப்படுவது, பீகாரிய சாதிவாரி நிலக்கிழாரிய படையணிகளில் ஒன்றாகும்[1]. இது 1994ம் ஆண்டு தரிசன் சவுத்ரி மற்றும் பிரம்மேசுவர் சிங் ஆகிய இருவரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் பூமிகார் நிலக்கிகிழார்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதுடன் அவர்களது நில மேலாண்மையை உறுதி செய்வது ஆகும். இந்த இயக்கம் பல முறை தலித், பழங்குடி மற்றும் பொதுவுடமைவாதிகளின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளது. மேலும் இலச்மண்பூர் பதே மற்றும் பதனி டோலா படுகொலைகளிலும் இது ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது[2][3][4]. இதன் காரணமாக இந்திய அரசு இதை ஒரு தீவிரவாத அமைப்பு என வகைப்படுத்தியுள்ளது. பீகார் அரசும் இதனை யூலை 1995ல் முதல் சட்டப்பூர்வமாக தடை செய்துள்ளது[5].

பெயர் காரணம்

ரன்வீர் எனும் பெயர் ரன்வீர் பாபா எனப்படும் பூமிகார் சாதியை சேர்ந்த ஒரு மகானின் பெயரில் இருந்து வந்தது. மேலும் 19ம் நூற்றண்டைச் சேர்ந்த பூமிகார் இராணுவ வீரரான ரன்வீர் சவுத்ரி என்பவரின் பெயரும் இதற்கான இன்னொரு முக்கிய காரணம். ரன்வீர் சவுத்ரி, அவரின் காலத்தில் போஜ்பூர் மாவட்டத்தில் நிலவி வந்த இராசபுத்திரர்களின் நில மேலாண்மையை தகர்த்து, பூமிகார் பிராமிண்களின் ஆதிக்கத்தை நிலை நாட்டியத்தில் முக்கிய பங்காற்றியவர்[6]. எனவே இவர்களின் பெயரை சேர்த்து ரன்வீர் சேனா (ரன்வீரின் படைகள்) என இந்த இயக்கம் பெயரிடப்பட்டது.

வரலாறு

1962ல் ஏற்பட்ட இந்திய சீனப் போரை தொடர்ந்து இந்திய பொதுவுடமைக் கட்சி இரண்டாக பிரிந்தது. இது மார்க்சிய லெனினிய இயக்கங்களின் தோற்றத்திற்கு அடிகோலாக அமைந்தது. ஆயுதம் தாங்கிய இந்த புரட்சிக் குழுக்கள் முதலில் மேற்கு வங்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கின. பின்னர் 1970களின் ஆரம்பத்தில் இவை பீகார் மாநிலத்திலும் தனது ஆதிக்கத்தைப் பரவலாக்கின. அடித்தட்டு மக்களின் சார்பாக இயங்கிய இந்த அமைப்புகள், பெரும் நிலக்கிழார்களிடமிருந்த நிலங்களைப் பிடுங்கி ஏழை மக்களுக்கு பகிர்ந்தளித்தன. இது பெரும் நிலங்களைச் சொந்தமாகக் கொண்ட பிராமண மற்றும் ஆதிக்க சாதி மக்களுக்கு பெரும் நட்டத்தைத் தோற்றுவித்தது. மேலும் அதிக அளவிலான தாழ்த்தப்பட்ட மக்கள் இவ்வகையான புரட்சி இயக்கங்களில் சேர்வதும், அவற்றின் பலம் பெருகுவதும் தங்களின் நலனுக்கு எதிரானதாக இம்மக்களால் பார்க்கப்பட்டது.

எனவே இந்த இயக்கங்களை எதிர்க்கும் வகையில் தங்களுக்கான தனியார் படையணியை இம்மக்கள் அமைத்துக்கொண்டனர். இது ஒவ்வொரு சாதியிலும் ஒவ்வொரு பிராந்தியத்திலும் இருக்கும் நிலக்கிழார்களின் கூட்டுப் படையணியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இவ்வாறு 1979ல் இராசபுத்திரர்களால் கவுர் சேனா எனப்படும் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. தொடர்ந்து 1990 வரை பல்வேறு சாதியினராலும் வெவ்வேறான பகுதிகளில் வெவ்வேறான பெயர்களில் பல நிலக்கிழாரிய படைகள் அமைக்கப்பட்டன.

இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட படைகளில் சுவர்னா லிபரேசன் பிரண்ட் மற்றும் சன்லைட் சேனா ஆகியவற்றை இணைத்து, புதியதாக ரன்வீர் சேனா உருவாக்கப்பட்டது. இதனை தரிசன் சவுத்ரி எனபவர் செப்டம்பர் 1994ல் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பேளூர் எனும் கிராமத்தில் வைத்து ஆரம்பித்தார். பிரம்மேசுவர் சிங் இந்த இயக்கத்தின் தோற்றத்தில் பங்குகொண்டதுடன் அதன் தளபதியாகவும் இருந்தார்[7]. இந்த இயக்கமானது, அளவிலும் கட்டமைப்பிலும் மற்ற இயக்கங்களை விட சிறந்ததாக வடிவமைக்கப்பட்டது. பூமிகார் மற்றும் பிற பிராமணிய சாதியினர் மட்டுமே இதன் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். இதன் தொண்டர்களுக்கு பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டது[8].

கொள்கைகள்

பூமிகார் நிலக்கிழார்களின் நலன் காப்பது ரன்வீர் சேனாவின் முக்கிய கொள்கை. அதோடு பீகாரில் கம்யூனிச ஒழிப்பு என்பது மற்றொரு முக்கிய கொள்கை[5][8]. இதற்காக ஆயுதம் ஏந்திப் போராடுவது என்பதன் அடிப்படையில் இந்த இயக்கம் இயங்குகின்றது. இந்த இயக்கம் தனது தாக்குதல்களைப் பெரும்பாலும் தலித், பழங்குடி மற்றும் பொதுவுடமைவாதிகள் மீதே தொடுக்கின்றது. சில நேரங்களில் பிற சாதி மற்றும் இசுலாமியர்களின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தலித் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல்களுக்குக் காரணமாக, அந்த குழந்தைகள் பின்னாட்களில் நக்சலைட்டுகளாக மாறலாம் எனவும், பெண்கள் அவ்வாறான நக்சலைட்டுகளை பெற்றெடுக்கலாம் என்பதாவும் ரன்வீர் சேனா கூறுகின்றது[1][9]

தாக்குதல்கள்
ரன்வீர் சேனா பல மனித உரிமை மீறல்களை பீகாரில் நடத்தியுள்ளது[10]. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.


ரன்வீர் சேனா மேற்கொன்ட தாக்குதல்கள்[8]
ஆண்டு தாக்குதல் மொத்த பலி
1995
ஏப்ரல் 4 - போஜ்பூர் மாவட்டம் கொபாரியாவில் 3 பேர் படுகொலை.
யூலை 25 - போஜ்பூர் மாவட்டம் சர்துவா நகரில் 6 பேர் படுகொலை.
9
1996
பெப்ரவரி 7 - போஜ்பூர் மாவட்டம் பதன்புராவில் 4 பேர் படுகொலை.
ஏப்ரல் 22 - போஜ்பூர் மாவட்டம் நன்பூரில் 3 பேர் படுகொலை.
மே 5 - போஜ்பூர் மாவட்டம் நதி நகரில் 5 பேர் படுகொலை.
மே 19 - போஜ்பூர் மாவட்டம் நதி நகரில் 3 பேர் படுகொலை.
யூலை 11 - பதனி டோலா படுகொலைகள். 22 பேர் படுகொலை.
நவம்பர் 26 - போஜ்பூர் மாவட்டம் புர்கராவில் 4 பேர் படுகொலை.
திசம்பர் 12 - போஜ்பூர் மாவட்டம் கானட்டில் 5 பேர் படுகொலை.
திசம்பர் 22 - போஜ்பூர் மாவட்டம் எக்பாரியில் 6 பேர் படுகொலை.
52
1997
மார்ச் 23 - ஃகபீசுபூர் படுகொலைகள். 10 பேர் படுகொலை.
ஏப்ரல் 10 - எக்வாரி படுகொலைகள். 10 பேர் படுகொலை.
நவம்பர் 3 - செகனாபாத் மாவட்டம் கடாசினில் 8 பேர் படுகொலை.
நவம்பர் 22 - செகனாபாத் மாவட்டம் கடேசர் நலாவில் 6 பேர் படுகொலை.
திசம்பர் 1 - இலச்மண்பூர் பதே படுகொலைகள். 58 பேர் படுகொலை.
92
1999
சனவரி 25 - சங்கர்பிகா படுகொலைகள். 23 பேர் படுகொலை.
பெப்ரவரி 10 - செகனாபாத் மாவட்டம் நாராயன்பூரில் 11 பேர் படுகொலை.
ஏப்ரல் 21 - கயா மாவட்டம் செந்தனியில் 12 பேர் படுகொலை.
46
2000
யூன் 16 - மியாபூர் படுகொலைகள். 35 பேர் படுகொலை.
செப்டம்பர் 10 - போஜ்பூர் மாவட்டம் துமாரியாவில் 6 பேர் படுகொலை.
41
2001
செப்டம்பர் 13 - கயா மாவட்டம் பரியா தொடர்வண்டி நிலைய தாக்குதல். 7 பேர் படுகாயம்.
நவம்பர் 18 - செகனாபாத் மாவட்டம் சுனாதி மோர் கிராமத்தில் 2 பேர் படுகொலை. இருவர் படுகாயம்.
2
2002
மார்ச் 16 - அர்வால் மாவட்டம் புத்துபிகா கிராமத்தில் 3 பேர் படுகொலை.
ஏப்ரல் 27 - போஜ்பூர் மாவட்டம் ஆராவில் 2 சிறுவர்கள் படுகொலை.
மே 5 - போஜ்பூரில், இராசசுத்தானைச் சேர்ந்த 6 தலித் கூலிகள் படுகொலை.
செப்டம்பர் 23 - செகனாபாத் மாவட்டம் மஜித்பூர் கிராமத்தில் 5 நக்சலைட்டுகள் படுகொலை.
அக்டோபர் 8 - செகனாபாத் மாவட்டம் நுவான் கிராமத்தில் ஒரு பெண் மற்றும் அவரது 3 வயது குழந்தையும் படுகொலை செய்யப்பட்டது.
அக்டோபர் 24-25 - போஜ்பூர் மாவட்டம் குர்முரி கிராமத்தில் 6 பேர் படுகொலை.
அக்டோபர் 2 - செகனாபாத் மாவட்டம் நோவாமா கிராமத்தில் ஒருவர் கொலை.
25
2003
பெப்ரவரி 11 - கயா மாவட்டம் நெவுதி கிராமத்தில் ஒருவர் படுகொலை. 2 பேர் படுகாயம்.
1
2004
சனவரி 3 - அர்வால் மாவட்டம் பரியாரி கிராமத்தில் 5 பேர் படுகொலை.
மார்ச் 28 - செகனாபாத் மாவட்டம் பிசுகின்புகா கிராமத்தில் 3 பேர் படுகொலை.
ஏப்ரல் 26 - அர்வால் மாவட்டத்தில் 3 நக்சலைட்டுகள் படுகொலை.
யூலை 29 - செகனாபாத் சிறை ககண்காணிப்பாளர் மற்றும் அவரது குடும்பத்துக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடப்பட்டது.
11

Thursday, 28 December 2017

DAWOOD IBRAHIM , TERRORIST ,SAFE IN PAKISTAN BORN 1955 DECEMBER 27





DAWOOD IBRAHIM ,
TERRORIST ,SAFE IN PAKISTAN
BORN 1955 DECEMBER 27







Dawood Ibrahim (born Dawood Ibrahim Kaskar 27 December 1955) is a crime lord and a designated terrorist originally from Dongri in Mumbai, India.[4][5]

He currently resides in Pakistan and heads the Indian organised crime syndicate D-Company which he founded in Mumbai in 70s.[6][7][8][9][10] Dawood is wanted on the charges of murder, extortion, targeted killing, drug trafficking, terrorism and various other cases. He was designated as a global terrorist in 2003 with the head money of US$25 million.[11] In 2011, he was named number three on World's 10 most wanted criminals.[12]


Early life[edit source]
Ibrahim was born on 27 December 1955 in a Konkani Muslim family in Ratnagiri district in Maharashtra, India.[13] His father, Ibrahim Kaskar, worked as a head constable with the Mumbai Police and his mother, Amina, was a housewife.[14] He lived in the Temkar Mohalla area of Dongri, attended Ahmed Sailor High School from which he dropped out. He grew up in the Dongri locality of Mumbai, which was when he came in contact with the gang of mobster Haji Mastan, after the latter attacked two of Ibrahim's men.[15] Ibrahim, with his brother Shabir Ibrahim Kaskar formed the D-Company.

History[edit source]
Ibrahim is believed to control much of the hawala system, which is the very commonly used unofficial system for transferring money and remittances outside the view of official agents. Much of the organisation's operations are in India.[16][17]

The United States Department of the Treasury designated Ibrahim as a terrorist as part of its international sanctions program, effectively forbidding US financial entities from working with him and seizing assets believed to be under his control. The Department of Treasury keeps a fact sheet on Ibrahim which contains reports of his syndicate having smuggling routes from South Asia, the Middle-East and Africa shared with and used by terrorist organization al-Qaeda. The fact sheet also said that Ibrahim's syndicate is involved in large-scale shipment of narcotics in the United Kingdom and Western Europe. He is also believed to have had contacts with al-Qaeda leader Osama bin-Laden. In the late 1990s, Ibrahim traveled to Afghanistan under the Taliban's protection. The syndicate has consistently aimed to destabilise the Indian government through riots, terrorism and civil disobedience.[18]

The US stated that it will request the United Nations to list Ibrahim "in pursuance of relevant Security Council resolutions". Such a UN listing will require that all UN member states freeze Ibrahim's assets and impose a travel ban. Juan Zarate, the Deputy Assistant Secretary for Terrorist Financing and Financial Crimes, said that they are committed to identifying and attacking financial ties between terrorism and the underworld.[19] Ibrahim is also suspected to have connections with terrorist organisations, and in 2002 was linked to the financing of increasing attacks in Gujarat by Lashkar-e-Toiba.[19] In 2006, the government of India handed over to Pakistan, a list of 38 most wanted criminals including Ibrahim.[20]

On 21 November 2006, it was reported that ten members of Ibrahim's gang were arrested by the Crime Branch of Mumbai Police. They were extradited from the United Arab Emirates, from where they had been deported.[21]


India Today reported that Ibrahim provided the logistics for the 2008 Mumbai attacks.[22]

News media outlets reported the murder of Shiraz Asghar Ali as a sign of a dramatic shift of power between the crime lords.[23]

The Nepal government has directed freezing of assets of 224 individuals and 64 groups with Ibrahim if they are present in Nepal under Nepal's Anti-Money Laundering (AML) Act.[24]

In 2013, former Indian cricketer Dilip Vengsarkar alleged that in 1986, Dawood had entered the Indian team dressing room in Sharjah and offered each Indian player a car if they beat Pakistan in the Sharjah Cup final.[25]

1993 Bombay bombings[edit source]

[icon] 
This section needs expansion. You can help by adding to it. (May 2017)
Ibrahim is widely believed to have masterminded the March 1993 bombings in Bombay. In 2003, the Indian and United States governments declared Ibrahim a "Global Terrorist." The Indian Deputy Prime Minister, Lal Krishna Advani described it as a major development. Ibrahim is currently on India's "Most Wanted List".[19]

Location[edit source]
According to Indian claims, Ibrahim was believed to be living in Pakistan and then in the United Arab Emirates.[26][27][28][29] According to Indian claims he has shifted to Pakistan-Afghanistan border. Indian sources add that "Inter-Services Intelligence appeared extremely wary of the new Indo-US cooperation to fight terrorism. The Inter-Services Intelligence and Dawood appear under a lot of pressure"[30] On 5 May 2015 MP Haribhai Chaudhary informed the Lok Sabha (the lower house of India's Parliament) that the whereabouts of Ibrahim were unknown.[31][32] However, on 11 May, Rajnath Singh, the Home Minister of India, told the parliament that Ibrahim was in Pakistan and he will bring him back to India.[31][33][34][35]


According to claims of Indian news media Times Now on 22 August 2015, Dawood was in Karachi, Pakistan. According to said media corporation, they had conversation with a woman in Karachi on August 22, 2015. Transcripts of conversations which were published on the news agency's website, in one conversation she said that she is Dawood's wife and "he is sleeping", while in the second conversation she said that there was no one by that name known to her.[36][37]

According to a dossier prepared by India in August 2015, to be handed over to Pakistan, Ibrahim has nine residences in Pakistan and has three Pakistani passports which he frequently uses to travel.[38]

Family[edit source]

In 2006, Ibrahim's daughter, Mahrukh Ibrahim, married Junaid Miandad, the son of Pakistani cricketer Javed Miandad.[39] In 2011, his daughter Mehreen, 24, married Ayub, a Pakistani-American.[40] His son Moin married Saniya, daughter of a London-based businessman on 25 September 2011.[41] Several of his family members, including his brother, Iqbal Kaskar, live in Mumbai.[42]

Popular culture[edit source]

Dawood Ibrahmim and his syndicate D-Company have been linked to the financing of the Bollywood film industry. A number of Bollywood studios and films were financed by D-Company in the 1980s and 1990s. Ibrahim was linked to a number of celebrities during that time, including the beauty pageant contestant Anita Ayub and the Bollywood actress Mandakini. D-Company is also known for extortion and threats targeted towards Bollywood producers and celebrities, and was involved in the murders of Bollywood producers Javed Siddique and Gulshan Kumar.[43]

The 2002 film Company is based loosely on D-Company's activities, and its sequel (prequel to events in the movie), the 2005 film D, as well as Shootout at Lokhandwala (2007) and the 2010 film Once Upon a Time in Mumbai.[44] The 2013 movie Shootout at Wadala is based on the rise of the D-Company. The film Haseena Parkar (2017) is a biographical crime film based on his sister, Haseena Parkar.