VEERAPPAN ,TERRORISTS BIOGRAPHY
VEERAPPAN ,TERRORISTS BIOGRAPHY #வீரப்பன் #வீழ்ந்ததும் #வாழ்ந்ததும் *9.முதல் வழக்கு!* இதற்கு முன் வீரப்பனுக்கும் மனிதர்களைச் சுட்ட அனுபவமில்லை. இப்போது கூட கருப்பணன் தான் பரமசிவத்தை சுடப் போகிறான் என வீரப்பன் முடிவு செய்து வைத்திருந்தார். எதிர்பாராத நேரத்தில் வீரப்பனே சுட வேண்டியதானது. அதனால், பரமசிவத்துக்கு சரியாக அடி பிடிக்கவில்லை. உயிர் தப்பிய பரமசிவம் தப்பியோடினார். வீரப்பன் விடாமல் துரத்திக் கொண்டே போனார். முருகண்டி மலையின் பாதி உயரத்திற்குப் போன பரமசிவம் கால் இடறிக் கீழே விழுகிறார். பக்கத்தில் போன வீரப்பனைப் பார்த்து பரமசிவம் பயப் படவில்லை. “இடு, இன்னொரு ஈடு இட்டு என்னைக் கொன்னு போட்டுரு...” என்று சொல்கிறார். அந்த இடத்தில் வைத்தே மீண்டும் ஒரு ஈடு கொடுத்து பரமசிவனின் கதையை முடிக்கிறார் வீரப்பன். “பரமசிவம் உயிருக்குப் பயந்தவன் இல்லை. அவன் தலையிலும், தோள் பட்டையிலும் இரட்டைச் சுழி இருக்கும். அது போலவே இரட்டை குண்டியும், இரண்டு உயிரும் பெற்றவன். அதனால தான் வீரப்பன் கூட ரெண்டு முறை சுட்டுத் தான் அவனைக் கொல்ல முடிஞ்சுது....” என்கிறார் இந்தக் கொலை நடந்த நேரத...