M.R.RADHA , FIRST STAGE PLAY,FILM ACTOR BORN 1907 APRIL 14 - 1979 SEPTEMBER 17
M.R.RADHA , FIRST STAGE PLAY,FILM ACTOR BORN 1907 APRIL 14 - 1979 SEPTEMBER 17 எம். ஆர். ராதா (ஏப்ரல் 14, 1907 – செப்டம்பர் 17, 1979) தமிழ்த் திரையுலகின் ஒரு முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரும் புகழ் பெற்ற மேடை நாடக நடிகருமாவார். பிறப்பு எம்.ஆர்.ராதா 1907 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 இல்[1][2] சென்னையில் பிறந்தார். மதராஸ் ராசகோபால் அவர்களின் மகன் ராதாகிருட்டிணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா. ராணுவவீரராகப் பணிபுரிந்த ராதாவின் தந்தை உருசிய எல்லையில் பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் மரணமடைந்தார். இவருக்கு ஜே.ஆர்.நாயுடு என்னும் ஜானகிராமன் என்ற அண்ணனும் பாப்பா என்னும் தம்பியும் இருந்தனர். [3] சிறுவயதில் தந்தையை இழந்த ராதா பள்ளிக்குப் போகாமல் பொறுப்பற்று சுற்றித்திரிந்தார். பிறகு தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இணைந்தார். பின்னர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட பல கம்பெனிகளில் பணியாற்றினார். குடும்பம் இராதாவிற்கு சரசுவதி, தனலெட்சுமி, பி.எஸ்.இராசம் என்னும் மனைவிகள் இருந்தனர். [4] நாடகத்தில் தன்னுடன் நடித்த பிரேமாவத...