Posts

Showing posts with the label Higgins

THE MAN WHO WALKED FIRSTLY IN SPACE ON 1965 JUNE 3

Image
THE MAN WHO WALKED FIRSTLY  IN SPACE  ON 1965 JUNE 3 ஜெமினி திட்டம் (Project Gemini) என்பது நாசாவின் இரண்டாவது மனித விண்வெளிப்பறப்புத் திட்டம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் திட்டமான இது, 1961-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1966-ஆம் ஆண்டில் நிறைவுபெற்றது. மெர்க்குரித் திட்டம் மற்றும் அப்பல்லோ திட்டங்களுக்கு இடையே இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது. ஜெமினி விண்கலமானது இரண்டு விண்வெளி வீரர்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. 1965-லிருந்து 1966-வரை பத்து பணிக்குழுக்கள் புவி தாழ்வட்டப்பாதையில் சென்று வந்தனர். சோவியத் ஒன்றியத்துடனான பனிப்போர் விண்வெளிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்கா முன்னிலை பெறுவதற்கு இத்திட்டம் வழிவகுத்தது. அப்பல்லோ திட்டத்தின் குறிக்கோளான - நிலவில் விண்வெளி வீரர்களை தரையிறக்கத்துக்குத் - தேவையான விண்பறப்புத் தொழில்நுட்பங்களைக் கட்டமைத்து மேம்படுத்துவதே ஜெமினி திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். நிலவுக்கு சென்று திரும்பும் அளவுக்கு அதிக காலம் விண்ணில் இருப்பதையும், விண்கலத்துக்கு வெளியில் பணிபுரிவதையும், விண்ணிலேயே இருவேறு விண்கலங்களை பொருத்தி...