ANTHA NAAL MOVIE 1954 DIALOGUE
ANTHA NAAL MOVIE 1954 DIALOGUE இப்போது இந்த தீர்மானத்தை எதிர்த்து பேசுவார் அதிகாரவர்க்கத்தின் ஒற்றன் ஒழிக பிரின்சிபாலின் ஒற்றன் ஒழிக தலைவர் அவர்களே ! பேசாதே வெளியே போ உங்கள் கூச்சலால் வெள்ளையனும் வெளியேறப்போவதில்லை நானும் வெளியே போகப்போவதும் இல்லை அமைதி.... அமைதி ... ஜனநாயக முறைப்படி எல்லோருக்கும் பேச உரிமை உண்டு அந்த உரிமை மிஸ்டர் ராஜனுக்கும் உண்டு ..உட்காருங்கள் .தலைவருக்கு வந்தனம் மாணவ சகோதர சகோதரிகளே என் விஷயத்தில் நீங்கள் காட்டிய இந்த வரவேற்புக்கு என்மனமார்ந்த வந்தனம் எப்பேர்ப்பட்ட வரவேற்பு உஷ்ணம் கொதிக்கும் வரவேற்பு உஷ்ணம் இல்லை என்றால் உடலில் ஜீவன் இல்லை என்பார்கள் இப்பேற்பட்ட வரவேற்பு யாருக்கு கிடைத்திருக்கிறது தெரியுமா ? பெரிய மனிதர்களுக்கு ,மிகப்பெரிய மனிதர்களுக்கு இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பாக மனிதன் வாழ ஒரு புது வழி காட்டிய ஒரு உத்தமனை ,அந்த கிரேக்க சாக்ரடீஸை ஒரு கோப்பை விஷத்தை கொடுத்து மந்திரோபச...