HISTORY OF ABRAHAM LINCOLN
HISTORY OF ABRAHAM LINCOLN ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கை வரலாறு ஆபிரகாம் லிங்கன் அறிமுகம் ஆபிரகாம் லிங்கன் சுய முன்னேற்றத்துக்கான அடிப்படைப் பண்புகளும், வெற்றிக்கான தகுதிகளும் ஒரு சேரப் பெற்றவர் ஆபிரகாம் லிங்கன். அவர் நற்பண்பு களைத் தேடிப் பெற்றவர், தகுதிகளை வளர்த்துக் கொண்டவர்.மரம் வெட்டுவதில் இருந்து, நாட்டை ஆள்கிறது வரை அத்தனைக்கும் பொருத்தமான ஆளாய் இருந்தார் அவர். அமெரிக்கக் குடியரசின் பதினாறாவது அதிபரான லிங்கன் சுயமாய் படித்து முன்னுக்கு வந்தவர். ஆபிரகாம் லிங்கன் பிறப்பு மிகவும் எளிமையான குடும்பத்தில் 1809-ஆம் ஆண்டு அவர் பிறந்தார். விறகுக் கட்டை அல்லது மிருகக் கொழுப்பை எரியவிட்டு அந்த வெளிச்சத்தில் படிப்பார். புத்தகங்களை இரவலாய் பெற்றுவர வெகு தொலைவு நடந்து சென்றிருக்கிறார்.படிப்பதில் அத்தனை ஆர்வம், சொந்த மாய் புத்தகம் வாங்க முடியாத அளவுக்கு வறுமை! அப்படிப் படித்துதான் அவர் வழக்கறிஞரானார். தான் காதலித்த பெண்ணை மணக்க முடியாத ஓர் அதிர்ஷ்க்கட்டை அவர். ஆபிரகாம் லிங்கன் திருமண வாழ்க்கை மரத்தாலான சிறு குடிசையில் பிறந்த லிங்கன் மேரிடாட் என்கிற ...