ABOUT BANUMATHI IN NADODI MANNAN
ABOUT BANUMATHI IN NADODI MANNAN நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர். பானுமதியின் பெருந்தன்மை இப்போது இன்னொரு முக்கியமான பகுதிக்கு வருகிறேன்... நடிக நடிகையர்கள் பற்றி எழுதப் போகிறேன் என்பதை நீங்களே அறிந்து கொண்டிருப்பீர்கள். நான் யாரையாவது முதலில் குறிப்பிட்டு எழுதினால் மற்றவர்கள் முதலில் குறிப்பிட்டவர்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்றோ, திறமை குறைந்தவர்கள் என்றோ கருதக்கூடாது... முதலில் நடிகையர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறேன். படத்தில் வந்த வரிசைக் கிரமத்திலே எழுத விரும்புகிறேன். திருமதி பி.பானுமதி அவர்கள் தான் படத்தில் முதலாவதாக வருகிறவர்கள்.... அவர்கள் நடிப்பைப் பற்றியும் ஒத்துழைப்பைப் பற்றியும் எழுதுவதற்கு முன் மூன்று ஆண்டுகட்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சியையும் இங்கு குறிப்பிடுவது அவசிய மென்று கருதுகிறேன். சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸாரின் ‘அலிபாபா’ படத்தில் நானும் திருமதி பானுமதி அவர்களும் நடித்துக் கொண்டிருந்த நேரம் ‘நாடோடி மன்னன்’ விளம்பரம் - ஜெண்டாவின் கைதி என்ற ஆங்கிலக் கதையின் தழுவல் என்று வெளியிடப்பட்டது. இரண்டு, மூன்று நாட்களுக்கு பிறகு பரணி பிக்சர்சாரி...