BOMBAY MUTINY 1946 FEBRUARY 18-20
BOMBAY MUTINY 1946 FEBRUARY 18-20 பம்பாய் கலகம் (Bombay Mutiny) அல்லது வேந்திய இந்தியக் கடற்படைக் கலகம் (Royal Indian Navy Mutiny) என்பது பிரித்தானிய இந்தியாவின் கடற்படையில் பணிபுரிந்த இந்திய மாலுமிகள் பெப்ரவரி 18-20, 1946 காலகட்டத்தில் நடத்திய முழு வேலைநிறுத்தம் மற்றும் கலகத்தைக் குறிக்கிறது. மும்பை கடற்படைத் தளத்தில் தொடங்கிய கலகம் விரைவில் பிற கடற்படைத் தளங்களுக்கும் கப்பல்களுக்கும் பரவியது. 78 கப்பல்கள் மற்றும் 20 கடற்கரைத் தளங்களைச் சேர்ந்த சுமார் 20,000 இந்திய மாலுமிகள் இக்கலகத்தில் ஈடுபட்டனர். மூன்று நாட்களில் கலகம் பிரித்தானியப் படைத்துறையால் அடக்கப்பட்டு விட்டாலும், இந்தியாவுக்கு விடுதலை வழங்க வேண்டும் என்று பிரித்தானியர்கள் முடிவு செய்ய இக்கலகம் முக்கியத் தூண்டுகோலாக இருந்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்து கைது செய்யப்பட்ட இந்திய போர்க்கைதிகள் சிலர் மீது பிரித்தானிய அரசு வழக்கு தொடுத்தது. பிரித்தானியப் பேரரசருக்கு எதிராகப் போர் புரிந்ததாக தேச துரோக மற்றும் அரச துரோகக் குற்றம் சாட்டப்பட்ட அக்கைதிகள் சார்பில்...