"தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் குறித்த மேற்பார்வை " " surveillance of AIDS in Tamilnadu"
"தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் குறித்த மேற்பார்வை " " surveillance of AIDS in Tamilnadu" எனக்கு ஒரு பலமான இன்ஸ்பிரேசனாக இருப்பவர்கள் இந்த படத்தில் உள்ள மூன்று பேரும்... Dr. நிர்மலா Prof. Dr. சுனிதி சாலமன் திரு.வீரப்பன் ராமமூர்த்தி சரி இவர்கள் மூவரும் அப்படி என்ன சாதித்தார்கள் ? அதற்கு நாம் 1986ஆம் வருடத்திற்குச் செல்ல வேண்டும். அப்போது 32 வயதான Dr.நிர்மலா அவர்கள் மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் நுண்ணியிரியியல் (micro biology) மேல்படிப்பு படிக்கும் மருத்துவர். Dr.சுனிதி சாலமன் இவரது துறை பேராசிரியர். பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஒரு ஆராய்ச்சி செய்து சமர்ப்பிக்க வேண்டும் இதை thesis / dissertation என்பார்கள். Dr.சுனிதி தனது மாணவிக்கு கொடுத்த தலைப்பு "தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் குறித்த மேற்பார்வை " " surveillance of AIDS in Tamilnadu" இந்த டாபிக் கொடுக்கப்பட்ட போது இந்தியாவில் அதுவரை அதிகாரப்பூர்வமாக ஒரு எய்ட்ஸ் நோயாளி கூட கிடையாது. நம்ப முடிகிறதா? அதாவது சுமார் 80 க...