MILK BECAME DANGER NOWADAYS
MILK BECAME DANGER NOWADAYS சுற்றுப்புறச்சூழல் சீர்கேட்டின் காரணிகளில் ஒன்று தனிமனிதர்களின் பேராசை. பொருளாதார வளர்ச்சியை எந்த வழியிலும் எட்ட நினைக்கும் மனிதர்களின் பார்வைக்கு மனிதர்கள், மற்ற விலங்குகள் என்ற வித்தியாசமில்லை. சென்னையில் பால் அருந்திவரும் லட்சக்கணக்கான மக்கள், தாங்கள் விஷம் கலந்த பாலை அருந்திக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல் அருந்திவருகின்றனர் என அதிர்ச்சி தருகிறார் கால்நடை மருத்துவர் சுதாகர். எந்த நாட்டில் தடை செய்யப்பட்ட பொருளும் இங்கு உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள கடையில் எளிதாக கிடைக்கும். நாள்தோறும் மக்கள் புதுப்புது நோய்களுக்கு ஆளாகி மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருவது இதன் காரணமாகத்தான். இந்த வரிசையில், மாடுகளிடமிருந்து அதிகளவு பாலை சுரக்க செய்வதற்காக கொடுக்கப்படும் ஹார்மோன் மருந்தால், மாடுகளுக்கும் அதன் பாலை அருந்தும் மக்களுக்கும் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்னைகள் எழலாம் என எச்சரிக்கிறது மருத்துவ உலகம். மாட்டிற்கு தரப்படும் ஆக்சிடோசின் என்ற அந்த மருந்து, இந்தியாவில் பரவலாக பயன்படுத்த தடை செய்யப்பட்டிருப்பது என்பதும் கூடுதல் அதிர்ச்சி. ...