Tuesday 10 April 2018

SLAVERY IN ROMAN TERRITORIES



SLAVERY IN ROMAN TERRITORIES



ரோம சாம் ராஜ்ஜியத்தின் பொருளாதாரத் தூணாக அடிமைகள்பதினாறாம் நூற்றாண்டின் ஒரு காட்சி. ஒரு கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருக்கிறது. அதன் தளத்தில் நான்கைந்து பேர் மது அருந்திக் கொண்டிருக்கிறார்கள். உற்சாகத்திலிருக்கும் அவர்கள் இந்த முறை ஏற்றிச் சென்றுகொண்டிருக்கும் சரக்குகளில் எவ்வளவு லாபம் கிட்டும் என்று கணக்கிட்டு மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். சரக்குப் பகுதியின் கதவைத் திறந்து கொண்டு ஒருவன் வருகிறான். தலைவன் போல் இருப்பவனிடம் சரக்குகளில் சில கெட்டுப்போய் விட்டதாகக் கூறுகிறான்.

உற்சாகம் சட்டென்று குறைகிறது. தலைவன் வந்து சொன்னவனிடம், கெட்டுப்போன சரக்கை உடனே கடலில் எறிந்து விடச் சொல்கிறான், மேலும் அவைகள் இருந்தால் நன்றாக இருக்கும் சரக்குகளும் சேர்ந்து கெட்டுபோய் நமக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்கிறான். உடனே அந்த கப்பலின் சரக்கு உள்ள பகுதியின் இயந்திரக்கதவு பெரியதாக வாய் பிளந்து திறக்கிறது. கெட்டுப்போன சரக்குகள் மளமளவென கடல் நீரில் விழுகின் றன. அலைபுரண்டு ஆர்ப்பரிக்கும் அந்த கடல் முழுதும் சரக்குகள் மிதக்க ஆரம் பிக்கின்றன்.

ஒரு நிமிடம் மூச்சை நன்றாக இழுத்து விட்டுக் கொள்ளுங்கள். இங்கே இவ்வளவு நேரம் சரக்கு என்று சொல்லப்பட்டது அவ்வளவும். உடல்கள். மனித உடல்கள். அடிமைகளாகிப்போன கருப்பின மனித உடல்கள். ஆம்! அது கருப்பின அடிமைகளை ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல் லும் சரக்கு கப்பல். வழியில் நோய் வாய்ப்பட்டு இறந்துபோன அடிமைகளைத் தான் நடுக்கடலில் கொட்டினார்கள். இப்படியான ஒரு காட்சி அடிமைகளைப் பற்றிய ஆங்கில நாவல் ஒன்றில் நாவலாசிரியர் விவரிக்கிறார்.


உண்மை அத்தனையும் உண்மை ஆறாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரை அடிமைகளின் வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. உலக வியாபாரத்தில் அவர்கள் ஒரு பொருளாகவே (COMMODITY) கருதப்பட்டு வந்தார்கள். மெல்லிய இதயமும், இரக்ககுணமும் உள்ளவர்கள் இதைப்படிப்பதை விட்டு தவிர்த்துக் கொள்ளுங்கள். இதயம் கணத்துப்போய் விடும் சில பகுதிகளை நான் தவிர்த்துவிட்டேன். சில நாட்களுக்கு தூக்கம் இழக் கும் அடிமைகளைப்பற்றிய சம்பவங்களை நான் விலக்கி விட்டேன். ஆம் மனித சமுதாயம் அடிமைகள் என்னும் ஒரு கூட்டத்தை எப்படி எல்லாம் பயன் படுத்தி னார்கள், நடத்தினார்கள் என்று முழுமையாக நீங்கள் அறிந்தால் மேற்சொன் னவை தான் உங்களுக்கு நடக்கும்.

பெண் அடிமைகளை நம் மனித சமுதாயம் தேர்ந்தெடுத்த விதம், விற்ற விதம், பயன்படுத்திய விதம் அறிந்தால் நெஞ்சு பிளந்து போகும் அளவுக்கு சோகம். அடிமைகள் மனிதர்களுக்கு இயற்கையாக உள்ள பசி, சிரிப்பு, உறக்கம், அழுகை, ஆத்திரம், கோபம் இவையெல்லாம் நீக்கப்பட்ட உணர்ச்சியற்ற வெறும் உயிருள்ள அமைப்பு. மின்சாரம் பொருத்தப் படாத இயந்திரங்கள்.

ஆணாயினும், பெண்ணாயினும் காமஇச்சைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட எதிர்ப்பில்லாத உடல்கள். மன்னர்களின் வாரிசுகள் வைத்து விளையாடிய அசையும் பொம்மைகள். உயிர் வாழ ஒரு வாய் உணவுக்கு எஜமானர்கள் உத்தரவிடும் வரை நிறுத்தாமல் சகல உறுப்புகளையும் இயக்கி உழைக்கும் மனிதர்கள். புராதன காலத்திலிருந்து தன்னைப்போல அடிமைகளும் ஒரு மனிதன் தான் என்பதை மனிதன் மறந்து போன மனிதர்கள். இரக்கம், அன்பு, பரிதாபம் எதுவுமே மனிதர்களிடமிருந்து காட்டப்படாமல் போன மனிதர்கள்.

அடி மைகள் கடந்த நூற்றாண்டுகளில் உலக வணிகத்தில் தானியங்கள், துணிகள், உலோகங்கள் போல் கருதப்பட்ட ஒரு விற்பனைப்பொருள். அந்த காலங்களில் ஆர்ப்பரிக்கும் கடலில் பல ஆயிரம் டன் எடையுள்ள கப்பலைத் தங்கள் கரங்க ளால் துடுப்பிட்டவர்கள். எந்த மன்னனோ யாருடனோ போரிடும் போது சம்பந்த மில்லாமல் தங்கள் உயிரைவிட்டவர்கள். சிந்திக்கவே வாய்ப்பளிக்க முடியாமல் போன நடமாடும் சிதைந்த சிலைகள். தங்கள் செவிகளை எஜமானின் உத்தரவு க்கு மட்டுமே பயன்படுத்தியவர்கள். இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.

அடிமைகளைப் பொறுத்த வரையில் இன்னும் இரண்டு கைகள் இருந் தால் இன்னும் ஒரு வாய் உணவு. அடிமைகளுக்காக அந்த கால அரசாங் கங்கள் போட்ட சட்டங்களை அறிந்தால் வேதனை நெஞ்சை பிளக்கும். உதாரணத் திற்கு ஒரு அடிமைத்தாய்க்கு பிறந்த குழந்தையும் ஒரு வாழ்நாள் முழுவதும் அடிமை யாகவே பதிவு செய்யப்பட்டன. 
அடிமைகள் முதன்முதலில் சுமேரிய நாகரீகத்தில் இருந்ததாகத் தெரிகிறது. பெரும்பாலும் எல்லா புராதான எகிப்து, சீனா, இந்தியா, அக்கடியன், சிரியா, கிரீஸ், ரோம, கொலம்பிய (அமெரிக்கா), இஸ்லாமிய சாம்ரா ஜ்ஜியங்களில் இருந்திருக்கிறார்கள். 
அடிமைகள் பல வகையாக இருக்கிறார்கள்

கடன்பட்டதற்கான அடிமைகள், போரில் பிடிபட்ட அடிமைகள் மற்றும் குழந்தைப் பருவத்திலேயே கைவிடப்பட்ட அடிமைகள். ஒரு காலத்தில் அடிமையாக இருந்த வர்களின் உண்மைக் கதைகளைக் கேட்டீர்களானால் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது. உதாரணத்திற்கு, ‘நான் அந்த பண்ணை வீட்டிலிருந்த போது அங்கிரு ந்த குதிரைகளுக்கும், வளர்ப்பு நாய்களுக்கும் என்னைவிட நல்ல உணவு கிடைத் தன.

1945 ல் மரத்தில் குத்தி வைத்திருந்த கோடாலி நழுவி என் காலில் விழுந்து ரத்தம் பீறிட்டது. கொஞ்சும்போது கீறிவிடுகின்றதென்று தன் நாய்க்கு நகம் வெட்ட செல்லும் எஜமானியம்மாள் ஒரு பழைய துணியை தூக்கி என்னிடம் எறிந்து ரத்தத்தைத் துடைத்துவிட்டு சீக்கிரம் வேலையை முடிக்கச் சொல்லிவிட்டு குதிரை வண்டியேறி சென்றுவிட்டார்’ என்று அமெரிக்காவில் அடிமையாய் இருந்த ஒருவர் கூறி இருக்கிறார்.

இன்னொருவர், ‘எனக்கு அந்த தட்டின் மீது முதலில் வெறுப்பு வந்தது. ஏனென்றால், எஜமானால் எனக்கு உணவுண்ண கொடுக்கப்பட்ட என் அலுமினிய தட்டு அவ்வப்போது எஜமானியம்மாவின் கோபத்திற்காளாகி நசுங்கி இருக்கும். ஆனால், ரெமியின் அந்தத்தட்டு மிகவும் அழகான பூப்போட்ட அமைப்பில் இருக்கும். உயர்ந்த பீங்கானால் செய்யப்பட்டு கனமாக இருக்கும். ரெமி அதில் உணவுண்ணும் அழகை ரசிப்பேன். பின் நான் அந்த தட்டை விரும்ப ஆரம்பித்தேன். அந்த தட்டை தொடும் சந்தர்ப்பத்திலெல் லாம் தட்டை ரசிப்பேன். ஆம் தட்டை மட்டுமே விரும்பினேன். ஏனென்றால், ரெமி அடிமையான என்னைவிட சிறந்த ஒரு நாய் தானே’. என்றார்.


இன்று செழிப்பாக இருக்கும் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளை கருப்பின அடிமைகளின் கைகள் தான் உருவாக்கின. காரியங்கள் முடிந்தவுடன் வழக்கம் போல் அடிமைத்தனத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து நல்ல பெயர்பெற்றுக்கொண்டு தடை செய்தனர். இதே எதிர்ப்பு சில நூற் றாண்டுகளுக்கு முன்னால் இருந்தபோது அடிமைத்தனத்தற்கு சாதகமாக சட்டங் கள் போட்டு பல அடிமைகளை நரகத்தில் தள்ளி கொன்று போட்டார்கள். பல புராதன கிரீஸ் அடிமைகள் தூரத்திலுள்ள மைசினியன் கிரீஸுக்கு கொண்டு செல்லப்பட்ட சரித்திரப்பதிவுகள் இருக்கின்றன.

ஆனால் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. அவர்கள் நகரங்களை நிர்மாணிப்பதில் சமூகத்தையும், பொருளாதாரத்தையும் சார்ந்திருந்தார்கள். புரா தன கிரீஸில் அடிமைகள் இன்றியமையாத சாதனமாக இருந்தார்கள். புராதன இஸ்ரேல் (இஸ்லாமுக்கு முன்) மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தில் ஒரு அங்கமா கவே விளங்கினார்கள்.

ஏதென்ஸில் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒரு அடிமையை வைத்திருந்தார்கள். அந்த காலங்களில் அடிமைகளை வைத்திரு ந்தது இயற்கையான செயலாக மட்டு மல்லாமல் அது அத்தியாவசியமானதாக வும், கௌரவத்தின் அடையாளமாகவும் இருந்தது. சாக்ரடீஸின் புகழ்பெற்ற வசனம் ஒன்றுதான் அடிமைகளின் விருப்பு வெறுப்புகளை முதல் தடவையாக சரித்திரத்தில் பதிவு செய்திருக்கிறது.
ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் இரண்டு முறை மெஸ்ஸினியன் போர் நடந்ததால், பொருளாதார சுமையை சமாளிக்க ஸ்பார்டன் கள் “ஸ்யூடோ” அடிமைகளைக் குறைத்தார்கள் (குறைத்தார்களென்றால் எப்படி? கற்பனை செய்து கொள்ளுங்கள்). இந்த நடவடிக்கைக்கு “ஹிலோட்ரி” என்று பெய ரிட்டிருந்தனர். இந்த தொடர்ந்த ஹிலோட்ரியால் புரட்சி ஏற்பட்டது. ஸ்பார்டன்கள் ஸ்யூடோக்களின் பகுதிகளைக் கட்டுப்படுத்தி எல்லைக் கோடு வகுத்து தடுத்தனர். ஸ்பார்டன் தலைவர்கள் ஸ்யூடோக்களுக்கு ஆயுதப்படைப் பிரிவில் வேலை கொடுத்தால் அவர்களின் அபரிதமான எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று திட்டமிட்டனர்.

புராதன கிரேக்கத்தில் 30% சதவிகித மக்கள் அடிமைகளாக இருந் திருக்கிறார்கள். ரோமர்களுக்கு பண்ணைகளிலும், வீட்டு வேலை செய்யவும் தேவைப்பட்ட அடிமைகளை கிரேக்கத்திலிருந்தும், பொனிஷியனிலிருந்தும் இறக் குமதி செய்துகொண்டார்கள். மேலும் நாட்டின் வளர்ச்சிக்காக ஐரோப்பாவிலிருந் தும் மெடிட்டரேனியன் பகுதியிலிருந்தும் அடிமைகளை வரவழைத்திருந்தனர். இதனால் சிறுபான்மையினராக ஆகிப்போன அவர்களால் அடிக்கடி கலவரங்கள் தோன்றின.

அதில் ஸ்பார்டகஸால் நடத்தப்பட்ட மூன்றாம் செர்விலி போர் மிக வும் புகழ் வாய்ந்ததும், மோசமானதுமாகும். அந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்த நாடுகளும் அடிமைகளை பணிகளுக்காகவும், பொழுதுபோக்கு (காம இச் சை மற்றும் கிளாடியேட்டர் போன்ற விளையாட்டுகள்) களுக்காகவும் பயன் படுத் தினார்கள். எந்த அடிமையாவது தப்பித்துப் போனால் மற்ற அடிமைகளுக்கு பாடம் புகட்டும் வண்ணம் கொடூரமான முறையில் கொன்றார்கள். ரோம சாம் ராஜ்ஜியத்தின் பொருளாதாரத் தூணாக அடிமைகள் விளங்கினார்கள்.











செல்டிக் பழங்குடியினரை ரோமர்கள் அடிமைகளாக வைத்திருந்தனர். கலவரங்களாலும், போரினாலும் கைப்பற்றப்பட்டவர்களை ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்த வரலாறுகள் இருக்கின்றன. புகழ் பெற்ற செயிண்ட் பாட்ரிக் கூட கைப்பற்றப்பட்டு விற்கப்பட்ட ஒரு அடிமைதான். அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற அதிகமானோர் கிறிஸ்தவர்களாக மதம் மாறியதாக “லெட்டர் டூ தி சோல்ஜர்ஸ் ஆஃப் கோரோடிகஸ்” என்ற புத்தகம் தெரிவிக்கிறது. வைக்கிங்குகள் ஐரோப்பாவின் மீது படையெடுத்தபோது நிறைய அடிமைகளை பிரிட்டிஷ் தீவுகளிலிருந்தும், கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும் கைப் பற்றினார்கள். அப்படி கைப்பற்றிய அடிமைகளை வைக்கிங்குகள் “த்ரால்ஸ்” (THRALLS) என்ற பெயரில் பணிக்கு வைத்துக்கொண்டு, பெரும்பான்மையான அடி மைகளை பைஸாந்தியர்களுக்கும், இஸ்லாமிய சந்தைகளிலும் விற்றுவிடுவார் கள். ஐரோப்பாவின் மேற்கில் பிரிட்டிஷ், ஐரிஷ் மற்றும் ஸ்காட்டிஷ்களும், கிழக் கில் ஸ்லாவ்களும் பெருகி இருந்தனர். பதினோராம் நூற்றாண்டுகளில் வைக்கிங் குகளின் அடிமை வியாபாரம் படிப்படியாக குறைந்தது. வைக்கிங்குகள் ஐரோப்பா வில் எந்த பகுதிகளைக் கைப்பற்றினார்களோ அங்கேயே அந்த இன மக்களுடன் கலந்து தங்கிப் போனார்கள். முதலில் செர்ஃப் (சுய நபர்கள்) களாக இருந்த அவர் கள் நாளடைவில் கிறிஸ்துவர்களாக மாறிப் போனார்கள்.
புராதன ஸ்பெயினும், போர்சுகலும் அடிக்கடி முஸ்லீம்களுடனும், கிறிஸ்தவர்களுடனும் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அல் அண்டலூசிலிருந்து தொடர்ந்து ஐபீரிய கிறிஸ்தவ குடியாட்சிகளின் மீது படை எடுத்து அங்கிருந்து கொள்ளைப் பொருட்களுடன் அடிமைகளையும் பிடித்து வந் தார்கள். 1189 ல் அல்மொஹதின் கலீஃபா லிஸ்பனை எதிர்த்து போரிடும் போது 3000 பெண், குழந்தை அடிமைகளை கைப்பற்றிச் சென்றார். அதேபோல் 1191 ல் கார்டோபாவின் கவர்னர் சில்விஸில் பகுதியில் போரிடும் போது 3000 கிறிஸ்தவ அடிமைகளைக் கைப்பற்றினார். பைஸாந்திய,ஓட்டோமான் போரிலும், ஓட்டோ மான், ஐரோப்பிய போரிலும் மிகப்பெரிய அளவில் அடிமைகள் கைப்பற்றப்பட்டு இஸ்லாமிய சந்தைகளில் விற்கப்பட்டார்கள். லிபாண்டோ போரில் கடலில் படகு களில் கைப்பற்றப்பட்ட ஏறக்குறைய 12,000 கிறிஸ்தவ அடிமைகள் ஓட்டோமான் பேரரசால் விடுதலை செய்யப்பட்டனர். கிறிஸ்தவர்களும் போரில் கைப்பற்றப் பட்ட முஸ்லீம் அடிமைகளை விற்றிருக்கிறார்கள். மால்டாவின் மன்னர்கள் கடல் கொள்ளை மூலம் முஸ்லீம் கப்பல்களைத் தாக்கி நிறைய அடிமைகளை கொள் ளையடித்திருக்கிறார்கள். வட அப்பிரிக்கா, துருக்கி நாடுகளுக்கு விற்கப்பட்டு வந்த அவர்களின் அடிமைச்சந்தை பதினெட்டாம் நூற்றாண்டு வரை மிகவும் புகழ் பெற்றது. அந்த காலகட்டத்தில் சுழற்சி முறையில் ஒரு கப்பலை இயக்குவதற்கு ஆயிரம் அடிமைகள் தேவைப்பட்டனர்.
பதினைந்தாம் நூற்றாண்டுகளில் போலந்தில் அடிமைத்தனம் தடை செய்யப்பட்டிருந்தது. 1588 ல் லிதுவேனியாவிலும் தடை செய்யப்பட்டு மறுபரிசீலனையாக அடிமைகள் நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தனர். 1679 ல் ரஷ்யாவில் விவசாய அடிமைகளாய் இருந்தவர்கள் பணியாட்களாக மாற்றப்பட்டனர். 1723 வரை ரஷ்யாவில் சிறு அளவிலிருந்த அடிமைகள் பீட்டரால் வீட்டு வேலைக்கு மாற்றப்பட்டனர். போலந்து, ரஷ்யாவிலிருந்து தப்பிய அடிமைகள் ஒன்றாக இணைந்து எவருக்கும் கட்டுப்படாத “கொஸாக்கு” (COSACK) களாக மாறினர். போரில் பிடிபட்ட, கடன் செலுத்த முடியாத, தானாகவே முன்வந்த அடிமைகள் பிரிட்டனில் இருந்தார்கள். அயர்லாந்தும், டென்மார்க்கும் கைது செய்யப்பட்ட ஆங்கிலோ சாக்ஸன் மற்றும் செல்டிக் அடிமைகளை விற்றுவந்தனர். அடிமைகளுக்கும் இஸ்லாமிய உலகுக் கும் நிறைய தொடர்புகள் இருந்தன. வட ஆப்பிரிக்கா மற்றும் ஐபீரிய தீபகற்பத் தின் மீது படையெடுத்த போது மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து பெருவாரியான அடிமைகளை இறக்குமதி செய்தார்கள். இஸ்லாமிய சட்டமும், கிறிஸ்துவ, யூத, சபிய, மாஜிய சட்டங்களும் மனிதனை மனிதன் அடிமைப்படுத்து வதை தடை செய்தன. ஆனால், அடிமைகள் போரில் கைப்பற்றப்பட்டால் சட்டம் அவர்களை ஒரு பொருளாக கருதி விலக்கி விடுகிறது. முஸ்லீம்களாக மதம் மாறிவிட்ட அடிமைகளை முஸ்லீம்கள் விடுதலை செய்து வந்தார்கள். மாறவி ல்லை என்றாலும் உரிமையாளர்கள் நல்லுபதேசம் செய்தார்கள். ஆனால், பொதுவாக இஸ்லாமியர்கள் அடிமைகளை மதம் சொன்ன அடிப்படையில் நடத்தவில்லை.
அடிமைகள் வியாபாரம் யூதர்களிடத்தில் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்தே இருந்தது. யூத வியாபாரிகள் அடிமைகளை கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும், கிறிஸ்துவ ஸ்பெயினிலிருந்தும் அல் அண்டலூஸ் அடிமைச்சந்தைக்கு கொண்டு வந்து மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கு விற்று வந்த னர். ஆங்கிலத்தில் ஸ்லேவ் என்று சொல்லப்படும் அடிமைகளைக் குறிக்கும் சொல் ஸ்க்லபோஸ் (SKLABOS) என்ற பதத்திலிருந்து வருகிறது. 1100 லிருந்து 1500 வரை ஐரோப்பிய அடிமைகள் வியாபாரம் மேற்கத்திய மெடிட்டரேனியன் இஸ்லா மிய நாடுகளையும், கிழக்கு கிறிஸ்துவ, முஸ்லீம் நாடுகளையும் சார்ந்திருந்தது. பனிரெண்டாம் நூற்றாண்டுகளில் வெனிஸ் மற்றும் ஜினோவா நகரங்கள் கிழக்கு மெடிட்டரேனியனையும், பதிமூன்றாம் நூற்றாண்டுகளில் கருங்கடலையும் சார் ந்து வியாபாரம் செய்தன. அவர்கள் ஸ்லாவிக், பால்டிக், ஜியார்ஜிய, துருக்கிய அடிமைகளை இஸ்லாமிய நாடுகளுக்கு விற்று வந்தனர். 1440 லிருந்து பதினெட் டாம் நூற்றாண்டு வரை லட்சக்கணக்கான உக்ரைன் நாட்டு அடிமைகள் துருக்கி நாட்டுக்கு விற்கப்பட்டனர். டடார் (TATOR) எனப்படுபவர்கள் 1575 ல் 35,000 பேரையும், 1676 ல் 40,000 பேரையும், 1688 ல் 60,000 பேரையுமான உக்ரைனிய அடிமைகளை பிடித்து சந்தைகளில் விற்றனர். 1864 ல் தடை செய்யும் வரை ஐந்நூறு ஆண்டுக ளாக ரோமில் சில அடிமைகள் இருந்தனர். பதினாறாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய கடற்கொள்ளையர்கள் குறிப்பாக அல்ஜீரியன்கள் ஓட்டோமான் பேரரசின் ஆதரவுடன் ஐரோப்பிய கடலோரங்களில் ஆயிரக்கணக்கான அடிமைகளைப் பிடித்து சந்தையில் விற்றுவந்தனர். சில ஐரோப்பிய நாடுகள் பணவசூல் செய்து தங்கள் அடிமைகளை விலை கொடுத்து மீட்டனர்.
பதிமூன்றாம் நூற்றாண்டுகளில் மங்கோலியர்கள் படையெடுப்பின் போது ஏராளமான அடிமைகளை கையகப்படுத்தி திறமையான பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பிரித்து கரகோரம் அல்லது சராய் பகுதிகளு க்கு அனுப்பினர். பெரும்பான்மையானவர்களை நோவ்கோராட் சந்தைக்கு ஏற்று மதி செய்தனர். அமெரிக்க காலனிய நாடுகளில் புகையிலை, பருத்தித் தோட்டங்க ளில் அடிமைகள் வேலை செய்திருக்கிறார்கள். உலகில் மெடிட்டரேனியன் பகுதி தான் அடிமைச்சந்தைக்கு மிகவும் புகழ் வாய்ந்தது. பத்தாம் நூற்றாண்டுகளில் ஜெர்மனி அளவுக்கதிகமாக “ஸ்லாவ்” இன அடிமைகளை பிடித்து வைத்திருந்தது. அவர்களின் இனப்பெயரே ஸ்லேவாக ஆங்கிலத்தில் ஆகியது. ஒரு கட்டத்தில் அடிமைகளை கருங்கடல் ஒர நாடுகளில் இறக்குமதி செய்வதே ரஷ்யாவின் வரு மானமாக இருந்தது. மெடிட்டரேனியனின் தென்பகுதியில் அரபுகளின் பேரரசுகள் இருந்ததால் சஹாராவில் ஸ்வீலா என்ற நகரில் 700 அடிமை வியாபாரிகள் இருந் தனர். 


பழங்காலத்தில் மனிதசமுதாயத்தில் இன்றியமையாமல் போனவர்கள் அடிமைகள். புராதன காலத்தில் எல்லா இனமக்களும் அடிமை களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் கிடைப்பது மிக சுலபமாக இருந் தது. போர்கள் இன்றியமையாததாக இருந்த காலங்களில் தோற்றவர்களிடம் இரு ந்து பிடிபட்ட மனிதர்களில் பலசாலிகளை அடிமைகளாக தேர்ந்தெடுத்துக் கொண்டு மீதியுள்ளவர்களை கொன்றுவிடுவார்கள். கடற்கொள்ளையர்கள் ஒரு பொருள் போல அடிமைகளையும் கொள்ளையடித்தனர். கடும் குற்றம் செய்தவர் கள் அடிமைகளாக்கப்பட்டனர். கடனைத் திருப்பி செலுத்த முடியாதவர்களும் அடிமைகளாக்கப்பட்டனர். வறுமையில் இருந்தவர்கள் தங்கள் குழந்தைகளை அடிமைகளாக விற்றுவிட்டனர். சில எஜமானர்கள் அடிமைகளை குடும்பமாக இருக்க விடமாட்டார்கள். அடிமைகளுக்கென்றே சட்டங்கள் இயற்றிய அரசாங்கங் கள் இருந்தன.

No comments:

Post a Comment