Monday 23 April 2018

JEYAMOHAN ,WRITER BORN 1962 APRIL 22





JEYAMOHAN ,WRITER 
 BORN 1962 APRIL 22





ஜெயமோகன் (Jeyamohan), பிறப்பு: 22 ஏப்ரல் 1962) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார். இவரது புனைவுகளில் மனித மனதின் அசாதாரணமான ஆழங்களும் நுட்பங்களும் வெளிப்படும்

வாழ்க்கைக் குறிப்புகள்[1]

ஜெயமோகனின் தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. இவருடைய தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு.



ஜெயமோகன் 1962 ஏப்ரல் 22 ஆம் தேதி மலையாள நாயர் குடும்பத்தில் பிறந்தார்[2]. இவர் சிறு வயதில் பத்மநாபபுரத்திலும் கன்னியாகுமரி அருகே கொட்டாரம் ஊரிலும், பின்னர், முழுக்கோடுவிலும் தொடக்கப்பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் பதினொன்று வகுப்பு வரை அருமனை நெடியசாலை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1978 ல் பள்ளிப்படிப்பு முடித்து, முழுக்காட்டில் இருந்தபொழுது மலையாளப் புதினங்களுக்கு அறிமுகம் ஆனார்.

பின்னர் 1980ல் நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்ந்தார். ஆனால் 1982 இல் கல்லூரிப் படிப்பை முடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இவருடைய நெருங்கிய நண்பர் ராதாகிருஷ்ணன் என்பவரின் தற்கொலையால் மன அமைதி இழந்தார். அக்காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் வேரூன்றிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொடர்பினால் ஆன்மிக நூல்களில் நாட்டம் ஏற்பட்டது என்று ஜெயமோகன் கூறுகிறார். இவருக்குத் துறவியாக வேண்டுமென்ற கனவும் உருவாகியது. இருவருடங்கள் பலவாறாக அலைந்தும், திருவண்ணாமலை, பழனி, காசி ஆகிய ஊர்களில் இருந்தும், பல சில்லறைவேலைகள் செய்தும் வாழ்க்கை நடத்தியுள்ளார்.

1984ல் கேரளத்தில் காசர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைக்குச் சேர்ந்தார். அப்பொழுது தொழிற்சங்கத்தின் பெரிய கம்யூனில் தங்கியிருந்தார். அச்சமயம் இடதுசாரி இயக்கங்களின் மீது ஆர்வமும் அவற்றிற்கு பங்களிக்கவும் வாய்ப்புகள் ஏற்பட்டது. அங்கிருந்த நூலகங்களில் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்த இவர், இலக்கிய, கோட்பாட்டு விவாதங்களில் ஈடுபடும் பக்குவம் பெற்றார். இக்காலகட்டத்தில் இவருடைய பெற்றோரின் தற்கொலையால் மிகவும் நிம்மதியிழந்து தீவிரமாக அலைச்சலுக்கு ஆளானார்.



இவர் 1991 ஆம் ஆண்டு ஆகஸ்டில் அருண்மொழி நங்கை என்னும் வாசகியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இரண்டு குழந்தைகள், ஒரு ஆண், ஒரு பெண் . ஜெயமோகன் 2010 வரை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லில் பணியாற்றினார். நாகர்கோயிலில் வசிக்கிறார்.
எழுத்துலக அறிமுகம்

அம்மா விசாலாட்சி அவர்களுக்கு தன்னை எழுத்தாளன் ஆக்கிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்கிறார் ஜெயமோகன்,இலக்கிய வாசகியான அவர் மூலம் வாசிப்பு ஆர்வம் வந்தது , 12 வயது முதலே ரத்னபாலா போன்ற பத்திரிக்கைகளில் எழுத துவங்கினார்.



1985ல் எழுத்தாளர் சுந்தர ராமசாமி அறிமுகமானார். அவர் ஜெயமோகனை இலக்கியத்துக்குள் ஆற்றுப்படுத்தினார். அவரை எழுதலாம் என்று தூண்டி ஊக்கமூட்டினார். இவருடைய எழுத்துக்கள் அதிகமும் அவருக்கே திருப்பி அனுப்பப்பட்டன. தான் ஒரு மனநோயாளிக்குரிய தீவிரத்துடன் எழுதினேன் என்கிறார்[3]. ’கைதி’ என்ற கவிதை 1987ல் கட்டைக்காடு ராஜகோபாலன் நடத்திவந்த கொல்லிப்பாவை இதழில் வெளியாயிற்று. 1987 ல் கணையாழியில் நதி அசோகமித்திரனின் சிறு குறிப்புடன் வெளியாயிற்று. அது இவருடைய எழுத்துக்கு ஒரு தொடக்கம். தொடர்ந்து நிகழ் இதழில் படுகை, போதி முதலிய கதைகள் வந்து கவனிக்கப்பட்டன.

1988ல் எழுதிய ரப்பர் என்னும் புதினத்தை 1990ல் அகிலன் நினைவுப்போட்டிக்காக சுருக்கி அனுப்பி, அதற்கான விருதைப் பெற்றார். தாகம் என்னும் தலைப்பில் தமிழ் புத்தகாலயம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

1998 முதல் 2004 வரை "சொல்புதிது" என்ற சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார்.



நாராயணகுருவின் மரபில் வந்த குரு நித்ய சைதன்ய யதியுடனான தொடர்பு மூலம் ஆன்மிகமான ஈடுபாடு அடைந்தார். மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவை தன் ஆசிரியராகவும் முன்னோடியாகவும் குறிப்பிடுகிறார்.

ஜெயமோகன் மலையாளத்திலும் எழுதுகிறார். மாத்ருபூமி, பாஷாபோஷினி இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் கரன்ட் புக்ஸ் பதிப்பாக நெடும்பாதையோரம் என்ற பேரில் வெளியாகியுள்ளன.

தமிழில் நூறுநாற்காலிகள் என்ற பெயரில் எழுதிய கதையின் மொழிபெயர்ப்பு நூறு சிம்ஹாசனங்கள் என்ற பெயரில் மலையாளத்தில் வெளிவந்துள்ளது
அமைப்புகள்

ஜெயமோகனின் வாசகர்கள் இணைந்து விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் இலக்கிய அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். 2010 முதல் ஆண்டுதோறும் சிறந்த மூத்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கிறது இவ்வமைப்பு. விருதுவிழா இலக்கியக்கூடலாக கோவையில் நிகழ்கிறது. விஷ்ணுபுரம் விருது தமிழின் முக்கியமான விருதாகக் கருதப்படுகிறது. அவரது புகழ்மிக்க நாவலான விஷ்ணுபுரம் பெயரால் அமைந்தது இவ்விருது

குருநித்யா ஆய்வரங்கம் என்னும் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் இலக்கியச் சந்திப்புகளை ஊட்டியில் நிகழ்த்திவருகிறார்கள் ஜெயமோகனின் வாசகர்கள்.


திரைப்படங்கள்

திரைப்படத்துறையிலும் பணியாற்றி வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்[4]. 2006இல் வெளிவந்த கஸ்தூரிமான் இவர் திரைக்கதை எழுதிய முதல் படம்.

    கஸ்தூரிமான் தமிழ் 2005
    நான் கடவுள் தமிழ் 2008
    அங்காடித்தெரு தமிழ் 2010
    நீர்ப்பறவை தமிழ் 2012
    ஒழிமுறி மலையாளம் 2012
    கடல் தமிழ் 2013
    ஆறு மெழுகுவர்த்திகள் தமிழ் 2013
    காஞ்சி மலையாளம் 2013
    காவியத்தலைவன் தமிழ் 2014
    நாக்குபெண்டா நாக்கு டாக்கு மலையாளம் 2014
    ஒன் பை டூ மலையாளம் 2014
    பாபநாசம் தமிழ் 2015
    எந்திரன் 2.0 தமிழ் தயாரிப்பில்

விருதுகள்

    1990 ஆண்டு அகிலன் நினைவுப்போட்டிப் பரிசைப் பெற்றார்.
    1992 ஆம் ஆண்டுக்கான கதா[5]

விருதைப் பெற்றார்.

    1994 ஆம் ஆண்டுக்கான சம்ஸ்கிருதி சம்மான்[6] தேசியவிருது பெற்றுள்ளார்.
    2008 ஆம் ஆண்டு பாவலர் விருது பெற்றார்
    2010 ஆம் ஆண்டு முதல் இவரது படைப்பான விஷ்ணுபுரம் பெயரால் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது ஒன்றை அளிக்கிறது.
    2011 ஆம் ஆண்டு அறம் சிறுகதைத் தொகுதிக்காக முகம் விருது பெற்றார்
    2012 சிறந்ததிரைக்கதைக்கான கேரளா ஃபிலிம் கிரிட்டிக்ஸ் விருது ஒழிமுறி
    2012- சிறந்த திரைக்கதைக்கான டீ ஏ ஷாஹித் விருது ஒழிமுறி
    2014- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருது[7]
    2015- இலக்கிய பங்களிப்புகளுக்காக தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை "தன் கருத்தியல் நேர்மை கேள்விக்குறியதாகும் வாய்ப்புள்ளதாக" கூறி பெற்றுக்கொள்ள மறுத்துள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி ஜெயமோகன் பதிவு

புதினங்கள்


    ரப்பர்
    விஷ்ணுபுரம்[8] (கவிதா பதிப்பகம்)
    பின் தொடரும் நிழலின் குரல் (தமிழினி பதிப்பகம்)
    பனிமனிதன் - சிறுவர் புதினம்
    கன்னியாகுமரி[9]

    கொற்றவை (புதினம்) (தமிழினி பதிப்பகம்)
    காடு
    ஏழாம் உலகம்[10][11][12][13]
    அனல்காற்று
    இரவு[14]
    உலோகம்[15]
    கன்னிநிலம்
    வெள்ளையானை[16][17]

No comments:

Post a Comment