Tuesday 10 April 2018

CHINA - NEPAL RAIL ROAD DANGER SIGNAL TO INDIA






CHINA - NEPAL RAIL ROAD 
DANGER SIGNAL TO INDIA

சீனா-நேபாளம் ரயில்பாதை : 
இந்தியாவிற்கு அபாய எச்சரிக்கை


பீஜிங்: எவரெஸ்ட் சிகரத்தின் கீழ் சுரங்கப்பாதை மூலம் சீனா-நேபாளம் இடையே புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டம் முனைப்புடன் செயல்படுத்த உள்ளது. இத்திட்டம் இந்தியாவிற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மணியாக அமைய உள்ளதாக கூறப்படுகிறது.
சீன அரசு தற்போது தன்னுடைய மாகாணத்தை சேர்ந்த குயின்காய் பகுதியில் இருந்து திபெத் வரையில் ரயில்பாதையை அமைத்துள்ளது. தற்போது வரும் 2020-ம் ஆண்டிற்குள் திபெத் வழியாக நேபாள நாட்டின் எல்லைப்பகுதி வரையில் எவரெஸ்ட் மலைப்பகுதியில் சுரங்கபாதை அமைத்து ரயில்பாதை அமைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நேபாளம் -சீனா இடையேயான வர்த்தகம் , சுற்றுலா மேம்பாடு அடையும் என சீனா அரசு தெரிவி்த்துள்ளது.

இது குறித்து சீன ரயில்வே துறையை சேர்ந்த சீன அகடமி ஆப் இஞ்ஜினியரிங் தலைவர் வாங் மெங்சூ கூறுகையில் திட்டம் நிறைவேற்றப்படும் வரையில் தொழிலாளர்கள் , தொழில் நுட்ப வல்லுநர்கள் பல்வேறு சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவித்தார். ஏற்கனவே குயிங்காய் திபெத் தலைநகர் லசா வரையிலான சுமார் ஆயிரத்து 956 கி.மீ தூரம் ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து விட்டது எனவும் தெரிவித்தார். நேபாளம்வரையில் நீட்டிக்கப்படும் ரயில் பாதை எவரெஸ்ட் மலையின் ஒரு பகுதியான கோமோலங்க்மா வழியா செல்ல நேரிடும் எனவும் தெரிவித்தார்.

கடந்த மாதம் திபெத் பகுதிக்கு சென்ற நேபாள அதிபர் ராம் பரான் யாதவ் திபெத்திற்கான சீன பிரதிநிதி லோசாங் ஜாம்கான்சந்தித்தார். அப்போது நேபாள எல்லையை ஒட்டியுள்ள சீன எல்லையான கெர்முங் நகர் வரையில் ரயில் சேவையை நீடிக்க திட்டமிருப்பதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே பொருளாதார ரீதியில் தன்னுடைய எதிரியாக இந்தியாவை கருதிக் கொண்டு, இந்தியாவை சுற்றிலும் உள்ள அண்டை நாடுகளான பாகிஸ்தான், மாலத்தீவு, இலங்கை உட்பட பல்வேறுநாடுகளுக்கு நிதியுதவிஉட்பட பல்வேறு உதவிகள் அளிப்பதன் மூலம் இந்தியாவிற்கு நெருக்கடி தர ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் நேபாளத்துடன் உறவை அதிகரிக்கும் விதமாக ரயில்சேவையுடன் ஆண்டு நிதியுதவியை 24 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 128 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தி்ல் சுற்றுலா மற்றும் வர்த்தகம் மேம்பாடு அடையும் என சீன அரசு கூறிவந்தாலும் போல் உலகின் மிகப்பெரிய பீடபூமியாக கருதப்பட்டு வரும் இப்பகுதிகள் உடையக்கூடிய அபாயம் ஏற்படும் என சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீன அரசின் இந்த ரயில் திட்டத்திற்காக ஆகும்செலவு குறித்து திட்ட மதி்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment