OVIYA ,THE BIG BOSS,PROGRESSIVE ACTRESS BORN 1991 APRIL 29
OVIYA , THE BIG BOSS PROGRESSIVE
ACTRESS BORN 1991 APRIL 29
ஓவியா (பிறப்பு: ஏப்ரல் 29, 1991, ஹெலன் நெல்சன்) இந்திய வடிவழகியும், நடிகையுமாவார். இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகி்ல் அறிமுகமானார்.[2] இவர் 2017ல் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 எனும் மெய்நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
வாழ்க்கைக் குறிப்பு
1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார், தற்போது சென்னையில் வசித்துவருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்ட ஓவியா, அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு, திரிசூர் விமலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை முடித்தார்.
திரை வாழ்க்கை
இந்திய வடிவழகியும் நடிகையுமான இவர் தமிழில் களவானி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாள படம் தான் ஓவியாவின் முதல் படம். வெற்றி படமான களவானியில் நடித்த ஓவியா பின்பு நல்ல கதைகளை தேர்வு செய்து, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் நடித்தார்.
ஷட்டப் பண்ணுங்க, ஸ்ப்ரே அடிச்சிடுவேன், எல்லாம் சிரிப்பா இருக்கு சார்: மறக்க முடியாத ஓவியா
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஓவியா பேசிய சில வார்த்தைகள் மிகவும் பிரபலமாகின. கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ள ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு அவரின் மார்க்கெட் எகிறிவிட்டது. இருப்பினும் தன்னை தேடி வரும் அனைத்து பட வாய்ப்புகளையும் அவர் ஏற்பது இல்லை. பிடித்தவற்றில் மட்டுமே நடிக்கிறார்.
ஓவியா ஓவியா இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிக் பாஸால் அவருக்கு கிடைத்த அங்கீகாரத்தை பார்த்து பல முன்னணி நடிகைகளே மிரண்டு போனார்கள்.
ட்விட்டர் ட்விட்டரில் ஓவியா ஆர்மி என்ற பெயரில் ஒன்றை துவங்கினார்கள் அவரின் ரசிகர்கள். ஒரு நடிகைக்கு ட்விட்டரில் ஆர்மி துவங்கி அது இன்று வரை வெற்றிகரமாக உள்ளது என்றால் அது ஓவியாவுக்கு மட்டும் தான். பிக் பாஸ் பிக் பாஸ் வீட்டில் ஓவியா கூறிய ஷட்டப் பண்ணுங்க என்ற வாசகம் மிகவும் பிரபலமானது. டிசர்ட்டில் எல்லாம் ஷட்டப் பண்ணுங்க என்ற வாசகம் இடம்பெற்றது
வாழைப்பழம் ஸ்ப்ரே அடிச்சிடுவேன், எல்லாம் ஒரே சிரிப்பா இருக்கு சார், பசிக்குது ஒரேயொரு வாழைப்பழம் கொடுங்க என்று ஓவியா பிக் பாஸ் வீட்டில் பேசிய வசனங்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அந்த வசனங்கள் எல்லாம் இன்று வரை மீம்ஸ்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை: ஆரவ் மீதான காதலில் ஏற்பட்ட மன அழுத்தம் ஒவியாவை பிக்பாஸ் வீட்டை விட்டே வெளியேற வைத்தது. ஆனால் ஓவியாவிற்கு தான் கொடுத்த மருத்துவ முத்தம் பற்றி விளக்கம் அளித்தார் ஆரவ். தான் ஓவியாவிற்கு கொடுத்த முத்தம் பற்றி கூறிய உடன் பிக்பாஸ் வீட்டில் இருந்த சிலருக்கு அதிர்ச்சிதான். கணேஷ் வெங்கட்ராம் இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா - ஆரவ் ஜோடிதான் ரொமான்ஸ் ஜோடி. டாஸ்க்களில் இந்த ஜோடிதான் டூயட் பாடும். இது காதலாக மாறி விட்டதோ என்றுதான் ரசிகர்கள் கருதினர். மனநோயாளிகளாக நடித்த போது காதல் தோல்வி போல நடிக்க கூட ஓவியாவினால் முடியவில்லை. ஆரவ்வைப் பார்த்து முத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தார்.
ஓவியாவின் மன அழுத்தம் ஒரு கட்டத்தில் ஆரவ் காதலிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டு ஓவியா மன அழுத்தம் காரணமாக நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
ஆரவ் மீதான காதல் பிக்பாஸ் குடும்பத்தினரை தனித்தனியாக பேசினார் கமல். ஓவியா காதலித்த ஆரவ்வை அழைத்து பேசினார். அதில், தான் ரகசியம் அம்பலமானது.
ஓவியாவின் முத்தம் அப்போது கமல், ஓவியா உங்களிடம் போகும் போது என்ன கேட்டார் என்றார். அதற்கு ஆரவ் கூறுகையில், நான் கொடுத்ததை திருப்பி கொடுத்துவிடு என்றார். எனக்கு ஓவியா முத்தம் கொடுத்தார். அதனை தான் ஓவியா திருப்பி கேட்டார் என்றார்.
முத்தத்தில் பலவிதம் முதலில் நான் முத்தம் கொடுக்கவில்லை. உண்மையிலேயே கொடுக்கவில்லையா என்று கமல் கேட்க, இல்லை சார் நான் திருப்பி கொடுத்துவிட்டேன் என்றார். சினேகன் சொன்னதினால் மருத்துவ முத்தம் கொடுத்ததாக கூறினார்.
முத்தம் பற்றி பேசிவிடுங்கள் இதை கேட்ட கமல், வீட்டில் உள்ளவர்களிடம் இந்த முத்தம் பற்றி கூறி விடுங்கள் என்றார். விளம்பரத்தில் சொன்னது போல நான் உங்களை கண்காணித்து கொண்டுதான் இருக்கிறேன் என்றார் கமல்.
அதிர்ச்சியடைந்த கணேஷ் ஆரவ் முகத்தில் ஈயாடவில்லை. வெளியே வந்த ஆரவ், நடந்த விசயத்தை கூறவே, கணேஷ் வெங்கட்ராமிற்கு அதிர்ச்சி ஏற்பட்டதுதான் உண்மை. அப்படி எதுவுமே நடக்கலைன்னு நீங்க சொன்னீங்களே என்று ஆரவ்வை பார்த்து கேட்டார் கணேஷ்.
ஏமாத்தியது உண்மையா ஆரவ் ஓவியா அடிக்கடி ஆரவ்வை பார்த்து சொல்வார், யு ஆர் சீட்டிங் மீ என்று சொல்வார். நிஜமாகவே ஏமாற்றிதான் விட்டார் ஆரவ் என்றே தோன்றுகிறது. எது எப்படியோ பொதுவெளியில் ஆரவ் ஓவியா இடையேயான ரொமான்ஸ் வெளிச்சத்துக்கு வந்து விட்டதுதான் உண்மை.







Comments
Post a Comment