M.S.VISWANATHAN
M.S.VISWANATHAN தமிழ்த் திரையிசை உலகில், நீங்காத புகழுக்குச் சொந்தக்காரர் மற்றும் பல இசைமையப்பாளர்களுக்கு முன்னோடி, மறைந்த `மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன். இவரின் ஏழு பிள்ளைகளில் ஒருவர், தொழிலதிபர் லதா மோகன். அப்பாவின் பசுமையான நினைவுகளை, இனிமையாக நினைவுகூர்கிறார் லதா மோகன். ``அப்பா மிக எளிமையான மற்றும் ஜாலியான மனிதர். அவர் பிஸியாக இருந்த காலத்துல, தன் இசைப் பணிகளை முடிச்சுட்டு வீட்டுக்கு வர இரவு 10.30 மணிக்கு மேலாகிடும். அப்போ நாங்க தூங்கியிருப்போம். அம்மாகிட்ட, `பிள்ளைங்க சாப்பிட்டாங்களா?'னுதான் முதலில் கேட்பார். அதனால, அவர் எங்களையும் நாங்க அவரையும் ரொம்பவே மிஸ் பண்ணுவோம். அப்பா வீட்டுக்கு வந்துவிட்டால், ஹார்மோனிய பெட்டியை பூஜை ரூம்ல வச்சுடுவார். பிறகு, எங்களோடுதான் சிரிச்சுப் பேசுவார். அப்பாவின் பிஸியான சூழலை அம்மா சரியா புரிஞ்சுவச்சு, அவருக்குப் பக்கபலமா இருந்தாங்க. பரபரப்பான பணிகளுக்கு நடுவே, அப்பா வருஷத்துக்கு ஒருமுறை எங்களோடு அவுட்டிங் வருவார். அப்போ, எங்களோடு அவர் குழந்தையைப்போல செயல்படுவார். குதிரைச் சவாரி போவார்; எங்களோடு மீன் பிடிப்பார்; சீட்டுகட்டு விளையாடுவ...