Posts

Showing posts with the label ரத்தக்கண்ணீர்

ரத்தக்கண்ணீர் (1954)

Image
ரத்தக்கண்ணீர் (1954) : அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். - என்று பாட்டன் வள்ளுவன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டான். இன்னும் பல கதைகளும் காவியங்களும் அடக்கம் பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் மனிதனுக்கு அது உறைப்பதில்லை. கொஞ்சம் காசு, பணம் சேர்ந்ததும் ‘தான் செய்வதெல்லாம் சரியே..என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்’ என்று ஆடித் தீர்த்து அழிந்து போகிறான். அப்படிப்பட்ட ஒரு மனிதனின் கதையே ரத்தக்கண்ணீர் அந்தக் காலத்திலேயே வெளிநாட்டில் சென்று படிக்கும் வசதியுள்ள லட்சாதிபதி மோகன். வெளிநாட்டு நாகரீகமே உயர்ந்தது, வாழ்க்கையை எஞ்சாய் பண்ணும் அவர்களின் வாழ்க்கை முறையே சரியானது எனும் மனநிலைக்கு வருகிறான் மோகன். இந்தியா திரும்பியபின்னும் அதே எண்ணத்துடன் வாழ்கிறான். கலைக்கூடம் என்ற பெயரில் பெண்களுடன் கூத்தடிக்க காமக்கூடத்தைக் கட்டி, காந்தா எனும் நாட்டியக்காரியுடன் வாழ்க்கையைக் கொண்டாடுகிறான். அம்மாவின் வற்புறுத்தலால் திருமணமும் ஆகிறது. கட்டறுந்து காமத்தைக் கொண்டாடியவனுக்கு கட்டுப்பெட்டியான மனைவியைப் பிடிப்பதில்லை.  ...