கோவா (1947) 1961 HISTORY OF GOA
HISTORY OF GOA 1961 “கோவா தெரியுமா மாலு?” என்று கேட்டான் பாலு. “எனக்குத் தெரிந்து நிறைய கோவா இருக்கிறது. அதில் ரொம்பப் பிடித்தது பால் கோவா. இன்றைக்குக்கூட ஞாநி மாமா ஆவினிலிருந்து வாங்கி வந்து கொடுத்தார். கோவா என்கிற கொய்யாப்பழம் எனக்குப் பிடிக்காது. கோவா என்று நம் நாட்டில் ஒரு மாநிலம் இருக்கிறது. அங்கேதான் ஆண்டுதோறும் உலகத் திரைப்பட விழாவை இந்திய அரசு நடத்துகிறது. அண்ணாமலை மாமா தவறாமல் போகிறார். கோவாவில் வாடகைக்கு மோட்டார் சைக்கிள் தரும் வழக்கம் இருகிறது என்று அவர் சொன்னார். நீ எந்தக் கோவாவைப் பற்றி கேட்கிறாய்?” என்றேன். “அப்பாடா, ஒரு வழியாக விஷயத்துக்கு வந்தாய். கடைசியாக சொன்னாயே அந்த கோவாவைத்தான் தெரியுமா என்று கேட்டேன்.” என்றான் பாலு. “அந்த கோவாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இருக்கும் சில தொடர்புகளைச் சொல்லட்டுமா?” என்றார் மாமா. 1965இல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, எம்.ஜி.ஆர். கோவாவில் படப்பிடிப்புக்குப் போய்விட்டாராம். இது அவர் கட்சிக்குள் பிரச்னையாக்கப்பட்டதாம். கோவாவை ஆண்ட போர்ச்சுகீசியர்கள்தான் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ல...