HISTORY OF DEMONITATION
HISTORY OF DEMONITATION செல்லாத ரூபாய் நோட்டுக்கள்: இந்திய அரசின் அதிரடி வரலாறு இந்தியாவில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அரசு அறிவித்து பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், அரசு இவ்வாறு அதிரடியாக செயல்படுவது இது முதல் முறை அல்ல என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே, இரண்டு முறை இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. 1946-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், ஆயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. 1954-ம் ஆண்டு, ஆயிரம், ஐந்தாயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் புழக்கத்தில் விடப்பட்டன. ஆனால், 1978-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மீண்டும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கு ஒரு பின்னணி உண்டு. 1970-களிந் துவக்கத்தில், கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவர, சில ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவிக்கலாம் என வான்சூ கமிட்டி அறிவித்தது. ஆனால், அந்தக் கமிட்டியின் பரிந்துரைகள் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டதால், கறுப்புப் பணம் வைத்திருப்போர் உஷாரடைந்து, தங்கள் வசம் உள்ள கறுப்புப் பணத்தை மிக விரைவாக கைமாற...