ASOKA MURDERED JAINS ,ESTABLISHED HIS BUDDHA RELIGION
ASOKA MURDERED JAINS ,ESTABLISHED HIS BUDDHA RELIGION கி.மு 250, பாடாலிபுத்திரத்தில் வெயில் தகித்தித்துக்கொண்டு இருந்த காலம் அது. அதிகாலை வேலை என்றுகூட பாராமல் சூரியன் அன்று கொஞ்சம் அதிகமாகவே எல்லோரையும் சோதித்தான். அசோகர் இன்னும் தன்னுடைய படுக்கையறைவிட்டு எழவில்லை. இப்போதெல்லாம் முன்புபோல் அசோகர் சீக்கிரம் எழுந்து வாள் பயிற்சிக்குப் போவதில்லை. அகண்ட மௌரிய சாம்ராஜ்யத்தை ஆண்டுகொண்டிருந்தும் நிம்மதி கிடைக்கவில்லை அவருக்கு. எதோ இழந்தார்போல் படுக்கையில் கிடந்தார். அரசக்காவலன் அசோகரின் அறை நோக்கி வந்தான், அசோகர் பார்க்க ஒரு புத்த துறவி வந்திருப்பதாகச் சொன்னார். அசோகர் சட்டென எழுந்தார். “வருகிறேன்! அதுவரை அவரை நன்கு உபசரி” என்று கூறி புறப்பட துவங்கினார். கலிங்கப் போர் முடிவிலிருந்து அசோகருக்கு தான் சார்ந்து இருந்த சமண மதத்தின்மீது நம்பிக்கை போய்க்கொண்டு இருந்தது. சமணம் செய்யும் பாவத்தையெல்லாம் கர்மாவாக சேமித்து தான் தலையில் சுமத்தி தன்னை விசனப்பட வைப்பதாக அசோகர் நம்பினார். போரில் தான் மகனை இழந்த தாய் ஒருத்தி, “இத்தனை கொலைகளைச் செய்துவிட்டு உன்னால் எந்த ஜென்மத்திலும் மோக்ஷம் அடைய ...