Posts

Showing posts with the label babu.kamaraj

சிரிப்பு நடிகர் சந்திர பாபு பிறப்பு 1927 ஆகஸ்ட் 5

Image
சிரிப்பு நடிகர் சந்திர பாபு பிறப்பு 1927 ஆகஸ்ட் 5 கலைத்துறை மிகவும் கடினமான துறை  அங்கே சேர விரும்பும் போது 6 அடி உடலை ஒரு அடியாக வளைத்துக்கொள்வார்கள்  சேர்ந்து கொஞ்சம் ரத்தம் ஊறியதும் கொண்ட மனைவி ,மக்களை  மறப்பார்கள் - ஒரு புது மனைவியை தேடிக்கொள்வார்கள்  புகழ் பெற்று விட்டால் முதலில் கற்றுக்கொள்வது  எப்படி திமிராய்  பேசணும் என்றே  வாழ்க்கை சறுக்கலில் பழைய நிலையை விட கேவலமாய் போய்  விடுவார்கள்  இது கலைஞர்களுக்கே உரித்தானதுதான்  இதற்கு சந்திர பாபுவும் விதிவிலக்கல்ல     @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ சந்திரபாபு...  தமிழன் சந்தோஷ பாபு.  ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும்.  அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும்,  சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும்.  அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்?கடலோர நகரமான தூத்துக்குடியில் பிறந்த கலைமுத்து. பனிமயதாசன் என்று பெயர்.  கடும் காய்ச்சலில் இருந்து மீண்டது கர்த்தரின் கருணை என ஜோசப் பிச்சை என்ற பெயரை இணைத்தார்கள்...