Posts

Showing posts with the label ALL INDIA RADIO

ALL INDIA RADIO ,CEYLON RADIO- RESPIRATION OF LIFE

Image
  ALL INDIA RADIO ,CEYLON RADIO-  RESPIRATION OF LIFE அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நம்முடைய தொழில்நுட்ப பயன்பாடுகள் இருக்கின்றன. ஆனாலும், பழைமை குறித்த நினைவுகளில் மூழ்கினால் அதனூடாக இழையோடும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்க முடியாது. செல்போன் வருகைக்குப் பின்னர், உலகமே கைக்குள் சுருங்கிப் போய்விட்டது. ஆனாலும்கூட பழங்காலத்தில் எங்கோ ஒரு வீட்டின் ரேடியோவில் இருந்து ஒலிக்கும் இசையைக் கேட்டு அந்த வழியாகச் செல்பவர்கள் நின்று ரசிப்பதுண்டு. அத்தகைய சுவையான நினைவூட்டங்களை விகடன் வாசகர் நம்முடன் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது. 1970-களின் பிற்பகுதியிலும் 1980-களின் முற்பகுதியிலும் பிறந்தவர்களுடைய முக்கிய பொழுதுபோக்கு என்பது விளையாட்டைத் தவிர்த்து வானொலி (Radio) கேட்பதாகவே இருந்திருக்க முடியும். அந்த அளவுக்கு அந்தக் காலத்தவர்களின் வாழ்வோடும் வானொலி நேரடித் தொடர்பில் இருந்தது.அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும்தான் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் என்ற நிலைமை அப்போது இருந்தது. திருச்சி மற்றும் விவிதபாரதி என இரு அலை வரிசைகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும். வானொலி மூலமாக...

SAROJ NARAYANASWAMY - ALL INDIA RADIO

Image
  SAROJ NARAYANASWAMY - ALL INDIA RADIO ஆல் இண்டியா ரேடியோ .. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி .. TV காலத்துக்கு முந்தையவர், எங்களை ப்போல. இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இவரின் இன்முகம் காண்போமே .. ! வயது 85 இந்த உலகில் அழகால் அறியப்படுபவர்களுக்கு இணையாக குரலால் அறியப்பட்டு, அழியாப் புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள். இப்படி தமது குரலால் புகழ் பெற்றவர்களில் முக்கியமான ஒருவரைத் தேடி கண்டடைந்தோம். அவர்தான் அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளரான “கலைமாமணி’ சரோஜ் நாராயண சுவாமி. சென்ற தலைமுறை தமிழர்கள், தில்லியிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ்ச் செய்திகளை இவரது கம்பீரமான குரலுக்காகவும், உச்சரிப்புக்காகவும் விரும்பிக் கேட்டிருக்கிறார்கள். இப்போது மும்பையில் வசிக்கும் சரோஜ் நாராயணசுவாமி இந்த 82 வயதிலும் முதுமையின் சுவடுகள் எதுவும் முகத்தில் தெரியாமலும், அதே கம்பீரமான குரலுடனும் பேசுகிறார். அவர் நம்மிடம் பகிர்ந்ததை கேளுங்கள் “என்னுடைய முன்னோர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். ஆனால் நான் பிறந்து வளர்ந்து பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தது எல்லாம் மு...