Posts

Showing posts with the label MAGICIAN

KERALA MAGICIAN

Image
செய்வினைக்கு ஒரு செய்வினை  பணக்காரர்களுக்கென பிரத்யேகமாக இரண்டு குணங்கள் உண்டு. 5 லட்ச ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டிய காரியத்தை, சாமர்த்தியமாக வெறும், 500 ரூபாயில் முடிப்பவர்கள், ஒரு வகை. வெறும், 500 ரூபாயில் முடிக்கக் கூடிய காரியத்தை, வறட்டுப் பிடிவாதமாக, 5 லட்சம் வரை செலவு செய்தும், முடிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருப்பவர்கள், இரண்டாவது வகை. என் மச்சான் மகாலிங்கம், இரண்டாவது வகையை சேர்ந்தவர். சென்னை, சோழிங்கநல்லுார் பகுதியில் அவர், வளைத்துப் போட்டிருந்த, 2 கிரவுண்டு பொறம்போக்கு நிலம் தொடர்பாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு பிரச்னை இருந்தது. அவர், வளைத்துப் போட்டிருந்த, 80க்கு 60 அடி பொறம்போக்கு நிலத்தில், 80 சதுர அடி, பிரச்னை கொடுத்தது. அந்த வில்லங்கத்துக்கு நீர் பாய்ச்சி, உரம் போட்டு, விருட்சமாக வளர விட்டிருந்தார், மகாலிங்கத்தின் பக்கத்து நிலத்தை ஆக்கிரமித்திருந்த, வீராசாமி. வீராசாமி ஆக்கிரமித்து வைத்திருந்த, 2 கிரவுண்டு நிலத்திற்கு, இடது புறம், 80 சதுர அடியை, பெரு நகர சென்னை மாநகராட்சி ரோடு போடுவதற்காக, 'லவட்டி' விட்டதால் உஷாரானார். உடனடியாக, மாநக...