A.L.RAGHAVAN ,PIONEER OF ORCHESTRA
A.L.RAGHAVAN ,PIONEER OF ORCHESTRA நாகேஷ் அவர்களுக்கு ஏஎல் ராகவன் குரல் மிகப் பொருத்தமாக இருக்கும். ஆதலால் நாகேஷுக்குப் பல படங்களுக்கு நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியவர். வாடா மச்சான் வாடா (அன்று கண்ட முகம்), உலகத்தில் சிறந்தது எது (பட்டணத்தில் பூதம்), சாப்பிடத்தான் தெரியும் எனக்கு சமைக்கத் தெரியலியே (பவானி) ‘சீட்டுக்கட்டு ராஜா’, ‘என்ன வேகம் நில்லு பாமா'(குழந்தையும் தெய்வமும்), ‘அங்கமுத்து தங்கமுத்து’ (தங்கைக்காக), கடவுளும் நானும் ஒரு ஜாதி, அன்று ஊமை பெண்ணல்லோ உள்ளிட்ட பல பாடல்களால் அறியப்பட்டவர். எஃகோ வசதியில்லாத அக்காலத்தில் தனது குரலில் எஃகோ எஃபெக்டை கொடுத்தவர். மேடைகளில் ஆர்க்கெஸ்டிரா கச்சேரிகள் உருவானதன் முன்னோடி இவர்தான். எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ஆர்க்கெஸ்டிரா குழுவை உருவாக்கியவர். புதையல் படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து மெல்லிசை மன்னர் இசையில் முதன் முதலாக பாடினார். எம்.ஆர்.ராதா. அவருக்கும் ஒரு பாடல் உண்டு. அந்தப் பாடல் இன்றுவரைக்கும் பிரபலம். ‘புத்திசிகாமணி பெத்தபுள்ள’ என்ற பாடல்தான் அது. ‘அட... ஆராரோ அடி ஆராரோ... அட அசட்டுப்பயபுள்ள ஆராரோ’ என்று பாட...