Sunday 4 April 2021

A.L.RAGHAVAN ,PIONEER OF ORCHESTRA

 


A.L.RAGHAVAN ,PIONEER OF ORCHESTRA

நாகேஷ் அவர்களுக்கு  ஏஎல் ராகவன்  குரல் மிகப் பொருத்தமாக இருக்கும். ஆதலால் நாகேஷுக்குப் பல படங்களுக்கு நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியவர்.


வாடா மச்சான் வாடா (அன்று கண்ட முகம்), உலகத்தில் சிறந்தது எது (பட்டணத்தில் பூதம்), சாப்பிடத்தான் தெரியும் எனக்கு சமைக்கத் தெரியலியே (பவானி) ‘சீட்டுக்கட்டு ராஜா’, ‘என்ன வேகம் நில்லு பாமா'(குழந்தையும் தெய்வமும்),

‘அங்கமுத்து தங்கமுத்து’ (தங்கைக்காக), கடவுளும் நானும் ஒரு ஜாதி, அன்று ஊமை பெண்ணல்லோ உள்ளிட்ட பல பாடல்களால் அறியப்பட்டவர்.

 எஃகோ வசதியில்லாத அக்காலத்தில் தனது குரலில் எஃகோ எஃபெக்டை கொடுத்தவர். மேடைகளில் ஆர்க்கெஸ்டிரா கச்சேரிகள் உருவானதன் முன்னோடி இவர்தான்.

எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ஆர்க்கெஸ்டிரா குழுவை உருவாக்கியவர். புதையல் படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து மெல்லிசை மன்னர் இசையில் முதன் முதலாக பாடினார்.

எம்.ஆர்.ராதா. அவருக்கும் ஒரு பாடல் உண்டு. அந்தப் பாடல் இன்றுவரைக்கும் பிரபலம். ‘புத்திசிகாமணி பெத்தபுள்ள’ என்ற பாடல்தான் அது.

‘அட... ஆராரோ அடி ஆராரோ... அட அசட்டுப்பயபுள்ள ஆராரோ’ என்று பாடும்போது, வரிகளில் அசட்டுத்தனத்தைக் கொண்ட கேலிபாவனையைக் கொடுத்திருப்பார்.போதாக்குறைக்கு, எம்.ஆர்.ராதாவே சொந்தக் குரலில் பாடுவது போல் இருக்கும்.

ஏ.ஏல்.ராகவனின் மனைவி எம்.என்.ராஜம். காதல் மணம் புரிந்துகொண்டனர். பழம்பெரும் நடிகை. இவரும் சிரித்தமுகத்துக்குச் சொந்தக்காரர்.

இயக்குநர் ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில், காதலியை அவள் கணவருடன் பார்ப்பார் காதலன். அந்தக் காதலன், கதையின் படி மருத்துவர். அவருக்கான பாடலும், காதலின் வலிக்கு மருந்து போட்டது.

அந்த மருந்துக்குரலில் இருந்து...

எங்கிருந்தாலும் வாழ்க - உன்

இதயம் அமைதியில் வாழ்க!

இங்கே ஒருவன் காத்திருந்தாலும்

இளமை அழகைப் பார்த்திருந்தாலும்

சென்ற நாளை நினைத்திருந்தாலும்

திருமகளே நீ வாழ்க...

எனும் வரிகள்... காற்றுக்கும் வலிக்காமல்... அலை அலையாக நம் செவிகளில் வந்திறங்கும்.

அந்தப் பாடலில்... வாழ்க... வாழ்க... வாழ்க... என்று குழைந்து வாழ்த்துவார்.

எத்தனையோ பேரின் காதல் இழப்புக்கு மருந்தாக அமைந்த ஏ.எல்.ராகவனின் குரல்... அவரின் மறைவு கொடுத்திருக்கும் வலிக்கு மருந்து போடும் குரலாகவும் அமைந்துவிட்டது. காயத்தை ஆற்றும் அந்த மருந்துக்குரலோன் நம்மிடம் இல்லை. அவரின் பாடல்களே, அவரின் குரலே நமக்கு மாமருந்து!

எங்கிருந்தாலும் வாழ்க. உங்கள் இதயம் அமைதியில் வாழ்க ராகவன் சார்!


No comments:

Post a Comment