COIMBATORE ,HOW DEVELOPED
கோவையில் நீண்ட காலம் மண்ணெண்ணை விளக்குகளே போடப்பட்டு இருந்தன. அவையும் போதிய வெளிச்சத்தைத் தராமல் மங்கலாகத்தான் எரிந்தன. 1830 ல் வின்செண்ட் என்பவர் மின்சார எந்திரத்தைக் கொண்டு அசையும் படங்களை ஓட்டி வந்ததில் மீதியான சக்தியை தெருக்களுக்குத் தருவதாக முன் வந்தார். அவருக்கு சில தெருக்களுக்கு மட்டும் விளக்குகளைப் போட அனுமதி கிடைத்தது . அதன் பின் அரசாங்கத்தால் நீலகிரியில் பாய்கரை ஆற்றில் மின்சாரம் இறக்கின திட்டத்தில் ஒரு பகுதி கோவைக்கும் தரப்பட்டது. அதன் பின் தான் கோவை முழுக்க தெரு விளக்குகள் போடுவதற்கும் , எந்திர சாலைகள் இயங்குவதற்கும் கிணறுகளில் தண்ணீர் இறைப்பதற்கும் திட்டம் தீட்டப்பட்டது.
கோவையில் முன்பு அடிக்கடி பிளேக் ( கொரானாவோட பெரியப்பா ) நோய் அடிக்கடி தாக்கியதால் மக்கள் வசதிக்கு வேண்டி ஊருக்கு வெளியே திருச்சி சாலையிலும் அவினாசி சாலையிலும் தோட்டத்துடன் கூடிய வீடுகள் கட்டி குடியேறினர். இராமநாதபுரம் , புளியகுளம் , பாப்பநாயக்கன் பாளையம் ஆகிய இடங்களில் உள்ள புன்செய் நிலங்கள் வீடுகளாக மாறின. பின் இவற்றை நகரத்துடன் இணைத்தனர்.
- இதுவல்லவோ எங்க கோவை ( கோவை கிழார் )
No comments:
Post a Comment