Monday 5 April 2021

MURDER ALL MAOISTS

 


MURDER ALL MAOISTS


முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் இந்த மாவோயிஸ்டுகளை..!
சத்தீஸ்கர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த ரூ25 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவன் ஹித்மாவை குறிவைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவன் ஹித்மா சத்தீஸ்கரின் ஜோனகுடா வனப்பகுதியில்தான் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத் தகவல்கள் கிடைத்தன.
கடந்த 10 நாட்களாக ஹித்மாவின் நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் கண்காணித்தும் வந்தனர்.
ஹித்மாவை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே வெள்ளிக்கிழமை இரவு பாதுகாப்பு படையினர் பிரமாண்ட ஆபரேஷனுடன் வனப்பகுதிக்குள் நுழைந்தனர். சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருக்கும் சுக்மா, பிஜப்பூர் வனப்பகுதிகளில்தான் இந்த அதிரடி வேட்டை வெள்ளிக்கிழமை இரவில் தொடங்கியது.
ஹித்மா பதுங்கி இருக்கும் ஜோனகுடாவையும் பாதுகாப்பு படையினர் நெருங்கிவிட்டனர்,அப்போது பாதுகாப்பு படையினருடன் மிக நெருக்கமாக நின்ற நிலையில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இன்ஸ்பெக்டர் ஒருவரை முதலில் சுற்றி வளைத்த மாவோயிஸ்டுகள் அவரது கையை வெட்டி இருக்கின்றனர். பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். மாவோயிஸ்டுகள் நமது பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து மறைந்திருந்து கொடூர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆனால் தீரத்துடன் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடருகின்றன.


மாவோயிஸ்டுகளுடனான இந்த மோதலில் இன்று 22 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்திருப்பது நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதல்களில் மொத்தம் 2588 பாதுகாப்பு படையினரும் 3849 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா, ஒடிஷா, சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களின் வனப்பகுதிகள் மாவோயிஸ்டுகள் பிடியில் இருக்கின்றன. மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவதற்கான நமது பாதுகாப்பு படையினர் அடர்வனப்பகுதியில் முகாமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால்,வனப்பகுதிகளில் பழங்குடிகளை கேடயமாக வைத்துக் கொண்டு மாவோயிஸ்டுகள் இயங்குகின்றனர்.
2004-ம் ஆண்டு ஒடிஷாவின் கோராபுட் நகரம் மீது 1,000க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஒரே நேரத்தில் திரண்டு தாக்குதல் நடத்தினர். 200 நவீன துப்பாக்கிகள் உட்பட ரூ50 கோடி மதிப்பிலான ஆயுதங்களையும் மாவோயிஸ்டுகள் கொள்ளையடித்துச் சென்றனர். மாவட்ட ஆயுத களஞ்சியம், 5 காவல்நிலையங்கள், கோராபுட் சிறைசாலை, எஸ்.பி. அலுவலகம் ஆகியவற்றை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
2005-ம் ஆன்டு பீகாரின் ஜெகன்னாபாத் சிறையை தகர்த்தனர் மாவோயிஸ்டுகள். மொத்தம் 7 மணிநேரம் ஜெகன்னாபாத் சிறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாவோயிஸ்டுகள் 375 கைதிகளை விடுவித்தனர். 185 ரைபிள்கள், 2000 தோட்டாக்களையும் கொள்ளையடித்துச் சென்றனர் மாவோயிஸ்டுகள்.
2006-ம் ஆண்டு ஒடிஷாவின் கஜபதி மாவட்டத்தில் ஆயுதப் படையினர் முகாம் மீது 500க்கும் அதிகமான மாவோயிஸ்டுகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினர். 40 கைதிகளை விடுவித்து ஆயுதங்களை கொள்ளையடித்தனர். இதில் 3 போலீசார் கொல்லப்பட்டனர்.
2006-ம் ஆண்டு சத்தீஸ்கரின் தண்டேவடா மாவட்டத்தில் 800 மாவோயிஸ்டுகள் ஒருங்கிணைந்து நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் படுகாயமடைந்தனர். 20 பேரை கடத்திச் சென்றனர்.
2007-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் எம்.பி.யாக இருந்த சுனில்குமார் மகாதோவை சுட்டுப் படுகொலை செய்தனர் மாவோயிஸ்டுகள். கால்பந்து போட்டியை பார்த்து கொண்டிருந்த போது மாவோயிஸ்டுகள் இந்த தாக்குதலை நடத்தினர்.
2007-ம் ஆண்டு சத்தீஸ்கரின் தண்டேவடா சிறை மீது தாக்குதல் நடத்தினர் மாவோயிஸ்டுகள். 100 மாவோயிஸ்டுகள் உட்பட 303 சிறை கைதிகளை விடுவித்தனர் மாவோயிஸ்டுகள்.
2007-ம் ஆண்டு ஜார்க்கன்ட் மாநிலத்தின் கிரித் மாவட்டத்தில் முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் அனுப் உட்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அப்பகுதியில் நடைபெற்ற கலாசார நிகழ்ச்சி மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி இந்த தாக்குதலை மேற்கொண்டனர் மாவோயிஸ்டுகள்.
2007-ம் ஆண்டு ஒடிஷாவில் நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் ஒன்று திரண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 14 போலீசார் கொல்லப்பட்டனர்.
2008-ம் ஆண்டு ஒடிஷாவில் போலீசார் சென்ற படகுகள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். பாலிமேலா அணைக்கட்டு பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 38 பாதுகாப்பு படையினர் பலியாகினர்.
2008-ம் ஆண்டு ஒடிஷாவின் மல்காங்கிரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 21 போலீசார் கொல்லப்பட்டனர். ஒடிஷாவின் கோராபுட் மாவட்டத்தில் 2009-ல் மேலும் 10 போலீசார கொன்றனர் மாவோயிஸ்டுகள்.
2009-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் 300 பயணிகளுடன் ரயில் ஒன்றை கடத்தி சிறை பிடித்தனர் மாவோயிஸ்டுகள். சில மணிநேரம் கழித்து இந்த ரயிலை விடுவித்தனர் மாவோயிஸ்டுகள்.
2009-ல் மகாராஷ்டிராவின் கட்ச்ரோலியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 16 போலீசார் கொல்லப்பட்டனர். 2009-ல் ஜார்க்கண்ட்டில் 9 போலீசாரை கொன்றனர் மாவோயிஸ்டுகள்.
2010-ம் ஆண்டு மேற்கு வங்கத்தின் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். அதே 2010-ம் ஆண்டு சத்தீஸ்கரின் தண்டேவடா வனப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்லில் 75 பாதுகாப்பு படையினர் படுகொலை செய்யப்பட்டனர்.
2012-ல் பீகாரின் கயா மாவட்டத்தில் 6 பாதுகாப்பு படையினரை கொன்றனர் மாவோயிஸ்டுகள். 2013-ல் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 25 பேரை படுகொலை செய்தனர்.
2014-ல் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் 14 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர்.
2017-ம் சுக்மா மாவட்டத்தில் 12 சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி சுக்மா மாவட்டத்தில் மேலும் 24 படையினரை படுகொலை செய்தனர் மாவோயிஸ்டுகள்.
நமது நாட்டு மக்களாலேயே..நமது நாட்டு இராணுவவீர்கள் கொல்லப்படுவதை என்ன என்பது..?
முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் இந்த மாவோயிஸ்டுகளை..!

No comments:

Post a Comment