KUMARI THANKAM ,MALAYALAM ACTRESS
JUNE 13,1933 - 2011 NOVEMBER 8
பழம்பெரும் மலையாள, தமிழ் நடிகை. 1950-60-களில் பிரபலமாகயிருந்தவர். 1952-துவங்கி 1976 வரையிலும் நடித்துள்ளார். தமிழில் நால்வர், ஆத்மசகி, மந்திரவாதி போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். இவரது பெயர் ஏ.பி.தங்கம். சினிமாவுக்காக வைத்த பெயர் குமாரி தங்கம். மலையாளத் திரையுலகின் கவர்ச்சிக்கன்னியாக இருந்தவர் இவர்.
இவர் திருவனந்தபுரத்தில் பூஜப்புறையைச் சார்ந்தவர். இவரது கணவர் பிரபல பிரபல நடிகைகள் லலிதா, பத்மினி, ராகினியின் உறவினரும் நடிகரும், தயாரிப்பாளருமான பி.கே.சத்யபாலன். பின்னர் இவரை விட்டு பிரிந்து விட்டார்
இவரது பெற்றோர் ஸ்ரீ ஏ.ஜே.நாயர்- ஸ்ரீமதி அம்முக்குட்டி அம்மா. கேரளத்தின் பிரபல
படத்தயாரிப்பு நிறுவனமான மெரிலாண்ட் ஸ்டூடியோஸ் தயாரித்த முதல் படமான ‘ஆத்மசகி’ என்ற படத்தின் மூலமாக 1952-ஆம் ஆண்டு அறிமுகமானார். தொடர்ந்து விஷப்பின்றே விழி, திரமாலா, லோகநீதி, அவன் வருந்நு, பால்ய சகி, கிடப்பாடம், சி.ஐ.டி, மந்திரவாதி, கூடப்பிறப்பு, மின்னுனதெல்லாம் பொன்னல்ல, தேவசுந்தரி போன்ற 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு 3 மக்கள். பத்மநாபன், ஜெயபால், ஆஷா. இவர்கள் காலமாகிவிட்டனர். குமாரி தங்கம் 8.11.2011 அன்று தனது 80-ஆவது வயதில் சென்னை, ஷெனாய் நகரில் வைத்து காலமானார்.
No comments:
Post a Comment