Monday 12 April 2021

DHANUSH MOVIE KARNAN

 


DHANUSH MOVIE KARNAN

#கர்ணன் #படம் #நல்லாதான் எடுத்துருக்காங்க, ஆனா அது சொல்ல வர்ற விசயம்... 




ஸ்டாப்ல நிக்காத பஸ்ஸ கதாநாயகன், நண்பர்களோட சேர்ந்து அடிச்சு ஓடைக்குறானாம். இது புரட்சியாம். இதுக்கும் ஒரு குரூப் கையத் தட்டிட்டு, முஷ்டிய உயர்த்திட்டு திரியுது. 'பஸ்சு ஸ்டாப்ல நிக்கலேன்னா... டிரான்ஸ்போர்ட் அதிகாரிட்டயோ, கிராம நிர்வாக அலுவலர்ட்டயோ புகார் மனு எழுதி குடுக்கணும்' ன்னு, சொல்லிக் குடுங்கடா. அதைவிட்டுட்டு பஸ்ஸ ஒடைச்சா... நியூசன்ஸ் கேஸ்ல ஆரம்பிச்சு, குண்டாஸ்ல போய் நிக்கும். வாழ்க்கையே நக்கிட்டு போயிடும்.

1990-கள்ள... ஆண்டிப்பட்டில இருந்தேன். ஆண்டிப்பட்டி to தேனி ரோட்ல, RS மங்களத்த தாண்டி பெரியாண்டவர் மில்லுல வேலை பாக்குறேன். காலைல ஒரு பத்துமணி இருக்கும். மில்லுக்கு எதிர்த்த மாதிரி இருக்குற நடராஜ் டீ-கடைல டீ சாப்டுட்டு உக்காந்திருக்கோம். நாம உக்காந்திருக்குற டீ-கடைய தாண்டி கொஞ்ச தூரத்துல, 'ரங்கசமுத்திர விலக்கு' ன்ற பஸ்ஸ்டாப். ஒரே ஒரு டீ-கடை மட்டும் இருக்கும். 'ரங்க சமுத்திரம்' ன்ற ஊரு, ரோட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் உள்ளிருக்கு. நாயக்கர் சமூகம் மட்டுமே வாழுற ஊர். மதுரை டூ தேனி போற சோலைமலை பஸ் வருது. அந்தநேரம் பார்த்து, டீ-கடை பெரியவரோட 6 டூ 7 வயசு பேரன்... ரோட்டை தாண்டி பஸ்சுக்கு குறுக்க ஓட, அவன பிடிக்குற ஆவேசத்துல பஸ்ஸ கவனிக்காம பெரியவரும் பின்னாடியே ஓட... பேரன் ரோட்டத்தாண்டி ஓடிட்டான். பெரியவர் பஸ்சுல மாட்டிட்டார்.

முன்னாடி வீல்... பெரியவர் மேல ஏறியிறங்கி, பின்னாடி வீல் உடம்புமேல ஓடி, கால்மேல நிக்குது. பிழைக்க வழி இல்லன்னாலும், அந்த நேரத்துல உயிர் இருக்குது. அந்த நேரம் சரியா ஒரு லாரி வரவும், பஸ் டிரைவர் அதுல ஏறி தப்பிச்சுட்டார். கொஞ்ச நேரம் ஏரியாவே அமைதியா இருந்தது. ஒரு டவுன்பஸ் வரவும், அதுல வந்த அந்த ஊர்க்காரங்க சம்பவத்த பாத்துட்டு போய் ஊருக்குள்ள சொல்ல... ஒரு ஐநூறுபேர் கைல வீச்சரிவாள், கடப்பாரை, வேல் கம்போட போருக்கு போறமாதிரி வர்றாங்க. ஒரு அரைமணி நேரந்தாய்யா இருக்கும். ஒரு மாசத்துக்கு முன்னாடி ரூட்டுக்கு வந்த அந்த புதுபஸ்ச... கண்கொண்டு பாக்கமுடியல. இன்னொரு குரூப், தேனி போறதுக்காக பஸ்ல வந்த டிஎஸ்பி-ய வும், கண்டெக்டரையும் அடிச்சு வெளுக்க ஆரம்பிச்சாங்க. இதுல, எங்ககூட வேலை பாக்குற 'பாலு'ன்ற சிங்காநல்லூர்-காரன் நியாயத்த பேசுறேன்னு வாலண்டியரா போய்... "பஸ்காரன் மேல தப்பில்ல. பையன் மேலதான் தப்பு" ன்னுட்டான். 

புளியமரத்துல கட்டி தொங்கவிட்டு, இருவது நிமிசம் அடிச்சாங்க. அடிச்சதுமில்லாம, "யாரெல்லாம்டா உங்கூட வந்தாங்க" ன்னு கேக்க... போர்ஸா அடிச்ச அடில அவனுக்கு சட்டுன்னு என்னோட பேர் நியாபகத்துக்கு வரல. தலைகீழா தொங்குனதால, சரியா என்னெ அடையாளமும் தெரில. நா மெதுவா கூட்டத்துக்குள்ள பதுங்கிட்டேன். ஒருவழியா ரெண்டு மணிநேரம் கழிச்சு, உழைச்ச களைப்புல... பஸ்சுல கிடைச்ச தட்டுமுட்டு சாமான்கள தூக்கிட்டு, 6 டயரையும் உருட்டிட்டு ஊருக்குள்ள போய்ட்டாங்க. இதுக்கிடைல, குத்துயிரும் குலையுயிருமா கிடந்த பெரியவரும் இறந்துட்டாரு. பஸ்ஸ ஒடைக்குறதுலயும், கிடைச்சவன அடிக்குறதுலயும் கவனமா இருந்தாங்களே தவிர, ஒரு பயலும் அந்த பெரியவருக்கு ஒருவாய் தண்ணி ஊத்தல. 

இதுல வேடிக்கை என்னன்னா... அவ்ளோ அமைதியா இருக்குற நம்ம டீ-கடை நடராஜும் அவங்களோட சேர்ந்துட்டு காட்டுமிராண்டி மாதிரி ஆடினதுதான். அதுக்கப்புறம்... சாவகாசமா ரிசர்வ் போலீஸ் வந்து, ஊரவே வெள்ளாவி வெச்சு வெளுத்தது. ரெண்டுமூணு மாசம் ஊருக்குள்ள ஒரு ஆம்பள இல்ல. அப்ப, அந்த ஊருக்கு பக்கத்து ஊரு பொண்ணுகிட்ட, "என்னம்மா நல்லா பழகுறாங்க. ஆனா கோவம் வந்தா இவ்ளோ மோசமா நடத்துக்கறாங்க ?" ன்னு கேட்டா... "இதென்ன பிரமாதம் !. இவனுங்க பண்ணின இன்னொரு காரியத்த கேட்டிங்கன்னா அசந்து போயிடுவீங்க" ன்னுச்சு. "சொல்லு கேக்கலாம்" ன்னேன். 

ஒருவாட்டி டிரான்ஸ்பார்மர்ல பியூஸ் போயி, ஊருக்குள்ள கரண்ட் இல்லையாம். வழக்கமா எல்லா கிராமங்கள்ளயுமே, ஆத்திர அவசரத்துக்கு ஒரு மூணாம் கிளாஸ் படிச்ச எலக்ட்ரிக்கல் இன்ஜினியர, கோயில்மாடு மாதிரி சோறு போட்டு வளர்ப்பாங்க. அது மாதிரி இந்த ஊர்லயும் ஒருத்தன வளத்திருக்காங்க. தகவல் சொல்லியும், ரொம்பநேரம் லைன்மேன் வராததால... ஊர் நாட்டாமைக்கு, இட்டிலிக்கு மாவாட்டுற அவசரம் போல, அந்த கோயில் மாட்ட கூப்ட்டு, "ஒரே சுப்புராஜு... அதேமி பெத்த ராக்கெட்டுக்கு ரிவிட்டு கொட்டே பணியா ? நூவே பைன எக்கி, பீஸ் வெய்ரா. நேனு நீக்கு செப்பிஸ்தானு. ஆ எருப்பு ஒயர்னி பைக்க முறுக்கி, நழுப்பு ஒயர்னி கிந்த முறுக்குரா. மின்னல்-லாக, கரண்ட்டு ஒஸ்தாதி. எக்குரா..." ன்னு உசுப்ப... டிரான்ஸ்பார்மர்ல எக்கி இருக்கான். ச்சீ... ஏறி இருக்கான். ரெண்டாவது நிமிஷம், கருகி கீழ விழுந்திருக்கான். இது முடிஞ்ச அரைமணி நேரத்துல, லைன்மேன் வந்திருக்காரு. காட்டுப்பயலுக, லைன்மேன ட்ரான்ஸ்பார்மர்ல கட்டிவெச்சு, மண்ணெண்ணெய ஊத்தி எரிச்சுட்டாங்க. போலீஸ், ஊரவே சல்லடை போட்டு வெளுவெளுன்னு வெளுத்து, 85 பேர் மேல கேஸ்.

இதெல்லாம் அந்த காலகட்டத்துல நடந்தது. இப்ப பெரும்பாலான பாமர மக்கள் திருந்திட்டாங்க. ஆனா சினிமான்ற பேர்ல... சிலபேர், ஜாதி வன்மத்தை தூண்டிவிட்டு, பழைய நிலைக்கே கொண்டுபோக பாக்குறாங்க!!

#பதிவர்: #சக்திவேல்

No comments:

Post a Comment