Saturday 3 April 2021

CHENNAI -CINEMA THEATRES -ONE VIEW

 


CHENNAI -CINEMA THEATRES -ONE VIEW



சென்னையில் காணாமல் போன முதல் மல்டி பிளக்ஸ் திரை அரங்கம் சபையர் - இந்தியாவில் துவங்கப்பட்ட முதல் காம்ப்ளக்ஸ்(2+ Screen Complex Theatre) தியேட்டர் சென்னை அண்னாசலையில் "சபையர்" என்ற பெயரில் இருந்தது.

ஜெமினி மேம்பாலம் அருகில் தான் சபையர் வளாகம் இருந்தது. அங்கு சபையர், ப்ளூ டைமண்ட் மற்றும் எமரால்ட் என்று மூன்று அரங்கங்கள் இருந்தன. அந்நாளில் இது ஒரு வித்தியாசமான திரை வளாகம். இங்கு பார்க்கிங் வசதியே வித்தியாசமானது (மல்டி லெவல் பார்க்கிங்) அன்று அது போல் சென்னையில் இருந்ததாக தெரியவில்லை. சபையர் 900 இருக்கைகள் கொண்டது, இங்குள்ள தரவரிசை பல வகையாக இருந்தது, 2:00, 2:90, 3:50, 4:50, 5:00 (இல்லை 6:00 என்று நினைவு). இதில் அதிக கட்டணம் இருக்கைகள் பாக்ஸ் என்று பெயர். இந்த பாக்ஸ் பிரத்யேகமாக இருவர் உட்கார்ந்து பார்க்கும் அறை போலிருக்கும். 6 பாக்ஸ் இருந்ததாக ஞாபகம், ஒவ்வொன்றுக்கும் தனியே கதவு உண்டு ஒரு சிறு அறை போலவே இருக்கும். ஜோடிகளுக்கு பொருத்தமான இடம் அந்த காலத்தில். சபையரில் இன்னுமொரு பிரத்யேக சிறப்பு, அங்கு வெளிவந்து ஓடிய படங்களை, வெளியிட்ட தேதிகளை, ஓடிய நாட்களை, வசூலித்த தொகையை நயா பைசா கணக்காக பட்டியலிட்டு கேண்டின் இருந்த இடத்துக்கு மேலாக பெயின்ட் செய்திருப்பார்கள். என்னை போன்றவர்கள் அங்கு நின்று பட்டியலை பார்த்த வண்ணம் இருப்போம். கேண்டினில் மற்றொரு அறிய விடயம்,



மற்றெங்குமில்லாது அங்கு Frankfurter எனப்படும் Hotdog விற்பார்கள். நான் அதை ஒரு அருங்காட்சியகப்பொருள் போன்று பார்ப்பேன் (சாப்பிட்டது கிடையாது). சபையரில் முதல் படம் Cleopatra (தவறாக இருக்காது) அது 50 வாரம் ஓடி சாதனை செய்தது. அது போல் அங்கு காலை காட்சியில் கமலின் தெலுங்கு படம் மரோசரித்ரா 595 நாட்கள் ஓடியது. தமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கு வித்தாக இருந்த படம், நம் மக்களுக்கு Kung Fu என்ற சொல்லை சாமானியர்களூம் உச்சரிக்க வைத்த படம் லியூ சியா உய் நடித்த 36th Chamber of Shaolin. இங்கு சாதனை ஓட்டம் படைத்து 45 வாரங்களுக்கு மேல் ஓடியது. . இதில் சபையர் என்ற மெயின் ஸ்கீரினின் எண்ணிக்கை 1200+. மற்ற இரண்டும் இதில் பாதி அளவு கூட இல்லாத சிறிய ஸ்கீரின்கள் தான். இந்த சபையர் தியேட்டர் மெயின் ஸ்கீரினில் அவ்வளவு எளிதாக ஒரு தமிழ் படத்தை ரெகுலர் 3, 4 தினசரி காட்சிகளில் திரையிடமாட்டார்கள். கமலஹாசனுக்கு பின்பு நடிக்க வந்தாலும் அவருக்கு முன்பே இந்த மெயின் ஸ்கீரினில் ரஜினியின் "தீ"(1981) படம் ரெகுலர் காட்சியில் வெளியானது..!
*தீ படத்தோடு அன்றைய தினம் வெளிவந்த கமலஹாசனின் 'மீண்டும் கோகிலா' படத்திற்க்கு சபையர் காம்ப்ளக்ஸின் சிறிய ஸ்கீரின் தான் கிடைத்தது. See Less ப்ளூ டைமண்ட் தியேட்டரில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் படத்தில் சென்று அமரலாம் என்ற சிஸ்டம் இருந்தது. படம் முடிய பத்து நிமிடம் இருக்கும்போதுகூட போய் அமரலாம். அடுத்த காட்சி ஆரம்பிக்கும்போது அப்படியே தொடர்ந்து அமர்ந்திருக்கலாம். டால்ஸ்டாயின் அன்னா கரீனினா போன்ற படங்கள் அதில் எந்த நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும். முதல் காட்சியில் உள்ளே போய் இரவுக் காட்சி முடிந்து வெளியே வருபவர்களும் உண்டு. அது ஒரு வித்தியாசமான சிஸ்டம். எமரால்டு ஒரு சிறு அரங்கம்தான், இங்கு பிரபலமாக ஓடிய படம் கயாமத் சே கயாமத் தக் (40 வாரங்களுக்கு மேல் என்ற நினைவு) ஜூகி சாவ்லா இந்தியில் அறிமுகமான படம். அவர் ஏற்கனவே தமிழில் பருவராகத்தில் வந்து எங்கள் இதயங்களை ஆட்கொண்டவர என்பது கூடுதல் சிறப்பு. அவர் மிஸ் இந்தியா பட்டம் வென்றவரும் கூட.
இங்கு மிகுந்த விசேடமான அரங்கம் ப்ளூ டைமண்ட். சிறிய அரங்கமென்றாலும் பல அறிய வகையான வித்தியாசங்கள் நிறைந்த திரையரங்கம். இங்கு ஒரேயொரு டிக்கெட் தரவரிசை தான் (எவ்வளவு என்பது நினைவில் இல்லை). காலையில் எங்குமில்லாதது போல் இங்கு தினசரி 9:00 மணிக்கு காட்சியை தொடங்குவார்கள். தொடர்காட்சிகளாக படத்தை திரையிடுவார்கள். அதாவது, 9:00 மணி ஆட்டத்துக்கு டிக்கெட் வாங்கினால் நாம் தொடர்ச்சியாக படத்தை இரவு காட்சி வரை பார்க்கலாம். இல்லை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே செல்லலாம். இது போல் வேறெங்கும் இந்தியாவில் இருந்ததாக தெரியவில்லை. நாங்கள் வெறும் பார்வையாளர் மட்டுமே. இங்கு நான் பார்த்த படம் Ice Castle என்ற வீணாய்ப்போன படம். இந்த வளாகத்தில் ஒரு ராஜஸ்தானி உணவகமும் இருந்தது வித்தியாசம் .அருண்பிரசாத் அவர்களுக்கு நன்றி .
62
18 Comments
11 Shares
Like
Comment
Share

No comments:

Post a Comment