CHENNAI FILM INSTITUTE
CHENNAI FILM INSTITUTE தேவதாஸ் கனகாலா என்கிற தெலுங்கு நடிகர் புனா ஃபிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் படித்தவர். இவரது வகுப்புத்தோழர்கள் தாம் சத்ருக்கன் சொன்ஹா, அமிதாப் மனைவி ஜெயபாதுரி போன்றோர். இவருக்கு சென்னையில் அதேப்போல ஒரு நடிப்புப்பயிற்சி கல்லூரியில் பயிற்சியாளர் வேலை கிடைத்தது. 73ல் தொடங்கப்பட்ட சௌத் இன்டியன் பிலிம் சேம்பர் இன்ஸ்ட்டிடியூட் Institute of SIFCC தொடங்கிய போது அதில் பெரிய இயக்குனர்கள் பங்கெடுத்தனர். இவரது மனைவி லக்ஷ்மி தான் பிரின்சிபல். முதல் பேட்ஜில் ரஜினிகாந்த், நடராஜ்..இரண்டாவது பேட்ஜில் 74ல் ராஜேந்திரபிரசாத், மூன்றாவது பேட்ஜ் பற்றி தெரியவில்லை. நான்காவது பேட்ஜ் 76ல் சுதாகர், பானுச்சந்தர், 77ல் ஐந்தாவது பேட்ஜில் சிரஞ்சீவி என எல்லோருக்கும் நடிப்புப்பயிற்சி கொடுத்தவர் இவரின் மனைவி லக்ஷ்மி. முதல் பேட்ஜ்க்கு தேவதாஸ் அதாவது 73, 74ல் மட்டும் பயிற்சி கொடுத்துவிட்டு 75ல் ராஜினாமா செய்து விட்டார். பொறுப்பு சேம்பர் மூடும் 78 வரை லக்ஷ்மி தேவதாஸே பயிற்சியாளர். புல்லையா, பாலச்சந்தர், எல்.வி.பிரசாத், கே.விஸ்வநாத், பாப்பு போன்றோரின் வகுப்புகள் மூலம் அதிலுள்ள மாணவர்களுக...