HOW CELLS GOT INFECTED ?
HOW CELLS GOT INFECTED ? கிருமிகள் உலகில் மனிதர்கள் - 7 சாதாரணமாக வெளியேற வேண்டிய கழிவுகளை செல்களில் தேக்கமடைய வைத்து இரண்டாம் நிலைக் கழிவுகளைப் பெற்றோம். அப்போதும் நம்முடைய செல் தொந்தரவுகள் மூலம் கழிவுகளை வெளியேற்ற முயல்கிறது. இந்த நிலையில் நாம் முன்பு பார்த்த பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து கொண்டிருப்பது மூலமும், கழிவு வெளியேறுவதற் காக உடல் ஏற்படுத்திய தொந்தரவுகளை தவறாகப் புரிந்து கொண்டு கழிவு வெளியேற்றத்தை நிறுத்துவதன் மூலமும் செல்லின் கழிவுகள் ரசாயனக் கழிவுகளாக உருமாறுகின்றன. இது மூன்றாம் நிலைக் கழிவுகளாகும். சாதரணக் கழிவுகள் தேக்கமடைந்த வையாக மாறும் போதே அதன் தன்மை மோசமானதாக மாறுகிறது. உதாரணமாக, நாம் தினமும் மலம் கழிக்கிறோம். இது ஒரு தினசரி பழக்கமாக இருக்கும் போது அன்றாடம் உருவாகும் மலம் உடனே வெளியேற்றப்படுவதால் அதன் தன்மை சாதாரணமாக இருக்கும். ஆனால், நமக்கு திடீரென்று இரண்டு, மூன்று நாட்கள் மலம் போகவில்லை என்று வைத்துக் கொள்வோம். இப்படி ஏற்பட்ட மலச்சிக்கலுக்குப் பின்பு மூன்று நாட்களுக்குப் பிறகு மலம் வெளியேறினால் அதன் தன்மை எப்படி இருக்கும்? சாதாரணமாக வெளியேறும் மலத...