Showing posts with label CHANGE. Show all posts
Showing posts with label CHANGE. Show all posts

Friday, 8 October 2021

RELIGION CHANGE AND PARTITION OF INDIA BY JINNAH

 

RELIGION CHANGE AND PARTITION OF INDIA  BY  JINNAH




ஒரு தனி மனிதன் மதம் மாறினால் என்ன ஆகப்போகிறது? அவனுக்கு பிடித்த மதத்தில் அவன் இருந்துவிட்டு போகிறான். இதனால உனக்கு என்ன பாதிப்பு?” என்று கேட்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்த வரலாற்று பதிவு. படித்து சிந்தியுங்கள்,பக்குவம் கொள்ளுங்கள்!!


ஒரு தனி மனிதன் மதம் மாறியதால், நாடே துண்டாப்பட்டுள்ளது. இதுதான் வரலாறு.

இதற்கு நமது சமகால உதாரணம், பாகிஸ்தானின் தந்தை என்றழைக்கப்படும் முகமது அலி ஜின்னா.


யார் இந்த ஜின்னா?


முகலாயர் காலத்து பரம்பரை முஸ்லீமா? இன்றைய பாகிஸ்தானைச் சேர்ந்தவரா? உருதினை தாய் மொழியாகக் கொண்டவரா?இல்லை, இல்லவே இல்லை.அப்படியெனில் இவர் யார்?



முகலாயப் படையெடுப்புகளின் போது, அவர்களிடம் அகப்பட்டு முஸ்லிமாக மதம் மாறுவதைவிட சாவதே மேல் என்று “உடன்கட்டை ஏறி” உயிரை மாய்த்தார்களே, அந்த தாய்மார்களை போற்றிப் புகழும்  இந்து ராஜபுத்திர வம்சத்தை சேர்தவர்தான் முகமது அலி ஜின்னா.


இவரது தாத்தா பூஞ்ஜா கோகுல்தாஸ் மெக்ஜி, சைவ உணவு சாப்பிடும் குடும்பத்தினர். அவர்கள் அசைவம் சாப்பிடுவதில்லை.அப்படிப்பட்டவர்தான் முஸ்லிமாக மதம் மாறினார். அவர்தான்  ஜின்னாவின் குடும்பத்தில் முதலில் மதம் மாறிய முதல் நபர்.


ஜின்னாவின் தந்தையின் பெயர் புஞ்சாலால் தாக்கர். முஸ்லிமாக அவர் மதம் மாறியபின் தனது பெயரை பூஞ்சா ஜின்னோ என்று மாற்றிக் கொண்டார்.


ஜின்னாவின் ஊர் பனேலி மோத்தி என்ற கிராமம். இது குஜராத் மாநிலத்தில் உள்ள கத்தியவார் பகுதியில் உள்ளது.


ஜின்னாவின் தாய்மொழி குஜராத்தி. இவரது தாத்தா மதம் மாறிய ஒரு முஸ்லிம். ஆனால் பேரன் ஜின்னா, அந்த தாத்தா ஏற்றுக்கொண்ட மதத்திற்காக “இஸ்லாமியர்களுக்காக பாகிஸ்தான் உருவாக்கப்பட வேண்டும், இல்லையேல் பாரதம் அழிக்கப்படும்” என்று அறைக்கூவல் விடுத்தார்.


தனது மதத்திற்காக தாய் நாட்டையே அழிப்பேன் என்று கூறும் அளவிற்கு முஸ்லிம் அடிப்படைவாதம் அவரிடம் குடியேறியிருந்தது. இதனால்தான், “ஒரு தனிநபரின் மதமாற்றம், இந்த நாடு துண்டாட காரணமாகும்” என்கிறார்கள். இங்கே அந்த தனிநபர் ஜின்னாவின் தாத்தா பிரேம்ஜி பாய் தாக்கர்.


குஜராத்தியை தாய் மொழியாக கொண்ட ஜின்னா, பாகிஸ்தான் உருவானதும் முன் வைத்த முதல் கொள்கை என்ன தெரியுமா?


அனைவருக்குமான ஒரே மொழி உருது மட்டுமே, அதற்கான காரணம் யாதெனில், உருது மொழியானது முஸ்லிம் வரலாற்றோடு பிணைந்த புனித மொழி” என்று ஜின்னா கருதினார்.


அதே நேரம் பாகிஸ்தானில் அன்றைய காலகட்டத்தில் உருது பேசிய மக்கள் வெறும் 7% தான். கிழக்கு பாகிஸ்தானில் 2% தான்.


பாகிஸ்தானின் பெரும்பான்மை மக்கள் பேசிய மொழிகள் சிந்து, பஞ்சாபி மற்றும் பஷ்து மொழிகளே. கிழக்கு பாகிஸ்தானில் அதாவது இன்றைய வங்காள தேசத்தில், வங்கமே பிரதான மொழி. கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து, வங்கதேசம் என்ற தனி நாடாக அமைய இதுவே மூல காரணம்.


ஒரு தனி மனிதனின் மதமாற்றத்தால், ஒரு நாடே தன் தாய் மொழிகளை தாரைவார்க்க வேண்டியதாயிற்று. இந்த இடத்தில் அந்த தனிமனிதன் ஜின்னாவின் தாத்தா பூஞ்ஜா கோகுல்தாஸ் மெக்ஜி இருக்கிறார்.


ராஜபுத்திர காலாச்சாரத்திற்கும், இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும் உதாரணம் சொல்ல வேண்டுமானால், தயிர் சாதத்தில் மாட்டுக்றி கலந்தது போன்றது என்று கூறலாம். இந்த கலாச்சார சீரழிவு ஜின்னாவின் தாத்தா பூஞ்ஜா கோகுல்தாஸ் மெக்ஜி, முஸ்லிமாக மதம் மாறியதால் வந்த வினை.( நன்றி கதிர் நியூஸ்).


*உண்மைகளை உணர்ந்து தாய்மதம் வருபவர்களை ஆதரியுங்கள்!! அதை தருகிறோம்,இதை பெறலாம் என்று  பொய்மை கூறி ஆள் சேர்க்க அலையும் கூட்டத்திற்கு உண்மையை உணர்த்துங்கள்.


1.Portrait of Jinnah's father, Jinnahbhai Poonja

2.Jinnah

Saturday, 20 March 2021

TIRUPUR STORY - LABOURERS ARE NOT ALLOWED TO CHANGE NAPKINS

 

TIRUPUR STORY - LABOURERS ARE 

NOT ALLOWED TO CHANGE NAPKINS




“நேப்கின் பேடுகளைகூட மாற்ற விடமாட்டார்கள்” – வாழ்வாதாரத்துக்காக புலம்பெயர்ந்த இளம் தொழிலாளர்களின் கதை #TamilNaduOnWheels

அபர்ணா ராமமூர்த்தி

பிபிசி தமிழ்

18 மார்ச் 2021


இடம்: தென்கரும்பலூர் கிராமம், தண்டராம்பட்டு தாலுகா, திருவண்ணாமலை மாவட்டம்


"என் அப்பாக்கு காது கேக்காது. அம்மா வீட்ல இருக்காங்க. அண்ணனும் சரியில்ல. அதனாலதான் நான் 17 வயசுல வேலைக்கு போனேன். வெளில சொல்ல முடியாத அளவுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டேன்"


குடும்ப வறுமையில் சிக்கித் தவிக்கும் சௌந்தர்யாவின் வார்த்தைகள்தான் இவை. இவர் தனது குடும்பத்திற்காக சொந்த ஊரைவிட்டு சென்று வெளியூரில் வேலை பார்த்துள்ளார்.


திருவண்ணாமலை நகரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் தென்கரும்பலூர் கிராமத்தில் இருக்கும் சௌந்தர்யாவின் வீட்டில் ஒரே ஒரு அறைதான்.


சௌந்தர்யா வீட்டைபோல அப்பகுதியில் இருக்கும் பெரும்பாலானோரின் வீடுகளில் சமையலறை, படுக்கை அறை என அனைத்தும் ஒன்றாகவே இருக்கிறது.


திருவண்ணாமலை மாவட்டம் என்றால் நமக்கு உடனடியாக மனதிற்கு வருவது கார்த்திகை தீபம், அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதை ஆகியவைதான். ஆனால், அதையும் தாண்டி இங்கு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் இருக்கிறது என்பது அப்போதுதான் புரிந்தது.


சுமார் 24 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த மாவட்டம், அதிகம் சார்ந்திருப்பது என்னவோ விவசாயத்தைதான். ஆனால், ஆண்டு முழுவதும் தங்களுக்கு இது வருமானம் தருவதில்லை என்பதே இந்த மாவட்டத்தின் பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.


தலித் மற்றும் பட்டியலினத்தவர்கள் அதிகம் இருக்கும் இந்த மாவட்டம், 1970-80களில் வடக்கு ஆற்காடில் இருந்து பிரிக்கப்பட்டது. ஆனால், அப்போது முதல் பெரிய அளவிலான முன்னேற்றம் நடந்திருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.



தமிழ்நாடு தேர்தல் 2021

மாவட்டம் பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, பெருமளவிலான தொழிற்சாலைகள் வேலூர் மாவட்டத்துக்குள் வர, திருவண்ணாமலை மக்கள் பல தசாப்தங்களாக வேலைக்காக இடம் பெயர்ந்து செல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். உள்ளூரில் அதிக வேலைவாய்ப்பு இல்லாததே இதற்கு காரணம் என்பது சமூக செயற்பாட்டாளர்களின் கருத்து.


அப்படி வேலைக்காக இந்த மாவட்டத்தில் இருந்து பெரும்பாலானோர் செல்வது திருப்பூர் ஆடை தொழிற்சாலைகளுக்குதான். அப்படி சென்றவர்களில் ஒருவர்தான் சௌந்தர்யா.


சுமங்கலி திட்டத்தின் கீழ் திருப்பூருக்கு வேலைக்கு சென்ற அவர், தான் சந்தித்த துன்பங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்தார்.


சுமங்கலி திட்டம் என்றால் என்ன?

தமிழகத்தில் 1989ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக கூறப்படும் சுமங்கலி திட்டத்தின் மூலம், இளம் பெண்கள் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பஞ்சு அல்லது ஆடை ஆலைகளில் வேலைக்காக அழைத்து செல்லப்படுகிறார்கள்.



பெரும்பாலும் 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்களிடம் அவர்களின் திருமணத்தின்போது நல்ல பணம் தரப்படும் என்று கூறி அவர்களை அழைத்து செல்கிறார்கள்.


தமிழகத்தின் பெரும்பாலும் வேலைவாய்ப்புகள் குறைந்த பகுதிகளில் இருந்து தரகர்கள் மூலம் இவர்கள் கொண்டு செல்லப்படுகின்றனர்.


தமிழ்நாடு தேர்தல் 2021

ஈரோடு, திருப்பூர், கோவை, உடுமலைப் பேட்டை போன்ற பகுதிகளில், இந்த திட்டத்தின் செயல்பாடு அதிகமாக உள்ளதாக சில ஆய்வுக்கட்டுரைகள் கூறுகின்றன.


ஆனால், இந்த பெண்களிடம் அதிக நேரம் வேலை வாங்கி, குறைந்த வசதிகளை கொண்ட விடுதிகளில் தங்க வைத்து, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வருகிறது.


இந்த குற்றச்சாட்டு உண்மைதான் என்பதை, சௌந்தர்யாவின் வார்த்தைகள் நமக்கு உணர்த்தின.


'சொல்ல முடியாத கஷ்டத்தை அனுபவிச்சேன்'



"குடும்பத்துல ரொம்ப கஷ்டம். நானேதான் வேலைக்கு போலாம்னு முடிவு செஞ்சேன். என் பக்கத்து தெருல இருக்கற ஒருத்தவங்கதான் எனக்கு சொல்லிவிட்டாங்க. ஒரு மாசம்தான் இருந்தேன். அதுக்கு அப்பறம் முடியல.


முதல்ல 4 ஷிஃப்டுனு சொல்லி கூட்டிட்டு போனாங்க. ஆனா 8 ஷிஃப்டு பார்க்க வேண்டியதாக இருந்தது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை. நடுவில் ஓய்வு எடுக்கக்கூட விடமாட்டார்கள்.


எனக்கு பீரியட்ஸ். நா பேட் மாத்தனும்னு சொல்வேன். அதுக்கு கூட விடமாட்டாங்க. எனக்கு ரொம்ப உடம்பு சரியில்ல சார், எனக்கு லீவு வேணும்னு சொன்னா, நீ வேலை பாத்துட்டு போய் ரெஸ்ட் எடுத்துக்கோ அப்படினு சொல்வாங்க. இன்னும் பல சொல்ல முடியாத கஷ்டங்கள அனுபவிச்சேன்.


வீட்டுக்கு போன் பேசனும்னாலும் பேச விடமாட்டாங்க. நான் அங்க இருந்த ஒரு மாசத்துல 2 முறைதான் வீட்டுக்கு பேசினேன். அந்த விடுதில இருந்து ஒரு நிமிஷம்கூட எங்கள வெளில விடமாட்டாங்க. அப்படியே அடைச்சு வெச்ச மாதிரி இருக்கும்.


ஒரே ஒரு சின்ன அறைதான். அதுல நாங்க 15 பேர் இருந்தோம். எதாவது நம்ம எதிர்த்து பேசினா அடிக்கக்கூட அடிச்சுருவாங்க" என்று தன் கடினமான காலங்களை பகிர்ந்து கொண்ட சௌந்தர்யாவின் முகத்தில் நாம் அதிலிருந்து தப்பித்து வந்துவிட்டோம் என்ற சிறிய மகிழ்ச்சி தென்பட்டது.


சௌந்தர்யா மீட்கப்பட்டது எப்படி?


தான் அங்கிருந்து தப்பித்து வந்த கதையையும் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.


"போலீஸ் வராங்கனு தெரிஞ்ச உடனே பல பேர ஒளிச்சு வெச்சுடாங்க. நாங்க ஷிஃப்டு பாத்துட்டு இருந்தோம். எங்க கிட்ட வந்து போலீஸ் வராங்க, நீங்க யாரும் போகாதீங்க, நாங்க சம்பளம் அதிகமா தரோம்னு சொன்னாங்க. ஆனா நாங்க கேக்கல. போலீஸ் வந்து 18 வயசுக்கு கீழ யாருலா இங்க விருப்பம் இல்லாம இருக்கீங்க. கை தூக்குங்கனு சொன்னாங்க. நானும் இன்னும் சில பேரும் கை தூக்கினோம். கலெக்டர் ஆஃபீஸ் மூலமா எங்கள கூட்டிட்டு வந்து ஒரு காப்பகத்துல வெச்சுருந்தாங்க.


அப்பறம் அங்க இருந்து என் அம்மா அப்பா என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. அவங்கள பாத்ததுக்கு அப்பறம்தான் எனக்கு நிம்மதி சந்தோஷமே வந்துது. அம்மாவ பாக்கும்போது எனக்கு என் கண் ரொம்ப பெருசா வீங்கி இருந்தது. கண்ணே தெரில. உத்து வேலை பாத்து பாத்து பயங்கர வலி" என்று தான் அங்கிருந்து மீட்கப்பட்ட கதையை கூறினார் சௌந்தர்யா.


குடும்ப வறுமை காரணமாகவே தன் மகள் இப்படியொரு துன்பத்தை சந்திக்க வேண்டி இருந்ததாக கூறுகிறார் சௌந்தர்யாவின் தாய்.


"இன்னும் ஒரு வாரம் கழிச்சு வந்துருந்திங்கனா, நீங்க சௌந்தர்யாவ பாத்திருக்க முடியாது. வீட்டு வேலைக்காக பெங்களூருக்கு அனுப்பலாம்னு இருந்தேன்."


தற்போது சௌந்தர்யா தனது 12ஆம் வகுப்பு படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார். மேலும் படிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கிறது. ஆனால், அதற்கான சூழல் வீட்டில் இல்லை என்பதை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார்.


ஏன் இவர்களுக்கு இந்த நிலை என்று அப்பகுதி மக்களுக்கு உதவி புரியும் அரசு சாரா அமைப்பான 'சினம்' அமைப்பை சேர்ந்த பெருமாளிடம் கேட்டோம்.


அவர் இது போன்று சுமங்கலி திட்டத்தின் கீழ் அழைத்து செல்லப்பட்ட பல பெண்களை மீட்டுள்ளார்.


வறுமை மற்றும் வேலையின்மை


"வறுமைதான் இதற்கு முக்கிய காரணம். இப்படி செல்லும் பெரும்பாலானவர்கள், தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை. வேலை வாய்ப்பு இல்லை. குடும்ப சூழல் காரணமாகவே இவர்கள் இவ்வாறான வேலைகளை தேர்ந்தெடுத்து செல்கிறார்கள்" என்று கூறுகிறார் பெருமாள்.


குறிப்பாக இளம் பெண்களை படிக்க வைக்க, பெற்றோரிடம் காசு இல்லை. பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர், அவர்களை விட்டு வெளியூர்களுக்கு வேலை தேடி சென்றுவிடுவார்கள். இங்கு தொழிற்சாலைகள் அதிகம் இல்லை என்பதால், வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படுவதில்லை. விவசாயமும் இவர்களுக்கு எப்போது கை கொடுப்பதில்லை. அதனால் பிழைப்புக்கு இவ்வாறு போக வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.


அப்படி மீட்கப்பட்ட மற்றொரு பெண்ணின் வீட்டிற்கு பெருமாள் நம்மை கூட்டிச்சென்றார்.


பிபிசி தமிழுடன் இணைந்து மக்களை சந்திக்கும் புல்லட் பெண்கள்

கீதாவும் சுமங்கலி திட்டத்தின் கீழ் வேலை செய்ய அழைத்து செல்லப்பட்ட பெண்களில் ஒருவர். 18 வயதாகும் கீதாவுடன் சேர்ந்து மொத்தம் அவர்கள் வீட்டில் 3 பெண்கள்.


கீதாவின் பாட்டி முனியம்மா கூறுகையில், "என் பேத்தி அங்க ரொம்ப கஷ்டப்பட்டதா சொன்னா. நிறைய நேரம் அதிக வேலை. ஆனா பலரையும் அரசு மீட்டப்ப அவ மட்டும் வரல. அங்கேயே மாட்டிக்கிட்டா. அப்பறம் கலெக்டர்ட மனு குடுத்து, அவள மீட்டு வந்தோம்" என்றார்.


"அவங்க அப்பா சரியில்ல. குடி. அவங்க அம்மா வீட்டு வேலை பாக்க மெட்ராஸ் பொயிட்டாங்க. நான்தான் அவங்கள ரொம்ப வருஷமா வளர்க்கறேன்" என்று கூறும் முனியம்மா பேச்சிலேயே சோகம் அப்பியிருந்தது


ஏன் இந்த நிலை?


"திருவண்ணாமலை மாவட்டம் எப்போதும் அரசாங்கத்தின் முன்னுரிமை பட்டியலில் இருப்பதில்லை," என்கிறார் மக்கள் கைவினைப் பயிற்சி மையம் (People's Craft Training Centre) என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சேவியர் மரியதாஸ்.


"இடம் பெயர்தல், வேலை தேடி வெளியூர் செல்வது என்பது இங்கு ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது. இதனை ஒரு பிரச்சனையாகவே தற்போது யாரும் பார்ப்பதில்லை. காரணம் இங்கு தொழிற்சாலைகளோ வேலைவாய்ப்புகளோ இல்லை. பெரும்பாலான மக்கள் குறிப்பாக தண்டராம்பட்டு, ஜவ்வாது பகுதிகளில் படிப்பறிவு, எழுத்தறிவு குறைவாக இருப்பதால், தங்களுக்கு என்னென்ன உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதே அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது. இந்த விவகாரம் பெரிதாக பேசப்படுவதில்லை என்பதால்,இதனை ஒரு தேர்தல் விஷயமாக எந்த அரசியல் கட்சிகளுக்கு எடுத்துக் கொள்வதில்லை. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இவர்களின் விடியலுக்கு வழி கிடைக்குமா என்றால் அது கேள்விக்குறிதான்" என்று கூறுகிறார் சேவியர் மரியதாஸ்.


(செய்தி சேகரிக்க கூடுதல் உதவி: அ.தா. பாலசுப்பிரமணியன், பிபிசி தமிழ்)


Saturday, 13 February 2021

INDIA CAPITAL CITY CALCUTTA WAS CHANGED , SHIFTED TO NEWDELHI FEBRUARY 13,1931

 

INDIA CAPITAL CITY CALCUTTA WAS CHANGED ,

SHIFTED TO NEWDELHI FEBRUARY 13,1931




புது தில்லி (இந்தி: नई दिल्ली, உருது: نئی دہلی) இந்தியாவின் தலைநகரமாகும். இது தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள ஒரு மாவட்டமும், பெருநகரமும் ஆகும். புது தில்லி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநகரமாகும். தேசிய தலைநகர மண்டலம் என்றழைக்கப்படும் தில்லியின் மாநகரப்பகுதியானது அரியானாவிலுள்ள ஃபரிதாபாத், குர்கான் மற்றும் உத்தரப்பிரதேசத்திலுள்ள நோய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியது.


ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் 1911ஆம் ஆண்டு தனது தில்லி தர்பாரின் போது திசம்பர் 15 இல் இம்மாநகருக்கான அடிக்கல்லை நாட்டினார்.[4] இதனை இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற பிரித்தானியக் கட்டிடக்கலை வல்லுநர்களான சர் எட்வின் லூட்டியன்சும் சர் எர்பெர்ட்டு பேக்கரும் வடிவமைத்து உருவாக்கினர். புதிதாய் உருவாக்கப்பட்ட மாநகருக்கு புது தில்லி என 1927ல் பெயர் சூட்டப்பட்டு[5] 1931 பெப்ரவரி 13 அன்று பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.[6] புது தில்லியிலுள்ள உமாயூனின் சமாதியும், செங்கோட்டையும், குதுப்பின் வளாகமும் உலகப் பாரம்பரியக் களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.[7]



புது தில்லி இந்தியாவின் நுண்ணுயிராகவும், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியிலும் உலகநாடுகளுக்கு நிகராக முன்னேறியுள்ளது[8]. மேலும், 21 மில்லியன் மக்கட்தொகையோடு நாட்டின் அதிக மக்கள் கொண்ட மாநகரப் பட்டியலில் முதன்மையாகவும்[9], நகரமைப்பில், 23 மில்லியன் மக்கள் தொகையோடு, உலக மக்கள்தொகை பட்டியலில் ஏழாவதாகவும் விளங்குகிறது[10]. அமெரிக்க ஆலோசனை நிறுவனமான மெர்சரின் ஆய்வுப்படி, உலகின் விலையுயர்ந்த வாழ்வாதாரத்தைக் கொண்ட 214 நகரங்களில், புது தில்லி 113வது இடத்தைப் பிடித்துள்ளது[11]. இங்கிலாந்தைச் சேர்ந்த லாக்பராக் பல்கலைப்பழகம், புது தில்லியை தங்களது தலையாய உலக நகரங்களுள் ஒன்றாக அறிவித்துள்ளது[12]. 2011 இல் லண்டன் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனமான நைட் ப்ராங்கின் உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் 37வது இடத்தையும் பிடித்துள்ளது[13].

வரலாறு

புராண காலமான, மஹாபாரதத்தில், விஸ்வகர்மாவால் பாண்டவர்களுக்காக, கடவுள் கிருஷ்ணரின் ஆணைக்கிணங்க, உருவாக்கப்பட்ட நகரம் இந்திரப்ரஸ்தம் ( தில்லியின் பழைய பெயர் ). இன்றைய தில்லியிலும் ஒரு பகுதி இந்திரப்ரஸ்தம் என்றே வழங்கப்படுகிறது. [14]


தில்லி மாநகரானது முகலாயப் பேரரசரான ஷாஜகானால் நிறுவப்பட்டதாகும். ஏழு புராதான நகரங்களால் உருவாகிய தில்லி, வரலாற்றுச் சிறப்புகளான உமாயூனின் சமாதி, ஜந்தர் மந்தர், லோதித் தோட்டம் ஆகியவைகளைக் கொண்டுள்ளது[15]




பத்தாம் நூற்றாண்டில், புது தில்லியை உருவாக்கிய ப்ரித்திவிராஜ சவுகான் நினைவு அருங்காட்சியத்தின் நடைபாதை.

நிறுவியது

இந்திய நாடு, பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது 1911 ஆம் ஆண்டிற்கு முன், கல்கத்தாவே நாட்டின் தலைநகராக விளங்கியது. தில்லி மாநகரானது, 1649 முதல் 1857 வரையிலான ஆண்டுகளில், சுல்தானிய மற்றும் முகலாய பேரரசுகளின் அரசியல் மற்றும் நிதிகளை கையாளும் மையமாக இருந்தது. 1900 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசு தனது தலைமையகத்தை கல்கத்தாவலிருந்து தில்லிக்கு மாற்றியது. கல்கத்தா, இந்தியாவின் கிழக்கில் இருப்பதால் ஏற்பட்ட தகவல் பரிமாற்றத்தின் சிக்கல்களுக்கு தீர்வாக, தனது தலைநகரத்தை இந்தியாவின் வடக்கில் இருக்கும் தில்லிக்கு மாற்றியது[16].


12 திசம்பர் 1911 இல் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ், அரசி மேரி மற்றும் அரசி கன்சார்ட் ஆகியோரைக் கொண்ட புது தில்லிப் பேரவை கூட்டப்பட்டு, பிரித்தானிய இந்தியாவின் புதிய தலைநகராக தில்லியை அறிவித்தனர்[17][18]. மேலும் இராஜப்பிரதிநிதி தங்குவதற்கான மாளிகைக்கு தில்லியிலுள்ள முடிசூட்டுப் பூங்காவில் அடிக்கல் நாட்டினார்.[19][20]. புது தில்லியின் பெரும்பகுதியான கட்டுமானங்கள், ஆங்கிலேய கட்டிடக்கலை வல்லுனர்களான திரு. எட்வின் லுட்டியன், திரு. ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரது சீறிய முயர்ச்சியாலும் திரு. சோபா சிங் அவர்களின் பங்களிப்பாலும் சிறப்பாக நடந்தேறியது. கட்டுமானப்பணிகள், 1911 ஆம் ஆண்டில் ஆரம்பமாகியிருந்தாலும், அனைத்து வேலைகளும் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தியே ஆரம்பிக்கப்பட்டன. இறுதியில், 13 பெப்ரவரி 1931 அன்று பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது[21][22].


புவி அமைப்பு

தில்லி பெருநகரப் பகுதியில், 42.7சதுர கி.மீட்டரைக் கொண்டு புது தில்லி அமைந்துள்ளது[23]. மேலும் புவியமைப்பை கணக்கிடும் பொழுது புது தில்லி, கங்கைச் சமவெளியில் அமைந்துள்ளது. ஆரவள்ளி மலைத்தொடரின் நடுவே அமைந்திருக்கும் புது தில்லியின் மேற்கே யமுனை ஆறும் பாய்கிறது. ஷாதரா என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமும், யமுனையாற்றின் கிழக்கே அமைந்துள்ளது. புது தில்லியானது, நில அதிர்வு மண்டலத்தின் கீழ் வருவதால், இவ்விடம் பூகம்பங்களால் பாதிக்கப்படலாம்[24]


மாவட்ட நிர்வாகம்

மேலும் தகவல்களுக்கு: புது தில்லி மாநகராட்சி மன்றம்

புது தில்லி மாவட்டம் சாணக்கியபுரி, தில்லி கண்டோன்மெண்ட் மற்றும் வசந்த விகார் என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. புது தில்லி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கன்னாட்டு பிளேசில் உள்ளது.


மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 142,004 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் -20.72% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 77,942 ஆண்களும்; 64,062 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 822 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 35 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 4,057 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 88.34 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 92.24 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 83.56 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 12,760 ஆக உள்ளது. [25]


சமயம்

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 124,482 (87.66 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 8,480 (5.97 %) ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 2,933 (2.07 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை 679 (0.48 %) ஆகவும்; கிறித்தவ மக்கள் தொகை 4,852 (3.42 %) ஆகவும்; பௌத்த சமய மக்கள் தொகை 312 (0.22 %) ஆகவும் உள்ளது.

புது தில்லியில் அமைக்கப்பட்ட
இந்தியாவின் நுழைவுவாயில்
என்றழைக்கப்படும் முதலாம்
உலகப்போரில், உயிர்த்தியாகம்
 செய்தோருக்கான நினைவிடம்


மொழிகள்

தேசிய தலைநகர் வலயத்தின் ஆட்சி மொழிகளான இந்தி மற்றும் ஆங்கிலத்துடன், பஞ்சாபி, உருது, தமிழ் மற்றும் இந்தியாவின் பெரும்பாலான மாநில மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.


காலநிலை

புது தில்லியின் காலநிலையானது ஈரமான மிதவெப்பப் பருவத்தைக் கொண்டுள்ளது. அதனால் இங்கு, கோடை மற்றும் குளிர் காலங்களில் அதன் உச்சத்தில் இருக்கும். தட்பவெப்பநிலை, கோடைக் காலங்களில் 46 °C (115 °F)ம், குளிர் காலங்களில் 0 °C (32 °F)ம் இருக்கும். இத்தகைய காலநிலையைக் கொண்ட நகரங்களிலிருந்து புது தில்லியில் தனித்து காணப்படுகிறது. ஏனென்றால், கோடைக் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவும், குளிர் காலங்களில் குளிரின்தன்மை அதிகமாகவும் காணப்படும்.