Friday 8 October 2021

RELIGION CHANGE AND PARTITION OF INDIA BY JINNAH

 

RELIGION CHANGE AND PARTITION OF INDIA  BY  JINNAH




ஒரு தனி மனிதன் மதம் மாறினால் என்ன ஆகப்போகிறது? அவனுக்கு பிடித்த மதத்தில் அவன் இருந்துவிட்டு போகிறான். இதனால உனக்கு என்ன பாதிப்பு?” என்று கேட்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்த வரலாற்று பதிவு. படித்து சிந்தியுங்கள்,பக்குவம் கொள்ளுங்கள்!!


ஒரு தனி மனிதன் மதம் மாறியதால், நாடே துண்டாப்பட்டுள்ளது. இதுதான் வரலாறு.

இதற்கு நமது சமகால உதாரணம், பாகிஸ்தானின் தந்தை என்றழைக்கப்படும் முகமது அலி ஜின்னா.


யார் இந்த ஜின்னா?


முகலாயர் காலத்து பரம்பரை முஸ்லீமா? இன்றைய பாகிஸ்தானைச் சேர்ந்தவரா? உருதினை தாய் மொழியாகக் கொண்டவரா?இல்லை, இல்லவே இல்லை.அப்படியெனில் இவர் யார்?



முகலாயப் படையெடுப்புகளின் போது, அவர்களிடம் அகப்பட்டு முஸ்லிமாக மதம் மாறுவதைவிட சாவதே மேல் என்று “உடன்கட்டை ஏறி” உயிரை மாய்த்தார்களே, அந்த தாய்மார்களை போற்றிப் புகழும்  இந்து ராஜபுத்திர வம்சத்தை சேர்தவர்தான் முகமது அலி ஜின்னா.


இவரது தாத்தா பூஞ்ஜா கோகுல்தாஸ் மெக்ஜி, சைவ உணவு சாப்பிடும் குடும்பத்தினர். அவர்கள் அசைவம் சாப்பிடுவதில்லை.அப்படிப்பட்டவர்தான் முஸ்லிமாக மதம் மாறினார். அவர்தான்  ஜின்னாவின் குடும்பத்தில் முதலில் மதம் மாறிய முதல் நபர்.


ஜின்னாவின் தந்தையின் பெயர் புஞ்சாலால் தாக்கர். முஸ்லிமாக அவர் மதம் மாறியபின் தனது பெயரை பூஞ்சா ஜின்னோ என்று மாற்றிக் கொண்டார்.


ஜின்னாவின் ஊர் பனேலி மோத்தி என்ற கிராமம். இது குஜராத் மாநிலத்தில் உள்ள கத்தியவார் பகுதியில் உள்ளது.


ஜின்னாவின் தாய்மொழி குஜராத்தி. இவரது தாத்தா மதம் மாறிய ஒரு முஸ்லிம். ஆனால் பேரன் ஜின்னா, அந்த தாத்தா ஏற்றுக்கொண்ட மதத்திற்காக “இஸ்லாமியர்களுக்காக பாகிஸ்தான் உருவாக்கப்பட வேண்டும், இல்லையேல் பாரதம் அழிக்கப்படும்” என்று அறைக்கூவல் விடுத்தார்.


தனது மதத்திற்காக தாய் நாட்டையே அழிப்பேன் என்று கூறும் அளவிற்கு முஸ்லிம் அடிப்படைவாதம் அவரிடம் குடியேறியிருந்தது. இதனால்தான், “ஒரு தனிநபரின் மதமாற்றம், இந்த நாடு துண்டாட காரணமாகும்” என்கிறார்கள். இங்கே அந்த தனிநபர் ஜின்னாவின் தாத்தா பிரேம்ஜி பாய் தாக்கர்.


குஜராத்தியை தாய் மொழியாக கொண்ட ஜின்னா, பாகிஸ்தான் உருவானதும் முன் வைத்த முதல் கொள்கை என்ன தெரியுமா?


அனைவருக்குமான ஒரே மொழி உருது மட்டுமே, அதற்கான காரணம் யாதெனில், உருது மொழியானது முஸ்லிம் வரலாற்றோடு பிணைந்த புனித மொழி” என்று ஜின்னா கருதினார்.


அதே நேரம் பாகிஸ்தானில் அன்றைய காலகட்டத்தில் உருது பேசிய மக்கள் வெறும் 7% தான். கிழக்கு பாகிஸ்தானில் 2% தான்.


பாகிஸ்தானின் பெரும்பான்மை மக்கள் பேசிய மொழிகள் சிந்து, பஞ்சாபி மற்றும் பஷ்து மொழிகளே. கிழக்கு பாகிஸ்தானில் அதாவது இன்றைய வங்காள தேசத்தில், வங்கமே பிரதான மொழி. கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து, வங்கதேசம் என்ற தனி நாடாக அமைய இதுவே மூல காரணம்.


ஒரு தனி மனிதனின் மதமாற்றத்தால், ஒரு நாடே தன் தாய் மொழிகளை தாரைவார்க்க வேண்டியதாயிற்று. இந்த இடத்தில் அந்த தனிமனிதன் ஜின்னாவின் தாத்தா பூஞ்ஜா கோகுல்தாஸ் மெக்ஜி இருக்கிறார்.


ராஜபுத்திர காலாச்சாரத்திற்கும், இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும் உதாரணம் சொல்ல வேண்டுமானால், தயிர் சாதத்தில் மாட்டுக்றி கலந்தது போன்றது என்று கூறலாம். இந்த கலாச்சார சீரழிவு ஜின்னாவின் தாத்தா பூஞ்ஜா கோகுல்தாஸ் மெக்ஜி, முஸ்லிமாக மதம் மாறியதால் வந்த வினை.( நன்றி கதிர் நியூஸ்).


*உண்மைகளை உணர்ந்து தாய்மதம் வருபவர்களை ஆதரியுங்கள்!! அதை தருகிறோம்,இதை பெறலாம் என்று  பொய்மை கூறி ஆள் சேர்க்க அலையும் கூட்டத்திற்கு உண்மையை உணர்த்துங்கள்.


1.Portrait of Jinnah's father, Jinnahbhai Poonja

2.Jinnah

No comments:

Post a Comment