Sunday 31 October 2021

vijayakumari actress

 


vijayakumari actress

நானாக இருக்கவே விரும்புகிறேன்!
நான் ஒருசில படங்கள்ல பாவாடை, தாவணி போட்டு நடிச்சேன். பிறகு முழுக்கவே புடவைதான். மாடர்ன் உடைகள் பயன்படுத்தினதேயில்லை. 1950-1975 வரை முன்னணி ஹீரோக்கள் எல்லோருடனும் ஜோடியா நடிச்சேன். 150 படங்களுக்குமேல நடிச்சிருப்பேன். 1980-களில் ரஜினி, பிரபுனு பல ஹீரோக்களுக்கும் அம்மாவா நடிச்சேன். 1960-களில் எங்க வீட்டில் 15-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தோம். அப்போ தேனாம்பேட்டையில் எங்க வீடு. விடியற்காலை எழுந்து, மெரினா பீச்சுக்கு வாக்கிங் போவேன். அப்போதும் சரி... இப்போதும் சரி... வீட்டு வேலைகளை நானே செய்வது வழக்கம். நடிகைங்கிற பிம்பம் என் நிஜ வாழ்க்கையில் வந்ததில்லை. பகட்டான தோரணையுடன் இருந்ததில்லை. என் இயல்பான குணங்களுடன், நான் நானாக இருக்கவே விரும்புகிறேன்.
கடைசியாக, `காதல் சடுகுடு' படத்தில் நடிச்சேன். பிறகு சினிமாவை விட்டு விலகி, தனிமை வாழ்க்கையில் அடைக்கலம் ஆகிட்டேன். பெரும்பாலும் வெளி நிகழ்ச்சிகளுக்கும் போவதில்லை. என் பிள்ளை ரவிக்குமார் குடும்பத்தினர் மற்றும் சொந்தக்காரங்க அடிக்கடி என்னை வந்து பார்ப்பாங்க. மத்தபடி, டி.வி பார்க்கிறதுதான் என் பிரதான பொழுதுபோக்கு. இந்த அமைதியான வாழ்க்கை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. `கற்றுக்கொள் கற்றுக்கொடு! ஏமாறாதே ஏமாற்றாதே! வாழு வாழவிடு!' - என் வாழ்வில் அனுபவ ரீதியா கடைப்பிடிச்ச, எல்லோருக்கும் ஆட்டோகிராபில் நான் எழுதிக்கொடுக்கும் வாசகம் இது. இந்த வாக்கியத்திலேயே என் வாழ்க்கைப் பயணமும் அடங்கியிருக்கு. நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததாக சந்தோஷப்படுகிறேன்!''
- கு.ஆனந்தராஜ் படங்கள்: க.பாலாஜி படங்கள் உதவி: ஞானம்
எம்.ஜி.ஆரும் நானும் வாங்கின ஓட்டுகள்!
1960-களில், ஒவ்வோர் ஆண்டும் வெளியான தமிழ்ப் படங்களில் தங்களுக்குப் பிடிச்ச படம், நடிகர், நடிகைகளை மலேசியா, சிங்கப்பூர் ரசிகர்கள் தேர்வு செய்வாங்க. அது அப்போ பெரிய கெளரவமா இருக்கும்.
1968-ம் ஆண்டுக்கான போட்டியில, 34,938 வாக்குகள் பெற்று எம்.ஜி.ஆர் அண்ணன் சிறந்த நடிகராகவும் 23,493 வாக்குகள் பெற்று நான் சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டோம். அந்த வெற்றித் தகவலை அறிந்த எம்.ஜி.ஆர் அண்ணன் உடனே போன் செய்து, எனக்கு வாழ்த்து சொன்னார். ரொம்ப சந்தோஷமான தருணம் அது!
வைரமுத்துவுக்கு நன்றி!
என் சுயசரிதையை, 2008-ம் ஆண்டு, ஒரு முன்னணி தினசரி பத்திரிகையில் தொடராக எழுதியிருந்தேன். அதைப் படிச்சுட்டு, கவிஞர் வைரமுத்து எனக்கு போன் செய்தார். `நீங்கள் குறிப்பிட்டிருந்த, `சென்ற ஜென்மம், அடுத்த ஜென்மத்தில் நம்பிக்கையில்லை. வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த ஜென்மத்தை மட்டுமே நம்புகிறேன்' என்ற வரிகள் நெகிழ்ச்சியாக இருந்தன; எனக்கு மிகப் பிடித்திருந்தது'னு சொன்னதுடன், ஒரு கடிதமும் அனுப்பினார். அந்தத் தருணத்தில் அவரின் பாராட்டு எனக்குப் பெரிய ஆறுதலா இருந்துச்சு. இந்தப் பேட்டியின் வாயிலாக அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்.
9
2013
Vijayakumari
விஜயகுமாரி ஓர் 1950-களில் நடிக்கத் துவங்கிய தமிழ்த் திரைப்பட நடிகை.பிறமொழி நடிகைகள் தமிழ்த் திரையுலகில் வலம் வந்தபோது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட விஜயகுமாரி பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர்.இவரது முதல் படம் அம்மையப்பன். ஸ்ரீதரின் ” கல்யாண பரிசு “, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் முதல் படம் சாரதா, ஆரூர்தாஸ் இயக்கிய “பெண் என்றால் பெண் ” மற்றும் மல்லியம் ராஜகோபாலின் “ஜீவனாம்சம்”. இதேபோல அவர் நடித்த திரைப்படங்கள் அவரேற்ற வேடத்தின் பெயர் கொண்டு வெளிவந்ததும் ஓர் சிறப்பாகும்.காட்டாக, சாரதா, சாந்தி, ஆனந்தி, பவானி ஆகும்.ஸ்ரீதரின் இயக்கத்தில் அவர் நடித்த போலீஸ்காரன் மகள் படத்திலும் ஏ. சி. திரிலோகச்சந்தர் இயக்கிய நானும் ஒரு பெண் படத்திலும் அவரது நடிப்பு மறக்க இயலாதது.
பூம்புகார் திரைப்படத்தில் கண்ணகியாக நடித்ததும் பின்னர் கண்ணகி சிலை வடிக்க துணை புரிந்ததும் குறித்து அவருக்கு மிக்க பெருமிதம்.
திரைப்பட நடிகர் எஸ். எஸ். இராஜேந்திரனை திருமணம் புரிந்து கொண்டார். இருப்பினும் மணவாழ்வில் ஏற்பட்ட பிணக்கின் விளைவாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இவருக்கு இரவி என்றொரு மகன் உள்ளார்.
பழமையை விரும்பும் அபிமானி திரு.ஆர்.பி.ராஜநாயஹம் என்பவர் அவரது http://rprajanayahem.blogspot.in வலைத்தளத்தில் விஜயகுமாரியைக் குறித்து சில தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தெரிந்து கொள்ளுங்கள். திரு.ஆர்.பி.ராஜநாயஹம் அவர்களுக்கு எனது நன்றி.
நடிகை விஜயகுமாரி பேட்டி சமீபத்தில் கலைஞர் டி வி யில் பார்க்க நேர்ந்தது . இளமை இவரிடம் எப்படி இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
அவர் காலத்து சரோஜா தேவியை விட இப்போது ரொம்ப அழகாக தெரிகிறார்.
கே ஆர் விஜயா தொப்பையும் ,தோற்பையுமாக கழன்று போய்விட்டார்.
பின்னால் வந்த ஜூனியர் நடிகை ‘கலர்’ காஞ்சனா இப்போது முழுக்கிழவி. ராஜஸ்ரீ யும் உருக்குலைந்து போன நிலை.
இவ்வளவு ஏன் இவர் கதாநாயகியாய் நடித்த ஜீவனாம்சம் படத்தில் அறிமுகமான லக்ஷிமியை இப்போது கமலின் ‘ உன்னைப்போல் ஒருவன் ‘ படத்தில் காண சகிக்கவில்லை.
இன்று கடந்த சிலவருடங்களுக்கு முன் வந்த நடிகைகளே எத்தனை பேர்
குண்டி, கை,நெஞ்சி,மூஞ்சி சுருங்கி வத்திப்போய் அல்லது ஊதிப்பெருத்து யாளி போல விகாரமாக தோற்றமளிக்கிறார்கள்.
ஆனால் விஜய குமாரி அப்படியே இளமையுடன் இருக்கிறார்!’எங்க வீட்டுக்காரர் ‘ என்று எஸ்.எஸ். ஆர் பற்றி இன்னமும் குறிப்பிடுவது சோகம் தான். அவர் எப்போதோ முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இவரை விட்டு விட்டு தாமரை செல்வி என்ற பெண்ணை மணந்து பிள்ளை குட்டி என்று ஒதுங்கி விட்டார். அல்லது விஜயகுமாரி ஒதுங்கிகொண்டதால் மூன்றாவது திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார் என்று கூட சொல்லலாம்.
இலட்சிய நடிகருடன் வாழ்வு கசந்து பிணக்கு ஏற்பட்டதை, பின்னால் பிரிவு தவிர்க்கமுடியாதது என்பதை அவருடைய தலைவர் சி.என். அண்ணாத்துரையிடம் நேரில் தான் விளக்கியதைப்பற்றி அந்த காலத்தில் ஒரு பேட்டியில் நடிகை விஜய குமாரி கூறியிருந்தார்.
விஜயகுமாரி மகன் ரவி நடிகர் விஜயகுமார் மூத்த மகளை (மஞ்சுளா மகள் அல்ல)திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டார்.நிம்மதி இல்லை என்று நடிகைகள் எப்போதும் சொல்வதை டி வி பேட்டியில் விஜயகுமாரி அடிக்கடி சொன்னார் .’தலையில் குத்து ,முதுகில் குத்து , நெஞ்சில் ஏகப்பட்ட குத்து ‘என்று அதை அப்படி தன் கையால் குத்தி செய்து காட்டினார்.
பிரச்னைகள் !The intray is never finished. யாருக்குமே தான் உயிர் உள்ளவரை!சினிமாவில் செயற்கைத்தனம், நாடகத்தனம் விஜயகுமாரியிடம் உண்டு. இயல்பாக துருதுருப்பு,படபடப்பு அதிகம் உள்ளவர் என்பதால் கொஞ்சம் மிகை நடிப்பு. பத்மினி கூட கொஞ்சம் மிகையாகத்தான் நடிப்பார்.
பூம்புகார் படம் பற்றியும் கண்ணகி சிலைக்கு மாடல் தான் தான் என்பதிலும் விஜயகுமாரிக்கு மிகுந்த பெருமிதம்.இவர் பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர்.
ஸ்ரீதர் ” கல்யாண பரிசு “.
கே .எஸ் . கோபாலகிருஷ்ணன் முதல் படம் ” சாரதா ” விஜயகுமாரி படங்களில் மாஸ்டர் பீஸ்!
பி . மாதவன் முதல் படம் ” மணியோசை ” யில் விஜயகுமாரி தான் கதாநாயகி .
ஆரூர் தாஸ் இயக்கிய முதல் படம் “பெண் என்றால் பெண் ” படத்திலும் நடித்துள்ளார்.
அன்று பேட்டி கொடுக்கும்போது அவர் நினைவில் வர மறுத்த படம் “ஜீவனாம்சம் “. மல்லியம் ராஜகோபால் இயக்கிய முதல் படம் . அதிலும் இவர் கதாநாயகி.
இன்னொன்று இவர் நடித்த கதாப்பாத்திரங்கள் பெயர் அப்போது படங்களின் பெயராக வைக்கப்பட்டிருக்கிறது.சாரதா,
சாந்தி,
ஆனந்தி,
பவானி
போன்ற படங்கள்.
கற்பகமும் இவருக்கு வந்தது தான். ஆனால் எஸ் எஸ் ஆர் தனக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே கற்பகமாக விஜயகுமாரி நடிக்க அனுமதி தரமுடியும் என்று பிடிவாதம் பிடித்ததால் கே.ஆர். விஜயா என்ற நடிகை கற்பகமாக தமிழ் திரையில் அறிமுகமானார் !
கே எஸ் ஜி ” இந்த விஜயா இல்லாவிட்டால் இன்னொரு விஜயா ” என்று சவால் விட்டு கே ஆர் விஜயாவை நடிக்க வைத்தார்.எம்.ஜி.ஆருக்கு காஞ்சித்தலைவன் படத்தில் தங்கையாக நடித்திருக்கிறார்.
விஜயகுமாரியுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்த போது எம்.ஜி.ஆர் மறுத்தார். அவர் சொன்ன காரணம் “ விஜயகுமாரி என் தம்பியின் மனைவி. அதனால் ஜோடியாக நான் நடிக்கக்கூடாது.”இலட்சிய நடிகை என்ற பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள விஜயகுமாரி கொடுத்த விலை இப்படி மிக அதிகம்.சாவித்திரி, சரோஜாதேவி, பத்மினிபோன்றவர்கள் பிறமொழியில் இருந்து தமிழுக்கு வந்து அளப்பரிய சாதனை புரிந்தார்கள். அவர்களிடையே தமிழை தாய் மொழியாக கொண்ட நடிகை விஜயகுமாரி ஓரளவு சாதனை புரிந்தவர்.மனோரமா எப்போதும் தமிழக முன்னாள் இந்நாள் முதல்வர்களுடனான தன்னுடையrapport பற்றி பெரிதாக சொல்லிக்கொள்வார்.
ஆனால் விஜயகுமாரி தான் இப்படி பெருமைப்பட்டுக்கொள்ளும் முதல் தகுதி கொண்டவர்! வி. என்.ஜானகி யின் கிச்சன் கேபினட் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர். எஸ்.எஸ்.ஆர் அவர்களின் அப்போதைய அரசியல்,சினிமா அந்தஸ்து காரணமாக அண்ணாத்துரை, கருணாநிதி, ஜெயலலிதா அனைவரும் இவர் வாழ்வில் முக்கியமானவர்கள்.
பல வருடங்களுக்கு முன் மணியனின் ‘இதயம் பேசுகிறது ‘ வாரப் பத்திரிகையில் இவர் தன் வாழ்க்கை தொடரை பரபரப்பாக எழுதினார் . அப்போது அவர் நெஞ்சில்,தலையில்,முதுகில் விழுந்த குத்துகள் பற்றி நிறைய குறிப்பிட்டார். பகீரங்கமாக.
அவற்றில் ஒன்று : எஸ் . எஸ் .ஆர் எடுத்த மணிமகுடம் திரைப்படம் பற்றியது . வெளிப்புற படப்பிடிப்புக்கு கொடைக்கானல் சென்ற
எஸ். எஸ்.ஆர். இவரை அந்தப்படத்தில் நடித்த போதும் சென்னையில் ஒதுக்கி விட்டு விட்டு அந்த படத்தில் நடித்த ஜெயலலிதாவுடன் சென்றார் என்கிற விஷயம்.
Suppra Manim, Chandra Bhagawan and 4 others

No comments:

Post a Comment