Wednesday 6 October 2021

VALLALAAR VS PERIYAR

 


VALLALAAR VS PERIYAR 



பெரியாரை சுற்றியிருந்த அனைவருக்கும் பெரும் ஆச்சரியம் .
ஏனெனில் முதன்முதலாக ஒரு ஆன்மீகவாதியின் தத்துவங்களை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு
அதை தன் செலவில் அழகான புத்தகமாகவும் அச்சிட்டு வெளியிட்டார் பெரியார்.
அவர் அருகில் இருந்த அத்தனை பேரும் அசந்து போனார்கள் பெரியாரிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தை கண்டு.
பெரியாரை இப்படி கவர்ந்த அந்த ஆன்மீகவாதி வள்ளலார்.
சாதி, வர்ணாசிரம முறைகளை கடுமையாக சாடி எழுதியிருந்தார் வள்ளலார்.
சமயத்தின் பேரால் பலி கொடுப்பதை கண்டித்தார்.
போலி சமயவாதிகளை தீவிரமாக எதிர்த்தார் .
இதையெல்லாம் படித்து பார்த்தவுடன் பெரியாரின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக வள்ளலாரை நோக்கித் திரும்பியது
இன்னும் சிறிது அருகில் நெருங்கி சென்று வள்ளலார் கூறியவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்தார் பெரியார்.
வள்ளலார் சொல்லி இருந்தார் :
"உருவ வழிபாட்டை முற்றிலும் விலக்குங்கள். ஆன்ம ஜோதியே கடவுள்."
'ஆஹா' என ஆனந்தம் கொண்டார் பெரியார்.
"ஆண் பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் கல்வியைக் கொடுக்க வேண்டும்."
இப்படி வள்ளலார் சொல்லியிருந்ததை அறிந்தவுடன் பெரியாரின் உள்மனம் உற்சாகமாக கூறியது: "அடடா, இவர் புரட்சித் துறவியாக இருக்கிறாரே !"
இன்னும் கொஞ்சம் வள்ளலாரின் பக்கத்தில் நெருங்கி சென்றார் பெரியார்.
"கணவன் இறந்தால் மனைவி தாலி அறுக்க வேண்டாம்."
வள்ளலாரின் இந்த கருத்து பெரியாரை வலிமையாக ஈர்த்தது.
'அற்புதமானவை வள்ளலாரின் கருத்துகள்' என்ற பெரியார்
உற்சாகமாக கூறினார் :
"இந்த மனிதர் கொண்டாடப்பட வேண்டியவர். இவரது கருத்துக்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும்."
சொன்னதோடு நிற்கவில்லை பெரியார். வள்ளலாரின் புத்தகங்களை ஏராளமாக தன் சொந்த செலவிலேயே அச்சிட்டார். அவற்றை மலிவு விலையில் மக்கள் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்தார்.
எல்லோருக்கும் போய்ச் சேர்ந்து விட்டதா என்பதை கவனித்தார். புத்தகங்களின் விற்பனையை அதிகரிக்க தன் செலவிலேயே விளம்பரங்களையும் செய்தார்.
வள்ளலார் எழுதிய,

“திருவருட்பா நூலின் ஆறாம் திருமுறையின் நூறு பாடல்கள்.”
இந்த பாடல்களைத்தான் பெரியார் பாராட்டி அவற்றை தானே புத்தகமாக அச்சிட்டு விளம்பரமும் செய்து வெளியிட்டு இருக்கிறார் .
ஆரம்ப திருவருட்பா பாடல்களில்
கடவுளை எண்ணி பாடிய வள்ளலார், பின்னர் மாறுதலடைந்து ஒளியை மட்டுமே வணங்கும் நிலைக்கு வந்தபிறகு எழுதியவைதாம் இந்த ஆறாம் திருமுறைப் பாடல்கள்.
ஒரு ஆன்மீகவாதியின் கருத்துக்களை தான் அச்சிட்டு வெளியிடுவதா என தயக்கம் எதுவுமின்றி வள்ளலாரின் தத்துவங்களை அச்சிட்டு வெளியிட்ட பெரியாரின் பண்பு போற்றுதற்குரியது.
அந்த மாற்றத்தை உருவாக்கிய மாபெரும் சக்தி
வள்ளலாரின்
வற்றாத அன்பும்
வளமான கருணையும்தான்.
"அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி"
அக்டோபர் 5 -
"வாடிய பயிரை கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய
வள்ளலாரின் பிறந்த தினம் .

No comments:

Post a Comment