VALLALAAR VS PERIYAR
VALLALAAR VS PERIYAR
DEEPAVALI - CRITICS FROM PERIYAR
தீபாவளி தேவையா?
புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப்புரட்டை உணர்ந்தவர்களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்!
தீபாவளி வெடிகள்
அர்த்தமற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது
பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்! எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால், நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து – புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய்க் கோபிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? ‘நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்?’ என்றால், அதற்கு, நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்’ என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா? இதைப் பார்ப்பனரல்லாத மக்கள் 1000-த்துக்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள்.
பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் – அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்துத் துணி வாங்குவது என்பது
ஒன்று;
மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுமான துணிகள் வாங்குவது என்பது
இரண்டு;
அர்த்தமற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது
மூன்று;
பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடு வீடாய்க் கூட்டங் கூட்டமாய்ச் சென்று பல்லைக் காட்டிக் கெஞ்சிப் பணம் வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது
நான்கு;
இவற்றிற்காகப் பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது
அய்ந்து;
அன்று ஒவ்வொரு வீட்டிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவது
ஆறு;
இந்தச் செலவுகளுக்காகக் கடன்படுவது
ஏழு;
தீபாவளி கொண்டாட்டங்கள்
இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ – சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது?
மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காகக் கடன்பட வேண்டியிருக்கிறது என்பதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் – மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ – சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? – என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.
ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனீயப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ, அனுபவத்துக்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாகச் சைவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவை எல்லாவற்றையும் பொய் என்று ஒப்புக்கொண்டாய்விட்டது. அப்படியிருக்க, ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரகணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய, தீபாவளிப் பண்டிகைக்கு மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இவ்வளவு பாராட்டுதலும் செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால் அதை என்னவென்று சொல்லவேண்டும்?
தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் மூன்று. அதாவது நரகாசுரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண் சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை இருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தார்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் – நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்த மாதிரியான ஒரு பண்டிகை – தீபவாளி என்று கொண்டாடவேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.
– பகுத்தறிவு, 1936
தீபாவளி கதை
தீபாவளி கதை பற்றி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறோம். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம்.இது தீபாவளி கதை. மிகவும் அதிசயமானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத்தன்மையும் பொருந்தியதுமாகும்.
விஷ்ணு அவதாரம்மகாவிஷ்ணுக்கு வாயில் காப்பாளராக இருந்த இரு காவலர்கள் உத்தரவின்றி உள்ளேவிட மறுக்கப்பட்ட இரண்டு பிராமணர்கள் சாபத்தால் இரணியன், இரணியாட்சன் என்று இரண்டு ராட்சதர்களாகப் பிறந்து விஷ்ணுவால் கொல்லப்பட்டு சீக்கிரம் மோட்சமடைய வேண்டுமென்று ஏற்பட்டுவிட்டதற்கிணங்க மூத்தவன் தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தான். இளையவன் பூமியை பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஓடி சமுத்திரத்திற்குள் நுழைந்து கொண்டான். தேவர்கள் வேண்டுகோளால் மூத்தவனைக் கொல்ல மகாவிஷ்ணு நரசிம்ம (சிங்க) அவதாரமெடுத்து வந்து கொன்றுவிட்டார். இளையவனான இரண்யாட்சனைக் கொல்ல மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து வந்து சமுத்திரத்திற்குள் பாய்ந்து இரண்யாட்சனைக் கொன்று பூமியைக் கொண்டுவந்து பழையபடி விரித்துவிட்டு போய்விட்டார்.
இதுவரை கதையில் அதிசயம் அதாவது பொய்யும் புளுகும் இருக்கலாமே தவிர, இதில் ஆபாசமில்லை. இனிமேல் நடப்பதுதான் ஆபாசம்.
என்னவென்றால் விஷ்ணு பல அவதாரம், பலரூபம் எடுத்து இருக்கிறார். அவற்றுள் பெரும்பாகம் ஆபாசமாகவே முடிகின்றன.
விஷ்ணு, அசுரர்களால் கடைந்து எடுக்கப்பட்ட அமிர்தத்தை வஞ்சித்து தேவர்களுக்குக் கொடுப்பதற்காக அசுரர்களை ஏமாற்ற மோகினி அவதாரமெடுத்தார். அந்தக் காரியம் தீர்ந்த உடன் சிவனுக்கு அந்த மோகினி அவதாரத்தின்மீது ஆசை வந்து அவர் பின் திரிந்து, மோகினி இணங்காமல் போய் இருவரும் பலாத்காரம் செய்து, சிவன் இந்திரியம் பூமியில் கொட்டப்பட அந்த இந்திரியம் பூமியில் வெள்ளி தங்கமாக வேர் இறங்கிவிட்டன. அதுதான் இன்று வெள்ளியும் தங்கமுமாம்.
மற்றொரு சமயம் சிவன் பத்மாசூரனுக்கு வரம் கொடுத்ததால் அவன் சிவன் தலையிலேயே கையை வைத்து சிவனைக் கொல்லவர சிவன் ஓடி ஒழிந்து விஷ்ணுவைக் கூப்பிட விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து தந்திரம் செய்து பத்மாசூரனை இறக்கும்படி செய்து விட்டுத் திரும்புகையில் சிவன் அவளைப் புணர்ந்தானாம். அப்போது அய்யனார் பிறந்தார்.
நரகாசுரன்
நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும், நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன்.
இப்படியுள்ள கதைகள் போலவே விஷ்ணு பன்றி அவதாரமெடுத்து இரண்யாட்சனைக் கொன்றுவிட்டுத் திரும்பும் காலையில், பன்றி தான் கொண்டு வந்த பூமியைத் தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை இருக்கிறதென்று கருதி அந்தப் பூமியையே அந்த பன்றி புணர்ந்ததாம். பூமியும் அதற்கு சம்மதித்து இடம் கொடுத்ததாம். அப்போது பூமி கர்ப்பமாகி ஒரு குழந்தையையும் பெற்று விட்டதாம். அக்குழந்தைக்கு நரகாசூரன் என்று பெயர் இட்டார்களாம். ஏன் அப்பெயர் இட்டார்கள் என்றால் நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும், நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன் என்று பெயர் இடாமல் வேறு என்ன பெயர் இடுவார்கள்?
இப்படிப் பிறந்த இந்தக் குழந்தை வங்காளத்துக்கும், அஸ்ஸாமுக்கும் மத்தியில் உள்ள ஒரு பிரதேச அரசனாக இருந்து கொண்டு பிரம்மாவின் மனைவியின் காதணியையும் வருணனின் ஆயுதத்தையும் பிடுங்கிக் கொண்டு, இந்திரனின் சிம்மாசனத்தையும் தூக்கிவர எத்தனித்தானாம். அதோடு தேவர்களுக்கு தொல்லை கொடுத்தானாம்; உலகத்தையும் துன்புறுத்தினானாம். தேவர்களுக்காக கிருஷ்ண பகவான் வந்து இந்த அசுரனை வதம் செய்தாராம். அந்த நாளை கொண்டாடுவதுதான் தீபாவளியாகும். இது என்ன கதை? இதில் அறிவு மானம் இருக்கிறதா?
இரண்யாட்சன் பூமியை சுருட்டித் திருடிக் கொண்டு போகக் காரணம் என்ன?
பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக் கொண்டல்லவா போயிருக்க வேண்டும்?
அப்படியே சுருட்டினதாக வைத்துக் கொள்வதானாலும் சுருட்டினவன் எங்கே இருந்து கொண்டு பூமியை சுருட்டி இருப்பான்? ஒரு சமயம் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டு சுருட்டி இருந்தாலும் பூமியில் இருந்த மலை, சமுத்திரம், ஆறு, ஜீவப்பிராணி முதலிய சகலமும்தானே பாயாக சுருட்டப்பட்டு பாய்க்குள் சிக்கி இருக்க வேண்டும். அப்படி இருக்க அவன் பூமியை தூக்கிக் கொண்டு ஒளிய வேறு சமுத்திரமேது? வேறு சமுத்திரம் இருந்திருந்தால் அது எதன்மீது இருந்திருக்கும்?
அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தப் பூமியை திருப்பிக் கொண்டுவர விஷ்ணு அவதாரமெடுப்பானேன்? அதுவும் பன்றி அவதாரமெதற்கு? அப்போது அது ஆகாரமான எதைத் தின்று இருக்கும்? எதையோ தின்று தொலைந்து போகட்டும்.
இந்தப் பன்றி பூமியைப் புணர ஆசைப்படுவானேன்! கொண்டு வந்ததற்குக் கூலியா? அப்படியேதான் இருக்கட்டும். இதற்கு இந்தப் பன்றியுடன் போகம் செய்ய பூமிதேவி இணங்கலாமா? இது என்ன கதை?
திராவிட மக்களை அசுரன், இராட்சதன், அரக்கன் என்று கூறி அவர்களை இழிவு செய்ய எழுதினதல்லாமல் வேறு என்ன இது? வங்காளத்தில் ஆரியர் வரும் முன்பு திராவிடர்கள்தானே ஆண்டு கொண்டிருந்திருக்க வேண்டும்? ஆரியர்கள், திராவிடர்களைக் கொல்வதானால் மானம், வெட்கம் பார்க்காமல் மிருகங்களுடன் புணர்ந்தானாலும் சரி, மலத்தைத் தின்னாலும் சரி, எப்படியான இழிவான அசிங்கமான காரியத்தைச் செய்தாவது கொல்லலாம் என்கின்ற தர்மத்தை ஆரியர்களுக்கு போதிக்க வந்த மனுநூல் போன்ற ஒரு கோட் தானே ஒழிய இப்புராணங்களுக்கு வேறு என்ன கருத்து சொல்ல முடியும்?
ஆகவே அப்பேர்ப்பட்ட கதையில் ஒன்றான நரகாசூரன் கதையை நம்பி நாம் பண்டிகை கொண்டாடலாமா? நாம் திராவிடரல்லவா? நம் கடவுள்கள் மலம் தின்பதையும், நம் பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக் கொள்ள நம்மால் முடியுமா? ஒப்புக் கொள்ளலாமா? நமக்கு மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா?
நம் தலைவனைக் கொன்றதை நாம் கொண்டாடும் அவ்வளவு மானம் ஈனம் அற்றவர்களா நாம்? நாம் வீர திராவிடரல்லவா? நம் இன மக்கள் தீபாவளி கொண்டாடலாமா? கண்டிப்பாய் கொண்டாடாதீர்கள். கொண்டாடுவதானால் இந்தக் கதை கொண்ட புத்தகங்களை வாங்கி நடு வீதியில் வைத்து ஆண்கள் மிதியடியால் மிதி மிதியென்று மிதியுங்கள்; பெண்கள் முறத்தால் மொத்து மொத்து என்று மொத்துங்கள்.
– குடிஅரசு, 07.10.1944
தீ நாள்!
நரகாசுரன்
தன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம்.
என்றைக்கோ ஒரு காலத்தில் ஒரு அசுரன் இருந்தானாம். அந்த அசுரன் ஒரு பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். இந்த விசித்திரப் பிறவியான அசுரன் தேவர்களை – பூலோகப் பிராமணர்களை எல்லாம் கொடுமைப்படுத்தினானாம். இதனால் தன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம்.
செத்துப் போனதைப் பூலோக மக்கள் எல்லாரும் கொண்டாடிக் களிப்படைய வேண்டுமென்று செத்துப்போன அந்த அசுரன் கேட்டுக் கொண்டானாம். அந்தப்படியே ஆகட்டும் என்று மகாவிஷ்ணு திருவாய் மலர்ந்தாராம். ஆகவேதான் தீபாவளிப் பண்டிகையை நாம் கொண்டாடுகிறோம்; கொண்டாட வேண்டும் என்று இன்றைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு ஆதாரமான இந்தக் கதையின் பொய்த் தன்மையையும், இதனால் இந்த நாட்டு மக்களுடைய மானம் – சுயமரியாதை எவ்வாறு அழிக்கப்பட்டு வருகின்றன என்பதையும், இந்த அர்த்தமற்ற பண்டிகையால் நாட்டுக்கு எவ்வளவு பொருளாதாரக்கேடும் சுகாதாரக்கேடும் உண்டாகிறது என்பதைப் பற்றியும் சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாளிலிருந்தே விளக்கப்பட்டு வருகிறது.
சுயமரியாதைக்காரர்கள் – திராவிடர் கழகத்தார்களுடைய இந்த விளக்கம், தவறானது என்றோ, நியாயமற்றதென்றோ, உண்மைக்கு அப்பாற்றட்டதென்றோ எப்படிப்பட்ட ஒரு பார்ப்பனன் கூட இன்றுவரை மறுத்தது கிடையாது. ஆனால் எல்லாப் பார்ப்பனர்களும் கொண்டாடத்தான் செய்கிறார்கள். பார்ப்பனர் அல்லாதவர்களிலும் பலர் கொண்டாடத்தான் செய்கிறார்கள். ஏன்?
பெரியார்பூமியைப் பாயைப்போல் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலுக்குள் ஒருவன் நுழைந்துகொள்ள முடியும் என்பதை எந்தப் பஞ்சாங்கப் புரோகிதன்கூட ஏற்றுக்கொள்ளமாட்டான். ஆனால் பஞ்சாங்க நம்பிக்கையுடையவன் மட்டுமல்ல, பஞ்சாங்கத்தையே பார்க்காத – நம்பாத பார்ப்பனரிலிருந்து பூகோளத்தைப் பற்றிப் போதனைசெய்யும் பேராசிரியர்கள் வரை கொண்டாடி வருகிறார்களே ஏன்?
மகாவிஷ்ணு (?) பன்றியாக வேஷம் போட்டுக் கொண்டுதான் கடலுக்குள் நுழைய முடியும்! சுருட்டியிருந்த பூமியை அணைத்து தூக்கிவரும் போதே மகாவிஷ்ணுக்கு காமவெறி தலைக்கேறி விடும்! அதன் பலனாக ஒரு குழந்தையும் தோன்றிவிடும்! அப்படிப் பிறந்த குழந்தை ஒரு கொடிய அசுரனாக விளங்கும்! என்கிற கதையை நம் இந்துஸ்தானத்தின் மூலவிக்கிரகமான ஆச்சாரியாரிலிருந்து ஒரு புளியோதரைப் பெருமாள் வரை யாருமே நம்பமாட்டார்கள் – நம்ப முடியாது.
ஆனால் இப்படி நம்பாத விஷ்ணு பக்தர்கள் முதல், விஷ்ணுவுக்கு எதிர் முகாமிலுள்ளவர்கள் வரை இந்த நாட்டில் கொண்டாடி வருகிறார்கள். ஏன்? சுயமரியாதை இயக்கத்தின் தீவிரப் பிரசாரத்தினால், இன்று திராவிட நாட்டிலுள்ள பல ஆயிரக்கணக்கான திராவிடத் தோழர்கள் இந்த மானமொழிப்புப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என்றாலும், படித்தவன் – பட்டதாரி – அரசியல் தந்திரி – மேடைச் சீர்திருத்தவாதி என்பவர்களிலேயே மிகப் பலபேர் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றார்கள் என்றால், இந்த அறிவுக்குப் பொருத்தமற்ற கதையை ஆதாரமாகக் கொள்கிறார்கள் என்றால் இவர்களுடைய அறிவுக்கும் அனுபவத்துக்கும் யார்தான் வயிற்றெரிச்சல்படாமல் இருக்கமுடியும்? ஆரியப் பார்ப்பனர்கள், தங்களுக்கு விரோதமான இந்நாட்டுப் பழங்குடி மக்களை – மக்களின் தலைவர்களை அசுரர்கள் – அரக்கர்கள் என்கிற சொற்களால் குறிப்பிட்டார்கள் என்பதையும், அப்படிப்பட்ட தலைவர்களுடைய பிறப்புகளை மிக மிக ஆபாசமாக இருக்கவேண்டும் என்கிற ஒன்றையே கருத்தில் கொண்டு புழுத்துப்போன போக்கினின்றெல்லாம் எழுதிவைத்தார்கள் என்பதையும், இந்த நாட்டுச் சரித்திரத்தை எழுதிவந்த பேராசிரியர்களில் பெரும்பாலோரால் நல்ல முறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இருந்தும் அந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டுப்போக, இந்த நாட்டு அரசாங்கமும் – அதன் பாதுகாவலரான தேசியப் பார்ப்பனர்களும் இன்றைக்கும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள் என்றால் அதை எப்படித் தவறு என்று சொல்லிவிட முடியும்? திராவிடப் பேரரசன் (வங்காளத்தைச் சேர்ந்த பிராக ஜோதிஷம் என்ற நகரில் இருந்து ஆண்டவன்) ஒருவனை, ஆரியர் தலைவனான ஒருவன், வஞ்சனையால், ஒரு பெண்ணின் துணையைக் கொண்டு கொன்றொழித்த கதைதான் தீபாவளி.
இதை மறைக்கவோ மறுக்கவோ எவரும் முன்வர முடியாது. திராவிட முன்னோர்களில் ஒருவன், ஆரியப் பகைவனால் அழிக்கப்பட்டதை, அதுவும் விடியற்காலை 4 மணி அளவுக்கு நடந்த போரில் (!) கொல்லப்பட்டதை அவன் வம்சத்தில் தோன்றிய மற்றவர்கள் கொண்டாடுவதா? அதற்காக துக்கப்படுவதா?
திராவிடர் இன உணர்ச்சியைத் தொலைக்க, ஆரிய முன்னோர்கள் கட்டிய கதையை நம்பிக்கொண்டு, இன்றைக்கும் நம்மைத் தேவடியாள் பிள்ளைகள் எனக் கருதும் பார்ப்பனர்கள் கொண்டாடுவதிலாவது ஏதேனும் அர்த்தமிருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், மானமுள்ள திராவிடன் எவனாவது இந்த பண்டிகையைக் கொண்டாடலாமா? என்று கேட்கிறோம்.
தோழர்களே! தீபாவளி திராவிடனின் மானத்தைச் சூறையாடத் திராவிடனின் அறிவை அழிக்கத் திட்டமிடப்பட்ட தீ நாள்! இந்தத் தீ நாள் திராவிடனின் நல்வாழ்வுக்குத் தீ நாள். இந்தத் தீயநாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன? தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக் கொள்வதா? யோசியுங்கள்!
– குடிஅரசு – தலையங்கம் – 15.10.1949
தீபாவளியும் ,பெரியார் வயிற்றெரிச்சலும்
தீபாவளி கொண்டாடும் மானங்கெட்ட தமிழர்கள்
எழுத்தாளர்: செ.கார்கி
ஊர் முழுவதும் பட்டாசு சத்தம் இப்போதே காதைக் கிழிக்க ஆரம்பித்துவிட்டது. சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவருமே ஒரு மிகப் பெரிய வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும் பெருமித உணர்வோடு பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றார்கள். அவர்களில் யாருக்கும் எதற்காக தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்று தெரியவில்லை. இருந்தாலும் அதைக் கொண்டாடியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் அவர்களிடம் இருப்பதைப் பார்க்க முடிகின்றது. கையில் காசு இருக்கின்றதோ இல்லையோ ஒருவன் இந்துவாக இருந்தால் நிச்சயம் அவன் தீபாவளி கொண்டாடியே ஆகவேண்டும். இல்லை என்றால் ஊர் உலகம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளமுடியாது. அதற்காக நூற்றுக்குப் பத்து இருபது கந்துவட்டிக்கு வாங்கியாவது தனக்கும் மனைவிக்கும், குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் புதுத்துணி வாங்கி தீபாவளி கொண்டாட்டத்துக்குத் தயாராகி விடுகின்றார்கள். நிச்சயம் அவர்களுக்கு எல்லாம் இந்த தீபாவளியை எதற்காக இத்தனை சிரமப்பட்டு மெனக்கெட்டு கடன் வாங்கியாவது கொண்டாட வேண்டும் என்று தெரிவதில்லை. கையில் பணம் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் பல ஆயிரங்களுக்குப் பட்டாசு வாங்கி தீபாவளிக்குப் பத்து நாளைக்கு முன்பிருந்தே வெடித்து காசை நாசம் செய்யும் நபர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை ஆனால் ஒருவேளை சோற்றுக்கே வழியற்று தினம் உழைத்து சாக நிர்பந்திக்கப்பட்ட மக்களையும் இந்தத் தீபாவளி பண்டிகை பதம் பார்ப்பதுதான் நம்மைத் துயரப்பட வைக்கின்றது.
பெரியார் தன் வாழ்நாள்முழுவதும் தீபாவளி பண்டிக்கைக்கு எதிராகப் பேசியும் எழுதியும் வந்தார். தீபாவளி கொண்டாடுவது தமிழினின் தன்மானத்திற்கும், சுயமரியாதைக்கும் பெரும் இழுக்கை தேடிக் கொடுப்பது என்று ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தினார். தீபாவளி கொண்டாடும் தமிழர்களை எவ்வளவு தூரம் திட்டி திருத்த முடியுமோ, அவ்வளவு தூரம் திட்டி திருத்த முயன்றார். "எவ்வளவு சொன்னாலும் அறிவும், அனுபவமும் இல்லாத இளைஞர்கள்(மைனர்கள்) பித்தலாட்டத்தாலும் வஞ்சகம், துரோகம், மோசத்தாலும் வாழ வேண்டிய- தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையிடம் சிக்கிவிட்டார்களேயானால் எவ்வாறு யார் எவ்வளவு அறிவையும் நன்மையும் போதித்தாலும் அதைக் காதில் வாங்கக்கூட செவிப்புலனை ஒதுக்காமல் தம் உள்ளம் முழுவதையும் பரத்தையிடம் ஒப்புவித்து அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதே போலவே நடந்து கொள்கின்றார்கள்!”. என்று மிகக் காட்டமாகவே குறிப்பிட்டார்.
“இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமில்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள் அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உட்பட்ட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில் இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு – பூகோளக் கூறு இவற்றில் நிபுணர்கள் வேதாந்தத்தில் கரை கண்டவர்கள் உட்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கு அடிமைப்பட்டு சிந்தனையின்றி நடந்துகொள்கிறார்கள் என்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழன் அடிமைப்பட்டு சிந்தனையின்றி நடந்து கொள்கிறார்கள் என்றால் இழிவுக்கும் மடமைக்கும் மானமற்ற தன்மைக்கு இதைவிட வேறு எதை எடுத்துக்கட்டாக கூற முடியும்?”. (விடுதலை 5/11/1961) என்று இன இழிவுக்குத் துணைபோகும் அறிவு ஜீவிகள் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் மானங்கெட்ட தமிழர்களையும் அம்பலப்படுத்தினார்.
மக்களிடம் இந்தத் தீபாவளி பண்டிகை இன்று இந்த அளவிற்கு சென்று சேர்ந்ததற்கு இங்கிருக்கும் பார்ப்பனப் பத்திரிக்கைகள் மற்றும் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்ட சூத்திரப் பத்திரிக்கைகள், பணத்திற்காக எதை வேண்டுமென்றாலும் விளம்பரப்படுத்தும் விபச்சார தொலைக்காட்சிகள் போன்றவற்றின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். எதை எதையோ ஆய்வு செய்து அம்பலப்படுத்துவதாக பிதற்றிக்கொள்ளும் இந்த ஊடகங்கள் எப்போதாவது ஏன் இந்த தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகின்றது என்று மக்களுக்கு சொல்லி இருக்குமா என்று பார்த்தால் இந்த விபச்சார ஊடகங்களின் வேசித்தனம் நமக்கு விளங்காமல் போகாது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பத்திரிக்கைகள் சிறப்பு மலர்கள் போடுவதும் தொலைக்காட்சியில் சினிமா நட்சத்திரங்களை அழைத்து சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குவதும், பட்டிமன்றங்களை நடத்துவதும் ஒவ்வொரு வருடமும் நடந்து வருகின்றது. இதன் மூலம் தீபாவளிப் பண்டிகை மிக முக்கியமானதாக, கொண்டாடியே ஆகவேண்டிய ஒன்றாக திட்டமிட்டு இனத் துரோகிகளால் பரப்பப்படுகின்றது. ஒவ்வொரு சாமானியனின் மனதையும் பார்ப்பனியத்தால் நச்சாக்கி அதில் பணம் ஈட்டுகின்றது. தமிழன் எப்போதுமே மானமுள்ளவனாக, சுயமரியாதை உள்ளவனாக மாறக்கூடாது என்பதில் இந்த எச்சிலை ஊடகங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றன.
தமிழர்களை இழிவுபடுத்த வேண்டும் என்று நோக்கிலேயே கற்பிக்கப்பட்ட தீபாவளி இழி கதையை இன்று தமிழ் மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டியது ஒவ்வொரு முற்போக்குவாதியின் கடமையாகும். விபச்சார ஊடகங்கள் நிச்சயம் இந்தப் பணியை செய்யப்போவதில்லை. ஆதனால் ஒவ்வொரு முற்போக்குவாதியும் தன்னால் முடிந்தவரை தீபாவளி என்ற மானங்கெட்ட பண்டிகையின் யோக்கியதையை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். அதற்கு பெரியார் நமக்கு பெரிதும் துணை நிற்பார். தீபாவளி என்றால் என்ன என்று கேள்வி எழுப்பி பெரியார் அவர்கள் அதற்கு விளக்கமும் கொடுத்திருக்கின்றார்.
1) ஒரு காலத்தில் ஓர் அரக்கன் உலகத்தைப் பாயாக சுருட்டிக்கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்துகொண்டான்.
2) தேவர்கள் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் ( உருவம்) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து (மீண்டும்) விரித்தார்.
3) விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4) ஆசைக்கு இணங்கிய பன்றி(விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5) அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6) அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7) தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரனுடன் போர் தொடங்கினார்.
8) விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை.விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9) இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10) இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். (விடுதலை 5/11/1961)
இந்த மானமற்ற பகுத்தறிவுக்குக் கொஞ்சமும் பொருந்தாத கதைதான் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணமாகும். மேலும் புராணங்களில் அசுரன், அரக்கன், குரங்குகள் என்று குறிப்பிடப்படுவதெல்லாம் திராவிடர்களைத்தான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுவதையும் நாம் நோக்க வேண்டும். பெரியாரும் அதைத்தான் குறிப்பிடுகின்றார்
“நரகாசூரன் ஊர் மகிஷ்மதி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கின்றது. மற்றொரு ஊர் பிராக் ஜோதிஷம் என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் அஸ்ஸாம் மாகாணத்திற்கு அருகில் இவற்றை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்களாத்தில் தேவர்களும் அரசர்களும் யாராக இருந்திருக்க முடியும்? இவை ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பான் எழுதி வைத்தான் என்பதற்காகவும் நாம் நடு ஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும் இந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து “கங்கா ஸ்நானம் ஆயிற்றா” என்று கேட்பதும், நாம் ஆமாம் சொல்லி கும்பிட்டுக் (காசு) கொடுப்பதும், அவன் காசு வாங்கிக்கொண்டு போவதும் என்றால் இதை என்னவென்று சொல்வது? மாணவர்களே? உங்கள் ஆசிரியர்களுக்கு மானம் புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள்! இளைஞர்களே சிந்தியுங்கள்!”. (விடுதலை 5/11/1961)
எனவே தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் ஒவ்வொரு தமிழனும் தெரிந்தோ, தெரியாமலோ இனத் துரோகியாய் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்றான் என்றுதான் அர்த்தம். கோடிக்கணக்கான தமிழ்மக்களை சூத்திரர்கள் என்றும், பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் என்றும், குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும் நம்மை அசிங்கப்படுத்திய பார்ப்பன மேலாண்மையை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டதாகவே அர்த்தம். இன்று பார்ப்பனப் பயங்கரவாதத்தால் இந்தியும், சமஸ்கிருதமும், நீட் தேர்வும் தமிழகத்தில் திணிக்கப்படும் காலத்தில் தீபாவளியைப் புறக்கணிப்பது என்பது ஒவ்வொரு மானமுள்ள தமிழனின் தலையாய கடமையாகும். பார்ப்பன தீபாவளியைக் கொண்டாடிவிட்டு நீட்டையும், இந்தியையும், சமஸ்கிருதத்தையும் பார்ப்பன பயங்கரவாதத்தையும் எதிர்ப்பதென்பது கேலிக்கூத்தானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே முற்போக்குவாதிகள் அனைவரும் இந்தத் தீபாவளி பண்டிக்கைக்கு எதிராக கருத்துப் பிரச்சாரத்தை வீச்சாக எடுத்துச் செல்ல வேண்டும். தீபாவளிப் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லும் ஒவ்வொருவனும் தமிழின துரோகி என்பதையும், பார்ப்பனித்தின் அடிமை என்பதையும், சுயமரியாதையும், தன்மானமுமற்ற உலுத்துப்போன உலுத்தர்கள் என்பதையும் அம்பலப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து பட்டாசு வாங்கிக் கொடுத்து அவர்களின் மூளைகளை முடமாக்கும் மூடர்களிடம் குழந்தைகளுக்கு நல்ல அறிவு சார்ந்த நூல்களை வாங்கிக் கொடுத்து அவர்களை பகுத்தறிவுடன் வளர்க்குமாறு அறிவுரை சொல்ல வேண்டும். இதை ஒவ்வொரு மானமுள்ள சுயமரியாதை உள்ள முற்போக்குவாதிகளும் செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
PERIYAR MERIT
ஆமாம்... பெரியார் தான்டா எல்லாம் பண்ணார்!'
வடக்குல அம்பேத்கர் என்ன பண்ணாரோ, அதை இங்கே பெரியார் பண்ணார். சொல்லப்போனா, 1927ல அம்பேத்கர் ‘மகத்’ பொதுக் குளத்துல ‘தீண்டப்படாத’ மக்களை திரட்டி தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை'ஆமாம்... பெரியார் தான்டா எல்லாம் பண்ணார்!'நடத்துனதுக்கு உந்துசக்தியா இருந்ததே 1925ல பெரியார் வைக்கத்துல நடத்துன சத்தியாகிரகம்தான்னு அம்பேத்கர் நடத்துன “Mook Nayak” பத்திரிகையோட தலையங்கத்துல் பதிவு பண்ணியிருக்கார்.
அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் உட்பட எத்தனையோ பேரால முடியாத விஷயங்களை செஞ்சு காட்டுனவர் பெரியார்.11273
2000 வருஷமா கண்ணை மூடிட்டு பின்பற்றி வந்த சாஸ்திரத்தை, ஜாதியை, மூடநம்பிக்கைகளை இவ்வளவு வலிமையா பெரியாரை விட வேற யார் எதிர்த்தது இருக்காங்க? ஒரு பேரை சொல்லுங்களேன் பார்ப்போம்..
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்குறதுக்கு 30 வருஷம் முன்னாடி இருந்தே, வகுப்புவாரி இடஒதுக்கீடு1966
வேணும்ன்னு குரல் கொடுத்தவர் பெரியார். காங்கிரஸ் கட்சியில சேர்ந்து 6 வருஷமா கேட்டும் இடஒதுக்கீட்டு தீர்மானத்தை கொண்டுவராததால, "சமூகத்தை பத்தி கவலைப்படாம, சுதந்திரம் கிடைச்சு என்ன பிரயோஜனம்...? இடஒதுக்கீடு தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி நிறைவேத்தாதுன்னா, எனக்கு காங்கிரஸே வேணாம்"னு11062
சொல்லி கட்சியை விட்டு விலகுனவர் பெரியார்.. காங்கிரஸை விட்டு வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார் பெரியார். "காங்கிரஸ் கட்சி என் எதிரி இல்ல, ஜாதி தான் எதிரி... ஜாதியை தூக்கி பிடிக்குற வைதீக மதத்தையும், கடவுளை போதிக்குற சாஸ்திரத்தையும், மூடநம்பிக்கைகளையும் வாழ்க்கை முழுக்க1958
தீவிரமா எதிர்க்க போறேன்"னு சொன்னார்.
1937ல மெட்ராஸ் பிரசிடென்சியோட முதல்வரா ராஜாஜி இருந்தப்போ, பள்ளிக்கூடங்கள்ல ஹிந்தியை கட்டாய மொழி ஆக்குனப்போ இந்த மாகாணம் முழுக்க ஹிந்திக்கு எதிரா புரட்சி வெடிக்க காரணமா இருந்தார். 1939ல ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்துல உயிரை விட்ட தாளமுத்து11055
நடராசனுக்கு 1940ல வடசென்னையில நினைவு மண்டபம் எழுப்பினார் பெரியார்.
இந்தியாவிலேயே பேருக்கு பின்னால ஜாதியை போட்டுக்காத ஒரே மாநிலமா தமிழ்நாடு இருக்குறதுக்கு ஒரே காரணம், சுதந்திரம் அடையுறதுக்கு முன்னாலேயே 'சுயமரியாதை இயக்கம்' மூலமா பெரியார் எடுத்த முன்னெடுப்பு! இன்னைக்கு வரை,11262
ஒருத்தனோட ஜாதியை நேரடியா கேட்குறதுக்கு கூச்சப்படுறானுங்க இல்ல? அதுக்கு காரணம், பெரியார் இல்லாம வேற யாரு?
தமிழ் மொழியை எளிமையா எழுதுறதுக்காகவும், அச்சடிக்குறதுல இருக்குற சிரமங்களை குறைக்குறதுக்காகவும்... 15 தமிழ் எழுத்துக்கள்ல சீர்திருத்த மாற்றங்களை முன்மொழிந்தார் பெரியார்.
அவரோட இந்த மொழி சீர்திருத்தத்தை அக்டோபர் 1978ல அரசாணையில கொண்டுவந்த பெருமை, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை சேரும்.
கடந்த 100 வருஷத்துல பெரியார் அளவுக்கு பெண்களுக்காக பேசுன ஒரு தலைவர், இந்தியா முழுமையிலும் கிடையாதுன்னே சொல்லலாம். உடன்கட்டை ஏறுதலுக்கு எதிராவும், குழந்தை11257
திருமணத்துக்கு எதிராவும், தேவதாசி முறைக்கு எதிராவும் பேசியவர், போராடியவர்். விதவை மறுமணத்தோட அவசியம் பத்தியும், குடும்பக்கட்டுப்பாடோட அவசியம் பத்தியும், பெண்களுக்கு சொத்துல உரிமை வேணும்ன்னும் பல மேடைகள்ல பேசுனவர்.
இன்னைக்கு நாம பேசுறோமே.. பொண்ணுங்களோட financial independence,11062
பொண்ணுங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணனும்னு அதையெல்லாம் அந்த மனுஷன் 100 வருஷமா முன்னாலேயே பேசிட்டு போயிருக்கார் -
பிரிட்டிஷ் ஆட்சில கம்யூனிச கொள்கை தடை செய்யப்பட்டிருந்தப்போ, கம்யூனிச கொள்கைகளை மொழிபெயர்த்து எழுதி மக்கள்கிட்ட பரப்புனவர் பெரியார். - ஒரு முறை காந்திஜி1652
"தீண்டாமை தப்பு, ஆனா வர்ணாசிரமம் தப்பு இல்ல"ன்னு சொன்னப்போ உடனே அவரை போய் பெங்களூர்ல சந்திச்சு தன்னோட எதிர்ப்பை தெரிவிச்சுட்டு வந்தார் பெரியார்.. "நம்ம சட்டம் தீண்டாமைக்கு எதிராதான் இருக்கு, ஜாதிக்கு எதிரா இல்ல. அதையேதான் நீங்களும் சொல்றீங்க, மகாத்மா... மதத்தை வெச்சுக்கிட்டு,1541
·சமுதாயத்துல உங்களால எந்த சீர்திருத்தத்தையும் பண்ண முடியாது"ன்னு சொல்லிட்டு வந்தார்.
1939ல ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்துல இருந்தப்போவும், 1942 காலக்கட்டத்துலயும், இரண்டு முறை முதல்வர் பதவி பெரியாரை தேடி வந்தது... அவர் தலைமையில மந்திரி சபை அமைக்க சொல்லி ஆளுநர் சொன்னப்போ1747
வேணாம், எனக்கு பதவியில ஆசை இல்ல'ன்னு பெரியார் சொல்லிட்டார்.
ராஜாஜி அவர்கள் கூட 'உங்க தலைமையில ஆட்சி அமைச்சா, நான் காங்கிரஸ் ஆதரவு வாங்கி தர்றேன்"னு சொன்னார். ஆனா, "பதவின்னு வந்துட்டா, நாம எவனை எதிர்க்குறோமோ அவன் கூடவே சமாதானமா போகவேண்டியிருக்கும். அதனால, சாகுற வரைக்கும் எந்த1545
அரசியல் பதவியும் வேணாம்ங்கிறதுல நான் ரொம்ப தெளிவா இருக்கேன்..
மானங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு வேணா அந்த பொழப்பு சரிப்பட்டு வரும், எனக்கு அது வேணாம்"னு சொல்லிட்டார். எந்தவொரு உட்சபட்ச பதவியையும், பணத்தையும் துட்சமா நினைச்ச ஒரு தலைவர் பெரியார்!
1947'ல இந்தியாவுக்கு சுதந்திரம்
கிடைச்சப்போ கூட, "அதிகாரம் பிரிட்டிஷ் காரன் கையிலருந்து, பார்ப்பனர்கள் கைக்கு போயிருக்கு அவ்ளோதான்... அடிமட்ட ஜனங்களுக்கு இது ஒரு துக்க நாள் மட்டுமே"ன்னு சொன்னார் பெரியார்!
- எல்லா தலைவர்களும் தன்னை பின்தொடர்ந்து வர்றவங்களை எல்லாம் "நான் சொல்றத செய்ங்க"ன்னு தான் சொல்வாங்க.ன்னு தான் சொல்வாங்க.1747
ஆனா, பெரியார் ஒருத்தர் தான் 'யார் எது சொன்னாலும் அதை நம்பாதீங்க. கேள்வி கேளுங்க. ஏன், நானே சொல்றதையும் கேள்வி கேளுங்க. அப்புறமா, நீங்க முடிவெடுங்க. உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை பண்ணுங்க"ன்னு சொன்னார். -
ஒரு முறை, மெட்ராஸ் யூனிவர்சிட்டியோட vice chancelor சுந்தரவடிவேலு அவர்கள்1542
“இன்னைக்கு கிராமத்துல கூட படிச்சவங்க ஜாஸ்தியா இருக்காங்க, நிறைய கல்விக்கூடங்கள் இருக்குன்னா, அதுக்கு நீங்கதான் காரணம்"னு காமராஜரை புகழ்ந்தப்போ "இதுக்கெல்லாம் பெரியார்தான் காரணம். அவர்தானே அடித்தட்டு மக்கள் எல்லாரும் படிக்கணும்னு ஆசைப்பட்டார்"னு பெரியாரை நினைவுகூர்ந்தார் காமராஜர்1543
"தமிழ்நாட்டுல காங்கிரஸ் கட்சியை ஒரு கோட்டையாக்க பாடுபட்டவர் பெரியார். அந்த கோட்டையை கட்டி எழுப்பிட்டு, அதை அனுபவிக்காம வெளியே போய்ட்டார். அவர் நினைச்சிருந்தா, எப்பவோ முதல்வர் ஆகியிருக்கலாம். ஆனா, மக்கள் தொண்டுதான் முக்கியம்ன்னு நினைச்சார். காங்கிரஸ்ல இருந்துட்டு பெரியார் சொன்னசமூகநீதி கொள்கையை செயல்படுத்துறேன்னு சிலர் என் மேல புகார் சொல்றான். அதுக்கு நான் பெருமைப்படுறேன்"னு சொன்னார் காமராஜர் - பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் முதல்ல கையெழுத்து போட்ட "சுயமரியாதை திருமண சட்டம்" உருவாக முழுமுதற் காரணமா இருந்தவர் பெரியார் -
இந்தியாவிலேயே OBC ரிசர்வேஷனைமுதன்முதல்ல கொண்டுவந்த மாநிலம் தமிழ்நாடு. அதே போல, இந்தியாவிலேயே முதல்முறையா தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் நீதிபதி ஆன பெருமையும் பெரியார் அவர்களையே சேரும் - "அனைத்து சாதி மக்களும் கோவில் கருவறைக்குள் போக அனுமதி வேண்டும்"னு போராட போறேன்னு பெரியார் சொன்னப்போ "அதுக்கு அவசியமே இல்ல...எல்லா சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்ன்னு சீக்கிரமே ஒரு சட்டம் கொண்டுவர்றேன்"னு சொல்லி அந்த போராட்டத்தை நிறுத்தினார் கருணாநிதி. -
பெரியாரை பத்தி பேரறிஞர் அண்ணா "உலக தலைவர்களில், தன்னுடைய காலத்திலேயே தன் கொள்கை வெற்றி பெறுவதைப் பார்த்த ஒரே ஒருவர் நீங்கள்தான்"னு சொன்னார். அதான் உண்மையும் கூட. ஹிந்துத்துவா, தமிழ் தேசியம் உட்பட எந்த அரசியல் கொள்கையை முதன்முதல்ல பேசுனவங்களும் அந்த கொள்கை அரசியல்ரீதியா வெற்றியடையுறதை பார்க்கல!
- காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, தொல்.திருமாவளவன், வைகோ, ராமதாஸ், உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, பகுஜன் சமாஜ்
கட்சியோட நிறுவனர் கன்ஷி ராம் உட்பட எத்தனையோ தலைவர்களோட சமூக நீதி கொள்கைகளுக்கு ரோல் மாடல் ஆக இருந்தவர் / இருப்பவர் பெரியார் - பெரியார் அவர்கள் இறந்து போறதுக்கு சில நாள் முன்னால சொன்ன விஷயம் "இந்தி திணிப்பை எதிர்த்து ஜெயிச்சாச்சு. தெருவுக்குள்ள விடமாட்டேன்னு சொன்னவங்களை எதிர்த்து போராடி ஜெயிச்சாச்சு. கோவிலுக்குள்ள விடமாட்டேன்னு சொன்னவங்களை எதிர்த்து ஜெயிச்சாச்சு.. ஆனா, நான் சாகும்பொழுது இப்போவும் உங்களை எல்லாம் சூத்திரனாவே விட்டுட்டு போறேனே... இந்த ஜாதியை இன்னமும் ஒழிக்க முடியலையே"ன்னு வருத்தப்பட்டார்.
- நாடு முழுக்க ஜெயிக்குற பாஜக, இன்னமும் தமிழ்நாட்டுல மட்டும் நோட்டாவுக்கு கீழே இருக்குன்னா அதுக்கு காரணம் பெரியார் அவர்கள் வளர்த்தெடுத்த சமூகநீதி, சமத்துவ கொள்கைகள்! .........
"ஆமா, பெரியார் தான்டா எல்லாம் பண்ணார்"