MAHABHARAT மகாபாரதம் வாழ்க்கையின் விதை
MAHABHARAT மகாபாரதம் வாழ்க்கையின் விதை மகாபாரதம் வாழ்க்கையின் விதை மகாபாரதம் ஒரு படிப்பினை - வாழ்க்கையின் தத்துவங்களை கதையாய் அடுக்கி சொல்பவை - மகாபாரத்தில் ஒவ்வொரு பாத்திரமும் எப்படி நாம் வாழவேண்டும் ,நாம் எப்படி வாழக்கூடாது என்று சொல்பவை @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ “மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம். அது உண்மை என்பதை விட அது ஒரு தத்துவம். அதை தான் அனைவரும் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்…” அந்த காவியுடை பெரியவர் வருணைப் பார்த்து மர்மப் புன்னகை ஒன்றை உதிர்த்தார். “அது என்ன தத்துவம் ஐயா? எனக்கு கொஞ்சம் விளக்குங்களேன்…” “நிச்சயம்! அதற்காகத் தானே வந்திருக்கிறேன்” “பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல. கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய நம் ஐம்புலன்கள் தான்!!!! கௌரவர்கள் யார் தெரியுமா?” “………………..” “இந்த ஐந்துபுலன்களை தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கௌரவர்கள்!!!” “………………..” “எண்ணிக்கையில் பெரிதான இவர்களை எதிர்த்து உன்னால் (ஐம்புலன்களால்) போரிட முடியுமா? “………………..” “முடியும்…! எப்போது தெரியுமா?” வருண் மலங்க மலங்க விழி...