Friday, 24 March 2017

மகாத்மாவின் இறுதி நேரம் .....


மகாத்மாவின் இறுதி நேரம் .....



மகாத்மாவின் இறுதி நேரம் .....

மஹாத்மா காந்தி சரியாக மாலை 5 மணிக்கு பிரார்த்தனைக்கு கிளம்பி விடுவார் .அவருக்கு தாமதம் பிடிக்காது .ஆனால் அன்று வல்லபாய் படேலுடன் முக்கியமான சர்ச்சையில் ஈடுபட்டிருந்தார் .சுதந்திரம் அடைந்ததும் படேலை முக்கிய மந்திரி பொறுப்பிலும் ,நேருவை பிரதமராகவும் ஆக்கி விட்டிருந்தார் படேல் தன் பதவியை ராஜினாமா செய்ய உத்தேசிப்பதாய் கூறியது காந்தியை  சற்று கோபம் கொள்ள செய்திருந்தது .எனவே அவரை சமாதானம் செய்ய மெனக்கெட வேண்டியிருந்தது 

அப்போது மனுகாந்தி கத்தியவாரிலிருந்து ரெண்டு பேரு வந்திருக்காங்க .உங்களைப்பார்த்து பேசணுமாம் ..என்கிறார் 

இப்போ நேரம் இல்லை .இன்னைக்கு பிரார்த்தனை முடிஞ்சதும் உயிரோட இருந்தேன்னா அவங்களோட பேசுறேன்   என்கிறார் காந்தி சூடாக 

மணி ஐந்தாக போகிறது .நேரத்தை நினைவூட்ட சில ஆரஞ்சு சுளைகள் ,காய்கறி ஜூஸ் ,14  அவுன்ஸ் ஆட்டுப்பால் அவர் முன் வைத்தார்கள் .காந்தி நூல் ஒரு கையால்  நூற்றுக்கொண்டே படேலுடன் பேசிக்கொண்டிருந்தார் காந்தியின் கடிகாரம் அவர் முன் காட்டப்பட்டாலும் அவர் அக்கறை காட்ட வில்லை 

படேலின் மகள் மணிபென் ' பாபுஜி உங்களுக்கு பிரார்த்தனை க்கு நேரமாகிறது அப்போது கடிகாரத்தை பார்த்தவர் அதிர்ந்தார் .மணி 5.10 

பாபுஜி நீங்கள் நேரத்தை கவனிக்காமல் ,நினைவூட்டினாலும் புரியமாட்டீர்கள் என்று சொன்ன பேத்தியை ,மனு காந்தியை கண்டித்தார் .
உங்களோடு படேல் இருந்ததால் தயங்கினோம்
படேல் என்ன ? அந்த ராமபிரானே வந்தாலும் நாம் நம் கடமையில் இருந்து தவறக்கூடாது !
தாமதமாகிவிட்ட காந்தி குறுக்கு வழியில் தன் பேத்திகள் அபா,மனு இருவர் தோளிலும் கைபோட்டு வேகமாய் வந்து கொண்டிருந்தார் .அந்த பாதையின் முடிவில் கோட்ஸே நின்று கொண்டிருந்தார்

இதை எதிர்பாராத கோட்ஸே சட்டென்று துப்பாக்கியை சரி செய்தார் 
காந்தியை கண்டவர்கள் வழி விட்டு ஒதுங்க கோட்ஸே மட்டும் பாதையை மறித்து நமஸ்தே என்று கூறி குனிந்தார் 
சகோதரரே ! நேரமாகி விட்டது வழி விடுங்கள் என்று கோட்ஸே யை நோக்கி நடந்தார் மனுகாந்தி கோட்ஸே விற்கு இன்னொரு பயம் ! இந்த பெண் காந்தியின் குறுக்கே விழுந்தால் ...

இடது கையால் மனுகாந்தியை தள்ளிவிட்டு துப்பாக்கியின் விசையை அழுத்தினார் 
ஒன்று ...இரண்டு ...மூன்று ....மணி 5.17 ...தலை சாய்ந்தார் காந்தி மகான் 

கோட்ஸே அடிக்கப்பட்டார்.நெற்றியில் ரத்தம் வழிந்தது 
யாரோ துப்பாக்கியை பிடிங்கினார்கள் 
ஜாக்கிரதை ...உங்கள் மேல் வெடித்துவிட போகிறது 
உன்னைத்தான் சுடப்போகிறேன் 
நான் தயார் ..என் வேலை முடிந்தது    

No comments:

Post a Comment